முன்னுரை
இது இயேசுகிறிஸ்துவின் வெளிப்பாடு. விரைவில் நிகழவிருக்கும் சம்பவங்கள் என்ன என்பதைத் தமது ஊழியர்களுக்கு காண்பிக்கிறதற்காக, இறைவன் இந்த வெளிப்பாட்டை இயேசுகிறிஸ்துவுக்குக் கொடுத்தார். அவர் தமது இறைத்தூதனை தமது ஊழியனான யோவானிடம் அனுப்பி இதை அவனுக்கு தெரியப்படுத்தினார். வெளி 22:16வெளி 22:6கலா 1:12ஆமோ 3:7தானி 2:28-29வெளி 1:19எபே 3:3வெளி 1:9 இது இறைவனுடைய வார்த்தையைக் குறித்தும், இயேசுகிறிஸ்துவைக் குறித்தும் சாட்சியாக யோவான் தான் கண்ட எல்லாவற்றையும் அறிவித்தான். யோவா 19:351 கொரி 1:61 யோவா 1:1யோவா 21:24வெளி 1:19வெளி 12:17அப் 26:16வெளி 1:9 இவை நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டதினால், இந்த இறைவாக்கின் வார்த்தைகளை வாசிக்கிறவர்களும் இதைக் கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறபடி நடக்கிறவர்களும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். லூக் 11:28வெளி 22:10ரோம 13:111 பேது 4:7நீதி 8:34வெளி 22:6-7தானி 12:12-13யாக் 5:8-9
ஏழு திருச்சபைகளை வாழ்த்துவதும் இறைவனைப் புகழ்வதும்
யோவானாகிய நான், ஏசா 11:2யோவா 1:1எபி 13:8சங் 90:2வெளி 5:6வெளி 4:5வெளி 1:8வெளி 3:1
ஆசியாவிலுள்ள 1 ஏழு திருச்சபைகளுக்கு எழுதுகிறதாவது:
இருந்தவரும், இருக்கிறவரும், வரப்போகிறவரிடமிருந்து உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. அவருடைய அரியணைக்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசுகிறிஸ்துவினிடமிருந்தும் கிறிஸ்துவே உண்மையான சாட்சி, இறந்தவர்களிடையே முதற்பேறானவர், பூமியிலுள்ள அரசர்களை ஆளுகை செய்கிறவர். சங் 89:27எபி 9:141 யோவா 1:7வெளி 17:14கொலோ 1:181 பேது 1:19அப் 26:23வெளி 19:16
அவரே நம்மில் அன்பு செலுத்தி, தமது இரத்தத்தினாலே, நமது பாவங்களிலிருந்து நம்மை விடுதலையாக்கினார். தமது இறைவனும், பிதாவுமானவருக்கு முன்பாக நாம் ஊழியம் செய்யும்படி, நம்மை ஒரு அரசாகவும், ஆசாரியராகவும் ஏற்படுத்தியிருக்கிற இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உண்டாவதாக! ஆமென். வெளி 5:10வெளி 20:6யாத் 19:61 பேது 2:5-9ஏசா 61:6வெளி 5:12-14ரோம 11:362 பேது 3:18
“இதோ பாருங்கள், இயேசு மேகங்கள் மீது வருகிறார்” 2 மத் 24:30சகரி 12:10தானி 7:13யோவா 19:37மாற் 14:62லூக் 21:271 தெச 4:171 தெச 1:10
மற்றும் “எல்லா கண்களும் அவரைக்காணும்,
அவரைக் குத்தியவர்களும் அவரை நோக்கிப் பார்ப்பார்கள்”;
பூமியிலுள்ள எல்லா மக்களும், “அவர் நிமித்தம் புலம்புவார்கள்.” 3
அது அப்படியே ஆகட்டும்! ஆமென்.
