தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல்
“ஆனால் இப்பொழுதோ என் அடியவனாகிய யாக்கோபே, ஏசா 41:8எரே 30:10ரோம 11:5-6எபி 3:7-8எரே 4:7எரே 46:27-28சங் 105:6உபா 7:6-8
நான் தெரிந்துகொண்ட இஸ்ரயேலே, கேள்.
யெகோவா சொல்வது இதுவே: எரே 1:5ஏசா 43:1ஏசா 46:3-4ஏசா 44:24ஏசா 43:7ஏசா 49:1எபே 1:4ஏசா 41:10
உன்னை உண்டாக்கியவரும், உன்னைக் கருப்பையில் உருவாக்கியவரும்,
உனக்கு உதவிசெய்யப் போகிறவருமாகிய அவர் சொல்வதாவது:
என் அடியவனாகிய யாக்கோபே,
நான் தெரிந்துகொண்ட யெஷூரனே 1, பயப்படாதே.
நான் தாகமுள்ள நிலத்தில் தண்ணீரை ஊற்றுவேன்; யோவே 2:28அப் 2:17ஏசா 59:21யோவா 7:37-39நீதி 1:23வெளி 21:6அப் 2:39சகரி 12:10
வறண்ட நிலத்தில் நீரோடைகளை உண்டாக்குவேன்.
உன் சந்ததியின்மேல் எனது ஆவியானவரையும்,
உன் பிள்ளைகள்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன்.
அவர்கள் வெளிநிலத்திலுள்ள புல்லைப்போலவும், ஏசா 58:11சங் 1:3சங் 92:13-15எசேக் 17:5அப் 4:4சங் 137:1-2அப் 2:41-47அப் 5:14
நீரோடைகளுக்கு அருகில் அலறிச்செடிகளைப் போலவும் விரைவாய் வளருவார்கள்.
ஒருவன், ‘நான் யெகோவாவுக்கு உரியவன்’ என்பான்; சகரி 13:91 பேது 2:92 கொரி 8:5உபா 26:17-19யாத் 13:9கலா 6:16நெகே 9:38மீகா 4:2
வேறொருவன், தன்னை யாக்கோபின் பெயரால் அழைத்துக்கொள்வான்;
இன்னொருவன், தன் கையில், ‘கர்த்தருடையவன்’ என்று எழுதி,
இஸ்ரயேல் என்று பெயரிட்டுக்கொள்வான்.
யெகோவாவே, விக்கிரகங்கள் அல்ல
“யெகோவா சொல்வது இதுவே: ஏசா 41:4ஏசா 43:10-11வெளி 1:8வெளி 22:13ஏசா 44:8ஏசா 45:5-6ஏசா 48:17ஏசா 48:12
இஸ்ரயேலின் அரசரும், மீட்பருமாகிய சேனைகளின் யெகோவா கூறுவதாவது,
ஆரம்பமும் நானே, முடிவும் நானே;
என்னையன்றி வேறு இறைவன் இல்லை
என்னைப்போல் யாரும் உண்டோ? ஏசா 41:26ஏசா 41:22ஏசா 46:9-10ஏசா 45:21அப் 17:26உபா 32:8ஆதி 17:7-8ஏசா 41:4
அப்படியிருந்தால் அவன் அதைப் பிரசித்தம்பண்ணட்டும்.
அதை அறிவித்து எனக்குமுன் சொல்லட்டும்,
முற்காலத்திலிருந்த என் மக்களை நான் நிலைநிறுத்திய காலத்திலிருந்து
நடந்தவற்றையும் இனி என்ன நடக்கப்போகிறதையும் சொல்லட்டும்.
ஆம், நிகழப்போவதை அவன் முன்னறிவிக்கட்டும்.
நடுங்காதீர்கள், பயப்படாதீர்கள். ஏசா 43:101 சாமு 2:2உபா 4:35உபா 4:39யோவா 10:30சங் 18:312 சாமு 22:32உபா 32:39
இதை நான் வெகுகாலத்துக்கு முன்பே பிரசித்தப்படுத்தி, அறிவிக்கவில்லையா?
