எபிரெயர் 9

Hebrews 9

இவ்வுலகிற்குரிய கூடாரத்தில் வழிபாடு

முதலாம் உடன்படிக்கைக்கென வழிபாட்டு முறைமைகளும் இவ்வுலகிற்குரிய ஒரு பரிசுத்த இடமும் இருந்தன. யாத் 25:8எபி 9:10-11எபி 8:2லேவி 18:30லேவி 18:3-4லேவி 22:9கொலோ 2:8எசேக் 43:11 அதற்குள் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பகுதி பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. அதினுள்ளேயே குத்துவிளக்கும், மேஜையும், அதன்மீது படைக்கப்பட்ட அப்பங்களும் இருந்தன. யாத் 40:4லேவி 24:5-8யாத் 26:35யாத் 26:33யாத் 40:18-20யாத் 40:22-24யாத் 25:23யாத் 25:8-9 அந்த இரண்டாவது திரைக்குப் பின்னால் மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்ட ஒரு இடம் இருந்தது. யாத் 26:31-33யாத் 40:21யாத் 40:3மத் 27:511 இராஜா 8:6எபி 9:82 நாளாக 3:14எபி 10:19-20 அங்கே தங்கத்தால் செய்யப்பட்ட தூபபீடமும், தங்கத்தால் மூடப்பட்ட உடன்படிக்கைப் பெட்டகமும் இருந்தன; இந்தப் பெட்டகத்தினுள்ளே, மன்னா உணவு வைக்கப்பட்ட தங்கச் சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் 1 வைக்கப்பட்டிருந்தன. எண் 17:102 நாளாக 5:10யாத் 26:33யாத் 40:3லேவி 16:12யாத் 16:32-34யாத் 34:29யாத் 40:20-21 அந்த பெட்டகத்தின் மேலாக மகிமையின் கேரூபீன்கள் கிருபாசனத்தை 2 நிழலிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இவை எல்லாவற்றையும், விரிவாய் சொல்ல இப்பொழுது இயலாது. லேவி 16:2எண் 7:891 இராஜா 8:6-7யாத் 25:17-22லேவி 16:13சங் 80:1சங் 99:11 நாளாக 28:11

இவ்விதமாக அங்குள்ள பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தபோது, ஆசாரியர்கள் தங்களுடைய ஊழியத்தை செய்வதற்காக, அந்த வெளியறைக்குள் வழக்கமாக நுழைவார்கள். எண் 28:3யாத் 27:21லூக் 1:8-112 நாளாக 26:16-19தானி 8:11யாத் 30:7-8 ஆனால் பிரதான ஆசாரியன் மட்டுமே, அதுவும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும், இரத்தமில்லாமல் அல்ல; இரத்தத்துடனேயே மகா பரிசுத்த இடமான உள்ளறைக்குள் சென்று தனக்காகவும், மக்கள் அறியாமல் செய்த பாவங்களுக்காகவும் பலியைச் செலுத்துவான். லேவி 16:34லேவி 5:18யாத் 30:10எபி 10:19-20எபி 7:27எபி 9:24-25ஓசி 4:12ஏசா 28:7 முதலாவது இறைசமுகக் கூடாரம் இருக்கும்வரைக்கும், மகா பரிசுத்த இடத்திற்கான வழி இன்னும் திறக்கப்படவில்லை என்பதை பரிசுத்த ஆவியானவர் இதன்மூலம் காண்பிக்கிறார். யோவா 14:6எபி 3:7எபே 2:18எபி 10:19-22யோவா 10:92 பேது 1:21கலா 3:8எபி 9:3 இந்தக் கூடாரம் தற்காலத்தைக் குறிப்பிட்டுக் காண்பிக்கின்ற ஒரு மாதிரியே. செலுத்தப்பட்ட காணிக்கைகளும் பலிகளும் வழிபடுகிறவர்களின் மனசாட்சியை தூய்மையடையச் செய்ய இயலாதவை என்பதையே இவை தெளிவுபடுத்துகின்றன. 1 பேது 3:21எபி 5:1எபி 10:11சங் 51:16-19ரோம 5:14கலா 3:21எபி 10:1-4எபி 11:19 இவை உண்பது பற்றியும், குடிப்பது பற்றியும், பல்வேறுபட்ட பாரம்பரிய சுத்திகரிப்புகள் பற்றியும் கொடுக்கப்பட்ட வெளியான சடங்கு விதிமுறைகளே. புதிய முறை ஏற்படுத்தப்படும் காலம்வரைக்குமே இவை செல்லுபடியானதாய் இருந்தன. கொலோ 2:16எபே 2:15எபி 7:16லேவி 11:2-47உபா 21:6உபா 23:11எபே 1:10யாத் 30:19-21