“நானே தொடக்கமும் முடிவுமாய் இருக்கிறேன்,” என்று, “இருக்கிறவரும் 4, இருந்தவரும், வரப்போகிறவருமாகிய, எல்லாம் வல்லவராயிருக்கிறவருமாகிய” இறைவனாகிய கர்த்தர் சொல்கிறார். ஏசா 44:6வெளி 22:13ஏசா 48:12ஏசா 43:10வெளி 21:6ஏசா 41:4வெளி 1:4வெளி 11:17
யோவானுக்கு உண்டான தரிசனம்
உங்கள் சகோதரனான யோவானாகிய நான், கிறிஸ்துவில் நமக்குரிய துன்பத்திலும், அரசிலும், துன்பத்தைப் பொறுமையோடு சகிப்பதிலும், உங்கள் பங்காளியாயிருக்கிறேன். இறைவனுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறதாலும், இயேசுவுக்கு சாட்சியாயிருப்பதாலும், நான் நாடுகடத்தப்பட்டு, பத்மு தீவில் இருந்தேன். அப் 14:22வெளி 3:10யோவா 16:33வெளி 1:2பிலி 4:14வெளி 13:10வெளி 7:142 தீமோ 1:8 கர்த்தருடைய நாளிலே, நான் பரிசுத்த ஆவியானவரில் நிரப்பப்பட்டு இருக்கையில், எனக்குப் பின்னால் எக்காளத்தைப் போன்ற உரத்த சத்தமான ஒரு குரலைக் கேட்டேன். வெளி 21:102 கொரி 12:2-4வெளி 4:1-2வெளி 17:3அப் 20:7வெளி 10:3-81 கொரி 16:2அப் 10:10-33 அது என்னிடம்: “நீ காண்கிறதை ஒரு புத்தகச்சுருளில் எழுதி: அதை எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா ஆகிய பட்டணங்களிலுள்ள ஏழு திருச்சபைகளுக்கும் அனுப்பு” என்று சொன்னது. கொலோ 4:15-16ஆப 2:2எரே 30:2வெளி 3:1எபே 1:1ஏசா 30:8வெளி 1:4வெளி 2:12
நான் திரும்பி, என்னோடு பேசிய குரலின் பக்கமாய்ப் பார்த்தேன். நான் திரும்பியபொழுது, ஏழு தங்க குத்துவிளக்குகளைக் கண்டேன். சகரி 4:2யாத் 25:37வெளி 1:20வெளி 1:13எசேக் 43:5-6மீகா 6:9 அந்தக் குத்துவிளக்குகளின் நடுவே, மானிடமகனைப் போன்ற ஒருவர் நின்றார். 5 அவர் அணிந்திருந்த உடை அவருடைய பாதம்வரை நீளமாயிருந்தது. அவர் தம்முடைய மார்பைச் சுற்றி, ஒரு தங்கப்பட்டையைக் கட்டியிருந்தார். தானி 7:13தானி 10:16தானி 10:5-6யாத் 28:6-8வெளி 15:6லேவி 8:7வெளி 14:14தானி 7:9 அவருடைய தலையும், தலைமுடியும், வெள்ளைக் கம்பளியைப்போல் இருந்தன. அவை உறைபனியைப்போல் வெண்மையாய் இருந்தன. அவருடைய கண்கள் கொழுந்து விட்டெரியும் நெருப்பைப்போல் இருந்தன. தானி 10:6தானி 7:9வெளி 19:12வெளி 2:18மத் 28:3 அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் தகதகவென்று ஒளிருகின்ற வெண்கலத்தைப்போல் இருந்தன. அவருடைய குரல் பாய்ந்தோடும் வெள்ளத்தின் இரைச்சலைப்போல் இருந்தது. எசேக் 43:2தானி 10:6வெளி 14:2வெளி 19:6வெளி 2:18சங் 93:4எசேக் 1:7எசேக் 40:3 அவருடைய வலது கரத்தில், ஏழு நட்சத்திரங்களைப் பிடித்துக்கொண்டிருந்தார். அவருடைய வாயிலிருந்து இருபக்கமும் கூர்மையான ஒரு வாள் வெளிப்பட்டு வந்தது. அவருடைய முகம் முழுமையாய் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது. எபி 4:12வெளி 2:12வெளி 19:15வெளி 2:16எபே 6:17ஏசா 49:2வெளி 19:21மத் 17:2
நான் அவரைப் பார்த்தபோது, செத்தவனைப்போல், அவருடைய பாதத்தில் வீழ்ந்தேன். அப்பொழுது அவர், தமது வலது கரத்தை என்மேல் வைத்து என்னிடம் சொன்னதாவது: “பயப்படாதே, நானே தொடக்கமும், முடிவுமாயிருக்கிறேன். ஏசா 44:6தானி 10:8-10வெளி 22:13தானி 8:17-18ஏசா 41:4ஏசா 48:12வெளி 2:8தானி 10:17-19 நானே வாழ்கிறவர்; நான் இறந்தேன், ஆனால் இதோ, நான் உயிருடன் என்றென்றும் வாழ்கிறவராய் இருக்கிறேன்! மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை நானே வைத்திருக்கிறேன். ரோம 6:9எபி 7:25ரோம 14:8-9சங் 68:20ஏசா 22:22வெளி 3:7வெளி 20:1-2எபி 12:2
“ஆகவே, நீ கண்டவைகளையும், இப்பொழுது இருப்பவைகளையும், இனிமேல் நிகழப்போவதையும், எழுது. வெளி 4:1-11வெளி 1:11 நீ என்னுடைய வலது கரத்தில் கண்ட ஏழு நட்சத்திரங்கள், மற்றும் ஏழு தங்க குத்துவிளக்குகளின், இரகசியம் இதுவே: ஏழு நட்சத்திரங்களும், ஏழு திருச்சபைகளின் தூதர்கள். ஏழு குத்துவிளக்குகளும் ஏழு திருச்சபைகள்.” வெளி 2:1வெளி 3:1வெளி 1:16சகரி 4:2வெளி 3:7வெளி 3:14வெளி 1:12-13வெளி 2:12