துதிப்பாடல்
அந்த நாளிலே யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்: ஏசா 60:18ஏசா 62:11சகரி 2:5எபே 5:19-202 சாமு 22:1-51ஏசா 25:9ஏசா 27:1-2எரே 33:11
நமக்கொரு பலமுள்ள பட்டணம் உண்டு;
இறைவன் இரட்சிப்பை,
அதன் மதில்களாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறார்.
வாசல்களைத் திறவுங்கள், வெளி 5:91 பேது 2:9ஏசா 60:11சங் 118:20ஏசா 62:10ஏசா 62:2அப் 2:47யாத் 19:6
நீதியுள்ள நாடு உள்ளே வரட்டும்,
நேர்மையான நாடு உள்ளே வரட்டும்.
மனவுறுதியுடன் இருப்பவனை பிலி 4:7யோவா 16:33யோவா 14:27எரே 17:7-8சங் 9:10ரோம 5:1சங் 85:7-8ரோம 4:18-21
நீர் முழுநிறைவான சமாதானத்துடன் வைத்திருப்பீர்;
ஏனெனில் அவன் உம்மிலேயே நம்பிக்கை வைத்திருக்கிறான்.
யெகோவாவிடம் என்றென்றும் நம்பிக்கையை வையுங்கள்; ஏசா 12:2சங் 62:8பிலி 4:13சங் 55:22சங் 18:2சங் 62:11நீதி 3:5-6சங் 46:1
ஏனெனில், யெகோவா, யெகோவாவே நித்திய கற்பாறை.
உயர்வாக வாழ்வோரை அவர் தாழ்த்துகிறார்; எரே 51:37யோபு 40:11-13வெளி 18:2ஏசா 13:11எரே 51:25-26எரே 51:64ஏசா 14:13ஏசா 2:12
உயர்த்தப்பட்ட பட்டணத்தை
கீழே தள்ளி வீழ்த்துகிறார்,
அதைத் தரைமட்டமாக்கிப் புழுதியாக்குகிறார்.
கால்கள் அதை மிதிக்கின்றன. லூக் 10:19ரோம 16:20வெளி 2:26யாக் 2:5யோசு 10:241 கொரி 1:26தானி 7:27ஏசா 25:10
ஒடுக்கப்பட்டவர்களின் பாதங்களும்,
ஏழைகளின் காலடிகளுமே அதை மிதிக்கின்றன.
நீதியானவர்களின் பாதை நேர்சீரானது; எபே 2:10ஏசா 42:161 யோவா 3:101 யோவா 3:72 கொரி 1:12யோபு 27:5-6நீதி 20:7சங் 11:7
நீதியாளரே, நீரே நீதியானவர்களின் வழியைச் சீர்படுத்துகிறீர்.
ஆம், யெகோவாவே, உமது சட்டங்களின் வழியில் நடந்து, யாக் 5:7-11சங் 37:3-7ஏசா 33:22 தெச 3:5யாத் 3:15சங் 65:6அப் 1:4ரோம 8:25
உமக்குக் காத்திருக்கிறோம்;
உமது பெயரும் உமது புகழுமே
எங்கள் இருதயங்களின் வாஞ்சையாய் இருக்கின்றன.
இரவிலே என் ஆத்துமா உம்மை ஆர்வத்தோடு தேடுகிறது, மத் 6:33சங் 119:62சங் 63:1உன்னத 3:1-4சங் 63:6-7லூக் 6:12மாற் 1:35சங் 58:11
காலையிலே என் ஆவி உம்மை வாஞ்சையுடன் தேடுகிறது.
உமது நியாயத்தீர்ப்புகள் பூமியிலே வரும்போது
உலக மக்கள் நியாயத்தைக் கற்றுக்கொள்வார்கள்.
கொடியவருக்கு கிருபை காண்பிக்கப்படுகிறபொழுதும், ஓசி 11:7யோவா 5:37-38ரோம 2:4-5உபா 32:15பிரச 3:16யாத் 8:15யாத் 8:31-32யாத் 9:34
அவர்கள் நியாயத்தைக் கற்றுக்கொள்வதில்லை.
நீதியுள்ள நாட்டிலும் அவர்கள் தொடர்ந்து தீமையையே செய்கிறார்கள்;
யெகோவாவின் மாட்சிமையையும் அவர்கள் மதிப்பதில்லை.
யெகோவாவே, உமது கரம் மேலே உயர்த்தப்பட்டிருக்கிறது, எபி 10:27ஏசா 5:24மீகா 5:91 பேது 3:161 சாமு 5:6-111 சாமு 6:92 தெச 1:8அப் 28:27
ஆயினும் அதை அவர்கள் காணாதிருக்கிறார்கள்.
உமது மக்களுக்காக நீர் கொண்டிருக்கும் வைராக்கியத்தைக் கண்டு
அவர்கள் வெட்கமடையட்டும்;
உமது பகைவருக்காக ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும் நெருப்பு
அவர்களைச் சுட்டெரிக்கட்டும்.