கிறிஸ்துவின் இரத்தம்

நமக்கு வரவிருக்கிற நன்மைகளைக் கொடுக்கிற பிரதான ஆசாரியராய் கிறிஸ்து வந்தபோது, அவர் மேலானதும், நிறைவானதும், மனிதனால் செய்யப்படாததும், அதாவது இவ்வுலகப் படைப்பின் ஒரு பகுதியாக இல்லாத இறைசமுகக் கூடாரத்தின் வழியாகவே சென்றார். எபி 9:23-242 கொரி 5:1அப் 17:24-25எபி 8:1-2எபி 10:11 யோவா 5:20அப் 7:48எபி 2:17 அவர் மகா பரிசுத்த இடத்திற்குள் வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தோடு செல்லாமல், தமது இரத்தத்துடனேயே ஒரேதரமாக அதற்குள் சென்று, நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக்கொடுத்தார். எபி 10:41 பேது 1:18-19எபி 9:15எபே 1:7எபி 5:9எபி 9:24-26கலா 3:13-14லேவி 9:15 வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தம் சடங்கு முறைப்படி அசுத்தமாயிருந்தவர்கள்மேல் தெளிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட கிடாரி பசுவின் சாம்பலும் அவர்கள்மேல் தூவப்பட்டது. இது அவர்களை வெளி அசுத்தத்திலிருந்து சுத்திகரித்தது. எண் 19:2-21லேவி 16:14-16அப் 15:91 பேது 1:222 நாளாக 30:19சங் 51:7எண் 8:7 அப்படியானால், தம்மைத்தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரண செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, நம்மை ஜீவனுள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யக்கூடியவர்களாக்கும். எபி 10:221 பேது 1:191 யோவா 1:7எபி 9:121 பேது 2:241 பேது 3:18தீத் 2:141 பேது 4:2

ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார். ரோம 3:24-26ரோம 8:30எபி 9:12ரோம 8:28எபி 10:361 தீமோ 2:5எபி 12:241 பேது 3:18

ஒரு மரணசாசனத்தைப் பொறுத்தவரையில், அதை ஏற்படுத்தியவர் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பது அவசியமாகும். யாக் 2:101 கொரி 15:22ரோம 5:12ரோம 6:23 அதை எழுதியவர் உயிரோடிருக்கும்வரை அது நடைமுறைக்கு வருவதில்லை; அவர் இறந்தபின்பே, அது நடைமுறைக்கு வரும். ஆதி 48:21கலா 3:15யோவா 14:27 இதனாலேயே இரத்தத்தின் மூலம் அல்லாமல், முதல் உடன்படிக்கையும் செயல்படவில்லை. யாத் 24:3-8எபி 8:7-9எபி 9:14எபி 9:22யாத் 12:22 சட்டத்திலுள்ள எல்லாக் கட்டளைகளையும் மோசே இஸ்ரயேல் மக்களுக்கு அறிவித்தான். அதற்குப் பின்பு, அவன் இளங்காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தைத் தண்ணீருடன் கலந்து, அதை அந்தப் புத்தகச்சுருளின்மேலும், எல்லா மக்களின்மேலும் சிவப்புக் கம்பளித் துணியினாலும், ஈசோப்பு செடியினாலும் தெளித்தான். யாத் 24:5-11எசேக் 36:25எபி 10:4எபி 9:12எண் 19:18எண் 19:61 பேது 1:2லேவி 14:4-7 தெளிக்கையில் அவன், “நீங்கள் கைக்கொள்ளும்படி, இறைவன் கட்டளையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” 3 என்று சொன்னான். யாத் 24:8மத் 26:28எபி 13:20உபா 29:12சகரி 9:11யோசு 9:6 அவ்விதமாகவே, மோசே அந்த இரத்தத்தை இறைசமுகக் கூடாரத்தின்மேலும், அதன் வழிபாட்டில் உபயோகிக்கப்பட்ட எல்லாவற்றின்மேலும் தெளித்தான். லேவி 8:15லேவி 8:19யாத் 29:12யாத் 29:36எசேக் 43:18-26லேவி 16:14-19லேவி 9:18லேவி 9:8-9 உண்மையாகவே, மோசேயின் சட்டத்தின்படி எல்லாமே இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட வேண்டும். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவங்களுக்கு மன்னிப்பே இல்லை. லேவி 17:11லேவி 6:7லேவி 4:35லேவி 5:18லேவி 14:14லேவி 14:6லேவி 5:10லேவி 4:20

