அப்போஸ்தலருடைய நடபடிகள் 9

Acts 9

சவுலின் மனமாற்றம்

இதற்கிடையில், சவுல் இன்னும் கர்த்தருடைய சீடர்களைக் கொன்றுவிடுவதாக பயமுறுத்தி வந்தான். அவன் பிரதான ஆசாரியனிடத்திற்குப் போய், அப் 8:31 தீமோ 1:13கலா 1:13அப் 9:11-211 கொரி 15:9அப் 22:3-5அப் 26:9-11அப் 7:58 கிறிஸ்துவின் வழியைச் சார்ந்த ஆண் பெண் யாராய் இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து எருசலேமுக்குக் கொண்டுவருவதற்கென்று தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்குக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டான். அப் 19:23அப் 19:9அப் 24:14அப் 22:4-5அப் 24:22அப் 18:25அப் 9:14அப் 26:12 சவுல் தன் பிரயாணத்தில் தமஸ்குவை நெருங்கி வருகையில், திடீரென வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச்சுற்றிலும் பிரகாசித்தது. 1 கொரி 15:8அப் 26:12-13அப் 22:6வெளி 21:231 தீமோ 6:16சங் 104:2வெளி 22:5அப் 9:17 அதனால் அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது, தன்னுடன் பேசுகிற ஒரு குரலைக் கேட்டான். அந்த குரல், “சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்?” என்றது. சகரி 2:81 கொரி 12:12ஆதி 22:11ஏசா 63:9ரோம 11:22அப் 26:14-15யோவா 21:15ஆதி 16:8

அதற்கு அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான். 1 தீமோ 1:131 சாமு 3:4-10ஏசா 45:9யோபு 40:9-10யோபு 9:4அப் 26:91 கொரி 10:22அப் 5:39

அதற்கு அவர், “நீ துன்புறுத்துகிற இயேசு நானே, முள்ளில் உதைப்பது உனக்கு கடினமானதே. எனவே, இப்பொழுது நீ எழுந்து பட்டணத்திற்குள்ளே போ. நீ என்ன செய்யவேண்டும் என்பது உனக்குச் சொல்லப்படும்” என்றார். அப் 22:101 தீமோ 1:14-16அப் 26:16அப் 10:22அப் 10:32அப் 11:13-14அப் 16:29-30அப் 24:25-26

சவுலுடன் பயணம் செய்தவர்கள், பேச்சற்று நின்றார்கள். அவர்களோ சத்தத்தைக் கேட்டார்கள், ஆனால் ஒருவரையுமே காணவில்லை. அப் 22:9அப் 26:13-14தானி 10:7யோவா 12:29மத் 24:40-41 சவுல் தரையில் இருந்து எழுந்து, தன் கண்களைத் திறந்தபோது, அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை. எனவே அவர்கள் அவனுடைய கையைப் பிடித்து, தமஸ்கு பட்டணத்திற்குள்ளே கூட்டிக்கொண்டு சென்றார்கள். அப் 22:11அப் 9:182இராஜா 6:17-20அப் 13:11ஆதி 19:11யாத் 4:11 அங்கே அவன் மூன்று நாட்களாய் பார்வையற்றவனாய் இருந்தான். அவன் எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ இல்லை. யோனா 3:6-82 நாளாக 33:12-132 நாளாக 33:18-19எஸ்த 4:16அப் 9:11-12

தமஸ்குவிலே, அனனியா என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். கர்த்தர் தரிசனத்தில் அவனைக் கூப்பிட்டு, “அனனியா!” என்றார். அப் 10:3அப் 22:12ஆதி 22:1ஏசா 6:81 சாமு 3:41 சாமு 3:8-10அப் 10:17-20யாத் 3:4

அதற்கு அவன், “ஆண்டவரே, இதோ அடியேன்!” என்றான்.

அப்பொழுது கர்த்தர் அவனிடம், “நீ நேர்த்தெரு எனப்பட்ட தெருவிலிருக்கிற யூதாவின் வீட்டிற்குப்போய், அங்கே தர்சுவைச் சேர்ந்த சவுல் என்னும் பெயருடைய ஒருவனைப்பற்றி விசாரி. அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான். அப் 9:30அப் 11:25அப் 21:39அப் 22:3லூக் 11:9-10லூக் 18:7-14மத் 7:7-8அப் 11:13 அவன் அனனியா என்னும் பெயருடைய ஒருவன் தன்னிடம் வந்து, பார்வையடையும்படி தன்மேல் கைகளை வைப்பதாகவும் தரிசனத்திலே கண்டிருக்கிறான்” என்றார். மாற் 5:23அப் 9:10அப் 9:17-18

