பேதுரு தனது செயல்களைக்குறித்து விளக்குதல்
யூதரல்லாதவர்கள் இறைவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள் என்பதை அப்போஸ்தலரும் யூதேயா முழுவதிலுமுள்ள சகோதரரும் கேள்விப்பட்டார்கள். சங் 22:27மல்கி 1:11ரோம 15:7-12ஏசா 32:15அப் 14:27அப் 15:3கலா 1:17-22ஏசா 49:6 எனவே பேதுரு எருசலேமுக்குப் போனபோது, விருத்தசேதனம் செய்துகொண்ட விசுவாசிகள் அவனைக் குற்றப்படுத்தி, அப் 10:45அப் 10:9அப் 15:1அப் 21:20-23கலா 2:12-14அப் 15:5 “நீ ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதவர்களிடம் சென்று அவர்களுடன் உணவு உட்கொண்டாய்” என்றார்கள். அப் 10:28கலா 2:12லூக் 15:21 கொரி 5:112 யோவா 1:10அப் 10:23அப் 10:48
பேதுரு ஒன்றுவிடாமல் நடந்த எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கத் தொடங்கினான்: லூக் 1:3அப் 14:27யோசு 22:21-31நீதி 15:1 “நான் யோப்பா பட்டணத்தில் மன்றாடிக்கொண்டிருந்தபோது, பரவசமடைந்து ஒரு தரிசனத்தைக் கண்டேன். ஒரு பெரிய விரிப்புத் துணி போன்ற ஒன்று, அதன் நான்கு மூலைகளிலும் பிடித்து, பரத்திலிருந்து இறக்கப்படுவதைக் கண்டேன். அது நான் இருந்த இடத்தை நோக்கி இறங்கி வந்தது. அப் 10:9-32ஆமோ 8:2அப் 11:5-14அப் 22:17அப் 9:10ஆமோ 7:4-7எசேக் 2:9எரே 1:11-14 நான் அதற்குள் பார்த்தபோது, பூமியிலுள்ள நான்கு கால்களையுடைய மிருகங்களையும், காட்டு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன். லூக் 4:20அப் 3:4 அப்பொழுது ஒரு குரல் என்னிடம், ‘பேதுரு எழுந்திரு. கொன்று சாப்பிடு’ என்று சொன்னது.
“நானோ, ‘இல்லை ஆண்டவரே, நான் ஒருபோதும் தூய்மையற்றதும் அசுத்தமானதுமான எதுவும் என் வாய்க்குள்ளே ஒருபோதும் போனதில்லை’ என்றேன். ரோம 14:141 கொரி 7:14ஓசி 9:3எஸ்றா 9:11-12லேவி 10:10லேவி 11:47மாற் 7:2
“பரத்திலிருந்து அந்தக் குரல் இரண்டாவது முறையும் என்னுடன் பேசி, ‘இறைவன் சுத்தமாக்கிய எதையும் தூய்மையற்றது என்று நீ சொல்லாதே’ என்றது. அப் 15:9எபி 9:13-141 தீமோ 4:5அப் 10:15அப் 10:28அப் 10:34-35 இப்படி மூன்று முறைகள் நடந்தது. பின்பு, அது மீண்டும் பரத்திற்கு இழுத்தெடுக்கப்பட்டது. 2 கொரி 12:8யோவா 13:38யோவா 21:17எண் 24:10
“அதேவேளையில் நான் தங்கியிருந்த வீட்டின் வாசலில் செசரியாவிலிருந்து என்னிடம் அனுப்பப்பட்ட மூன்றுபேர் நின்றுகொண்டிருந்தார்கள். அப் 10:17-18அப் 9:10-12யாத் 4:14யாத் 4:27 நான் அவர்களுடன் போகத் தயங்கக்கூடாது என்று, பரிசுத்த ஆவியானவர் எனக்குச் சொன்னார். இந்த ஆறு சகோதரரும் என்னுடன் வந்தார்கள், நாங்கள் அந்த மனிதனுடைய வீட்டிற்குள் போனோம். அப் 8:29ரோம 3:222 தெச 2:2அப் 10:23அப் 10:45அப் 15:9அப் 16:6-7யோவா 