முடவனைப் பேதுரு சுகப்படுத்துதல்
ஒரு நாள் பேதுருவும், யோவானும் ஜெபநேரமாகிய பிற்பகல் மூன்றுமணியளவில் ஆலயத்திற்குப் போய்க்கொண்டிருந்தார்கள். சங் 55:17அப் 10:3அப் 4:13லூக் 1:10லூக் 24:53அப் 5:25அப் 8:14தானி 6:10 அங்கே சிலர், பிறப்பிலேயே முடமான ஒருவனை, அலங்காரவாசல் என அழைக்கப்படும் ஆலய வாசலுக்குச் சுமந்துகொண்டு வந்தனர். ஆலய முற்றத்திற்குள் போகிறவர்களிடம் பிச்சை கேட்கும்படி ஒவ்வொரு நாளும் அவனை அங்கே வைப்பது வழக்கம். அப் 14:8யோவா 9:8லூக் 16:20அப் 10:31லூக் 18:35அப் 10:4அப் 4:22யோவா 1:9-30 பேதுருவும் யோவானும் ஆலயத்திற்குள் போவதை அவன் கண்டபோது, அவன் அவர்களிடம் பிச்சை கேட்டான். பேதுரு அவனை உற்றுப்பார்த்தான். யோவானும் அப்படியே அவனைப் பார்த்தான். பின்பு பேதுரு அவனிடம், “எங்களைப் பார்!” என்றான். அப் 14:9-10யோவா 11:40அப் 3:12லூக் 4:20யோவா 5:6அப் 11:6 அப்பொழுது அவன், அவர்களிடம் ஏதாவது பெற்றுக்கொள்ளலாம் என நினைத்து, தனது கவனத்தை அவர்கள் பக்கமாகத் திருப்பினான்.
அப்பொழுது பேதுரு அவனிடம், “வெள்ளியும் தங்கமும் என்னிடம் இல்லை, ஆனால் என்னிடம் இருப்பதை நான் உனக்குத் தருகிறேன். நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால் எழுந்து நட” என்றான். அப் 3:16அப் 10:38அப் 4:10அப் 9:342 கொரி 8:9அப் 16:18மாற் 16:17யாக் 2:5 பின்பு பேதுரு அவனது வலதுகையைப் பிடித்துத் தூக்கிவிட்டான். உடனே அவனது கால்களும், கணுக்கால்களும் பெலமடைந்தன. மாற் 1:31மாற் 9:27அப் 9:41மாற் 5:41லூக் 13:13 அவன் துள்ளி எழுந்து நடக்கத் தொடங்கினான். அதற்குப் பின்பு அவன் நடந்தும், துள்ளியும் இறைவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடன் ஆலய முற்றத்திற்குப் போனான். அப் 14:10ஏசா 35:6சங் 107:20-22சங் 103:1-2யோவா 5:14லூக் 17:15-18லூக் 6:23யோவா 5:8-9 அவன் நடப்பதையும், இறைவனைத் துதிப்பதையும் எல்லா மக்களும் கண்டபோது, அப் 4:16அப் 4:21லூக் 13:17அப் 14:11மாற் 2:11-12 இவனே ஆலயத்தின் அலங்காரவாசல் என அழைக்கப்படும் வாசலருகே இருந்து பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தவன் என்பதை அவர்கள் அறிந்துகொண்டார்கள். அவனுக்கு நடந்ததைக்குறித்து அவர்கள் திகைத்து வியப்புற்றார்கள். அப் 3:2யோவா 5:20யோவா 9:3லூக் 9:43அப் 2:12அப் 2:7அப் 4:14-16அப் 4:21-22
மக்களிடம் பேதுரு பேசுதல்
அந்தப் பிச்சைக்காரன் பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், மக்கள் அனைவரும் வியப்படைந்தவர்களாய் சாலொமோனின் மண்டபம் என்று அழைக்கப்பட்ட இடத்திற்கு அவர்களிடம் ஓடிவந்தார்கள். அப் 5:12யோவா 10:23லூக் 8:38அப் 2:6லூக் 22:8 இதைப் பேதுரு கண்டபோது, அவன் அவர்களிடம்: “இஸ்ரயேலரே, நீங்கள் ஏன் இதைக்கண்டு அதிசயப்படுகிறீர்கள்? நாங்கள் சொந்த வல்லமையினாலோ, இறை பக்தியினாலோ இந்த மனிதனை நடக்கச் செய்தோமா? இல்லையே; அப்படியிருக்க, ஏன் எங்களை இப்படிப் பார்க்கிறீர்கள்? 2 கொரி 3:5யோவா 3:27-28அப் 14:11-15ஆதி 41:16அப் 10:25-26அப் 2:22தானி 2:28-30ரோம 9:4 ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரின் இறைவனான நமது தந்தையரின் இறைவன், தமது ஊழியரான இயேசுவை மகிமைப்படுத்தினார். நீங்களோ அவரைக் கொலை செய்யும்படி ஒப்புக்கொடுத்தீர்கள். பிலாத்து அவரை விடுதலைசெய்யத் தீர்மானித்தபோதுங்கூட, நீங்கள் அவனுக்கு முன்பாக அவரைப் புறக்கணித்தீர்கள். அப் 7:32மத் 22:32யாத் 3:6எபி 2:9யோவா 18:40யோவா 19:12யோவா 19:15லூக் 23:16-23 பரிசுத்தரும் நீதிமானுமாகிய அவரை நீங்கள் புறக்கணித்தீர்கள். ஆனால் ஒரு கொலைகாரனை உங்களுக்கு விடுதலை