அப்பொழுது அனனியா, “ஆண்டவரே, நான் இவனைப்பற்றி அநேக செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறேன். எருசலேமிலே அவன் உமது பரிசுத்தவான்களுக்குச் செய்த எல்லாத் தீமைகளையும் கேள்விப்பட்டிருக்கிறேன். 1 தீமோ 1:13-15அப் 8:3அப் 22:19-20எசேக் 3:14அப் 9:11 இராஜா 18:9-141 சாமு 16:2அப் 22:4 உமது பெயரை அறிக்கையிடுகிற எல்லோரையும் கைதுசெய்வதற்குப் பிரதான ஆசாரியனிடமிருந்து அதிகாரம் பெற்றவனாய் அவன் இங்கே வந்திருக்கிறான்” என்றான். அப் 9:21அப் 7:592 தீமோ 2:221 கொரி 1:2அப் 22:16அப் 9:2-3ரோம 10:12-14

ஆனால் அதற்குக் கர்த்தர் அனனியாவிடம், “நீ போ, இவன் என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட ஒரு கருவி. யூதரல்லாதவர்களுக்கும், அவர்களின் அரசர்களுக்கு முன்பாகவும் இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாகவும் என் பெயரை அறிவிப்பதற்காக, நான் அவனைத் தெரிந்தெடுத்திருக்கிறேன். கலா 1:15-16எபே 3:7-82 தீமோ 4:16-17ரோம 11:13அப் 26:17-20அப் 22:21எரே 1:5ரோம 1:5 எனது பெயருக்காக அவன் எவ்வளவாய் துன்பம் அனுபவிக்கவேண்டும் என்று நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்றார். 1 தெச 3:32 கொரி 6:4அப் 21:112 தீமோ 1:12யோவா 15:201 பேது 4:142 கொரி 11:23-271 கொரி 4:9-13

அப்பொழுது அனனியா, அந்த வீட்டை அடைந்து, அதற்குள் போனான். அவன் சவுலின்மேல் தன் கைகளை வைத்து, “சகோதரனாகிய சவுலே, நீ இங்கே வருகையில் வழியிலே உனக்குத் தரிசனம் கொடுத்த கர்த்தராகிய இயேசு என்னை உன்னிடம் அனுப்பியிருக்கிறார்; நீ மீண்டும் பார்வை பெறும்படியாகவும், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படும்படியாகவுமே அவர் என்னை அனுப்பினார்” என்றான். அப் 8:17அப் 2:4அப் 6:6அப் 22:12-141 தீமோ 5:22அப் 13:521 பேது 1:22-231 கொரி 15:47 உடனேயே சவுலின் கண்களிலிருந்து மீன் செதில்கள் போன்ற ஏதோ விழுந்தன. அப்பொழுது அவனால் பார்க்கமுடிந்தது. அவன் எழுந்திருந்து திருமுழுக்கு பெற்றான். 2 கொரி 3:14அப் 22:16அப் 2:382 கொரி 4:6அப் 13:12-13அப் 13:37-38அப் 2:41 பின்பு அவன் சிறிதளவு உணவைச் சாப்பிட்டு, தன் பெலத்தைத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். அப் 26:201 சாமு 30:12கலா 1:17அப் 11:26அப் 27:33-36பிரச 9:71 சாமு 10:10-12

தமஸ்குவிலும் எருசலேமிலும் சவுல்

சவுல் தமஸ்குவில் இருந்த சீடர்களுடன் சில நாட்களைக் கழித்தான். உடனே அவன் யூத ஜெப ஆலயங்களில், இயேசு இறைவனின் மகன் என்று பிரசங்கிக்கத் தொடங்கினான். யோவா 20:281 யோவா 4:14-15கலா 1:23-24கலா 2:20அப் 9:22அப் 9:27-28யோவா 1:49யோவா 20:31 அவன் சொன்னதைக் கேட்ட அனைவரும் வியப்புற்று, “எருசலேமிலே இந்தப் பெயரை அறிக்கையிடுகிறவர்களை ஒழிக்க முற்பட்டவன் இவனல்லவா? இவன் அவர்களைக் கைதுசெய்து, பிரதான ஆசாரியனிடம் கொண்டுபோக அல்லவா இங்கே வந்தான்?” என்று கேட்டார்கள். அப் 8:3அப் 9:13-142 தெச 1:10கலா 1:13-24மத் 13:54-551 யோவா 3:1அப் 2:12அப் 2:6 ஆனால் சவுல், மேன்மேலும் வல்லமை பெற்று, தமஸ்குவிலே வாழுகிற யூதர்கள் அனைவருக்கும் இயேசுவே கிறிஸ்து என்று நிரூபித்து, அவர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கினான். அப் 18:5ஏசா 40:29லூக் 21:15அப் 18:27-281 கொரி 1:27அப் 28:23அப் 6:9-10பிலி 4:13

