தமிழ் வேதாகமம் Tamil Bible

உன்னதப்பாட்டு 3

Song 3

இரவு முழுவதும் என் படுக்கையில் இருந்தேன்; 1 பேது 1:8உன்னத 1:7உன்னத 5:6ஏசா 26:9ஏசா 55:6சங் 130:1-2சங் 22:2உன்னத 5:8

என் உயிர்க் காதலரை நான் தேடினேன்.

நான் அவரைத் தேடியும், அவரைக் காணவில்லை.

நான் இப்பொழுதே எழுந்திருப்பேன், பட்டணத்தின் வீதிகளிலும் எபே 5:14ரோம 13:111 கொரி 15:34ஏசா 64:7எரே 5:1யோவா 1:6லூக் 14:21-23மத் 26:40-41

பொது இடங்களிலும் போய்ப்பார்ப்பேன்.

அங்கே நான் என் உயிர்க் காதலரைத் தேடுவேன்.

அப்படியே நான் அவரைத் தேடினேன், ஆனாலும் அவரைக் காணவில்லை.

காவலர்கள் பட்டணத்தைச் சுற்றித் திரிகையில் உன்னத 5:7எசேக் 33:2-9ஏசா 21:11-12ஏசா 21:6-8யோவா 20:15எசேக் 3:17எபி 13:17ஏசா 56:10

என்னைக் கண்டார்கள்.

“என் உயிர்க் காதலரைக் கண்டீர்களா?” என்று நான் கேட்டேன்.

அவர்களை நான் கடந்துசென்றதும் என் உயிர்க் காதலரை நான் கண்டேன். நீதி 8:17மத் 7:7நீதி 4:13உன்னத 6:12உன்னத 8:2ஏசா 45:19ஏசா 55:6-7எரே 29:13

நான் அவரைப் பிடித்துக்கொண்டேன்;

என் தாயின் வீட்டிற்கும், என்னைப் பெற்றவளின் அறைக்கும்

கூட்டிக்கொண்டு போகும்வரை

நான் அவரைப் போகவிடவேயில்லை.

எருசலேமின் மங்கையரே, உன்னத 2:7உன்னத 8:4மீகா 4:8

கலைமான்கள்மேலும் வெளியின் பெண்மான்கள்மேலும் ஆணை!

காதலைத் தட்டி எழுப்பவேண்டாம்,

அது தானே விரும்பும்வரை எழுப்பவேண்டாம்.

பாலைவனத்திலிருந்து புகைமண்டலத்தைப்போல உன்னத 8:5வெளி 12:14உன்னத 1:13உன்னத 4:6உபா 8:2ஏசா 43:19எரே 2:2எரே 31:2

வருகின்ற இவர் யார்?

வெள்ளைப்போளம் மணக்க, சாம்பிராணி புகைய,

வர்த்தகர்களின் வாசனைத் திரவியங்கள் யாவும் மணங்கமழ வருகின்ற இவர் யார்?

இதோ, சாலொமோனின் படுக்கை! 1 இராஜா 14:271 இராஜா 9:221 சாமு 14:521 சாமு 28:21 சாமு 8:162இராஜா 6:17எபி 1:14உன்னத 1:16

இஸ்ரயேலின் மிகச்சிறந்த வீரர்களில்

அறுபது வீரர்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள்.

அவர்கள் எல்லோரும் வாளேந்திய வீரர்கள், சங் 45:31 தெச 5:6-8எபே 6:16-18ஏசா 27:3நெகே 4:21-22சங் 149:5-9சங் 91:5

அவர்கள் யுத்தத்தில் அனுபவமிக்கவர்கள்,

இரவின் பயங்கரத்தை எதிர்க்க

தம் இடுப்பில் வாள் கொண்டுள்ளவர்கள்.

சாலொமோன் அரசன் தனக்கென லெபனோனின் மரத்தினால் உன்னத 3:72 சாமு 23:5வெளி 14:6

ஒரு பல்லக்கை செய்தார்.

அதின் தூண்களை வெள்ளியினாலும், 1 தீமோ 3:15-16எபே 3:18-19சங் 87:3வெளி 1:5வெளி 3:12ரோம 5:8உன்னத 1:5

அதின் சாய்மனையைத் தங்கத்தினாலும்,

உட்காருமிடத்தை இரத்தாம்பர நிற மெத்தையினாலும் செய்ய வைத்தார்;

அதின் உட்புறத்தை எருசலேமின் மங்கையர்

தங்கள் அன்பால் அலங்கரித்திருந்தார்கள். சீயோனின் மகள்களே, ஏசா 62:5ஓசி 2:19-20எரே 2:2எபி 13:13மத் 12:42சங் 9:14வெளி 1:7செப்ப 3:17

வெளியே வாருங்கள்.

சாலொமோன் அரசன் மகுடம் அணிந்திருப்பதைப் பாருங்கள்,

அவருடைய உள்ளம் மகிழ்ச்சியுற்ற நாளான

அவருடைய திருமண நாளிலேயே

அந்த மகுடத்தை அவருடைய தாயார் அவருக்குச் சூட்டினாள்.