ஏசாயா 9

Isaiah 9

ஆயினும் முன்பு துயரப்பட்டவர்களுக்கு இனிமேல் பயங்கரம் இராது. முந்தின நாட்களில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் அவர் தாழ்த்தினார். ஆனால், வருங்காலத்திலே மத்திய தரைக்கடலிலிருந்து, யோர்தான் அருகேயுள்ள, பிறநாட்டினர் வாழும் கலிலேயாவை மேன்மைப்படுத்துவார். மத் 4:15-162இராஜா 15:29ஏசா 8:221 நாளாக 5:262 நாளாக 16:42இராஜா 17:5-61 இராஜா 15:19-20லேவி 26:24

இருளில் நடக்கும் மக்கள் மத் 4:16எபே 5:8யோவா 8:12யோவா 12:46லூக் 1:78-791 பேது 2:91 யோவா 1:5-7ஏசா 60:1-3

ஒரு பேரொளியைக் கண்டார்கள்;

மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல்

வெளிச்சம் பிரகாசித்தது.

நீர் நாட்டைப் பெருகச்செய்து ஏசா 26:15ஏசா 35:10ஏசா 65:18ஏசா 66:10சங் 119:1621 பேது 1:8ஏசா 61:7எரே 31:12-14

அவர்களுக்கு மகிழ்ச்சியையும் அதிகமாய் கொடுத்திருக்கிறீர்.

அறுவடையின்போது மக்கள் மகிழ்வதைப்போல,

அவர்கள் உமது முன்னிலையில் மகிழ்கிறார்கள்.

கொள்ளையைப் பங்கிடும்போதும் மனிதர் மகிழ்வதுபோல,

அவர்கள் மகிழ்கிறார்கள்.

மீதியானியர் தோற்கடிக்கப்பட்ட நாளில் செய்ததுபோல, ஏசா 14:25எரே 30:8ஏசா 10:26-27நாகூ 1:13ஏசா 54:14ஏசா 49:26ஏசா 14:3-5ஆதி 27:40

நீர் அவர்களுக்குப் பாரமாயிருந்த

நுகத்தை உடைத்துப்போட்டீர்.

அவர்களுடைய தோள்களின் அழுத்திய பாரத்தையும்,

அவர்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலையும் அகற்றிப்போட்டீர்.

ஒவ்வொரு வீரரும் போரில் பயன்படுத்திய காலணியும், 2 தெச 1:8எசேக் 39:8-10ஏசா 30:33சங் 46:9ஏசா 10:16-17ஏசா 4:4ஏசா 66:15-16யோவே 2:5

இரத்தத்தில் தோய்ந்த உடைகள் அனைத்தும்

நெருப்புக்கு இரையாக

சுட்டெரிக்கப்படும்.

ஏனெனில், “நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளார், லூக் 2:11மத் 28:18எரே 23:5-6ஏசா 7:14மத் 1:231 யோவா 5:20வெளி 19:16யோவா 1:1-2

நமக்கு ஒரு மகன் கொடுக்கப்பட்டார்,

அரசாட்சி அவர் தோளின்மேல் இருக்கும்.

அவர் அதிசயமான ஆலோசகர், வல்லமையுள்ள இறைவன்,

நித்திய தகப்பன், சமாதானப்பிரபு”

என அழைக்கப்படுவார்.

அவருடைய ஆட்சியின் பெருக்கத்திற்கும் சமாதானத்திற்கும் லூக் 1:32-33தானி 2:44தானி 7:142 சாமு 7:16சங் 45:4-6தானி 7:27தானி 2:351 கொரி 15:24-28

முடிவே இராது.

அவர் தாவீதின் சிங்காசனத்தையும்

அவனது அரசையும் நிலைநாட்டுவார்.

இதுமுதற்கொண்டு அதை என்றென்றைக்கும்

நீதியோடும் நேர்மையோடும்

நிலைநிறுத்தி உறுதிப்படுத்துவார்.

எல்லாம் வல்ல யெகோவாவினுடைய வைராக்கியம்

இதை நிறைவேற்றும்.

இஸ்ரயேலின் அழிவு

யெகோவா யாக்கோபுக்கு விரோதமாக ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறார்; ஏசா 7:7-8ஏசா 8:4-8மீகா 1:1-9சகரி 1:6சகரி 5:1-4மத் 24:35

அது இஸ்ரயேல்மேல் வரும்.

எப்பிராயீமியரும், சமாரியாவில் குடியிருப்பவர்களுமான ஏசா 46:121 இராஜா 22:251 பேது 5:5எசேக் 30:19எசேக் 33:33எசேக் 7:27எசேக் 7:9ஏசா 10:9-11

எல்லா மக்களும்,

அதை அறிவார்கள்.

அவர்கள் இருதய இறுமாப்புடனும் பெருமையுடனும்,

“செங்கற்கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, மல்கி 1:41 இராஜா 10:271 இராஜா 7:9-12

ஆனாலும் திரும்பவும் நாம் நமது கட்டிடங்களை செதுக்கிய கற்களால் கட்டுவோம்.

