ஓசியா 5

Hosea 5

இஸ்ரயேலுக்கு எதிராக நியாயத்தீர்ப்பு

“ஆசாரியர்களே, நீங்கள் இதைக் கேளுங்கள்; ஓசி 9:8ஆப 1:15-17ஓசி 6:9மீகா 3:9மீகா 7:21 இராஜா 21:18-222 நாளாக 21:12-15ஆமோ 7:9

இஸ்ரயேல் வீட்டாரே கவனியுங்கள்;

அரச குடும்பத்தாரே, செவிகொடுங்கள்;

இந்த நியாயத்தீர்ப்பு உங்களுக்கெதிரானதே.

ஏனெனில் நீங்கள் மிஸ்பாவிலே கண்ணியாகவும்,

தாபோரிலே விரிக்கப்பட்ட வலையாகவும் இருக்கிறீர்கள்.

கலகக்காரர்கள் கொலைசெய்வதில் வேரூன்றி இருக்கிறார்கள். ஓசி 9:15ஏசா 29:15ஓசி 6:9அப் 23:12-15ஆமோ 4:6-12ஓசி 4:2ஓசி 6:5ஏசா 1:5

நான் அவர்கள் எல்லோரையும் தண்டித்துத் திருத்துவேன்.

எப்பிராயீமைப்பற்றிய எல்லாவற்றையும் நான் அறிவேன்; ஆமோ 3:2எபி 4:131 இராஜா 12:26-331 இராஜா 14:14-16ஆமோ 5:12உபா 33:17எசேக் 23:5-21ஆதி 48:19-20

இஸ்ரயேலும் என்னிடமிருந்து மறைந்திருக்கவில்லை.

ஏனெனில் எப்பிராயீமே, நீ இப்பொழுது வேசித்தனத்திற்கு திரும்பிவிட்டாய்;

இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது.

“அவர்களுடைய செயல்கள் அவர்களை ஓசி 4:121 யோவா 2:3-42 தெச 2:11-12ஓசி 4:1ஓசி 4:6எரே 22:15-16எரே 24:7எரே 50:38

அவர்களுடைய இறைவனிடம் திரும்புவதற்கு விடாதிருக்கிறது.

வேசித்தன ஆவி அவர்களின் இருதயத்தில் இருக்கிறது;

யெகோவாவைப்பற்றிய அறிவு அவர்களுக்கில்லை.

இஸ்ரயேலின் அகந்தை அவர்களுக்கெதிராக சாட்சி கூறுகிறது; ஓசி 7:10ஆமோ 5:2எசேக் 23:31-35லூக் 19:22நீதி 24:162இராஜா 17:19-20ஆமோ 2:4-5ஓசி 14:1

இஸ்ரயேலும் எப்பிராயீமும் தங்கள் பாவத்தில் இடறி விழுகிறார்கள்;

அவர்களுடன் யூதாவுங்கூட இடறி விழுகிறது.

அவர்கள் தங்கள் ஆட்டு மந்தைகளுடனும், மாட்டு மந்தைகளுடனும் யோவா 7:34நீதி 1:28மீகா 6:6-7எசேக் 8:6ஏசா 1:11-15எரே 7:4புலம் 3:44நீதி 15:8

யெகோவாவை தேடிப் பலியிட வருவார்கள்;

ஆனால் அவர்கள் அவரைக் காணமாட்டார்கள்;

ஏனெனில் அவர் அவர்களைவிட்டு விலகினார்.

அவர்கள் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாய் இருக்கிறார்கள்; ஓசி 6:7எசேக் 12:28ஓசி 2:4ஏசா 48:8எரே 3:20சங் 144:11சங் 144:7ஓசி 2:11

அவர்களுடைய பிள்ளைகளும் எனக்குரியவர்களல்ல.

இப்பொழுதும் அவர்களுடைய அமாவாசைப் போலிக் கொண்டாட்டங்கள்

அவர்களையும் அவர்களுடைய வயல்களையும் விழுங்கிப்போடும்.

“கிபியாவில் எக்காளத்தையும், ஓசி 4:15ஓசி 9:9யோவே 2:11 சாமு 15:34எரே 4:5ஓசி 8:1ஏசா 10:29நியாயாதி 5:14

ராமாவிலே கொம்பு வாத்தியத்தையும் ஊதுங்கள்.

பெத் ஆவெனில் போர் முழக்கமிடுங்கள்;

பென்யமீனே, நீ முன்னேசெல்.

தண்டனையின் நாளில் ஓசி 9:11-17ஏசா 46:10சகரி 1:6ஏசா 28:1-4யோவா 16:4ஆமோ 3:14-15ஆமோ 3:7ஆமோ 7:17

எப்பிராயீம் பாழாய் விடப்படும்.

நிச்சயமாய் நடக்கப் போகிறதையே,

நான் இஸ்ரயேல் கோத்திரங்கள் மத்தியில் பிரசித்தப்படுத்துகிறேன்.

யூதாவின் தலைவர்கள் உபா 19:14சங் 32:6சங் 93:3-4உபா 27:172 நாளாக 28:16-222இராஜா 16:7-9எசேக் 7:8லூக் 6:49

எல்லைக் கற்களை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.

என் கோபத்தை வெள்ளத்தைப்போல்

அவர்கள்மேல் ஊற்றுவேன்.

எப்பிராயீம் ஒடுக்கப்பட்டு, மீகா 6:16உபா 28:331 இராஜா 12:26-332இராஜா 15:16-202இராஜா 15:29ஆமோ 5:11-12

நியாயத்தீர்ப்பில் நசுக்கப்படுவான்.

ஏனெனில் அவன் விக்கிரகங்களைப் பின்பற்றுவதையே நோக்கமாய் கொண்டிருக்கிறான்.

அதனால் நான் எப்பிராயீமுக்கு அந்துப் பூச்சியைப்போலவும், ஏசா 51:8யோபு 13:28யோனா 4:7ஏசா 50:9மாற் 9:43-48நீதி 12:4

யூதாவின் வீட்டாருக்கு அழுகல் நோய்போலவும் இருப்பேன்.

“எப்பிராயீம் தன் வியாதியையும், ஓசி 7:11எரே 30:122இராஜா 15:19ஓசி 10:6ஓசி 12:1ஓசி 8:9எரே 30:14-152 நாளாக 28:16-18

யூதா தன் புண்களையும் கண்டபோது,

எப்பிராயீம் அசீரியாவின் பக்கம் திரும்பி,

அதன் பெரிய அரசனிடம் உதவி கேட்டனுப்பினான்.

ஆனால் உனக்கு சுகமாக்கவும்,

உனது புண்களை ஆற்றவும் அவனால் முடியாது.

ஏனெனில் எப்பிராயீமுக்கு நான் சிங்கம் போலவும், மீகா 5:8சங் 7:2ஓசி 13:7-8சங் 50:22ஆமோ 2:14ஆமோ 3:4-8ஏசா 5:29யோபு 10:16

யூதாவுக்கு பெருஞ்சிங்கம் போலவும் இருப்பேன்.

நான் அவர்களை துண்டுகளாய் கிழித்து தூக்கிக்கொண்டு போவேன்;

ஒருவரும் அவர்களைத் தப்புவிக்கமாட்டார்கள்.

எனவே அவர்கள் தங்கள் குற்றத்தை ஒத்துக்கொண்டு, ஏசா 26:16எரே 29:12-14உபா 4:29-31சங் 78:34லேவி 26:40-42சங் 50:15எரே 3:13எசேக் 36:31

என் முகத்தைத் தேடுமட்டும்

நான் என்னுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிப் போவேன்.

அவர்கள் தங்கள் அவலத்தில்

என்னை வாஞ்சையாய்த் தேடுவார்கள்.”