நீங்கள் எனது சாட்சிகள். என்னைத்தவிர வேறு இறைவன் உண்டோ?
இல்லை, வேறு கன்மலையும் இல்லை; அப்படி ஒருவரையும் நான் அறியேன்.”
விக்கிரங்களை உருவாக்குகிறவர்கள் எல்லோரும் வீணர்; ஏசா 41:24எரே 10:14-15ஆப 2:18-20ஏசா 41:29சங் 97:71 கொரி 8:41 இராஜா 18:26-402 கொரி 4:4
அவர்கள் அருமையாகக் கருதுபவை பயனற்றவை.
அவைகளுக்காகப் பேசுபவர்களும் குருடர்;
அவர்கள் தங்களை வெட்கமாக்கிக்கொள்ளும் அறிவீனர்.
தனக்கு ஒருவித பயனையும் தராத தெய்வத்தின் சிலைகளைச் செதுக்கி, எரே 10:5ஆப 2:18அப் 19:261 கொரி 8:41 இராஜா 12:28தானி 3:1தானி 3:14ஏசா 41:29
ஒரு விக்கிரகத்தை வார்ப்பிப்பவன் யார்?
அவனும் அவனைப் போன்றவர்களும் வெட்கம் அடைவார்கள்; ஏசா 42:17ஏசா 45:16ஏசா 1:29சங் 97:71 இராஜா 18:19-291 இராஜா 18:401 சாமு 5:3-71 சாமு 6:4-5
அதைச் செய்யும் கைவினைஞர் மனிதரே.
அவர்கள் எல்லோரும் கூடிவந்து என்முன் நிற்கட்டும்;
அவர்கள் எல்லோரும் பயங்கரத்திற்கும், அவமானத்துக்கும் உள்ளாவார்கள்.
கொல்லன் இரும்பைக் குறட்டால் எடுத்து, ஏசா 40:19ஏசா 41:6-7ஏசா 46:6-7யாத் 32:4யாத் 32:8ஆப 2:13எரே 10:3-11
கரி நெருப்பிலிட்டு உருக்கி,
சுத்தியலால் அடித்து விக்கிரகத்தை வடிவமைக்கிறான்;
தன் கையின் பெலத்தினால் அதற்கு உருவத்தைக் கொடுக்கிறான்.
பட்டினியினால் அவன் தன் பெலனை இழக்கிறான்,
தண்ணீரைக் குடிக்காமல் சோர்ந்துபோவான்.
தச்சன் கோலினால் மரத்தை அளந்து, நியாயாதி 17:4-5அப் 17:29உபா 4:16-18சங் 115:5-7ரோம 1:23உபா 27:15உபா 4:28யாத் 20:4-5
வெண்கட்டியால் குறியிடுகிறான்.
அவன் அதை உளிகளினால் உருப்படுத்தி,
கவராயத்தால் குறிக்கிறான்.
அவன் மனிதனின் எல்லாச் சிறப்பையும்
அதற்குக் கொடுத்து அதை மனித உருவில் வடிவமைக்கிறான்;
அது ஒரு கோவிலில் இருக்கும்படியே இப்படிச் செய்கிறான்.
அவன் கேதுரு மரங்களை வெட்டி வீழ்த்துகிறான், ஏசா 40:20ஆப 2:19ஓசி 4:12எரே 10:3-8
தேவதாரு மரங்களையும், கர்வாலி மரங்களையும் அவன் தனக்கென்று வைத்துக்கொள்கிறான்.
அதை அவன் காட்டு மரங்களின் மத்தியில் வளர விடுகிறான்;
அவன் சவுக்கு மரத்தை நாட்டுவான், மழை அதை வளரச் செய்கின்றது.
அது மனிதனுக்கு எரிபொருளாக இருக்கிறது; 2 நாளாக 25:14ஏசா 44:10ஏசா 45:20நியாயாதி 2:19வெளி 9:20
அவன் அவைகளில் ஒரு பகுதியை எடுத்து எரித்து குளிர்காய்கிறான்,
ஒரு பகுதியால் நெருப்புமூட்டி அப்பத்தை வேகவைக்கிறான்.
