வாழ்வுதரும் ஆறு
பின்பு அந்தத் தூதன் ஜீவத்தண்ணீர் ஓடும் ஆற்றை எனக்குக் காட்டினான். அந்த ஆறு, பளிங்கைப்போல் தெளிவாய் இருந்தது. அது இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரிய அரியணையிலிருந்து ஓடிக்கொண்டிருந்தது. வெளி 7:17யோவா 4:14யோவா 7:38-39சங் 36:8-9யோவா 4:10-11வெளி 21:6சகரி 14:8சங் 46:4 அது அந்தப் பட்டணத்தின் பிரதான வீதியின் நடுவாக பாய்ந்து ஓடியது. அந்த ஆற்றின் இருபுறமும் ஜீவ மரம் நின்றது. அது மாதம் ஒரு முறையாக, பன்னிரண்டு முறை பழங்களைக் கொடுத்தது. அந்த மரத்தின் இலைகள், மக்களுக்கு சுகம் கொடுப்பதற்கானவை. வெளி 22:11 பேது 2:24வெளி 2:7எசேக் 47:8-12ஆதி 2:9வெளி 22:14ஆதி 3:22-24நீதி 3:18 இனிமேல் எந்தச் சாபமும் இருக்காது. இறைவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கு உரிய அரியணை அந்த நகரத்தில் இருக்கும். அவருடைய ஊழியர் அவருக்குப் பணிசெய்வார்கள். மத் 25:21வெளி 21:3-4யோவா 12:26வெளி 7:15-17யோவா 14:3எசேக் 37:27சகரி 14:11சங் 17:15 அவர்கள் அவருடைய முகத்தைக் காண்பார்கள். அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் எழுதப்பட்டிருக்கும். மத் 5:8வெளி 14:1வெளி 3:121 யோவா 3:2-3எபி 12:14யோபு 33:261 கொரி 13:12யோவா 17:24 இனிமேல் இரவு இருக்காது. அவர்களுக்கு விளக்கின் வெளிச்சமோ, சூரிய வெளிச்சமோ தேவைப்படாது. ஏனெனில், இறைவனாகிய கர்த்தர் அவர்களுக்கு ஒளி கொடுப்பார். அவர்கள் என்றென்றுமாய் ஆட்சிசெய்வார்கள். தானி 7:18ஏசா 60:19-20வெளி 20:41 பேது 1:3-4தானி 7:27சங் 36:9ரோம 5:17வெளி 21:22-25
யோவானும் இறைவனின் தூதனும்
அந்தத் இறைத்தூதன் என்னிடம், “இந்த வார்த்தைகள் நம்பத்தகுந்தவையும் உண்மையானவையுமாய் இருக்கின்றன. இறைவாக்கினரின் ஆவிகளுக்கு இறைவனாயிருக்கிற கர்த்தர், சீக்கிரமாய் நிகழவிருக்கும் காரியங்களைத் தம்முடைய ஊழியர்களுக்குக் காண்பிக்கும்படி, தமது தூதனை அனுப்பினார்” என்றான். வெளி 1:1வெளி 21:5வெளி 19:9ரோம 1:22 பேது 1:21அப் 3:18லூக் 1:702 பேது 3:2
“இதோ, நான் சீக்கிரமாய் வருகிறேன்! இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கைக்கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.” வெளி 1:3வெளி 3:11வெளி 22:20வெளி 22:12வெளி 22:9-10வெளி 16:15
யோவானாகிய நானே, இந்த வார்த்தைகளைக் கேட்டேன். இந்தக் காரியங்களைக் கண்டேன். நான் இவைகளைக் கண்டு, கேட்டபோது, இவற்றை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி, அவனுடைய பாதத்தில் விழுந்தேன். வெளி 19:10வெளி 1:1வெளி 19:19 ஆனால் அவனோ என்னிடம், “இப்படிச் செய்யாதே! உன்னுடனும், உன் சகோதரர்களான இறைவாக்கினருடனும், இந்தப் புத்தகத்தின் வார்த்தைகளைக் கைக்கொள்ளுகிற எல்லோருடனும், நானும் உடன் ஊழியன். ஆகையால், இறைவனையே ஆராதனைசெய்” என்றான். வெளி 19:10கொலோ 2:18-19வெளி 14:71 யோவா 5:20வெளி 4:10உபா 4:19யாத் 34:14யோவா 4:22-23
பின்பு அவன் என்னிடம், “இந்தப் புத்தகத்தின் இறைவாக்கு வார்த்தைகளை மூடி முத்திரையிடாதே. ஏனெனில் காலம் நெருங்கிவிட்டது. தானி 8:261 பேது 4:7வெளி 1:3வெளி 10:4மத் 10:27எசேக் 12:23தானி 12:4தானி 12:9 அநியாயம் செய்கிறவன் தொடர்ந்து அநியாயம் செய்யட்டும்; சீர்கெட்டு இருக்கிறவன், தொடர்ந்து சீர்கெட்டு இருக்கட்டும்; நியாயம் செய்கிறவன் தொடர்ந்து நியாயம் செய்யட்டும்; பரிசுத்தமாய் இருக்கிறவன் தொடர்ந்து பரிசுத்தமாய் இருக்கட்டும்.” தானி 12:10நீதி 4:18எசேக் 3:272 தீமோ 3:13மத் 15:14யோபு 17:9மத் 5:6மத் 25:10
