முகவுரை
மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் 1 விவரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் முன்வந்தார்கள். அப் 1:1-32 பேது 1:16-19யோவா 20:311 தீமோ 3:162 தீமோ 4:17 துவக்கத்திலிருந்து கண்கண்ட சாட்சிகளாகவும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களாகவும் இருந்த அவர்கள், எங்களுக்குக் கொடுக்கப்பட்டபடியே எழுதினார்கள். யோவா 15:27அப் 26:16எபி 2:32 பேது 1:161 யோவா 1:1-3அப் 1:21-22அப் 1:3அப் 10:39-41 நானும் உமக்கு அவற்றை ஒழுங்காக எழுதுவதற்குத் தீர்மானித்தேன். துவக்கத்திலிருந்து நடந்த எல்லாவற்றையும் கவனமாய் விசாரித்தறிந்து, இதை எழுதுகிறேன். அப் 1:1அப் 26:25பிரச 12:9அப் 11:4அப் 15:19அப் 23:26அப் 24:3அப் 15:25 இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விஷயங்கள் நிச்சயமாக உண்மையானவை என்பதை நீர் அறிந்துகொள்ளலாம். யோவா 20:31அப் 18:251 கொரி 14:19கலா 6:62 பேது 1:15-16ரோம 2:18
யோவானின் பிறப்பின் முன்னறிவிப்பு
ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு ஆசாரியன் இருந்தான். இவன் அபியாவின் ஆசாரியப் பிரிவைச் சேர்ந்தவன். இவனுடைய மனைவி எலிசபெத்தும், ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியைச் சேர்ந்தவள். 1 நாளாக 24:10மத் 2:11 நாளாக 24:19நெகே 12:17நெகே 12:4 அவர்கள் இருவரும் இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள். மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டார்கள். ஆதி 7:1ஆதி 17:1பிலி 2:151 இராஜா 9:4யோபு 1:1அப் 24:162 பேது 3:14கொலோ 1:22 ஆனாலும் எலிசபெத் மலடியாக இருந்ததினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; அவர்கள் இருவரும், இப்பொழுது வயது சென்றவர்களாய் இருந்தார்கள். எபி 11:111 சாமு 1:2ஆதி 18:11ஆதி 25:212இராஜா 4:14ஆதி 17:17நியாயாதி 13:2-3ஆதி 16:1-2
ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் பணிபுரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக ஆசாரியப் பணியைச் செய்தான். 1 நாளாக 24:192 நாளாக 8:142 நாளாக 31:2லூக் 1:5யாத் 29:1யாத் 29:9எஸ்றா 6:182 நாளாக 11:14 ஒரு நாள் ஆசாரியர்களின் வழக்கத்தின்படி கடமைகளைச் செய்வதற்கு சீட்டு போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் போய் தூபங்காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டான். 2 நாளாக 29:111 நாளாக 23:13யாத் 30:7-8எண் 16:401 சாமு 2:282 நாளாக 26:16எபி 9:61 நாளாக 6:49 தூபங்காட்டும் வேளை வந்தபோது வழிபாட்டிற்கு கூடிவந்த மக்கள் வெளியே மன்றாடிக்கொண்டிருந்தார்கள். லேவி 16:17வெளி 8:3எபி 4:14எபி 9:24
அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான். அப் 10:3-4யாத் 40:26-27நியாயாதி 13:3நியாயாதி 13:9வெளி 9:13அப் 5:19யாத் 30:1-10யாத் 37:25-29 சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான். நியாயாதி 13:22நியாயாதி 6:22அப் 10:4லூக் 2:9-10வெளி 1:17தானி 10:7லூக் 1:29மாற் 16:5 அந்தத் தூதனோ அவனைப் பார்த்து: “சகரியாவே, பயப்படாதே; உனது மன்றாட்டு கேட்கப்பட்டது. உனது மனைவி எலிசபெத் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், நீ அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும். 1 சாமு 2:21அப் 10:31சங் 113:9ஆதி 25:21சங் 127:3-5லூக் 2:21ஆதி 18:14சங் 118:21 அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்; லூக் 1:58நீதி 23:24ஆதி 21:6நீதி 15:20நீதி 23:15 அவன் கர்த்தருடைய பார்வையில் பெரியவனாயிருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ அருந்த மாட்டான், அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவான். எரே 1:5எண் 6:2-4எபே 5:18கலா 1:15நியாயாதி 13:4-6லூக் 7:33அப் 2:4யோசு 4:14 அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான். மத் 21:32ஏசா 40:3-5மல்கி 3:1மத் 3:1-6தானி 12:3ஏசா 49:6லூக் 1:76 அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு முன்பாகப் போவான்; தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகள் பக்கமாகத் திருப்புவான், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக முன்னேற்பாடு செய்திருக்கிற மக்களை அவன் ஆயத்தம் செய்வான்” என்றான். மல்கி 4:5-6மத் 11:14லூக் 1:76யோவா 1:21-30மத் 17:11-12மாற் 9:11-131 நாளாக 29:18யோவா 3:28
