கலாத்தியர் 3

Galatians 3

விசுவாசமும் மோசேயின் சட்டமும்

மூடர்களான கலாத்தியரே, உங்களை வசியப்படுத்தியது யார்? இயேசுகிறிஸ்து சிலுவையில் அறையுண்டது உங்கள் கண்களுக்கு முன்பாகவேத் தெளிவாக உங்களுக்கு காண்பிக்கவில்லையா? கலா 5:7-82 கொரி 11:3கலா 1:6வெளி 2:201 பேது 4:17கலா 3:3கலா 4:9எபி 11:8 நான் உங்களிடமிருந்து ஒரு காரியத்தை அறிய விரும்புகிறேன்: நீங்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டது மோசேயின் சட்டத்தின் கிரியையினாலா அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்ததினாலா? ரோம 10:16-17கலா 3:14அப் 15:8எபே 1:13-14கலா 3:5அப் 8:15எபி 2:4அப் 19:2-6 நீங்கள் இவ்வளவு மூடத்தனமுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? ஆவியானவர் மூலமாய் தொடங்கிய நீங்கள், இப்பொழுது மாம்சத்தினால் முடிவுபெறப் போகிறீர்களா? கலா 5:4-8கலா 4:7-10எபி 7:16-19எபி 9:9-10கலா 6:12-14எபி 9:2 நீங்கள் அவ்வளவு பாடுகளை அனுபவித்தீர்கள், அத்தனையும் வீண்தானா? அவை வீணாய்ப் போகலாமா? 2 யோவா 1:81 கொரி 15:2எபி 10:32-392 பேது 2:20-22எசேக் 18:24எபி 6:4-6 இறைவன் பரிசுத்த ஆவியானவரை உங்களுக்குக் கொடுக்கிறதும், உங்கள் மத்தியில் அற்புதங்களைச் செய்கிறதும், மோசேயின் சட்டத்தின் கிரியையினாலா, அல்லது நற்செய்தியைக் கேட்டு விசுவாசிப்பதனாலா? கலா 3:2அப் 14:9-10அப் 19:11-12அப் 14:31 கொரி 1:4-52 கொரி 13:32 கொரி 10:42 கொரி 12:12 ஆபிரகாமைக்குறித்து சற்று யோசித்துப் பாருங்கள்: அவன் இறைவனை விசுவாசித்தான், அந்த விசுவாசம் அவனுக்கு நீதியாகக் கணக்கிடப்பட்டது. 1 ஆதி 15:6ரோம 4:21-22யாக் 2:23ரோம 4:3-6ரோம 4:24ரோம 4:9-11கலா 3:9ரோம 9:32-33

இதிலிருந்து, விசுவாசிக்கிறவர்களே ஆபிரகாமுடைய பிள்ளைகளாய் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளுங்கள். கலா 3:9ரோம 9:7-8கலா 3:26-29சங் 100:3ரோம 4:24யோவா 8:39லூக் 19:9ரோம 4:11-16 இறைவன் விசுவாசத்தினாலே யூதரல்லாத மக்களை நீதிமான்களாக்குவார் என்று வேதவசனத்தில் முன்னமே எழுதப்பட்டிருந்தது. அதனாலேயே, “எல்லா நாடுகளும் உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்” 2 என்று ஏற்கெனவே ஆபிரகாமுக்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது. ஆதி 12:3ஆதி 22:18ஆதி 28:14ஆதி 18:18ஆதி 26:4எபி 4:2ரோம 3:28-30கலா 3:22 எனவே விசுவாசமுள்ளவர்கள் விசுவாசத்தின் மனிதனான ஆபிரகாமுடனேகூட ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். கலா 3:29ரோம 4:16கலா 4:28ரோம 4:24ரோம 4:11கலா 3:14கலா 3:7-8

மோசேயின் சட்டத்தின் கிரியைகளை நம்பிக்கொண்டிருக்கும் எல்லாரும் சாபத்துக்கு உட்பட்டிருக்கிறார்கள். ஏனெனில், “மோசேயின் சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் எல்லாவற்றையும் கைக்கொள்ளாமல் இருக்கும், ஒவ்வொருவனும் சபிக்கப்பட்டவன்” 3 என்று எழுதியிருக்கிறது. உபா 27:26ரோம 8:7ரோம 3:19-20உபா 11:26-28யாக் 2:9-11எரே 11:3ரோம 4:15கலா 2:16 எனவே மோசேயின் சட்டத்தால் இறைவனுக்குமுன் ஒருவனும் நீதிமானாக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. எனவேதான், “நீதிமான்கள் விசுவாசத்தினாலே வாழ்வார்கள்” 4 என்றும் எழுதியிருக்கிறது. ஆப 2:4ரோம 1:17எபி 10:38கலா 2:16பிரச 7:20சங் 130:3-4ஏசா 53:6யோபு 42:6 ஆகவே மோசேயின் சட்டமோ விசுவாசத்தைச் சார்ந்ததல்ல; வேதவசனம் சொல்கிறபடி, “மோசேயின் சட்டத்தில் சொல்லப்பட்டவைகளைச் செய்கிறவனே, அவற்றால் வாழ்வு பெறுவான். 5 லேவி 18:5ரோம 10:5-6நெகே 9:29ரோம 4:14எசேக் 20:11லூக் 10:25-28ரோம 4:16ரோம 4:4-5 மரத்திலே தொங்கவிடப்பட்டவன் எவனும் சபிக்கப்பட்டவன்” 6 என்று எழுதியிருக்கிறபடியே கிறிஸ்துவோ நமக்காக சாபமாகி, மோசேயின் சட்டத்தின் சாபத்திலிருந்து நம்மை மீட்டுக்கொண்டார். 1 பேது 2:24உபா 21:23எபி 9:12எபி 9:151 பேது 1:18-21எபி 10:4-10வெளி 5:9கலா 4:5 ஆபிரகாமின் ஆசீர்வாதம், கிறிஸ்து இயேசுவின் மூலமாய் யூதரல்லாத மக்களுக்கும் கிடைக்கும்படியாக அவர் நம்மை மீட்டுக்கொண்டு, இறைவன் வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரை நாமும் விசுவாசத்தின்மூலமாய் பெற்றுக்கொள்ளும்படிச் செய்தார். கலா 3:28-291 கொரி 12:13எபே 2:18எசேக் 36:26-27கலா 3:2எசேக் 11:19அப் 2:33ரோம 8:26-27

மோசேயின் சட்டமும் வாக்குத்தத்தமும்

பிரியமானவர்களே, அன்றாட வாழ்க்கையிலிருந்து ஒரு உதாரணத்தை எடுத்துக்காட்ட விரும்புகிறேன். ஒரு உடன்படிக்கை உறுதிசெய்யப்பட்டபின்பு, ஒருவரும் அதிலிருந்து எதையும் நீக்கவும் முடியாது அதனுடன் எதையும் சேர்த்துக்கொள்ளவும் முடியாது. எபி 9:17ரோம 6:19ரோம 3:51 கொரி 15:32 அதுபோலத்தான், வாக்குத்தத்தங்கள் ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் கொடுக்கப்பட்டன. வேதவசனம் “சந்ததிகளுக்கு,” என்று பலரைக்குறித்துச் சொல்லாமல், “உன்னுடைய சந்ததிக்கு,” 7 என்று ஒருவரைக் குறித்துச் சொல்கிறது. அந்தச் சந்ததி கிறிஸ்துவே. ஆதி 17:7-8ரோம 4:13லூக் 1:55ஆதி 22:17-18கலா 3:27-29ரோம 4:16ஆதி 12:7ஆதி 26:3-4 நான் சொல்லுவது என்னவென்றால்: முன்னதாகவே இறைவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்து, வாக்குத்தத்தத்தையும் கொடுத்தார். இதற்கு நானூற்று முப்பது வருடங்களுக்குப்பின் வந்த மோசேயின் சட்டம், முன்பு கொடுக்கப்பட்ட அந்த உடன்படிக்கையைத் தள்ளிவைக்கவோ, அந்த வாக்குத்தத்தத்தைப் பயனற்றதாக்கிவிடவோ முடியாது. யாத் 12:40-41ஆதி 15:13எபி 11:39-40ரோம 4:13-142 கொரி 1:20எபி 6:13-18ரோம 3:31 கொரி 1:17 இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமைச்சொத்து மோசேயின் சட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டால், அது வாக்குத்தத்தத்தின் அடிப்படையில் கொடுக்கப்படவில்லை என்றே அர்த்தமாகிறது. ஆனால் இறைவனோ, தம்முடைய கிருபையினால் அந்த உரிமைச்சொத்தை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தின்படியே கொடுத்தார். ரோம 4:13-16கலா 2:21எபி 6:12-15சங் 105:42கலா 3:29லூக் 1:54-55லூக் 1:72-73சங் 105:6-12