16:13 அவனோ தனது வீட்டிலே, எப்படி ஒரு இறைத்தூதன் தனக்குக் காட்சியளித்ததைத் தான் கண்டதாகவும், அந்தத் தூதன் பேதுரு என்று அழைக்கப்படும் சீமோனைக் கூட்டிவரும்படி யோப்பா பட்டணத்திற்கு ஆட்களை அனுப்பும்படி சொன்னான் என்றும் கூறினான். அப் 10:30-32அப் 10:22அப் 10:3-6அப் 12:11அப் 9:43எபி 1:14 அத்துடன் அவன் கொண்டுவரும் செய்தியினால் நீயும், உன் குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று இறைத்தூதன் சொன்னதாகவும் அவன் எங்களுக்கு அறிவித்தான். அப் 10:22அப் 16:15அப் 16:31-341 யோவா 5:9-13அப் 10:2அப் 10:32-33அப் 10:6அப் 2:39
“நான் பேசத் தொடங்கியபோது, பரிசுத்த ஆவியானவர் தொடக்கத்தில் நம்மேல் இறங்கியது போலவே, அவர்கள்மேலும் இறங்கினார். அப் 19:6அப் 10:34-46அப் 2:2-12அப் 4:31 அப்பொழுது, ‘யோவான் தண்ணீரினால் திருமுழுக்கு கொடுத்தான். ஆனால் நீங்களோ பரிசுத்த ஆவியானவரால் திருமுழுக்கு பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்னதை, நான் நினைவுகூர்ந்தேன்.’ அப் 1:5மாற் 1:8நீதி 1:23லூக் 3:16மத் 3:111 கொரி 12:13யோவா 14:26அப் 19:2-4 எனவே கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் வைத்தவர்களாகிய நமக்குக் கொடுத்த அதே வரத்தை அவர்களுக்கும் கொடுத்தால், இறைவனை தடுத்து நிறுத்த முடியும் என்று எண்ணுவதற்கு நான் யார்?” என்றான். அப் 10:47ரோம 9:20-26அப் 15:8-9தானி 4:35யோபு 33:13ரோம 11:34-36ரோம 9:15-16அப் 10:45
யூத விசுவாசிகள் இதைக் கேட்டபோது, தொடர்ந்து எவ்வித எதிர்ப்பும் அவர்களுக்கு இருக்கவில்லை, அவர்கள் இறைவனைத் துதித்து, “அப்படியானால் இறைவன் யூதரல்லாத மக்களுக்கும்கூட, வாழ்வு கொடுக்கும் மனந்திரும்புதலைக் கொடுத்திருக்கிறார்!” என்றார்கள். ரோம 10:12-132 கொரி 7:10எசேக் 36:262 தீமோ 2:25-26அப் 20:21அப் 5:31யாக் 1:16-17எபே 3:5-8
அந்தியோகியாவில் திருச்சபை
ஸ்தேவானுடைய மரணத்தின்பின் ஏற்பட்ட துன்புறுத்தலின் காரணமாக, சிதறடிக்கப்பட்டவர்கள் பெனிக்கே, சீப்புரு தீவு, அந்தியோகியாவரை சென்றார்கள். அவர்களோ யூதருக்கு மட்டுமே, இறைவார்த்தையை அறிவித்தார்கள். அப் 15:22அப் 15:3அப் 15:35அப் 21:2அப் 4:36அப் 11:26-27அப் 13:1அப் 13:4 ஆயினும் சீப்புரு தீவு, சிரேனே ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களில் சிலர், அந்தியோகியாவுக்குப் போய் கிரேக்கருடன் பேசத்தொடங்கி, கர்த்தராகிய இயேசுவைக்குறித்த நற்செய்தியை அவர்களுக்குச் சொன்னார்கள். அப் 13:1மத் 27:321 கொரி 1:23-24அப் 2:10அப் 6:9எபே 3:81 கொரி 2:2அப் 17:18 கர்த்தருடைய கரம் அவர்களுடன்கூட இருந்தது. பெருந்தொகையான மக்கள் விசுவாசித்து, கர்த்தரிடமாய் திரும்பினார்கள். அப் 2:47லூக் 1:66அப் 5:141 கொரி 3:6-71 தெச 1:5அப் 6:7அப் 9:35ஏசா 59:1