அப்பொழுது சகரியா அந்தத் தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் கிழவனாய் இருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாய் இருக்கிறாளே” என்றான். ஆதி 17:17ஆதி 18:12ஏசா 38:22லூக் 1:72இராஜா 7:2லூக் 1:34ரோம 4:19நியாயாதி 6:36-40
அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் சமுகத்தில் நிற்கின்ற காபிரியேல்; உன்னுடன் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உனக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். லூக் 1:26மத் 18:10தானி 8:16தானி 9:21-23லூக் 2:10எபி 4:14 நீயோ எனது வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இவை நிகழும் நாள்வரைக்கும் நீ பேச முடியாமல் ஊமையாயிருப்பாய்; நான் சொன்னவையோ நியமித்த காலத்தில் நிறைவேறும்” என்றான். எசேக் 3:26எசேக் 24:27எபி 6:182 தீமோ 2:13லூக் 1:22லூக் 1:45வெளி 3:19தீத் 1:2
அதேவேளையில், சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவன் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கிறான் என யோசிக்கத் தொடங்கினார்கள். எண் 6:23-27 அவன் வெளியே வந்தபோது, அவர்களோடு பேச அவனால் முடியவில்லை. அவன் அவர்களுக்கு சைகை காட்டியதால், அவன் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறான் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவன் பேசமுடியாதவனாகவே இருந்தான். அப் 12:17யோவா 13:24லூக் 1:62அப் 19:33அப் 21:40
அவனது பணிசெய்யும் காலம் முடிவடைந்தபோது, அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான். 1 நாளாக 9:252இராஜா 11:5-7 இந்த நாட்களுக்குப்பின் அவன் மனைவி எலிசபெத் கருத்தரித்தாள், அவள் ஐந்து மாதங்களாக பிறர் கண்களில் படாதிருந்தாள். அப்பொழுது அவள், “கர்த்தரே இதைச் செய்தார், இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவுகாட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள். ஆதி 30:22-23ஏசா 4:1ஏசா 54:1-4ஆதி 21:1-21 சாமு 1:6ஆதி 25:21எபி 11:111 சாமு 1:19-20
இயேசுவின் பிறப்பை முன்னறிவித்தல்
ஆறாம் மாதத்தில், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பட்டணத்திற்கு இறைவன் காபிரியேல் தூதனை, மத் 2:23லூக் 1:19யோவா 7:41யோவா 1:45-46லூக் 2:4 ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள். மத் 1:18ஏசா 7:14மத் 1:16மத் 1:20-21மத் 1:23ஆதி 3:15எரே 31:22லூக் 2:4-5 கர்த்தருடைய தூதன் அவளிடம் போய், “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்” என்றான். நியாயாதி 6:12தானி 10:19லூக் 1:30எபே 1:6தானி 9:21-23அப் 18:10எரே 1:18-19லூக் 1:42
தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்து, இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள். அப் 10:17அப் 10:4லூக் 1:12மாற் 6:49-501 சாமு 9:20-21லூக் 1:66லூக் 2:19லூக் 2:51 ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய். லூக் 1:13லூக் 12:32ரோம 8:31ஏசா 41:10அப் 18:9-10மத் 14:27மத் 28:5ஏசா 44:2 நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும். ஏசா 7:14மத் 1:21மத் 1:25லூக் 2:21மத் 1:23கலா 4:4லூக் 1:13லூக் 1:27 அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார். ஏசா 9:6-7ஏசா 16:52 சாமு 7:11-13லூக் 1:35சங் 132:11எபி 1:2-8மத் 28:18மாற் 5:7 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். தானி 2:44எபி 1:8தானி 7:13-14தானி 7:272 சாமு 7:16சங் 89:35-37வெளி 11:15மத் 28:18
அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள். நியாயாதி 13:8-12அப் 9:6
அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார். மத் 1:18யோவா 1:49யோவா 1:34மத் 1:20லூக் 1:31-32எபி 4:15ரோம 1:4மத் 26:63-64 உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன. இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான். மத் 19:26எரே 32:27மாற் 10:27எரே 32:17லூக் 18:27ஆதி 18:14எண் 11:23பிலி 3:21
அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான். ரோம 4:20-21சங் 119:38சங் 116:162 சாமு 7:25-29
மரியாள் எலிசபெத்தை சந்தித்தல்
அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு விரைவாகப் போனாள்; லூக் 1:65யோசு 10:40யோசு 15:48-59யோசு 20:7யோசு 21:9-11 அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள். மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய கருப்பையில் இருந்த குழந்தை துள்ளியது. அப்பொழுது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, லூக் 1:67லூக் 1:44அப் 4:8அப் 2:4லூக் 1:15அப் 7:55சங் 22:10வெளி 1:10 உரத்த குரலில் சொன்னதாவது: “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப்போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது! ஆதி 22:18நியாயாதி 5:24லூக் 1:28லூக் 19:38லூக் 1:48சங் 21:6அப் 2:26-28சங் 72:17-19 என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன். யோவா 20:28யோவா 13:131 சாமு 25:41லூக் 2:11யோவா 13:5-8லூக் 20:42-44லூக் 7:7மத் 3:14 உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று. கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள். யோவா 20:29யோவா 11:40லூக் 11:27-28லூக் 1:202 நாளாக 20:20
மரியாளின் பாடல்
அப்பொழுது மரியாள் சொன்னதாவது: 1 சாமு 2:1-10சங் 34:2-3சங் 35:9ஏசா 61:10சங் 103:1-21 கொரி 1:31ஏசா 45:25ரோம 5:11
“என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது. சங் 35:91 தீமோ 2:3ஆப 3:18ஏசா 45:21-22லூக் 2:11தீத் 2:10சகரி 9:91 தீமோ 1:1
ஏனெனில், அவர் தமது சங் 138:61 கொரி 1:26-28மல்கி 3:121 சாமு 1:11லூக் 11:27சங் 136:23லூக் 1:281 சாமு 2:8
அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார்.
இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும்
என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்;
வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்; எபே 3:20சங் 126:2-3சங் 111:9சங் 99:3எரே 10:6ஆதி 17:1ஏசா 57:15வெளி 15:4
பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.
அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு, சங் 103:17-18யாத் 20:6ஆதி 17:7சங் 118:4யாத் 34:6-7சங் 145:19சங் 103:11சங் 115:13
தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காண்பிக்கிறார்.
அவர் தமது புயத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; சங் 98:1ஏசா 52:101 சாமு 2:3-4ஏசா 51:9ரோம 1:21தானி 4:37யாத் 15:6-71 சாமு 2:9-10
தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை அவர் சிதறடித்தார்.
ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். எசேக் 17:24யாக் 4:10சங் 107:40-411 சாமு 2:6-8லூக் 18:14பிரச 4:14சங் 113:6-81 சாமு 2:4
ஆனால், தாழ்மையானவர்களையோ அவர் உயர்த்தினார்.
அவர் பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். சங் 107:8-9லூக் 6:21சங் 34:10லூக் 6:24மத் 5:6வெளி 7:16-171 கொரி 1:26யோவா 6:35
ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார்.
அவர் தமது வேலைக்காரனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார். சங் 98:3மீகா 7:20ஏசா 44:21ஏசா 46:3-4ஏசா 49:14-16எரே 31:20ஏசா 63:7-16எரே 31:3
நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் ஆதி 17:19சங் 105:6-10கலா 3:16-17சங் 132:11-17ஆதி 22:18ஆதி 26:4ரோம 11:28-29ஆதி 12:3
அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை
அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்”
என்று பாடினாள்.
மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதற்குப் பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள்.
யோவான் ஸ்நானகனின் பிறப்பு
எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள். லூக் 1:13ஆதி 21:2-3லூக் 2:6-7எண் 23:19 அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள். ரோம 12:151 கொரி 12:26லூக் 1:14லூக் 1:25சங் 113:9ரூத் 4:14-17ஆதி 19:19ஏசா 66:9-10
அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள். ஆதி 17:12லேவி 12:3லூக் 2:21பிலி 3:5அப் 7:8ஆதி 21:3-4 ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள். லூக் 1:132 சாமு 12:25ஏசா 8:3லூக் 1:63மத் 1:25
அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள்.
அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள். லூக் 1:22 அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினான். ஏசா 30:8லூக் 1:60லூக் 1:13ஆப 2:2எரே 17:1நீதி 3:3 உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான். லூக் 1:20யாத் 4:15-16எசேக் 33:22எரே 1:9தானி 4:34-37மாற் 7:32-37சங் 51:15எசேக் 29:21 அயலவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தக் காரியங்களைக்குறித்து, யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள். லூக் 1:39அப் 2:43அப் 5:11அப் 5:5லூக் 7:16யோசு 10:40யோசு 10:6வெளி 11:11 இதைக் கேள்விப்பட்ட எல்லோரும் வியப்படைந்து, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்றார்கள் கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடு இருந்தது. அப் 11:21லூக் 2:19லூக் 2:511 இராஜா 18:461 சாமு 2:18ஆதி 37:11ஆதி 39:2நியாயாதி 13:24-25
சகரியாவின் பாடல்
அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது: யோவே 2:28லூக் 1:41லூக் 1:152 பேது 1:212 சாமு 23:2எண் 11:25
“இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக, சங் 106:48லூக் 7:16சங் 111:9சங் 41:13யாத் 4:311 இராஜா 1:48யாத் 3:16-17எபே 1:3
அவர் வந்து தம்முடைய மக்களை மீட்டுக்கொண்டார்.
அவர் தமது தாசனாகிய தாவீதின் வம்சத்திலிருந்து, சங் 18:2எசேக் 29:212 சாமு 22:31 சாமு 2:10சங் 89:171 சாமு 2:1ஏசா 9:6-7ஏசா 11:1-9
நாம் இரட்சிப்பு அடைவதற்கான இரட்சணியக்கொம்பை எழுப்பியிருக்கிறார்.
அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். அப் 3:21-242 பேது 1:21ரோம 1:21 பேது 1:122 சாமு 23:2அப் 28:25ஆதி 12:3ஆதி 3:15
நம்முடைய பகைவரிடமிருந்தும், சங் 106:10உபா 33:29எரே 23:6செப்ப 3:15-20எசேக் 34:28எரே 32:371 யோவா 3:8எசேக் 34:25
நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும்
நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும்,
அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, எபி 6:13-18லேவி 26:42மீகா 7:20சங் 106:45எசேக் 16:60ஆதி 26:4ஆதி 28:14லூக் 1:54-55
நம்முடைய தந்தையருக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருந்தார்.
அவர் நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டு: ஆதி 22:16-18உபா 7:8சங் 105:9உபா 7:12எரே 11:5ஆதி 26:3எபி 6:13எபி 6:16-17
நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, 2 தீமோ 1:7செப்ப 3:15-17ஏசா 54:13-14எபி 9:14ரோம 8:15எபி 2:15வெளி 2:10சகரி 9:8-10
நமது நாட்களெல்லாம் பயமின்றிப் பணிசெய்யும்படி,
பரிசுத்தத்திலும் நீதியிலும் அவருக்கு முன்பாக எபே 4:24எபே 2:10தீத் 2:11-142 தீமோ 1:91 தெச 4:7எபே 1:4எரே 31:33-341 பேது 1:14-16
என்றும் வாக்குக் கொடுத்திருந்தார்.
“என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்; மல்கி 3:1ஏசா 40:3-5மாற் 1:2-3யோவா 1:23மத் 11:9-10மத் 14:5மத் 3:3அப் 16:17
நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய்.
நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தின் நிமித்தம் அப் 5:31அப் 10:43அப் 2:38யோவா 1:34அப் 3:19எபே 1:7யோவா 1:29அப் 19:4
அவருடைய மக்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலமாய்,
இரட்சிப்பின் அறிவைக் கொடுப்பாய்.
இருளில் வாழ்கிறவர்களுக்கும் மல்கி 4:22 பேது 1:19வெளி 22:16எண் 24:17எபே 5:14ஏசா 11:1கொலோ 3:12சகரி 3:8
மரண இருளில் இருக்கிறவர்களுக்கும் ஒளியைத் தருவதற்கும்,
நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்துவதற்கும், ஏசா 9:2அப் 26:18மத் 4:16ஏசா 42:7எபே 5:8யோவா 12:46யோவா 8:12சங் 107:14
பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம்
நம்மைச் சந்தித்திருக்கிறது.”
அந்தப் பிள்ளை வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தது; அவன் வெளியரங்கமாக இஸ்ரயேலரின்முன் வரும் காலம்வரைக்கும் பாலைவனத்தில் வாழ்ந்தான். லூக் 2:40மாற் 1:3-4லூக் 2:521 சாமு 3:19-20மத் 3:1நியாயாதி 13:24-25யோவா 1:31மத் 11:7