அசீரியா யெகோவாவின் கருவி
பின்பு யெகோவா என்னிடம், “வரைபலகையை எடுத்து அதில், மஹேர்ஷாலால் ஹாஷ்பாஸ் 1 என சாதாரண எழுத்தாய் எழுது.” ஏசா 30:8ஆப 2:2-3ஏசா 8:3யோபு 19:23-24எரே 36:2எரே 36:28எரே 36:32வெளி 13:18 அதற்கு உண்மையுள்ள சாட்சிகளாய் இருக்கும்படி ஆசாரியன் உரியாவையும், எபரேக்கியாவின் மகன் சகரியாவையும் நான் அழைப்பேன் என்றார். 2இராஜா 16:10-112 கொரி 13:12இராஜா 16:15-162இராஜா 18:2ரூத் 4:10-11ரூத் 4:2 பின்பு நான் என் மனைவியாகிய இறைவாக்கு உரைப்பவளுடன் சேர்ந்தேன்; அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்றாள். அப்பொழுது யெகோவா என்னிடம், “அவனுக்கு மஹேர்ஷாலால் ஹாஷ்பாஸ் என்று பெயரிடு. ஓசி 1:3-92இராஜா 22:14ஏசா 7:13-14நியாயாதி 4:4 அவன் ‘என் அப்பா’ அல்லது ‘என் அம்மா’ என்று சொல்ல அறியுமுன் தமஸ்குவின் செல்வமும், சமாரியாவின் கொள்ளைப்பொருளும், அசீரிய அரசனால் வாரிக்கொண்டு போகப்படும்” என்றார். ரோம 9:112இராஜா 16:92இராஜா 17:32இராஜா 17:5-6உபா 1:39ஏசா 10:6-14ஏசா 17:3ஏசா 7:15-16
யெகோவா மீண்டும் என்னிடம் பேசினதாவது: ஏசா 7:10
“இந்த மக்கள், அமைதியாக ஓடும் ஷீலோவாமின் யோவா 9:7நெகே 3:151 இராஜா 7:162 நாளாக 13:8-18ஏசா 5:24ஏசா 7:1-2ஏசா 7:6நியாயாதி 9:16-20
தண்ணீரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்.
ரேத்சீனுக்கும் ரெமலியாவின் மகனுக்கும்
என்ன நடக்கும் என்பதில் களிகூர்ந்தார்கள்.
ஆதலால் யெகோவா, ஐபிராத்து நதியின் ஏசா 17:12-13ஆமோ 8:8ஆமோ 9:5ஆதி 6:17ஏசா 7:17ஏசா 7:202இராஜா 17:3-62இராஜா 18:9-12
பெருவெள்ளத்தை அவர்களுக்கு எதிராகக் கொண்டுவரப்போகிறார்.
அசீரிய அரசனே கம்பீரத்துடன்
அந்த வெள்ளத்தைப்போல் வருவான்.
அது வாய்க்கால்களை நிரப்பி கரைபுரண்டு பாயும்.
அது யூதா நாட்டிற்குள் பாய்ந்து, அதற்கு மேலாகப் பெருக்கெடுத்து ஏசா 7:14ஏசா 30:28மத் 1:23ஏசா 28:14-22எசேக் 17:3ஏசா 10:28-32ஏசா 22:1-7ஏசா 29:1-9
அதன் கழுத்தளவுக்குப் பாயும்.
இம்மானுயேலே,
உனது நாட்டின் அகன்ற பரப்பை வெள்ளத்தின் அகல விரிந்த சிறகுகள் மூடுமே!”
நாடுகளே, போர் முழக்கமிடுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்! ஏசா 14:5-61 இராஜா 20:11நீதி 11:21சங் 37:14-15ஏசா 17:12-13ஏசா 7:1-2யோவே 3:9-14ஏசா 28:13
தூர தேசங்களே, கேளுங்கள்.
போருக்கு ஆயத்தப்படுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்!
போருக்கு ஆயத்தப்படுங்கள், ஆனாலும் சிதறுண்டு போவீர்கள்!
உங்கள் போர் முறையைத் திட்டமிடுங்கள், ஆனால் அது முறியடிக்கப்படும்; புலம் 3:37ரோம 8:31யோபு 5:12நீதி 21:302 சாமு 15:31சங் 46:11ஏசா 7:5-7சங் 33:10-11
கூடிப்பேசி முடிவெடுங்கள், ஆனால் அதுவும் நிலைக்காது;
ஏனெனில் இறைவன் நம்மோடு இருக்கிறார்.
யெகோவா தமது பலத்த கரத்தை என்மீது வைத்து, என்னோடு பேசி, இந்த மக்களின் வழியைப் பின்பற்றவேண்டாம் என என்னை எச்சரித்துச் சொன்னதாவது: எசேக் 3:14நீதி 1:15அப் 4:20எரே 15:19எரே 20:7எரே 20:9சங் 32:8எசேக் 2:6-8
“இந்த மக்கள் சதி என்று சொல்லும் 1 பேது 3:14-15லூக் 21:9ஏசா 51:12-13சங் 53:5ஏசா 30:1லூக் 12:4-52இராஜா 16:5-7ஏசா 57:9-11
எல்லாவற்றையும் நீ சதி என்று சொல்லாதே;
அவர்கள் அஞ்சுவதற்கு நீயும் அஞ்சாதே,
அதற்கு நீ நடுங்காதே.