யெகோவாவே, நீரே எங்களுக்குச் சமாதானத்தை நிலைநாட்டுகிறீர்; எபே 2:10சங் 57:2சங் 29:11எசேக் 20:14உபா 30:6எபி 13:20எரே 33:6ஏசா 57:10
நாங்கள் நிறைவேற்றியவற்றை நீரே எங்களுக்காக செய்திருக்கிறீர்.
யெகோவாவே, எங்கள் இறைவனே, ஏசா 2:8ஏசா 63:72 நாளாக 12:8ஆமோ 6:10எபி 13:15ஏசா 10:11ஏசா 12:4ஏசா 51:22
உம்மைத்தவிர வேறு ஆளுநர்களும் நம்மை ஆண்டிருக்கிறார்கள்;
ஆனால் உமது பெயரை மட்டுமே நாங்கள் கனப்படுத்துகிறோம்.
இப்பொழுது அவர்கள் இறந்துவிட்டார்கள்; நீதி 10:7வெளி 18:2-3ஆப 2:18-20ஏசா 14:19-22ஏசா 51:12-13ஏசா 8:19சங் 106:28உபா 4:28
இனி அவர்கள் வாழ்வதில்லை, பிரிந்துபோன அந்த ஆவிகள் எழும்புவதில்லை.
நீர் அவர்களைத் தண்டித்து அழிவுக்கு உட்படுத்தினீர்;
அவர்களைப்பற்றிய நினைவையே அழித்துப்போட்டீர்.
நீர் நாட்டைப் பெருகப்பண்ணியிருக்கிறீர்; ஏசா 9:3உபா 10:22எசேக் 36:24எசேக் 5:12ஆதி 12:2ஆதி 13:16ஏசா 33:17ஏசா 44:23
யெகோவாவே, நீர் நாட்டைப் பெருகப்பண்ணியிருக்கிறீர்.
நீர் உமக்கென்று மகிமையை வென்றெடுத்திருக்கிறீர்;
நாட்டின் எல்லைகள் அனைத்தையும் நீர் விரிவாக்கியிருக்கிறீர்.
யெகோவாவே, அவர்கள் தமது துன்பத்தில் உம்மிடம் வந்தார்கள்; ஓசி 5:15சங் 50:151 சாமு 1:152 நாளாக 33:12-132 நாளாக 6:37-38உபா 4:29-30ஓசி 7:14ஏசா 37:3
நீர் அவர்களைச் சீர்ப்படுத்துவதற்காகத் தண்டித்தபோது,
அவர்கள் மன்றாடுவதற்குக்கூட பெலனற்று இருந்தார்கள்.
பிரசவிக்க இருக்கின்ற கர்ப்பவதி ஏசா 13:8ஏசா 21:3யோவா 16:211 தெச 5:3எரே 4:31எரே 30:6எரே 6:24சங் 48:6
தனது வேதனையில் துடித்து அழுவதுபோல,
யெகோவாவே, நாங்களும் உமது முன்னிலையில் வருந்தி நின்றோம்.
நாங்களும் கர்ப்பந்தரித்து வேதனையில் துடித்தோம்; ஓசி 13:13சங் 17:142இராஜா 19:3ஏசா 37:3ஏசா 59:4ஏசா 33:111 யோவா 5:191 சாமு 11:13
ஆனால் நாங்கள் காற்றையே பெற்றெடுத்தோம்.
பூமிக்கு இரட்சிப்பை நாங்கள் கொண்டுவரவில்லை,
நாங்கள் உலக மக்களைப் பெற்றெடுக்கவுமில்லை.
ஆனாலும் மரித்த உமது மக்கள் உயிர்வாழ்வார்கள்; தானி 12:2எசேக் 37:1-14மத் 27:52எபே 5:14ஓசி 13:14சங் 71:20வெளி 20:12-13ஓசி 6:2
அவர்களின் உடல்கள் உயிர்த்தெழும்பும்.
புழுதியில் வாழ்பவர்களே,
எழுந்து மகிழ்ந்து சத்தமிடுங்கள்.
உமது பனி காலைப் பனிபோல் இருக்கிறது;
பூமி தனது மரித்தோரைப் பெற்றெடுக்கும்.
என் மக்களே, நீங்கள் உங்கள் அறைகளுக்குள் போய், சங் 30:5சங் 27:5ஏசா 54:7-8மத் 6:6சங் 91:4நீதி 18:10சங் 17:82 கொரி 4:17
கதவுகளை மூடுங்கள்.
அவருடைய கோபம் கடந்துபோகும்வரை,
சற்று நேரம் உங்களை மறைத்துக்கொள்ளுங்கள்.
இதோ, பூமியின் குடிகளை அவர்களுடைய பாவங்களுக்காகத் தண்டிப்பதற்கு, ஏசா 13:11யூதா 1:14-15வெளி 6:9-11ஏசா 18:4யோபு 16:18மீகா 1:3-8எண் 35:32-33வெளி 16:6
யெகோவா தனது உறைவிடத்தில் இருந்து வருகிறார்.
பூமி தன்மேல் சிந்தப்பட்ட இரத்தத்தை வெளிப்படுத்தும்;
அது தன்மேல் கொலைசெய்யப்பட்டவர்களை இனிமேல் மறைக்கப் போவதில்லை.