இவ்வாறு பல நாட்கள் சென்றபின்பு, யூதர்கள் சவுலைக் கொலைசெய்வதற்கு சூழ்ச்சி செய்தார்கள். கலா 1:17-181 தெச 2:15-16அப் 13:50அப் 14:192 கொரி 11:26அப் 14:2அப் 22:21-23அப் 9:16 சவுலோ அவர்களுடைய திட்டத்தை அறிந்துகொண்டான். அவர்கள் அவனைக் கொலை செய்யும்படி இரவும் பகலுமாக அந்நகரத்தின் வாசல்களைக் கவனமாய் காத்துக்கொண்டிருந்தார்கள். 2 கொரி 11:32அப் 25:3அப் 20:19அப் 20:3அப் 14:5-6அப் 17:10-15அப் 23:12-21அப் 23:30 ஆனால் அவனைப் பின்பற்றியவர்கள், இரவிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையில் வைத்து நகரத்தின் மதில் வழியாய் இறக்கிவிட்டார்கள். 2 கொரி 11:33யோசு 2:151 சாமு 19:11-12

சவுல் எருசலேமுக்கு வந்தபோது, சீடர்களுடன் சேர்ந்துகொள்ள முயற்சித்தான். ஆனால் அவர்களோ, இவனைக்குறித்துப் பயமடைந்திருந்தபடியால், இவன் உண்மையாகவே ஒரு சீடன் என்று நம்பவில்லை. அப் 26:20கலா 1:17-19அப் 22:17-20அப் 4:23அப் 9:19கலா 2:4மத் 10:17-19மத் 24:10 ஆனால் பர்னபா அவனைக் கூட்டிக்கொண்டு அப்போஸ்தலரிடம் வந்தான். அவன் அவர்களுக்குச் சவுல் எவ்விதம் தன் பயணத்தில் கர்த்தரைக் கண்டான் என்பதையும், எவ்விதம் கர்த்தர் அவனுடன் பேசினார் என்பதையும், அவன் எவ்விதம் தமஸ்குவில் இயேசுவின் பெயரில் பயமின்றி பிரசங்கித்தான் என்பதையும் எடுத்துச்சொன்னான். அப் 4:36அப் 4:29அப் 4:13எபே 6:19-201 கொரி 15:81 கொரி 9:6அப் 11:22அப் 11:25 எனவே சவுல் அவர்களுடன் தங்கி, எருசலேமில் சுதந்திரமாய்ச் சுற்றித்திரிந்து, கர்த்தரின் பெயரில் துணிவுடன் பேசினான். அப் 1:211 இராஜா 3:72 சாமு 5:2கலா 1:18யோவா 10:9எண் 27:16-17சங் 121:8 அவன் கிரேக்க யூதருடன் பேசி விவாதித்தான். அவர்களோ அவனைக் கொலைசெய்ய முயற்சித்தார்கள். அப் 6:12 கொரி 11:26அப் 11:20யூதா 1:9அப் 17:17அப் 18:19அப் 19:8அப் 9:20-23 சகோதரர் இதை அறிந்தபோது, அவர்கள் சவுலை செசரியாவுக்குக் கூட்டிக்கொண்டுபோய், அவனுடைய சொந்த ஊராகிய தர்சுவுக்கு அனுப்பிவைத்தார்கள். அப் 11:25அப் 8:40அப் 9:11கலா 1:21அப் 17:10அப் 17:15அப் 9:24-25மத் 10:23

அந்நாட்களில் யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய இடங்களில் இருந்த திருச்சபையோ சமாதானம் பெற்று, பெலனடைந்து, கர்த்தருடைய பயபக்தியில் வாழ்ந்து, பரிசுத்த ஆவியானவரால் உற்சாகமூட்டப்பட்டு, எண்ணிக்கையிலும் பெருகிற்று. சங் 111:10யோவா 14:16-18ஏசா 33:6நீதி 14:26-27நீதி 23:172 கொரி 7:1அப் 12:24அப் 16:5

