உங்களுக்காகவும், லவோதிக்கேயா பட்டணத்தில் இருக்கிறவர்களுக்காகவும், இன்னும் நேரடியாக என்னைச் சந்தித்திராத மற்றெல்லோருக்காகவும், நான் எவ்வளவாய் போராடுகிறேன் என்பதை நீங்கள் அறியவேண்டும் என நான் விரும்புகிறேன். கொலோ 1:29பிலி 1:30கொலோ 4:12-13வெளி 3:14-22வெளி 1:11அப் 20:38கொலோ 1:24ஓசி 12:3-4 நீங்களும் அவர்களும் இருதயத்தில் உற்சாகமடைந்தவர்களாய், அன்பினால் ஐக்கியப்பட்டிருக்கவேண்டும் என்பதே என் நோக்கம். இதனால் நீங்கள் முழுமையான விளக்கத்தை நிறைவாகப் பெற்று, இறைவனுடைய இரகசியத்தை அறிந்துகொள்வீர்கள். அந்த இரகசியம் கிறிஸ்துவே. கொலோ 1:27கொலோ 4:8கொலோ 3:14எபே 6:22ரோம 16:25கொலோ 1:15-17எபே 3:9-10பிலி 3:8 ஞானம், அறிவு ஆகிய செல்வங்கள் எல்லாம் கிறிஸ்துவுக்குள்ளேயே மறைந்திருக்கின்றன. 1 கொரி 1:241 கொரி 1:30ரோம 11:331 கொரி 2:6-82 தீமோ 3:15-17கொலோ 1:9எபே 3:9-10எபே 1:8 மனதைக் கவரும் விவாதங்களினால் ஒருவரும் உங்களை ஏமாற்றாதபடிக்கே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன். 1 யோவா 4:1எபே 4:14மத் 24:4ரோம 16:18-192 யோவா 1:7மாற் 13:221 தீமோ 4:1-22 கொரி 11:11-13 உடலால் நான் உங்களுடன் இல்லாதிருந்தாலும், ஆவியில் நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் எவ்வளவு ஒழுங்குள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும், கிறிஸ்துவில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தில் எவ்வளவு உறுதி உள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். 1 கொரி 5:3-41 தெச 2:171 கொரி 16:131 பேது 5:92 பேது 3:17-181 கொரி 14:40எபி 3:141 கொரி 15:58
கிறிஸ்துவின் மூலமாக வாழ்வு
எனவே கிறிஸ்து இயேசுவை நீங்கள் கர்த்தராய் ஏற்றுக்கொண்டபடியே, அவரில் தொடர்ந்து வாழுங்கள். கொலோ 1:101 யோவா 2:61 தெச 4:1எபே 5:1-2கலா 2:202 கொரி 5:7கொலோ 3:17பிலி 1:27 நீங்கள் அவரில் வேரூன்றி கட்டி எழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள், உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது போலவே விசுவாசத்தில் பெலன் கொண்டவர்களாயும், நன்றி மிக்கவர்களாயும் வாழுங்கள். எபே 3:17எரே 17:8எபே 2:20-22யோவா 15:4-5கொலோ 1:232 பேது 3:17-182 தெச 2:17கொலோ 1:12-13
தங்களுடைய வெறுமையான, ஏமாற்றும் தத்துவ ஞானத்தினால், ஒருவனும் உங்களை சிக்கவைக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவை மனித பாரம்பரியத்திலும், உலக அடிப்படைக் கொள்கையிலுமே தங்கியிருக்கின்றன. இவை கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டவையல்ல. 1 தீமோ 6:20எபே 5:6மத் 7:15கலா 4:91 கொரி 3:18-19ரோம 1:21-22கொலோ 2:202 தீமோ 3:13
ஏனெனில் இறைவனின் முழுநிறைவும் மனித உடலின்படி கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது. கொலோ 1:19யோவா 1:14யோவா 10:301 தீமோ 3:16யோவா 14:9-101 யோவா 5:20யோவா 10:38யோவா 14:20 ஆதலால் நீங்களும் கிறிஸ்துவில் நிறைவு பெற்றவர்களாய் இருக்கிறீர்கள். அவரே எல்லா வல்லமைகளுக்கும், அதிகாரங்களுக்கும் மேலாக தலைவராய் இருக்கிறார். எபே 3:19கொலோ 1:16-181 கொரி 1:30-311 பேது 3:22எபே 1:20-23பிலி 2:9-11எபி 5:9யோவா 1:16 நீங்கள் உங்கள் மாம்ச இயல்பை அகற்றிப்போட்டதினால், நீங்களும் கிறிஸ்துவில் விருத்தசேதனத்தைப் பெற்றீர்கள். இந்த விருத்தசேதனம் மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டது அல்ல. இது கிறிஸ்துவினாலேயே செய்யப்பட்டது. ரோம 2:29பிலி 3:3ரோம 6:6உபா 30:6எபே 4:22கலா 5:24கொலோ 3:8-9கலா 2:20 திருமுழுக்கினால் நீங்கள் அவருடன் அடக்கம்பண்ணப்பட்டு, இறைவனுடைய வல்லமையில் விசுவாசத்தின் மூலமாக, அவருடனேகூட எழுப்பப்பட்டும் இருக்கிறீர்கள். இறைவனே இறந்தோரிடத்தில் இருந்து கிறிஸ்துவை உயிருடன் எழுப்பினார். ரோம 6:3-51 பேது 3:21கலா 3:27எபே 2:4-6கொலோ 3:1-2அப் 2:24எபே 4:5எபே 1:19-20
