உயிருள்ள பலிகள்
ஆகையால், எனக்கு பிரியமானவர்களே, நான் இறைவனுடைய இரக்கத்தை மனதிற்கொண்டு, உங்களை வருந்தி வேண்டிக்கொள்கிறதாவது, உங்கள் உடல்களை உயிருள்ள பலியாகவும், பரிசுத்தமும், இறைவனுக்குப் பிரியமாயிருக்கும்படி ஒப்புக்கொடுங்கள். இதுவே உங்களுடைய உண்மையான ஆவிக்குரிய வழிபாடு. 1 பேது 2:5ரோம 6:13எபி 13:15-16ரோம 6:19எபே 4:1ரோம 12:2சங் 19:141 பேது 2:10-12 இனிமேலும் இந்த உலகத்தின் மாதிரிகளுக்கு ஒத்து நடவாதேயுங்கள். இறைவனால் உங்கள் மனங்களில் ஆழமாக புதுப்பிக்கப்பட்டு, உங்கள் இயல்பில் மாறுதல் அடையுங்கள். அப்பொழுதே நீங்கள் சிறந்ததும், அவரைப் பிரியப்படுத்துகிறதும், முழுநிறைவானதுமான இறைவனுடைய சித்தம் என்ன என்பதை நடைமுறையில் அறிந்துகொள்வீர்கள். 1 பேது 1:14எபே 4:22-242 கொரி 5:17கொலோ 3:101 யோவா 2:15-17எபே 5:17எசேக் 36:261 பேது 4:2
கிறிஸ்துவின் உடலில் தாழ்மையான சேவை
இறைவன் எனக்களித்த தன் கிருபையின்படி, உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்கிறதாவது: அளவுக்கதிகமாய் உங்களைக்குறித்து உயர்வாய் எண்ணிக்கொள்ள வேண்டாம். இறைவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின் அளவின்படியே, மனத்தெளிவுடன் உங்களைக்குறித்து மதிப்பீடு செய்துகொள்ளுங்கள். கலா 6:3பிலி 2:3-8நீதி 26:121 பேது 5:5ரோம 12:16பிரச 7:161 பேது 5:8யாக் 4:6 நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உடல் இருக்கிறது, அதில் பல உறுப்புகள் இருக்கின்றன. இந்த உறுப்புகள் எல்லாம் ஒரே வேலையைச் செய்வதில்லை. 1 கொரி 12:271 கொரி 12:12-14எபே 4:15-161 கொரி 12:4எபே 4:4 அதுபோலவே கிறிஸ்துவுக்குள் நாம் பலராய் இருந்தாலும், ஒரே உடலாகின்றோம். நாம் உடலின் பல்வேறு உறுப்புகளாக இருந்து, ஒருவருக்கு ஒருவர் சொந்தமாயிருக்கிறோம். 1 கொரி 12:201 கொரி 12:27-281 கொரி 10:17எபே 4:25எபே 5:30கொலோ 2:191 கொரி 10:331 கொரி 12:12-14 நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின்படியே, நாம் வித்தியாசமான வரங்களைப் பெற்றவர்களாய் இருக்கிறோம். இறைவாக்கு உரைப்பதற்கு ஒருவன் வரம்பெற்றிருந்தால், அவன் தன்னுடைய விசுவாசத்தின் அளவுக்கு ஏற்றபடியே அதைப் பயன்படுத்தட்டும். 1 பேது 4:10-111 கொரி 7:71 கொரி 12:28-311 கொரி 12:4-11ரோம 12:31 கொரி 13:21 கொரி 14:11 கொரி 14:3-5 அப்படியே சேவைசெய்கிறவன் சேவை செய்வதிலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், 1 தீமோ 5:172 தீமோ 4:2அப் 13:1எபே 4:111 தீமோ 2:71 தீமோ 3:21 தீமோ 4:162 தீமோ 2:2 உற்சாகப்படுத்துகிறவன் உற்சாகப்படுத்துவதிலும் நிலைத்திருக்கட்டும்; மற்றவர்களுடைய தேவைகளுக்குக் கொடுத்து உதவுகிறவன் தாராளமாய் கொடுக்கட்டும்; தலைமைத்துவத்தில் இருப்பவன் கவனத்தோடு நிர்வாகத்தைச் செய்யட்டும்; இரக்கம் காண்பிப்பவன் அதை முகமலர்ச்சியுடன் செய்யட்டும். 2 கொரி 9:71 தீமோ 5:171 கொரி 12:281 தீமோ 3:4-5அப் 15:321 தெச 5:12-14அப் 13:15அப் 20:2
அன்பு
உங்கள் அன்பு உண்மையானதாய் இருக்கவேண்டும். தீமையை வெறுத்து விடுங்கள்; நன்மையைப் பற்றிக்கொள்ளுங்கள். சங் 34:141 பேது 4:81 தீமோ 1:51 யோவா 3:18-201 பேது 3:10-111 தெச 5:211 பேது 1:22ஆமோ 5:15 ஒருவரில் ஒருவர் கனிவான சகோதர அன்புடையவர்களாய் இருங்கள், ஒவ்வொருவரும் உங்களைவிட மற்றவர்களை உயர்வானவர்களாகக் கனம்பண்ணி நடவுங்கள், பிலி 2:3யோவா 13:34-35எபி 13:11 யோவா 4:111 பேது 3:8-91 பேது 1:221 பேது 2:171 தெச 4:9 ஆர்வம் குன்ற இடங்கொடாமல் ஆவியில் அனல் கொண்டவர்களாய் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள். எபி 6:10-11அப் 18:25நீதி 13:4வெளி 3:15-161 பேது 4:8கொலோ 3:22-24எபி 12:28எபே 4:28 எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியாய் இருங்கள், துன்பங்களில் பொறுமையாக இருங்கள், மன்றாடுவதில் உறுதியாய்த் தரித்திருங்கள். ரோம 15:13எபி 10:36சங் 62:8ரோம 5:2-4பிலி 4:6-7யாக் 5:71 பேது 4:131 தெச 5:16-17 தேவையிலிருக்கிற இறைவனுடைய மக்களுடன் உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ளுங்கள், உபசரிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். எபி 13:162 கொரி 9:121 யோவா 3:17கலா 6:10எபி 6:101 பேது 4:9எபி 13:21 தீமோ 3:2
உங்களைத் துன்புறுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; சபிக்காதிருங்கள். 1 பேது 3:9மத் 5:441 தெச 5:151 கொரி 4:12-13ரோம 12:21லூக் 6:28யாக் 3:10லூக் 23:34 மகிழ்ச்சியாய் இருக்கிறவர்களுடனே மகிழ்ச்சியாயிருங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள். 1 கொரி 12:26எபி 13:3சங் 35:13-14யோவா 11:33-36யோபு 30:25லூக் 1:58பிலி 2:17-18அப் 11:23 ஒருவரோடு ஒருவர் ஒருமனதுள்ளவர்களாய் வாழுங்கள். பெருமைகொள்ளாமல், தாழ்ந்தவர்களுடனும் நட்புறவு கொள்ளுங்கள். நீங்கள் உங்களையே அறிவாளிகளெனப் பெருமிதம் கொள்ளாதிருங்கள். 1 பேது 3:8நீதி 3:7யாக் 3:13-17பிலி 2:2-3எபி 13:5ரோம 12:31 கொரி 3:18ரோம 15:5
யாராவது உங்களுக்குத் தீமை செய்தால், அதற்குப் பதிலாக, நீங்களும் தீமை செய்யவேண்டாம். எல்லா மனிதருடைய பார்வையிலும் சரியானதையே செய்யும்படி கவனமாயிருங்கள். நீதி 20:221 தெச 5:151 பேது 3:9மத் 5:392 கொரி 8:20-21பிலி 4:8-9ரோம 12:191 பேது 2:12 இயலுமானால் உங்களால் முடிந்தவரை எல்லோருடனும் சமாதானமாக இருங்கள். எபி 12:14மத் 5:9ரோம 14:192 கொரி 13:11யாக் 3:16-18கலா 5:22மாற் 9:50நீதி 12:20 என் அன்பானவர்களே, பழிக்குப்பழி வாங்கவேண்டாம், இறைவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடங்கொடுங்கள். ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்கிறார்” 1 என்று எழுதியிருக்கிறதே. உபா 32:35எபி 10:30நீதி 24:29நீதி 20:22ரோம 12:171 தெச 4:6ரோம 12:14லேவி 19:18 எனவே, நீதி 25:21-22மத் 5:44லூக் 6:27யாத் 23:4-52இராஜா 6:221 சாமு 24:16-191 சாமு 26:21உன்னத 8:6-7
“உங்கள் பகைவன் பசியாயிருந்தால், அவனுக்கு உணவு கொடுங்கள்;
தாகமாயிருந்தால், அவனுக்கு குடிக்கக் கொடுங்கள்.
இவ்விதம் செய்வதனால் நீங்கள் அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பீர்கள்.” 2
தீமை உங்களை மேற்கொள்ள இடங்கொடுக்க வேண்டாம். தீமையை நன்மையினால் மேற்கொள்ளுங்கள். 1 பேது 3:9லூக் 6:27-30நீதி 16:32