ஐனேயாவும் தொற்காளும்

பேதுரு நாட்டுப் பகுதிகளில் பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கையில், லித்தாவில் இருந்த பரிசுத்தவான்களைச் சந்திக்கும்படி போனான். அப் 9:13அப் 8:25நீதி 2:8அப் 1:8அப் 26:10அப் 8:14அப் 9:41எபே 1:1 அங்கே அவன் ஐனேயா என்னும் பெயருடைய ஒருவனைக் கண்டான். அவன் முடக்குவாதமுடையவனாய் எட்டு வருடங்களாகப் படுக்கையிலே கிடந்தான். லூக் 13:16அப் 14:8அப் 3:2அப் 4:22யோவா 5:5யோவா 9:1யோவா 9:21மாற் 2:3-11 பேதுரு அவனைப் பார்த்து, “ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைச் சுகப்படுத்துகிறார். நீ எழுந்து உன் படுக்கையை மடித்து வை” என்றான். உடனே, ஐனேயா எழுந்து நின்றான். அப் 3:12அப் 3:6மத் 9:6அப் 16:18அப் 3:16அப் 4:10மத் 8:3மத் 9:28-30 லித்தாவிலும் சாரோனிலும் வாழ்ந்த அனைவரும் அவன் நடப்பதைக் கண்டு கர்த்தரிடம் திரும்பினார்கள். அப் 11:211 நாளாக 5:16அப் 9:42ஏசா 35:21 நாளாக 27:292 கொரி 3:16சங் 22:271 தெச 1:9-10

யோப்பாவிலே தபீத்தா என்னும் பெயருடைய சீஷி ஒருத்தி இருந்தாள். கிரேக்க மொழியிலே அவளைத் தொற்காள் என்று அழைத்தார்கள். அவள் எப்பொழுதும் நன்மை செய்கிறவளாயும், ஏழைகளுக்கு உதவி செய்கிறவளாயும் இருந்தாள். தீத் 2:7தீத் 3:82 நாளாக 2:16அப் 10:31எபி 13:21அப் 10:4-5எஸ்றா 3:7யாக் 1:27 அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு இறந்துபோனாள். அவளுடைய உடல் கழுவப்பட்டு, ஒரு வீட்டின் மேலறையில் கிடத்தப்பட்டிருந்தது. அப் 1:13அப் 20:8அப் 9:39யோவா 11:3-4யோவா 11:36-37மாற் 14:15 லித்தா யோப்பாவுக்கு அருகே இருந்தது. எனவே, பேதுரு லித்தாவில் இருக்கிறான் என்று சீடர்கள் கேள்விப்பட்டபோது, இரண்டு மனிதரை அவனிடம் அனுப்பி, “தயவுசெய்து உடனே வாரும்” என்று சொல்லச் சொன்னார்கள். அப் 9:362இராஜா 4:28-30அப் 11:26அப் 9:32

பேதுரு அவர்களுடனே போனான். அவன் வந்து சேர்ந்தவுடனே, அவனை வீட்டின் மேலறைக்குக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். எல்லா விதவைகளும் அவனைச்சுற்றி நின்று அழுதார்கள். தொற்காள் தங்களுடன் உயிரோடு இருக்கையில் அவள் செய்த அங்கிகளையும் ஆடைகளையும் அவனுக்குக் காண்பித்தார்கள். 1 தெச 1:3எபே 4:28நீதி 10:7நீதி 31:30-311 யோவா 3:181 தெச 4:132 கொரி 8:122 சாமு 1:24

பேதுரு அவர்கள் எல்லோரையும் அறைக்கு வெளியே அனுப்பிவிட்டு, முழங்காற்படியிட்டு மன்றாடினான். அவன் இறந்திருந்த பெண்ணின் பக்கமாகத் திரும்பி, “தபீத்தா எழுந்திரு” என்றான். அவள் கண்களைத் திறந்து பேதுருவைக் கண்டபோது, எழுந்து உட்கார்ந்தாள். மத் 9:25மாற் 5:40-42லூக் 8:542இராஜா 4:32-36அப் 7:601 இராஜா 17:19-23யோவா 11:43-44மாற் 9:25 பேதுரு அவளுடைய கையைப் பிடித்து, அவள் நிற்பதற்கு உதவி செய்தான். பின்பு அவன் விசுவாசிகளையும் விதவைகளையும் கூப்பிட்டு, அவர்களிடம் அவளை உயிருடன் ஒப்படைத்தான். அப் 6:1மாற் 1:311 இராஜா 17:23அப் 20:12அப் 3:7ஆதி 45:26யோபு 29:13லூக் 7:12 இது யோப்பா பட்டணம் முழுவதும் தெரியவந்தபோது, அநேக மக்கள் கர்த்தரில் விசுவாசம் வைத்தார்கள். அப் 11:21அப் 9:35யோவா 11:45யோவா 12:11யோவா 12:44அப் 19:17-18யோவா 11:4 பேதுரு யோப்பாவிலே தோல் பதனிடுகிற சீமோனுடன் சிலகாலம் தங்கியிருந்தான். அப் 10:6அப் 10:32