அத்திமரங்கள் வீழ்த்தப்பட்டன,

ஆனால் நாங்கள் அவைகளுக்குப் பதிலாக, கேதுரு மரங்களை நடுவோம்”

என்று சொல்கிறார்கள்.

ஆனால் யெகோவா ரேத்சீனின் பகைவர்களை அவர்களுக்கு விரோதமாகப் பலப்படுத்தி, 2இராஜா 15:292இராஜா 16:9ஏசா 10:9-11ஏசா 17:1-5ஏசா 7:8ஏசா 8:4-7

அவர்களுடைய எதிரிகளைத் தூண்டிவிடுவார்.

கிழக்கிலிருந்து சீரியரும் மேற்கிலிருந்து பெலிஸ்தியரும், 2 நாளாக 28:18ஏசா 5:252இராஜா 16:6சங் 79:7ஏசா 10:4ஏசா 9:17ஏசா 9:21எரே 10:25

இஸ்ரயேலரை திறந்த வாயால் விழுங்கியிருக்கிறார்கள்.

இவையெல்லாம் நடந்தும், அவரது கோபம் தீராமல்,

அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.

எனினும் அந்த மக்கள் தங்களைத் தண்டித்த ஓசி 7:10எரே 5:3ஏசா 31:1ஏசா 1:52 நாளாக 28:22உபா 4:29எசேக் 24:13ஓசி 3:4-5

இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பவில்லை.

எல்லாம் வல்ல யெகோவாவைத் தேடவுமில்லை.

ஆகையால் யெகோவா இஸ்ரயேலின் தலையையும், வாலையும் ஏசா 19:15வெளி 18:82இராஜா 17:6-20ஆமோ 2:14-16ஆமோ 3:12ஆமோ 5:2-3ஆமோ 6:11ஆமோ 7:17

ஓலையையும், நாணலையும் ஒரே நாளில் வெட்டிப்போடுவார்.

முதியோரும் பிரபலமானோருமே தலை, ஏசா 29:10மத் 24:241 சாமு 9:62 தீமோ 4:2-3எசேக் 13:19ஏசா 3:2-3எரே 29:21-221 யோவா 4:1

பொய்யைப் போதிக்கும் இறைவாக்கினரே வால்.

இந்த மக்களை வழிநடத்துகிறவர்கள் அவர்களை நெறிதவறச் செய்தார்கள்; ஏசா 3:12மத் 15:14மத் 23:16-361 இராஜா 8:55-562 நாளாக 30:27எபி 7:7எண் 6:23-26

வழிநடத்தப்பட்டவர்கள் அழிந்துபோனார்கள்.

ஆகையால் யெகோவா வாலிபர்களில் மகிழ்வதில்லை, ஏசா 10:6ஏசா 5:25எரே 18:21ஏசா 27:11ஏசா 9:12மத் 12:34ஏசா 10:4ஏசா 9:21

அநாதைகள் மேலும், விதவைகள்மேலும் இரக்கம்கொள்ளவும் இல்லை.

ஏனெனில் அவர்கள் எல்லோரும் இறைப்பற்று இல்லாதவர்களும்

பொல்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்.

எல்லோருடைய வாயும் மதிகேட்டைப் பேசுகின்றது.

இவையெல்லாம் நடந்தும், அவரது கோபம் தீராமல்,

அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.

மெய்யாகவே, கொடுமை நெருப்பைப்போல் எரிகிறது; மல்கி 4:1சங் 83:14ஏசா 34:8-10ஏசா 5:24நாகூ 1:10ஆமோ 7:4உபா 32:22எசேக் 20:47-48

அது முட்செடியையும், நெருஞ்சில் செடியையும் தீய்த்து விடுகிறது.

அது அடர்த்தியான புதர்களையும் கொழுத்தி விடுகிறது,

அதன் புகை சுருள் சுருளாக மேலே எழும்புகிறது.

எல்லாம் வல்ல யெகோவாவின் கோபத்தினால் மீகா 7:2மீகா 7:62 பேது 2:4அப் 2:20ஆமோ 5:18எசேக் 9:5ஏசா 1:31ஏசா 13:13

நாடு நெருப்புக்கு இறையாகும்;

மக்களும் நெருப்புக்கான எரிபொருளாவார்கள்,

ஒருவனுமே தன் சகோதரனைத் தப்பவிடமாட்டான்.

அவர்கள் வலப்புறத்தில் பறித்துத் தின்றும், ஏசா 49:26எரே 19:9ஏசா 8:21புலம் 4:10லேவி 26:26-29

பசியோடு இருப்பார்கள்.

இடது புறத்தில் சாப்பிட்டும்,

திருப்தி அடையாதிருப்பார்கள்.

ஒவ்வொருவனும் தன் சொந்த கரத்தின் மாமிசத்தையுங்கூடத் தின்பான்:

மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் தின்பார்கள்; ஏசா 5:252 நாளாக 28:6-8கலா 5:15ஏசா 9:121 சாமு 14:202இராஜா 15:30ஏசா 10:4ஏசா 11:13

இருவரும் ஒன்றுசேர்ந்து யூதாவை எதிர்ப்பார்கள்.

இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல்,

அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது.