ஏசாயா 29

Isaiah 29

எருசலேமுக்கு ஐயோ!

அரியேலே, 1 அரியேலே, 2 சாமு 5:9ஆமோ 4:4-5மீகா 6:6-7எசேக் 43:15-16ஓசி 5:6ஓசி 8:13ஓசி 9:4ஏசா 66:3

தாவீது குடியிருந்த பட்டணமே, ஐயோ, உனக்குக் கேடு!

வருடத்துடன் வருடத்தைக் கூட்டு,

உங்கள் பண்டிகைகளும் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கட்டும்.

ஆனாலும் நான் அரியேலை முற்றுகையிடுவேன்; ஏசா 5:25-30எசேக் 22:31எசேக் 39:17ஏசா 10:32ஏசா 10:5-6ஏசா 17:14ஏசா 24:1-12ஏசா 3:26

அது துக்கித்துப் புலம்பும்,

அது எனக்கு பலிபீடத்தின் அடுப்பைப் போலிருக்கும்.

நான் உனக்கு விரோதமாக உன்னைச் சுற்றி முகாமிடுவேன்; லூக் 19:43-44எசேக் 21:222இராஜா 18:172இராஜா 19:322இராஜா 24:11-122இராஜா 25:1-4மத் 22:7

நான் கோபுரங்களால் உன்னைச் சூழ்ந்துகொள்வேன்,

எனது முற்றுகை வேலைகளை உனக்கு விரோதமாய் அமைப்பேன்.

நீ தாழ்த்தப்பட்டு நிலத்திலிருந்து பேசுவாய், ஏசா 8:19சங் 44:25ஏசா 3:8ஏசா 2:11-21ஏசா 51:23புலம் 1:9

உனது பேச்சு புழுதியிலிருந்து முணுமுணுக்கும்.

உனது குரல் செத்தவனின் ஆவியைப்போல் பூமியிலிருந்து வரும்;

உனது பேச்சு புழுதியிலிருந்து தாழ் குரலாய் வரும்.

ஆனாலும் யெகோவாவின் நிமித்தம் உனது அநேக பகைவர்கள் 1 தெச 5:3ஏசா 30:13ஏசா 37:36ஏசா 17:13-14ஏசா 31:3ஏசா 10:16-19ஏசா 25:5ஏசா 31:8

திடீரென புழுதியைப்போல் ஆவார்கள்;

இரக்கமில்லாதவரின் கூட்டங்கள் பறக்கும் பதரைப்போல் ஆகும்.

சடுதியாய், ஒரு நொடிப்பொழுதில்,

இடி முழக்கத்துடனும் பூமியதிர்ச்சியுடனும், பெருஞ்சத்தத்துடனும் மாற் 13:81 சாமு 2:10மத் 24:7வெளி 11:19வெளி 16:181 சாமு 12:17-182 சாமு 22:14ஏசா 28:2

சேனைகளின் யெகோவா அவர்களுக்கெதிராக வருவார்.

அவர் புயல்காற்றுடனும், சூறாவளியுடனும்,

எரிக்கும் நெருப்புச் சுவாலையுடனும் வருவார்.

அப்பொழுது அரியேலுக்கு விரோதமாய்ப் போரிடும் யோபு 20:8மீகா 4:11-12சகரி 12:9ஏசா 17:14சங் 73:20வெளி 20:8-9சகரி 12:3-5சகரி 14:12-15

எல்லா நாடுகளின் கூட்டத்தாரும்

அதன் அரண்களையும் தாக்கி, முற்றுகையிடுகிறவர்கள் ஒரு கனவுபோலவும்,

இரவின் தரிசனம் போலவும் மறைந்துபோவார்கள்.

அவர்கள் நினைத்திருந்த வெற்றியோ, ஏசா 44:12சங் 73:20ஏசா 10:7-162 நாளாக 32:21

பசியுள்ளவன் தான் சாப்பிடுவதாகக் கனவு கண்டும்

அவன் விழித்தவுடன் பசியுடனே இருப்பதுபோலவும்,

தாகமுள்ளவன் தான் குடிப்பதாகக் கனவு கண்டும்

அவன் விழித்தவுடன் தீராத தாகத்துடன் மயங்குவதுபோலவும்,

சீயோன் மலையை எதிர்த்துப் போரிடும் எல்லா நாடுகளின் கூட்டத்திற்கும் இருக்கும்.