செய்யும்படி நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள். மாற் 1:24அப் 7:521 பேது 3:18அப் 4:27அப் 22:14யாக் 5:6லூக் 23:18-19சகரி 9:9 ஜீவனின் அதிபதியை நீங்கள் கொலைசெய்தீர்கள். ஆனால் இறைவனோ, இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். நாங்கள் இதற்குச் சாட்சிகளாய் இருக்கிறோம். அப் 2:24அப் 2:32வெளி 21:61 கொரி 15:45அப் 13:30-32எபி 2:10யோவா 1:4யோவா 5:26 இயேசுவின் பெயரிலுள்ள விசுவாசத்தினாலேயே நீங்கள் பார்த்து அறிந்த இவன் பெலனடைந்திருக்கிறான். இயேசுவின் பெயரும் அவர் மூலமாய் உண்டாகும் விசுவாசமுமே நீங்கள் அனைவரும் காண்கிறபடி இவனுக்கு இந்த முழுமையான சுகத்தைக் கொடுத்திருக்கிறது. மத் 21:21-22அப் 14:9அப் 3:6மாற் 16:17-18அப் 16:18அப் 4:10லூக் 17:5-6மத் 9:22
“சகோதரரே, நீங்களும் உங்கள் தலைவர்களும் உங்கள் அறியாமையினாலேயே இதைச் செய்தீர்களென்று எனக்குத் தெரியும். லூக் 23:34அப் 13:271 கொரி 2:8யோவா 16:31 தீமோ 1:132 கொரி 3:14அப் 26:9யோவா 7:26-27 ஆனாலும், இறைவன் எல்லா இறைவாக்கினர் மூலமாகவும், முன்னறிவித்ததை இவ்விதமாகவே நிறைவேற்றினார். தமது கிறிஸ்து துன்பங்களை அனுபவிப்பார் என்று அவர் சொல்லியிருந்தாரே. ஏசா 53:1-12அப் 2:23அப் 26:22-23ஏசா 50:6லூக் 24:26-27சகரி 12:101 கொரி 15:3-41 பேது 1:10-11 ஆகவே, மனமாற்றமடைந்து இறைவனிடம் திரும்புங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் கழுவப்படும். கர்த்தரிடத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் உங்களுக்கு வரும். அப் 2:38ஏசா 44:22ஏசா 43:25ஏசா 1:16-20மத் 13:15மத் 18:3சங் 51:92 தெச 1:7 இறைவன் உங்களுக்காக ஏற்படுத்திய கிறிஸ்துவாகிய இயேசுவையும் அனுப்புவார். 2 தெச 2:22 தெச 2:8லூக் 19:11வெளி 1:7மத் 24:30-36வெளி 19:11-16அப் 17:31எபி 9:28 இறைவன் தமது பரிசுத்த இறைவாக்கினர்மூலம், வெகுகாலத்திற்கு முன்பே வாக்குப்பண்ணியபடி, அவர் எல்லாவற்றையும் புதுப்பிப்பார். அந்தக் காலம் வரும்வரை, கிறிஸ்து பரலோகத்தில் இருக்கவேண்டும். ரோம 8:21ஏசா 1:26அப் 1:11மல்கி 4:5-6மாற் 9:11-13மத் 17:11-12லூக் 1:70வெளி 22:6 ஏனெனில் மோசே, ‘உங்கள் இறைவனாகிய கர்த்தர் என்னைப்போன்ற ஒரு இறைவாக்கினரை, உங்கள் சொந்த மக்கள் மத்தியிலிருந்து எழுப்புவார்; அந்த இறைவாக்கினர் சொல்வது எல்லாவற்றையும் நீங்கள் கேட்கவேண்டும். உபா 18:15-19அப் 7:37கலா 4:4யோவா 1:17எபி 5:9எபி 1:1-2எபி 2:9-17ஏசா 55:3-4 அவர் சொல்வதைக் கேட்காத எவனும், தன் மக்கள் மத்தியில் இருந்து முற்றுமாய் நீக்கப்படுவான்’ 1 என்று சொல்லியிருக்கிறானே. உபா 18:19யோவா 12:48எபி 10:28-30எபி 10:39எபி 12:25வெளி 20:152 தெச 1:7-9அப் 13:38-41
“சாமுயேல் தொடங்கி, அவனுக்குப்பின் வந்த எல்லா இறைவாக்கினரும், இந்த நாட்களையே முன்னறிவித்தார்கள். அப் 3:21லூக் 24:271 சாமு 3:201 சாமு 2:18சங் 99:61 சாமு 3:1அப் 13:20ரோம 3:21 நீங்களே இறைவாக்கினருக்கும், உங்கள் தந்தையருடன் இறைவன் ஏற்படுத்திய உடன்படிக்கைக்கும் உரிமையாளர்கள். ஏனெனில் இறைவன் ஆபிரகாமிடம், ‘உனது சந்ததியின் மூலமாக, பூமியிலுள்ள மக்கள் எல்லாம் ஆசீர்வதிக்கப்படுவார்கள்’ 2 என்று சொன்னாரே. ஆதி 22:18கலா 3:81 நாளாக 16:17அப் 2:39ரோம 9:4-5ஆதி 12:3சங் 105:8-15கலா 3:16 எனவே, இறைவன் தமது ஊழியக்காரனான இயேசுவை உயிருடன் எழுப்பியபோது, உங்கள் ஒவ்வொருவரையும் உங்கள் பொல்லாத வழிகளிலிருந்து திருப்பி ஆசீர்வதிக்கும்படி, முதன்முதலாக அவரை உங்களிடம் அனுப்பினார் என்றான்.” மத் 1:211 யோவா 3:5-8அப் 3:22யூதா 1:24அப் 13:46-47அப் 3:25எபே 5:26-27எசேக் 11:19-20