இந்தச் செய்தி எருசலேமிலுள்ள திருச்சபையோரின் காதுக்கு எட்டியது; அப்பொழுது அவர்கள் பர்னபாவை அந்தியோகியாவுக்கு அனுப்பினார்கள். அப் 9:271 தெச 3:6அப் 11:1அப் 13:1-3அப் 15:2அப் 15:22அப் 15:35-39அப் 4:36-37 அவன் அங்கேபோய்ச் சேர்ந்து, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இறைவனுடைய கிருபையின் செயல்களைக் கண்டான். அப்பொழுது அவன் மகிழ்ச்சியடைந்து, அவர்கள் அனைவரும் தங்கள் முழு இருதயத்தோடும், கர்த்தருக்கு உண்மையாய் இருக்கவேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்தினான். 1 கொரி 15:58அப் 14:221 யோவா 2:28அப் 13:432 தீமோ 3:10அப் 20:24உபா 30:20யோசு 23:8 பர்னபா நல்லவனும், பரிசுத்த ஆவியானவராலும், விசுவாசத்திலும் நிறைந்தவனுமாக இருந்தான். அங்கே அநேக மக்கள் கர்த்தரிடம் சேர்க்கப்பட்டார்கள். அப் 11:21அப் 5:14சங் 112:5அப் 6:5அப் 9:312 சாமு 18:27அப் 6:3அப் 6:8
அதற்குப் பின்பு பர்னபா சவுலைத்தேடி தர்சுவிற்குப் போனான். அப் 9:11அப் 9:27அப் 9:30அப் 21:39 அவன் சவுலைக் கண்டபோது, அவனை அந்தியோகியாவுக்குக் கூட்டிக்கொண்டு வந்தான். எனவே ஒரு வருடமாக பர்னபாவும் சவுலும் அங்குள்ள திருச்சபையுடன் சேர்ந்து, பெருந்தொகையான மக்களுக்கு போதித்தார்கள். அந்தியோகியாவிலேயே முதன்முதலில் சீடர்களுக்கு கிறிஸ்தவர்கள் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. 1 பேது 4:16அப் 26:281 பேது 4:141 கொரி 12:121 கொரி 14:231 கொரி 4:171 யோவா 2:27அப் 14:27
அந்நாட்களில் சில இறைவாக்கினர் எருசலேமிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்தார்கள். அப் 13:11 கொரி 12:28எபே 4:11அப் 15:32அப் 2:17மத் 23:341 கொரி 14:32அப் 21:4 அவர்களில் ஒருவனான அகபு என்பவன் எழுந்து நின்று, உலகம் எங்கும் ஒரு கடும் பஞ்சம் ஏற்படப்போகிறது என்று பரிசுத்த ஆவியானவராலே முன்னறிவித்தான். அப்படியே, அது ரோமப் பேரரசன் கிலவுதியுவின் ஆட்சியில் ஏற்பட்டது. அப் 21:10அப் 18:21 இராஜா 17:1-16லூக் 2:1லூக் 3:12இராஜா 8:1-2ஆதி 41:30-31ஆதி 41:38 சீடர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய ஆற்றலுக்கு ஏற்றபடி, யூதேயாவில் வாழுகிற சகோதரருக்கு உதவிசெய்யத் தீர்மானித்தார்கள். 2 கொரி 8:12-141 கொரி 16:1-22 கொரி 8:2-4கலா 2:101 கொரி 13:52 கொரி 9:1-2எபி 13:5-6ரோம 15:25-27 பர்னபா, சவுல் என்பவர்கள் மூலமாக அங்குள்ள சபைத்தலைவர்களுக்கு நன்கொடையை அனுப்பி, அவர்கள் இந்த உதவியைச் செய்தார்கள். அப் 12:25அப் 14:231 தீமோ 5:17அப் 15:4அப் 15:6அப் 16:4அப் 20:17யாக் 5:14