ஆனால் இன்னொரு பகுதியால் ஒரு தெய்வத்தையும் செய்து அதை வழிபடுகிறான்;
அவன் ஒரு விக்கிரகத்தையும் செய்து, அதற்குமுன் விழுந்து வணங்குகிறான்.
மரத்தின் ஒரு துண்டை அவன் நெருப்பில் எரிக்கிறான்;
அதின்மேல் தன் உணவைத் தயாரிக்கிறான்,
தன் இறைச்சியையும் வாட்டி, தான் திருப்தியாகச் சாப்பிடுகிறான்.
அவன் அதில் குளிர்காய்ந்துகொண்டும், “ஆகா! இந்தச் சூடு இதமானது!
அருமையான நெருப்பைக் காண்கின்றேன்” என்கிறான்.
எஞ்சிய மரத்தின் பகுதியில் விக்கிரகமொன்றைத் தனது தெய்வமாகச் செய்கிறான்; ஏசா 45:201 இராஜா 18:26தானி 3:17தானி 3:29தானி 6:16தானி 6:20-22தானி 6:27ஏசா 36:19-20
அதற்குமுன் விழுந்து வழிபடுகிறான்.
அதை வணங்கி,
“நீயே என் தெய்வம், என்னைக் காப்பாற்று!” என்கிறான்.
அவற்றிற்கு ஒன்றுமே தெரியாது, அவற்றிற்கு ஒன்றும் விளங்குவதில்லை; ஏசா 6:9-102 கொரி 4:3-4யோவா 12:39-402 தெச 2:9-12எரே 5:21சங் 81:12நீதி 2:5-9மத் 13:14-15
பார்க்க முடியாதபடி அவைகளின் கண்கள் மூடப்பட்டிருக்கின்றன;
விளங்கிக்கொள்ளாதபடி அவைகளின் இருதயமும் அடைக்கப்பட்டு இருக்கின்றன.
“இம்மரத்தின் பாதியை நான் எரிபொருளாய் உபயோகித்தேன்; உபா 27:151 இராஜா 11:51 இராஜா 11:72இராஜா 23:13உபா 32:46யாத் 7:23எசேக் 40:4ஓசி 7:2
அதன் தணலின்மேல் ரொட்டியை வேகவைத்து, இறைச்சியையும் வாட்டிச் சாப்பிட்டேன்.
அப்படியிருக்க, எஞ்சிய பகுதியினால்
நான் அருவருக்கத்தக்க விக்கிரகத்தைச் செய்யலாமா?
ஒரு மரக்கட்டையின் முன்னால் நான் விழுந்து வணங்கலாமா?”
என்று சொல்லுவதற்கு எவனுமே சிந்திப்பதில்லை.
அதற்கான அறிவோ,
விளக்கமோ எவனிடத்திலும் இல்லை.
அவன் சாம்பலைத் தின்கிறான், அவனுடைய வஞ்சிக்கப்பட்ட இருதயம் ஓசி 12:1யோபு 15:31சங் 102:9ரோம 1:282 தீமோ 2:13ஓசி 4:12ரோம 1:251 இராஜா 22:20-23
அவனைத் தவறான வழியில் நடத்துகிறது.
அவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இயலாது,
“எனது வலதுகையில் இருக்கிற இந்த விக்கிரகம் பொய்”
என்று சொல்லாமலும் இருக்கிறான்.
“யாக்கோபே, இவற்றை நீ நினைவில் வைத்துக்கொள்; ஏசா 44:1-2ஏசா 49:15-16உபா 4:23ஏசா 43:1ஏசா 43:15ஏசா 46:8-9சகரி 10:9உபா 31:19-21
ஏனெனில் இஸ்ரயேலே, நீ என் அடியவன்.
நான் உன்னைப் படைத்தேன், நீ என் அடியவன்;
இஸ்ரயேலே, நான் உன்னை மறக்கமாட்டேன்.
