லூக்கா 18

Luke 18

விடாமுயற்சியுள்ள விதவையின் உவமை

அதற்குப் பின்பு இயேசு, தமது சீடர்கள் மனந்தளர்ந்து போகாமல், எப்போதும் மன்றாடுகிறவர்களாய் இருக்கவேண்டும் என்பதைக்குறித்து காண்பிப்பதற்காக, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: கொலோ 4:2ரோம 12:121 தெச 5:17பிலி 4:6எபே 6:18சங் 55:16-17எரே 29:12லூக் 21:36 “ஒரு பட்டணத்திலே ஒரு நீதிபதி இருந்தான். அவன் இறைவனுக்குப் பயப்படாதவன். மக்களையும் மதியாதவன். லூக் 18:4நீதி 29:7சங் 8:1-4எசேக் 22:6-8எரே 22:16-172 நாளாக 19:3-9யோபு 29:7-17மீகா 3:1-3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள். அவள் தொடர்ந்து அவனிடம் வந்து, ‘எனது விரோதிக்கு எதிராக எனக்கு நீதி வழங்குங்கள்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டாள். ஏசா 1:17எரே 5:28யோபு 22:9உபா 27:19யோபு 29:13லூக் 18:7-8ரோம 13:3-42 சாமு 14:5-24

“கொஞ்சக்காலம் அவன் அப்படிச் செய்ய மறுத்தான். இறுதியாக அவன், ‘நான் இறைவனுக்குப் பயப்படாதவனாகவும், மனிதனை மதிக்காதவனாகவும் இருந்துங்கூட, எபி 4:12-13லூக் 12:17லூக் 16:3 இந்த விதவை தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுக்கிறாள்; அதனால், நான் அவளுக்கு நீதி வழங்குவேன். அப்பொழுது அவள் இப்படித் தொடர்ந்து வந்து, என்னைத் தொந்தரவு செய்யமாட்டாள்’ என்று, தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்” என்றார். லூக் 11:8லூக் 18:39நியாயாதி 16:16மாற் 10:47-482 சாமு 13:24-27மத் 15:23

பின்பு கர்த்தர், “அந்த அநீதியுள்ள நீதிபதி சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள்! லூக் 7:13 அந்தப்படியே, தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு, இறைவன் நீதியை வழங்காதிருப்பாரோ? அவர் நீதி வழங்கத் தாமதிப்பாரோ? 2 பேது 3:9எபி 10:35-371 தீமோ 5:5லூக் 11:132 தெச 1:6எரே 20:11-13லூக் 2:37வெளி 6:10 நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களுக்கு இறைவன் சீக்கிரமாகவே நீதி வழங்குவார். ஆனால் மானிடமகனாகிய நான் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பேனோ?” என்றார். எபி 10:23-262 பேது 3:8-9மத் 24:9-13சங் 46:5லூக் 17:26-301 தெச 5:1-32 பேது 2:3சங் 143:7-9

பரிசேயனும் வரி வசூலிப்பவனும்

தாங்கள் நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு, மற்றவர்கள் எல்லோரையும் கீழ்த்தரமாய் எண்ணிய சிலரைக் குறித்து, இயேசு இந்த உவமையைச் சொன்னார்: லூக் 16:15நீதி 30:12ஏசா 65:5ரோம 10:3ரோம 14:10ரோம 9:31-32யோவா 7:47-49லூக் 7:39 “இரண்டுபேர் மன்றாடும்படி ஆலயத்திற்குச் சென்றார்கள். அதில் ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன். மத் 21:31-321 இராஜா 8:302இராஜா 20:5அப் 3:12இராஜா 20:8அப் 23:6-8அப் 26:5லூக் 1:9-10 அந்தப் பரிசேயன் நின்றுகொண்டு: ‘இறைவனே, நான் மற்றவர்களைப்போல் இராதபடியினால், உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் கள்வர்களையோ, தீமை செய்கிறவர்களையோ, விபசாரக்காரரையோ அல்லது இந்த வரி வசூலிக்கிறவனைப் போன்றவன் அல்ல. மத் 6:5வெளி 3:17ஏசா 65:5எரே 2:35மாற் 11:25யாக் 2:9-121 கொரி 15:9-101 கொரி 4:7-8 நான் வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன், எனது வருமானத்திலெல்லாம் பத்திலொன்றை கொடுக்கிறேன்’ என்று, தனக்குத்தானே சொல்லி மன்றாடினான். லூக் 11:42மத் 23:23-24லூக் 17:10மத் 9:141 தீமோ 4:8லேவி 27:30-33மல்கி 3:8மத் 15:7-9