சேனைகளின் யெகோவாவை மட்டுமே பரிசுத்தர் என போற்று, லூக் 12:5ஏசா 26:3-4வெளி 15:4மத் 10:28சங் 76:7மல்கி 2:5எண் 20:12-13ஆதி 31:53
அவர் ஒருவருக்கே நீ அஞ்சவேண்டும்;
அவர் ஒருவருக்கே நீ நடுங்கவேண்டும்.
அவர் உனக்குப் பரிசுத்த இடமாயிருப்பார்; 1 பேது 2:8ரோம 9:32-33ஏசா 28:16லூக் 2:34எசேக் 11:16சங் 46:1-2நீதி 18:10சங் 11:6
ஆனால் இஸ்ரயேல், யூதாவாகிய இரு குடும்பங்களுக்கும் 2 அவர்,
இடறச்செய்யும் கல்லாகவும்,
அவர்களை வீழ்த்தும் கற்பாறையாகவும் இருப்பார்.
எருசலேம் மக்களுக்கு
அவர் கண்ணியாகவும், பொறியாகவும் இருப்பார்.
அநேகர் அவைகளில் தடுமாறுவார்கள், மத் 21:44ஏசா 28:13லூக் 20:17-181 கொரி 1:23ஏசா 59:10யோவா 6:66மத் 11:6மத் 15:14
அவர்கள் விழுந்து நொறுங்கிப் போவார்கள்.
அவர்கள் கண்ணியில் அகப்பட்டு பிடிக்கப்படுவார்கள்.”
சாட்சியின் ஆகமத்தை பத்திரமாய்க் கட்டிவை; தானி 12:4எபி 3:51 கொரி 2:14உபா 4:45ஏசா 29:11-12மத் 13:11மாற் 4:10-11மாற் 4:34
இறைவனுடைய சட்டத்தை என் சீடர்களிடையே முத்திரையிட்டு வை.
யாக்கோபின் வீட்டாருக்குத் தன் முகத்தை மறைக்கும் எபி 10:36-39ஆப 2:3புலம் 3:25-26ஏசா 25:9சங் 33:20ஏசா 54:8உபா 31:17-18எபி 9:28
யெகோவாவுக்கு நான் காத்திருப்பேன்.
அவரிலேயே என் நம்பிக்கையை வைப்பேன்.
நானும் யெகோவா எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இங்கே இருக்கிறோம். நாங்கள் சீயோன் மலையில் வசிக்கும் எல்லாம் வல்ல யெகோவாவினால் இஸ்ரயேலில் அடையாளங்களும் அறிகுறிகளுமாய் இருக்கிறோம். எபி 2:13-14லூக் 2:34சகரி 8:3எபி 12:22ஏசா 53:10சங் 71:71 நாளாக 23:25ஏசா 24:23
இருள் வெளிச்சத்திற்கு மாறுகிறது
முணுமுணுத்து ஓதுகிற, ஆவிகளுடன் தொடர்புடையோரிடமும், குறிசொல்வோரிடமும் விசாரிக்கும்படி மனிதர் உங்களிடம் சொல்கிறார்கள். மக்கள் தங்கள் இறைவனிடம் அல்லவோ விசாரிக்கவேண்டும்? உயிருள்ளவர்களுக்காக மரித்தவர்களிடம் ஏன் விசாரிக்கவேண்டும்? 1 நாளாக 10:13லேவி 20:62 நாளாக 33:6சங் 106:28லேவி 19:311 சாமு 28:8உபா 18:11ஏசா 19:3 சட்டத்தையும், சாட்சி ஆகமத்தையுமே நாடவேண்டும். அவர்கள் இந்த வார்த்தையின்படி பேசாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. 2 பேது 1:192 தீமோ 3:15-17அப் 17:11யோவா 5:39சங் 119:130ஏசா 30:8-11யோவா 5:46-47ஓசி 6:3 மக்கள் துயரும் பசியும் உடையவர்களாய் நாட்டில் அலைந்து திரிவார்கள். பட்டினியால் அவதியுறும்போது கோபங்கொண்டு மேல்நோக்கிப் பார்த்து, தங்கள் இறைவனையும் அரசனையும் சபிப்பார்கள். ஏசா 9:20நீதி 19:32இராஜா 25:3உபா 28:33-34உபா 28:53-57யாத் 22:28ஏசா 8:7-8எரே 14:18 பின்பு அவர்கள் பூமியை நோக்கிப்பார்த்து துன்பத்தையும், இருளையும், பயங்கர அந்தகாரத்தையும் மட்டுமே காண்பார்கள். அவர்கள் காரிருளுக்குள்ளே தள்ளப்படுவார்கள். ஏசா 5:30எரே 13:16மத் 22:13மத் 8:12எரே 30:6-7யோபு 18:18யூதா 1:13நீதி 14:32