திகைத்து வியப்படையுங்கள்! ஏசா 51:21-22ஏசா 19:14ஏசா 33:13-14ஏசா 49:26வெளி 17:6ஏசா 28:7-8அப் 13:40-41ஆப 1:5

நீங்களே உங்களைக் குருடர்களாக்கி பார்வையற்றவர்களாய் இருங்கள்.

வெறிகொள்ளுங்கள், ஆனால் திராட்சை இரசத்தினால் அல்ல;

தள்ளாடுங்கள், ஆனால் மதுவினால் அல்ல.

யெகோவா உங்கள்மேல் ஆழ்ந்த நித்திரையை வருவித்துள்ளார்: ரோம 11:8ஏசா 44:182 தெச 2:9-12அப் 28:26-27ஏசா 30:10ஏசா 6:9-101 சாமு 9:92 கொரி 4:4

அவர் உங்கள் இறைவாக்கினரினதும்

தரிசனம் காண்போரினதும் கண்களை மூடியிருக்கிறார்.

அவர்களுக்கோ இந்த தரிசனம் முழுவதும் முத்திரை இடப்பட்ட சுருளிலிருக்கும் வார்த்தைகளைப்போல் மட்டுமே இருக்கும். நீ அதை வாசிக்கக்கூடிய ஒருவனிடம் கொடுத்து, “தயவுசெய்து இதை வாசி” எனச் சொன்னால் அவன், “எனக்கு வாசிக்க முடியாது. அது முத்திரையிடப்பட்டிருக்கிறது” என்பான். மத் 13:11தானி 12:4ஏசா 8:16தானி 12:9மத் 11:25மத் 16:17வெளி 5:1-9வெளி 6:1 அல்லது அந்தச் சுருளை வாசிக்கமுடியாத ஒருவனிடம் கொடுத்து, “தயவுசெய்து இதை வாசி” என்று சொன்னால், அவன், “எப்படி வாசிப்பது என எனக்குத் தெரியாது” என்பான். யோவா 7:15-16ஏசா 29:18ஓசி 4:6ஏசா 28:12-13எரே 5:4

எனவே யெகோவா சொல்கிறார்: எசேக் 33:31-33எரே 12:2மாற் 7:2-13மத் 15:2-9எரே 3:10ஏசா 58:2-3நீதி 30:6எரே 5:2

“இந்த மக்கள் தங்கள் வாயின் வார்த்தைகளினால் என்னைக் கிட்டிச் சேருகிறார்கள்;

தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்.

ஆனால் அவர்களுடைய இருதயங்களோ எனக்கு வெகுதூரமாய் இருக்கின்றன.

அவர்கள் எனக்குச் செய்யும் வழிபாடு

மனிதர்களால் போதிக்கப்பட்ட சட்டங்களாகவே இருக்கின்றன.

ஆகையால், இன்னும் ஒருமுறை அதிசயங்கள்மேல் அதிசயங்களால் ஆப 1:51 கொரி 1:19-24ஏசா 28:21எரே 49:7யோவா 9:39-41ஏசா 6:9-10யோவா 9:29-34யோபு 5:13

இம்மக்களை வியப்படையச் செய்வேன்.

ஞானிகளுடைய ஞானம் அழிந்துபோகும்,

அறிவாளிகளின் அறிவு ஒழிந்துபோகும்.”

தங்களுடைய திட்டங்களை யெகோவாவிடமிருந்து மறைப்பதற்காக எசேக் 8:12ஏசா 47:10ஏசா 30:1சங் 94:7-9எசேக் 9:9ஏசா 28:15எரே 23:24லூக் 12:1-3

மிக்க முயற்சி செய்கிறவர்களுக்கு ஐயோ கேடு!

இருண்ட இடங்களில் தமது செயல்களைச் செய்து, “நம்மைக் காண்பவன் யார்?

நம்மை அறிகிறவன் யார்?” என நினைக்கிறவர்களுக்கும் ஐயோ கேடு!

நீங்கள் காரியங்களைத் தலைகீழாக்கி, ரோம 9:19-21ஏசா 64:8ஏசா 45:9-11சங் 94:8-9எரே 18:1-10ஏசா 24:1அப் 17:6

குயவனைக் களிமண்ணாக எண்ணுகிறீர்களே!

உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கியவனைப் பார்த்து,

“இவர் என்னை உண்டாக்கவில்லை” என்றும்

பாத்திரமானது குயவனைப் பார்த்து,

“இவருக்கு ஒன்றுமே தெரியாது” என்றும் கூறலாமோ?

இன்னும் சொற்ப காலத்தில் லெபனோன் ஒரு செழிப்பான வயலாக மாறாதோ? ஏசா 32:15மத் 19:30எபி 10:37எசேக் 20:46-47ஆப 2:3ஆகா 2:6ஓசி 1:9-10ஓசி 3:4

செழிப்பான வயலும் வனமாகக் காணப்படாதோ?

அந்த நாளில் புத்தகச்சுருளிலுள்ள வார்த்தைகளைச் செவிடர் கேட்பார்கள்; ஏசா 35:5மத் 11:5நீதி 20:12எபே 1:17-19ஏசா 32:3மாற் 7:37சங் 119:18அப் 26:18

குருடரின் கண்கள் அந்தகாரத்திலும்,

இருட்டிலும் இருந்து அதைக் காணும்.

தாழ்த்தப்பட்டவர்கள் இன்னும் ஒருமுறை யெகோவாவுக்குள் மகிழ்ச்சியடைவார்கள்; யாக் 2:5ஏசா 61:1மத் 11:29மத் 11:5மத் 5:5சங் 25:9யாக் 1:9மத் 5:3

எளியோர் இஸ்ரயேலரின் பரிசுத்தரில் களிகூருவார்கள்.

இரக்கமற்றோர் ஒழிந்துபோவார்கள், மீகா 2:1ஏசா 28:14-22ஏசா 13:3ஏசா 29:5ஏசா 59:4லூக் 16:14தானி 7:19-25தானி 7:7

ஏளனம் செய்வோர் மறைந்துபோவார்கள்;

தீமையை நோக்கும் அனைவரும் இல்லாதொழிக்கப்படுவார்கள்.

இவர்கள் தங்கள் பேச்சினால் ஒருவனைக் குற்றவாளியாக்கி, ஆமோ 5:10-12யாக் 5:6அப் 3:14ஆமோ 7:10-17எசேக் 13:19ஏசா 32:7நியாயாதி 12:6எரே 18:18

நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறப் பண்ணுகிறார்கள்.

இவ்வாறு பொய்ச் சாட்சியத்தினால் குற்றமற்றவனுக்கு நீதிவழங்க மறுக்கிறார்கள்;

அதனாலேயே இல்லாதொழிக்கப்படுவார்கள்.

ஆகையால், ஆபிரகாமை மீட்ட யெகோவா, யாக்கோபின் குடும்பத்திற்கு சொல்வது இதுவே: ஏசா 45:17ஏசா 51:2எரே 30:101 பேது 1:18-19ஏசா 54:4யோவே 2:27லூக் 1:68எசேக் 37:24

“இனிமேலும் யாக்கோபு வெட்கமடைவதில்லை;

அவர்களுடைய முகங்களும் வெளிறிப் போவதில்லை.

அவர்கள் எனது கரங்களின் வேலையாகிய, எபே 2:10ஏசா 19:25ஏசா 45:11ஏசா 8:13ஏசா 49:20-26ஏசா 5:16ஏசா 60:21ஓசி 3:5

தங்கள் பிள்ளைகளை தங்கள் மத்தியில் காணும்போது,

எனது பெயரைப் பரிசுத்தமாய் வைத்திருப்பார்கள்.

அவர்கள் யாக்கோபின் பரிசுத்தரின் பரிசுத்தத்தை உண்மையென்று ஒப்புக்கொண்டு,

இஸ்ரயேலின் இறைவனிடம் பயபக்தி உள்ளவர்களாய் இருப்பார்கள்.

சிந்தனையில் தவறு செய்கிறவர்கள் விளக்கம் பெறுவார்கள்; எபி 5:2ஏசா 28:7லூக் 15:17-191 தீமோ 1:13-15வெளி 20:2-31 கொரி 6:11அப் 2:37அப் 6:7

முறையிடுகிறவர்களும் அறிவுறுத்துதலை ஏற்றுக்கொள்வார்கள்.”