“ஆனால், வரி வசூலிப்பவனோ தூரமாய் நின்று வானத்தை நோக்கிப் பார்க்கவும் துணியாமல், அவன் தன் மார்பில் அடித்துக்கொண்டு, ‘இறைவனே, பாவியாகிய என்மேல் இரக்கம் காட்டும்’ என மன்றாடினான். 1 யோவா 1:8-10எஸ்றா 9:61 தீமோ 1:15சங் 41:4எபி 8:12லூக் 7:6-7எபி 4:16லூக் 23:48

“நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அல்ல, இவனே இறைவனுடைய பார்வையில் நீதிமானாகத் தீர்க்கப்பட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிச்சென்றான். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.” லூக் 14:11லூக் 16:15யாக் 4:10மத் 23:12நீதி 29:23யாக் 4:6லூக் 1:52சங் 138:6

சிறுபிள்ளைகளும் இயேசுவும்

குழந்தைகள்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்பதற்காக, மக்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். இதைச் சீடர்கள் கண்டபோது, அவர்கள் மக்களைக் கண்டித்தார்கள். மத் 19:13-15மாற் 10:13-161 சாமு 1:24லூக் 9:49-50லூக் 9:54 இயேசுவோ, பிள்ளைகளைத் தம்மிடம் வரவேற்று சீடர்களுக்கு, “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது. மத் 18:3-41 கொரி 14:201 கொரி 7:14உபா 31:121 பேது 2:2அப் 2:39ஆதி 21:4உபா 29:11 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார். மத் 18:3மாற் 10:15சங் 131:1-21 பேது 1:14

பணக்காரனான ஆளுநர்

அப்பொழுது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வை உரிமையாகப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். மாற் 10:17-31அப் 16:30மத் 19:16-30அப் 2:37எசேக் 33:31லூக் 10:25-28யோவா 13:13-15லூக் 6:46

அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கிறாய்? இறைவன் ஒருவரைத் தவிர, வேறு யாரும் நல்லவர் இல்லையே. யாக் 1:17யோபு 15:14-16எபி 7:261 தீமோ 3:16யோபு 14:4யோபு 25:4லூக் 1:35லூக் 11:13 ‘விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” 1 என்றார். யாத் 20:12-17உபா 5:16-21மத் 19:17-19ரோம 13:9கொலோ 3:20எபே 6:2கலா 3:10-13ஏசா 8:20

அதற்கு அவன், “என் சிறுவயதுமுதல், இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்” என்றான். பிலி 3:6லூக் 18:11-12மத் 19:20-21மாற் 10:20-21லூக் 15:29லூக் 15:7ரோம 10:2-3

இயேசு இதைக் கேட்டபோது, “உன்னிடம் இன்னும் ஒரு குறைபாடு இருக்கிறது. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார். லூக் 12:331 தீமோ 6:18-19மத் 19:21மத் 6:19-20லூக் 10:42லூக் 16:9லூக் 9:23சங் 27:4

அவன் இதைக் கேட்டபோது மிகவும் துக்கமடைந்தான். ஏனெனில், அவன் மிகுந்த செல்வமுடையவனாய் இருந்தான். எசேக் 33:311 யோவா 2:15யோபு 31:24-25லூக் 21:34மத் 19:22மாற் 10:22கொலோ 3:5எபே 5:5 இயேசு அவனைப் பார்த்து, “பணக்காரன் இறைவனுடைய அரசிற்குள் போவது எவ்வளவு கடினமானது! நீதி 11:28யாக் 2:5-7மாற் 10:23-27நீதி 30:91 தீமோ 6:9-102 கொரி 7:9-10மத் 19:23-25சங் 10:3 பணக்காரன் ஒருவன் இறைவனுடைய அரசுக்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார். மத் 23:24

இதைக் கேட்டவர்களோ, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று கேட்டார்கள். லூக் 13:23

அதற்கு இயேசு, “மனிதரால் செய்ய முடியாதவற்றை, இறைவனால் செய்யமுடியும்” என்றார். எரே 32:17லூக் 1:37மத் 19:26யோபு 42:2ஆதி 18:14எபே 1:19-20தானி 4:35எபே 2:4-10

அப்பொழுது பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக, எங்களிடம் உள்ளதையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் வந்தோமே” என்றான். மாற் 10:28பிலி 3:7லூக் 5:11மத் 19:27மத் 4:19-22மத் 9:9

அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இறைவனுடைய அரசின் நிமித்தம் வீட்டையோ, மனைவியையோ, சகோதரர்களையோ, பெற்றோரையோ, பிள்ளைகளையோ விட்டுவிட்டிருந்தால், மாற் 10:29-31மத் 10:37-39லூக் 14:26-28மத் 19:28-30உபா 33:9 அவர்கள் இந்த வாழ்வில் அதிகமானவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். யோபு 42:10எபி 13:5-6வெளி 2:17லூக் 12:31-32மத் 12:321 தீமோ 4:81 தீமோ 6:6சங் 119:103

இயேசு தமது மரணத்தை முன்னறிவித்தல்

இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய் அவர்களிடம், “நாம் எருசலேமுக்குப் போகிறோம், மானிடமகனாகிய என்னைப்பற்றி இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாம் நிறைவேறும். மத் 20:17-19ஏசா 53:1-12மாற் 10:32-34சங் 22:1-31லூக் 24:44-46மத் 16:21லூக் 9:22லூக் 9:51 மானிடமகனாகிய நான் யூதரல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படுவேன். அவர்கள் என்னை ஏளனம் செய்து, அவமதித்து, என்மேல் துப்புவார்கள். என்னைச் சவுக்கால் அடித்து, என்னைக் கொலைசெய்வார்கள். லூக் 23:11ஏசா 50:6ஏசா 53:3அப் 3:13மாற் 14:65ஏசா 52:14மத் 16:21மத் 26:67 ஆனால் மூன்றாம் நாளிலே, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்று சொன்னார். லூக் 24:71 கொரி 15:3-4லூக் 24:21மத் 16:21மத் 27:63

சீடர்களோ, இவைகளில் ஒன்றையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு சொன்னதின் அர்த்தம் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது. அவர் எதைக்குறித்துப் பேசுகிறாரென்றுகூட அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. லூக் 9:45மாற் 9:32யோவா 12:16யோவா 16:1-19லூக் 2:50லூக் 24:25லூக் 24:45யோவா 10:6

குருடன் பார்வையடைதல்

இயேசு எரிகோவுக்கு அருகில் வந்துகொண்டிருக்கையில், பார்வையற்ற ஒருவன் வீதி ஓரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். மத் 20:29-34யோவா 9:8லூக் 16:20-21மாற் 10:46-521 சாமு 2:8அப் 3:2லூக் 19:1 மக்கள் கூட்டமாக செல்லுகின்ற சத்தத்தை அவன் கேட்டு, என்ன நிகழ்கிறது என்று விசாரித்தான். மத் 21:10-11லூக் 15:26 நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, அவ்வழியாய் போகிறாரென்று அவனுக்குச் சொன்னார்கள். மத் 2:23யோவா 1:45யோவா 19:192 கொரி 6:2அப் 2:22அப் 4:10யோவா 12:35-36லூக் 2:51

உடனே அவன், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று சத்தமாய் கூப்பிட்டான். மத் 9:27லூக் 18:39மத் 15:22ஏசா 9:6-7மத் 21:9ரோம 1:3எரே 23:5மத் 12:23

முன்னே சென்றுக் கொண்டிருந்தவர்கள் அவன் சத்தமிடாதிருக்கும்படி அவனை அதட்டினார்கள். ஆனால் அவனோ, இன்னும் அதிக சத்தமாய், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று, கூப்பிட்டான். ஆதி 32:26-28சங் 141:1லூக் 11:8-10லூக் 18:15மத் 26:40-442 கொரி 12:8எரே 29:12-13லூக் 11:52

இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். அவன் அருகில் வந்தபொழுது, இயேசு அவனிடம், மத் 20:31-34மாற் 10:48-52 “நான் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ விரும்புகிறாய்?” என்று, கேட்டார். 1 இராஜா 3:5-15மத் 20:21-22பிலி 4:6ரோம 8:25

அதற்கு அவன், “ஆண்டவரே, நான் பார்வை பெறவிரும்புகிறேன்” என்றான்.

இயேசு அவனிடம், “நீ பார்வையைப் பெற்றுக்கொள்; உன் விசுவாசம் உன்னை நலமாக்கிற்று” என்றார். லூக் 8:48லூக் 17:19மத் 8:3மத் 9:22லூக் 7:50சங் 107:20சங் 33:9மத் 15:28 உடனே, அவன் பார்வை பெற்று இறைவனைத் துதித்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றான். இதைக் கண்ட எல்லா மக்களும் இறைவனைத் துதித்தார்கள். சங் 146:82 தெச 1:10-12அப் 11:18அப் 26:18அப் 4:21கலா 1:24ஏசா 29:18-19ஏசா 35:5