நீங்கள் உங்கள் பாவங்களிலேயும், மாம்சத்தின்படி விருத்தசேதனம் செய்யப்படாததிலேயும் இறந்தவர்களாய் இருக்கையில், இறைவன் உங்களைக் கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். அவர் நம்முடைய பாவங்களையெல்லாம் மன்னித்தார். எபே 2:5-6ரோம 8:11எபே 2:12 கொரி 5:19எபி 9:142 கொரி 3:61 யோவா 1:7-9எபே 2:11 நமக்கு விரோதமாய் எழுதப்பட்டிருந்த கட்டளைகளைக்கொண்ட கடன் பத்திரத்தை அவர் நீக்கி, அதைச் சிலுவையில் ஆணியடித்து இல்லாமல் அழித்துவிட்டார். எபே 2:14-16ஏசா 44:22ஏசா 43:25எபி 8:131 பேது 2:24கொலோ 2:20எபி 7:18எபி 10:8-9 அவர் ஆளும் வல்லமைகளிடமிருந்தும், அதிகாரங்களிடமிருந்தும் அவற்றின் வல்லமைகளைக் களைந்து, சிலுவையினால் அவற்றின்மேல் வெற்றிகொண்டு, அவற்றைப் பகிரங்கக் காட்சிப் பொருளாக்கினார். எபி 2:14எபே 4:8மத் 12:29யோவா 12:31-32ஏசா 53:12எபே 6:12யோவா 16:11லூக் 10:18
மனித விதிகளிலிருந்து சுதந்திரம்
எனவே நீங்கள் சாப்பிடுவது, குடிப்பது என்பவைகளைக் குறித்தோ, பண்டிகைகளையும், அமாவாசைகளையும், ஓய்வுநாட்களையும் குறித்தோ, ஒருவரும் உங்களை குற்றப்படுத்தாமல் இருக்கவேண்டும். ரோம 14:5-6ரோம 14:10கலா 4:10ரோம 14:13-17ரோம 14:2-3எபி 13:9எசேக் 45:171 நாளாக 23:31 இவையெல்லாம் வரவேண்டியிருந்த காரியங்களின் வெறும் நிழலே; உண்மைப் பொருளோ கிறிஸ்துவில் காணப்படுகின்றது. எபி 10:1எபி 8:5யோவா 1:17எபி 9:9எபி 4:1-11மத் 11:28-29 பொய்யான தாழ்மையிலும், இறைவனின் தூதர்களை ஆராதனை செய்வதிலும் மகிழ்கிற அவர்களால், நீங்கள் உங்கள் வெகுமதியைப் பெற்றுக்கொள்வதை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்டவன் தான் கண்ட தரிசனங்களைக்குறித்து, அதிகமாய் விவரித்துச் சொல்கிறான். ஆவிக்குரிய தன்மையற்ற அவனுடைய மனம் வீணான சிந்தனைகளில் பெருமைகொள்கிறது. கொலோ 2:81 யோவா 4:1-2கொலோ 2:231 தீமோ 1:71 தீமோ 4:1வெளி 22:8-91 கொரி 8:5-6ரோம 1:25 இப்படிப்பட்டவன் தலையாகிய கிறிஸ்துவிலிருந்து தொடர்பை இழந்துவிட்டான். அவரிடமிருந்தே மூட்டுக்களினாலும் தசைநார்களினாலும் தாங்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கிற முழு உடலும், இறைவன் வளர்ச்சியைக் கொடுக்க, அது வளர்ச்சியைப் பெறுகிறது. எபே 4:15-16யோவா 15:4-61 பேது 3:81 தீமோ 2:4-62 பேது 3:18கொலோ 2:2ரோம 12:4-51 தெச 3:12
நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இறந்தீர்கள். அப்படியானால் நீங்கள் அதற்கு இன்னும் உட்பட்டவர்கள்போல் உலகத்தின் கட்டளைகளுக்கு ஏன் கீழ்ப்படிகிறீர்கள்? கொலோ 2:8கொலோ 2:14கொலோ 2:16கலா 4:3ரோம 7:4-61 யோவா 5:19எபி 13:91 பேது 4:1-3 “பயன்படுத்தாதே! ருசிபாராதே! தொடாதே!” 1 தீமோ 4:3ஏசா 52:11ஆதி 3:32 கொரி 6:17 இவையெல்லாம் காலப்போக்கில் ஒழிந்துபோகின்றனவே. ஏனெனில் இவை மனிதருடைய கட்டளைகளையும், போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டவை. ஏசா 29:13தீத் 1:141 கொரி 6:13மாற் 7:18-19மாற் 7:7-13யோவா 6:27மத் 15:3-9தானி 11:37 அவர்களுடைய இந்தக் கட்டளைகள், தாங்களே தங்கள்மேல் திணித்துக் கொண்ட வழிபாட்டையும், பொய்த் தாழ்மையையும், உடல் ஒடுக்குதல்களையும் பொறுத்தவரையில் ஞானமானதுபோல் தோன்றலாம். ஆனால் உடல் ஆசைகளை அடக்கி ஆள்வதற்கு இவை பயனற்றது. 1 தீமோ 4:8கொலோ 2:18கொலோ 2:22கொலோ 2:82 கொரி 11:13-15எபே 5:29மத் 23:27-281 தீமோ 4:3