நான் உன் குற்றங்களை ஒரு மேகத்தைப் போலவும் ஏசா 43:251 கொரி 6:20அப் 3:18-19ஏசா 43:11 பேது 1:18-19சங் 103:12ஏசா 55:7எரே 33:8
உன் பாவங்களை காலை நேரத்து மூடுபனியைப் போலவும் அகற்றியிருக்கிறேன்.
நீ என்னிடம் திரும்பி வா,
ஏனெனில் நான் உன்னை மீட்டிருக்கிறேன்.”
வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; யெகோவாவே இதைச் செய்திருக்கிறார். எபே 1:6-7வெளி 5:8-14சங் 69:34ஏசா 49:3எரே 51:48சங் 96:11-12சங் 98:7-8வெளி 19:1-6
கீழிருக்கும் பூமியே, உரத்த சத்தமிடு.
மலைகளே, காடுகளே, மரங்களே,
குதூகலித்துப் பாடுங்கள்.
ஏனெனில், யெகோவா யாக்கோபை மீட்டு,
இஸ்ரயேலில் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார்.
எருசலேம் குடியிருக்க வேண்டும்
“உங்கள் மீட்பரும், உங்களை கருப்பையில் உருவாக்கியவருமான, ஏசா 42:5ஏசா 45:12ஏசா 54:5ஏசா 45:18ஏசா 44:2ஏசா 43:14ஏசா 51:13யோபு 9:8
யெகோவா சொல்வது இதுவே:
“நானே யெகோவா,
நான் எல்லாவற்றையும் படைத்தேன்,
நான் தனியாகவே வானங்களை விரித்து,
பூமியையும் பரப்பினேன்.
நானே கட்டுக்கதை சொல்பவர்கள் கூறும் அடையாளங்களை நிறைவேறாமல் செய்து, சங் 33:10யோபு 5:12-142 சாமு 15:31எரே 50:361 கொரி 1:20-27ஏசா 47:12-14எரே 51:57ஏசா 29:14
குறிசொல்வோரை மூடர்களாக்கி,
ஞானிகளின் அறிவை வீழ்த்தி,
அவைகளை மூடத்தனமாக்குபவரும் நானே.
நானே எனது ஊழியர்களின் வார்த்தைகளை உறுதிபடுத்துகிறேன்; 1 இராஜா 18:36-38ஏசா 42:92 பேது 1:19-21அப் 2:25-28தானி 9:25ஏசா 60:10எரே 30:18எரே 33:7
எனது தூதுவர்களின் ஆலோசனைகளை நிறைவேற்றுகிறேன்.
“எருசலேமைப்பற்றி,
‘அது குடியிருப்பாக்கப்படும்’ என்றும்
யூதாவின் பட்டணங்களைப் பற்றி,
‘அவை கட்டப்படும்’ என்றும்,
அவர்களின் பாழிடங்களைப்பற்றி,
‘நான் மீண்டும் அவைகளைக் கட்டுவேன்,’ என்றும் கூறுகிறேன்,
நானே ஆழமான நீர்நிலைகளைப் பார்த்து, ‘வறண்டு போ, ஏசா 42:15எரே 50:38எரே 51:36ஏசா 11:15-16ஏசா 43:16ஏசா 51:15எரே 51:32சங் 74:15
உனது நீரூற்றுகளை நான் வற்றப்பண்ணுவேன்’ என்று சொல்கிறேன்.
நானே கோரேசைப்பற்றி, ‘அவன் எனது மேய்ப்பன்; 2 நாளாக 36:22ஏசா 45:1தானி 10:1எஸ்றா 6:3-18ஏசா 45:13ஏசா 46:11ஏசா 63:11சங் 78:71-72
எனது விருப்பம் எல்லாவற்றையும் நிறைவேற்றுவான்,
அவன் எருசலேமைப்பற்றி, “அது திரும்பவும் கட்டப்படட்டும்” என்றும்,
ஆலயத்தைப்பற்றி, “அதன் அஸ்திபாரங்கள் போடப்படட்டும்” என்றும் சொல்லுவான்’
என்று சொல்கிறேன்.”