உன்னதப்பாட்டு 8

Song 8

நீர் என் தாயின் மார்பில் பால் குடித்த கலா 4:26சங் 45:10-11சகரி 9:9ஆகா 2:7ஏசா 60:14ஏசா 66:11-12ஏசா 7:14ஏசா 9:6

என் சகோதரனாய் இருந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே!

உம்மை வெளியில் கண்டால்

நான் உம்மை முத்தம் செய்திருப்பேன்;

யாரும் என்னை இகழமாட்டார்கள்.

நான் உம்மை என் தாயின் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவேன், உன்னத 3:4உன்னத 4:10உன்னத 7:12கலா 4:261 பேது 1:10-122 தீமோ 3:15யோவா 5:39யோவா 5:46-47

எனக்குக் 1 கற்றுக்கொடுத்தவளிடம் கொண்டு வந்திருப்பேன்.

குடிப்பதற்கு வாசனையுள்ள திராட்சை இரசத்தையும்

என் மாதுளம் பழச்சாற்றையும்

நான் உமக்குக் குடிக்கத் தருவேன்.

அவருடைய இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது, உன்னத 2:62 கொரி 12:9உபா 33:27ஏசா 62:4-5

அவருடைய வலதுகை என்னை அணைத்துக்கொள்கிறது.

எருசலேமின் மங்கையரே, ஆணையிடுகிறேன்; உன்னத 2:7உன்னத 3:5

காதலைத் தட்டி எழுப்பவேண்டாம்,

அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம்.

தோழியர்

தன் காதலர்மேல் சாய்ந்துகொண்டு உன்னத 3:6ஏசா 40:3சங் 63:8உன்னத 2:3ஏசா 26:3-4மீகா 3:11உன்னத 3:4உன்னத 6:10

பாலைவனத்திலிருந்து வருகிற இவள் யார்?

காதலி

ஆப்பிள் மரத்தின் கீழே நான் உம்மை எழுப்பினேன்;

அங்குதான் உமது தாய் உம்மைப் பெற்றெடுத்தாள்,

பிரசவ வேதனைப்பட்ட அவள், அங்குதான் உம்மைப் பெற்றெடுத்தாள்.

என்னை உமது உள்ளத்திலும் கையிலும் வெளி 12:11ஏசா 49:16பிலி 1:20-23ஆகா 2:23எரே 22:24யோவா 21:15-19எண் 5:14நீதி 6:34

முத்திரையைப்போல் பதித்துக்கொள்ளும்;

ஏனெனில் காதல் மரணத்தைப்போல வலிமைமிக்கது,

அதின் வைராக்கியம்

பாதாளத்தைப்போல கொடியது,

அது கொழுந்து விட்டெரியும் நெருப்பு,

அதின் ஜூவாலை பெரிதாயிருக்கிறது.

பெருவெள்ளமும் காதலை அணைக்காது; நீதி 6:35ஏசா 43:2நீதி 6:31ரோம 13:8-10மத் 7:24-25ரோம 8:28-39

ஆறுகள் அதை அடித்துக்கொண்டு போகாது.

காதலுக்குக் கைமாறாக,

ஒருவன் தனது எல்லா செல்வங்களையும் கொடுத்தாலும்,

அது 2 முற்றிலும் அவமதிக்கப்படும்.

தோழியர்

எங்களுக்கு ஒரு தங்கை இருக்கிறாள், 1 பேது 2:12அப் 22:21எசேக் 16:55-56சங் 2:8அப் 10:1அப் 15:14-17அப் 16:9அப் 26:17-18

அவள் மார்பகங்கள் இன்னும் வளர்ச்சியடையவில்லை.

அவளைப் பெண்பார்க்க வரும்நாளில்

நம் தங்கைக்காக நாம் என்ன செய்யலாம்?

அவள் ஒரு மதில்போல கன்னிகையாயிருந்தால், 1 கொரி 3:10-121 இராஜா 6:15அப் 14:27அப் 15:16எபே 2:20-22ஏசா 58:12ஏசா 60:17ஏசா 61:4

அவள்மேல் வெள்ளியினால் கோபுரம் அமைப்போம்.

ஆனால் அவள் ஊசலாடும் கதவைப்போல ஒழுக்கமற்றவளாயிருந்தால்,

கேதுரு மரப்பலகைப் பதித்து அவளை மூடி மறைப்போம்.

காதலி

நான் ஒரு மதில்போல கன்னிகைதான், எசேக் 16:7ஏசா 60:10லூக் 1:301 தீமோ 1:16உபா 7:7-8எபே 1:6ஆதி 6:8நீதி 3:4

என் மார்பகங்கள் கோபுரங்கள் போலிருக்கின்றன.

அவர் என்னைப் பார்க்கும்போது 3

அவருடைய கண்களுக்கு மகிழ்ச்சி தருபவளாவேன்.

பாகால் ஆமோனில் சாலொமோனுக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது; பிரச 2:4ஏசா 7:23ஆதி 20:16ஏசா 5:1-7லூக் 20:9-18மத் 21:33-43மாற் 12:1உன்னத 1:6

அவர் தனது திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்காரருக்குக் கொடுத்திருந்தார்.

ஒவ்வொருவரும் அதின் பழங்களுக்கு

ஆயிரம் சேக்கல் 4 வெள்ளிக்காசைக் கொண்டுவர வேண்டியிருந்தது.

ஆனால் என் சொந்தத் திராட்சைத் தோட்டமோ, என் முன்னே இருக்கிறது; உன்னத 1:6அப் 20:281 கொரி 6:201 தெச 2:191 தீமோ 4:15-161 தீமோ 5:17-182 கொரி 5:15நீதி 4:23

சாலொமோனே, அந்த ஆயிரம் சேக்கல் உமக்கும்,

அதின் பழங்களைப் பராமரிக்கிறவர்களுக்கு இருநூறு சேக்கலும் உரியதாகும்.

காதலன்

தோழிகள் சூழ, உன்னத 4:16உன்னத 1:7நியாயாதி 11:38நியாயாதி 14:11யோவா 14:13-14யோவா 14:21-23மத் 18:20மத் 28:20

தோட்டத்தில் வசிப்பவளே,

உன் குரலை நான் கேட்கட்டும்.

காதலி

என் அன்பரே, இங்கே வாரும், உன்னத 2:17வெளி 22:20வெளி 22:17உன்னத 2:9லூக் 19:12பிலி 1:23உன்னத 4:6

நறுமணச்செடிகள் நிறைந்த மலைகளின்மேல்,

வெளிமானைப் போலவும்

மரைக்குட்டியைப் போலவும் வாரும்.