அழைப்பும் எச்சரிக்கையும்
“இதோ, நான் வெகுவிரைவாய் வருகிறேன்! நான் கொடுக்கும் பரிசு என்னுடனே இருக்கிறது. ஒவ்வொருவனுக்கும், அவனுடைய செயலுக்கு ஏற்றபடியே, நான் பரிசு கொடுப்பேன். மத் 16:27ஏசா 62:11ஏசா 40:101 கொரி 3:14வெளி 22:71 கொரி 3:8ரோம 2:6-11ரோம 14:12 நானே அல்பாவும், ஒமேகாவும், முதலாவதானவரும் கடைசியானவரும், தொடக்கமும், முடிவுமாய் இருக்கிறேன். வெளி 1:8வெளி 21:6ஏசா 44:6ஏசா 48:12ஏசா 41:4வெளி 1:17வெளி 1:11
“தங்களுடைய ஆடைகளைத் துவைத்துக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கே, ஜீவ மரத்தின் பழத்தைச் சாப்பிடும் உரிமை உண்டு. வாசல்களின் வழியாக நகரத்திற்குள் செல்ல அவர்கள் உரிமைபெறுவார்கள். வெளி 21:271 யோவா 5:31 யோவா 3:23-24வெளி 22:71 யோவா 3:3வெளி 2:7யோவா 14:151 கொரி 7:19 நகரத்திற்கு வெளியேயோ, நாய்களைப்போல் சீர்கெட்டவர்கள், மந்திரவித்தைக்காரர், முறைகேடான பாலுறவில் ஈடுபடுவோர், கொலைகாரர், சிலைகளை வணங்குவோர், பொய்யானவற்றை நேசித்து கைக்கொள்வோர் ஆகியோர் இருக்கிறார்கள். வெளி 21:8கலா 5:19-21பிலி 3:21 கொரி 6:9-10வெளி 21:27வெளி 9:20-21கொலோ 3:6யோவா 3:18-21
“இயேசுவாகிய நான் திருச்சபைகளுக்கான இந்தச் சாட்சியை கொடுக்கும்படி, என் தூதனை உன்னிடம் அனுப்பினேன். நானே தாவீதின் வேரும், சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாய் இருக்கிறேன்.” வெளி 5:52 பேது 1:19ஏசா 11:1வெளி 1:4ரோம 1:3-4மத் 22:42வெளி 22:20மத் 2:2
ஆவியானவரும் மணமகளும், “வாரும்!” என்கிறார்கள். அதைக் கேட்கிறவனும், “வாரும்!” என்று சொல்லட்டும். தாகமாக இருக்கிற யாரும் வரட்டும்; விரும்புகிற யாரும் ஜீவத்தண்ணீரை இலவச நன்கொடையாகப் பெற்றுக்கொள்ளட்டும். யோவா 4:14வெளி 21:6ஏசா 55:1-3யோவா 7:37ஏசா 12:3யோவா 4:10சங் 34:8வெளி 22:1
இந்தப் புத்தகத்திலுள்ள இறைவாக்கு வார்த்தைகளைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும், நான் கொடுக்கும் எச்சரிக்கை: யாராவது இவற்றோடு எதையாவது சேர்த்தால், இறைவனும் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட வாதைகளை அவனுக்குச் சேர்ப்பார். உபா 12:32உபா 4:2நீதி 30:6வெளி 1:3வெளி 22:7மத் 15:6-9லேவி 26:18லேவி 26:24-25 இந்த இறைவாக்குப் புத்தகத்திலிருந்து யாராவது எந்த வார்த்தைகளையாவது நீக்கிப்போட்டால், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஜீவ மரத்திலும் பரிசுத்த நகரத்திலும் அவனுக்குள்ள பங்கை இறைவன் நீக்கிப்போடுவார். உபா 4:2லூக் 11:52வெளி 22:2சங் 69:28வெளி 1:3வெளி 21:2வெளி 21:22-27யாத் 32:33
இந்தக் காரியங்களுக்கு சாட்சி கொடுக்கிறவர், “ஆம், நான் வெகுவிரைவாய் வருகிறேன்” என்கிறார். வெளி 22:7எபி 9:28வெளி 22:122 தீமோ 4:81 கொரி 16:22ஏசா 25:9வெளி 1:2வெளி 22:10
ஆமென். கர்த்தராகிய இயேசுவே வாரும்.
கர்த்தராகிய இயேசுவின் கிருபை இறைவனுடைய மக்களின்மேல் இருப்பதாக. ஆமென். 2 தெச 3:18ரோம 16:202 கொரி 13:14எபே 6:23-24வெளி 1:4ரோம 1:7ரோம 16:23