இவ்விதமாய் பரலோகக் காரியங்களின் சாயல்கள், இப்படிப்பட்ட பலிகளினால் சுத்திகரிக்கப்படுவது அவசியமாயிருந்தது. அப்படியானால் பரலோகத்தின் நிஜமான காரியங்களோ, அவற்றைப் பார்க்கிலும் மேன்மையான பலிகளினாலேயே சுத்திகரிக்கப்பட வேண்டும் அல்லவா? 1 பேது 1:19-21எபி 10:4எபி 9:14எபி 9:9-12எபி 9:24எபி 8:5வெளி 5:9கொலோ 2:17 கிறிஸ்து மனித கையினால் உண்டாக்கப்பட்ட உண்மையான பரிசுத்த இடத்தின் அடையாளமான இடத்துக்குள் செல்லவில்லை; பரலோகத்திற்கு உள்ளேயே சென்று, அங்கே இறைவனின் முன்னிலையில் நமக்காக விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறார். எபி 12:2எபி 9:11-12எபி 9:23எபி 8:2யோவா 16:28அப் 3:21கொலோ 3:2எபே 1:20-22 பிரதான ஆசாரியன், ஒவ்வொரு வருடமும் மிருகங்களின் இரத்தத்தோடு மகா பரிசுத்த இடத்திற்குள் செல்கிறதுபோல கிறிஸ்துவுக்கோ திரும்பத்திரும்ப தம்மை பலியாகச் செலுத்தும்படி பரலோகத்திற்குள் செல்லவேண்டிய அவசியமில்லை. எபி 9:12எபி 9:7எபி 9:14எபி 10:19எபி 9:26யாத் 30:10எபி 10:10லேவி 16:2-34 அப்படியிருக்குமானால், உலகம் படைக்கப்பட்டதிலிருந்து கிறிஸ்து அநேகமுறை இப்படி பாடு அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவரோ, இப்பொழுது எல்லா யுகங்களும் முடிவுறும் காலத்தில், தம்மைத்தாமே பலியாகச் செலுத்துவதன் மூலமாய், பாவத்தை நீக்கும்படி, ஒரே முறையாகத் தோன்றியிருக்கிறார். 1 பேது 1:20எபி 9:12எபி 1:21 பேது 3:18எபி 10:4மத் 25:341 யோவா 3:51 பேது 2:24 ஒருமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்புக்கு உள்ளாவதும், மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. 2 கொரி 5:10பிரச 12:14பிரச 12:7அப் 17:312 சாமு 14:14யோவா 5:26-29பிரச 9:5யூதா 1:15 அவ்விதமாக அநேக மக்களுடைய பாவங்களை நீக்கிப்போடும்படி, கிறிஸ்துவும் ஒருமுறை பலியாகச் செலுத்தப்பட்டார்; ஆனால் பாவத்தைச் சுமக்கும்படியாக அல்ல, அவருக்காகக் காத்திருப்போருக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்காகவே அவர் இரண்டாம் முறையாக வருவார். தீத் 2:131 பேது 2:24ஏசா 25:9ரோம 6:102 தீமோ 4:8ரோம 8:231 யோவா 3:21 தெச 1:10