அப்படியானால், மோசேயின் சட்டம் கொடுக்கப்பட்டதன் நோக்கம் என்ன? மீறுதல்களை எடுத்துக்காட்டவே வாக்குத்தத்தத்தால் குறிப்பிடப்பட்ட அந்த ஆபிரகாமின் சந்ததியானவர் வரும்வரைக்கும் மோசேயின் சட்டம் நீட்டிக்கப்பட்டது. இறைவன் மோசேயை நடுவராக வைத்து, இறைத்தூதர்கள் மூலமாய் மோசேயின் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அப் 7:53ரோம 7:7-13எபி 2:2கலா 3:161 தீமோ 1:8-9ரோம 5:20-21ரோம 4:15ரோம 3:19-20 எப்படியும் நடுவர் ஒரு குழுவுக்கு மட்டும் சார்பாக இருப்பதில்லை; ஆனால் இறைவன் ஒருவரே. 1 தீமோ 2:5உபா 6:4எபி 8:6எபி 9:15யோபு 9:33எபி 12:24ரோம 3:29-30கலா 3:17

அப்படியானால் மோசேயின் சட்டம் இறைவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமானதா? ஒருபோதும் இல்லை. மோசேயின் சட்டம் வாழ்வை அளிக்கும்படி கொடுக்கப்பட்டிருந்தால், நிச்சயமாக மோசேயின் சட்டத்தின் மூலமாகவே நீதி வந்திருக்கும். கலா 2:21ரோம 9:31ரோம 3:20-22கலா 2:19ரோம 10:3-6கலா 2:17ரோம 3:31ரோம 7:7-13 ஆனால் வேதவசனமோ, முழு உலகமும் பாவத்தின்கீழ் கைதியாய் இருப்பதாகவே அறிவிக்கிறது. அதனால், கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தமானது, இயேசுகிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின்மூலமாய் விசுவாசிக்கிறவர்களுக்கே கொடுக்கப்படுகிறது. ரோம 11:32எபி 9:15யோவா 11:25-26கலா 3:231 யோவா 2:25யோவா 3:361 யோவா 3:23-24ரோம 3:9-20

இறைவனின் பிள்ளைகள்

இந்த விசுவாசம் வருவதற்கு முன்னதாக, நாம் மோசேயின் சட்டத்தினால் காவலில் வைக்கப்பட்டிருந்தோம். நாம் விசுவாசம் வெளிப்படும் வரைக்குமே, இப்படி இருந்தோம். கலா 5:18கலா 3:24-25கலா 3:19ரோம 11:32ரோம 6:14-15ரோம 3:191 பேது 1:11-12கலா 4:1-5 அதனால் நாம் விசுவாசத்தினால் நீதிமான்கள் ஆக்கப்படும்படி, மோசேயின் சட்டம் நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தும் வழிகாட்டியாய் இருந்தது. ரோம 10:4அப் 13:38-39எபி 10:1-14ரோம 7:24-25கலா 2:16மத் 5:17-18கொலோ 2:17கலா 2:19 இப்பொழுது விசுவாசம் வந்துவிட்டதனால், இனிமேலும் நாம் வழிகாட்டியாகிய மோசேயின் சட்டத்தின்கீழ் இல்லை. ரோம 6:14ரோம 7:4எபி 10:15-18எபி 7:11-19எபி 8:3-13கலா 4:1-6

நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தின்மூலமாய், இறைவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறீர்கள். எபே 1:52 கொரி 6:18யோவா 1:12-13கலா 4:5-61 யோவா 3:1-2ரோம 8:14-17பிலி 2:15வெளி 21:7 ஏனெனில் கிறிஸ்துவுக்குள்ளாக திருமுழுக்கு பெற்றுக்கொண்ட நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டிருக்கிறீர்கள். ரோம 13:141 கொரி 12:13ரோம 6:3-41 பேது 3:21எபே 4:24கொலோ 3:10அப் 2:38கொலோ 2:10-12 நீங்கள் எல்லோரும் கிறிஸ்து இயேசுவில் ஒன்றாய் இருப்பதனால், உங்களிடையே யூதன் என்றோ, கிரேக்கன் என்றோ, அடிமை என்றோ சுதந்திரம் உடையவன் என்றோ, ஆண் என்றோ, பெண் என்றோ வித்தியாசம் இல்லை. 1 கொரி 12:12-13கொலோ 3:11ரோம 3:29-30கலா 5:6ரோம 10:12-15யோவா 10:16எபே 2:13-22எபே 4:4 நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் இருந்தால், நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாராயும் இருக்கிறீர்கள். வாக்குத்தத்தத்தின்படியே உரிமையாளர்களாகவும் இருக்கிறீர்கள். எபே 3:6ரோம 9:7-8கலா 3:7ரோம 8:17கலா 4:22-31ரோம 4:16-21கலா 4:7தீத் 3:7