காதலன்
என் சகோதரியே, என் மணவாளியே, நான் என் தோட்டத்திற்கு வந்துள்ளேன்; உன்னத 6:2உன்னத 4:16வெளி 22:17உன்னத 4:9-14ஏசா 51:3ஏசா 55:1-2ஏசா 58:11ஏசா 61:11
என் நறுமணப் பொருட்களுடன் என் வெள்ளைப்போளத்தையும் சேர்த்துக்கொண்டேன்.
என்னுடைய தேன்கூட்டை என் தேனோடு சாப்பிட்டேன்;
நான் என்னுடைய திராட்சை இரசத்தையும் என் பாலையும் குடித்தேன்.
தோழியர்
நண்பர்களே, சாப்பிடுங்கள், குடியுங்கள்;
அன்பர்களே, திருப்தியாய்க் குடியுங்கள்.
காதலி
நான் உறங்கினேன், என் இருதயமோ விழித்திருந்தது. வெளி 3:20உன்னத 2:14உன்னத 6:9சகரி 4:1சங் 119:1ஆதி 29:20ஆதி 31:40-41ஏசா 50:6
கேளுங்கள், என் காதலர் கதவைத் தட்டுகிறார்:
“என் சகோதரியே, என் அன்பே,
என் புறாவே, என் உத்தமியே, கதவைத்திற.
என் தலை பனியால் நனைந்திருக்கிறது,
என் தலைமுடி இரவின் தூறலினால் நனைந்திருக்கிறது” என்கிறார்.
நான் என் உடைகளைக் கழற்றிவிட்டேன்; லூக் 11:7மத் 25:5மத் 26:38-43நீதி 13:4நீதி 22:13நீதி 3:28ரோம 7:22-23
அவற்றைத் திரும்பவும் நான் உடுக்க வேண்டுமோ?
நான் என் கால்களைக் கழுவிவிட்டேன்;
அவற்றைத் திரும்பவும் நான் அழுக்காக்க வேண்டுமோ?
என் காதலர் கதவுத் துவாரத்தின் வழியாகத் தன் கையை நுழைத்தார்; 1 இராஜா 3:262 கொரி 8:1-22 கொரி 8:16அப் 16:14ஆதி 43:30பிலி 2:13சங் 110:3உன்னத 1:4
என் உள்ளம் அவரைக்காண துடித்தது.
நான் என் காதலருக்காகக் கதவைத் திறக்க எழுந்தேன், உன்னத 5:13எபே 3:172 கொரி 7:72 கொரி 7:9-11லூக் 12:36வெளி 3:20உன்னத 3:6உன்னத 4:13-14
என் கையிலிருந்து வெள்ளைப்போளம் வடிந்தது;
கதவின் பிடியில் என் கைவிரல்கள்
வெள்ளைப்போளத்தைச் சிந்தின.
நான் என் காதலருக்காகக் கதவைத் திறந்தேன், உன்னத 5:2ஓசி 5:15வெளி 3:191 சாமு 28:62 சாமு 16:10ஆதி 42:28ஓசி 5:6ஏசா 12:1
ஆனால் என் காதலரோ அங்கு இல்லை; அவர் போய்விட்டார்.
அதினால் என் உள்ளம் ஏங்கியது.
நான் அவரைத் தேடினேன்; அவரைக் காணவில்லை.
நான் கூப்பிட்டேன்; அவர் பதில் கொடுக்கவில்லை.
காவற்காரர்கள் பட்டணத்தைச்சுற்றி வரும்போது, உன்னத 3:31 கொரி 4:10-131 பேது 4:14-162 கொரி 11:13அப் 20:29-30அப் 26:9-10அப் 5:40-41எபி 11:36-37
என்னைக் கண்டார்கள்.
அவர்கள் என்னை அடித்தனர், காயப்படுத்தினர்,
என் மேலுடையை எடுத்துக்கொண்டார்கள்;
அவர்கள் அரணைக் காவல் செய்வோர்!
எருசலேம் மங்கையரே, உன்னத 2:5உன்னத 2:7சங் 42:1-3உன்னத 3:5கலா 6:1-2சங் 119:81-83சங் 63:1-3சங் 77:1-3
நான் உங்களுக்கு ஆணையிட்டுச் சொல்கிறேன்;
நீங்கள் என் காதலரைக் காண்பீர்களானால் என்னத்தைச் சொல்வீர்கள்?
காதலினால் மயங்கியிருக்கிறேன் என்று சொல்லுங்கள்.
தோழியர்
பெண்களுள் பேரழகியே, உன்னத 1:8உன்னத 6:1உன்னத 6:9-10ஏசா 53:2மத் 16:13-17சங் 45:13சங் 87:32 கொரி 4:3-6
உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்?
நீ இவ்விதம் ஆணையிட்டுச் சொல்லும் அளவுக்கு
உன் காதலர் மற்றவர்களைவிட எவ்வகையில் சிறந்தவர்?
காதலி
என் காதலர் பிரகாசமான 1 சிவந்த தோற்றமுள்ளவர், சங் 45:2பிலி 2:9-11சங் 45:17உன்னத 2:11 சாமு 16:12கொலோ 1:18உபா 32:31எபி 2:10
பத்தாயிரம் பேருக்குள் அதிசிறந்தவர்.
அவருடைய தலை சுத்தமான தங்கமாயிருக்கிறது; தானி 7:9எபே 1:21-22வெளி 1:14உன்னத 5:2உன்னத 7:5தானி 2:37-38
தலைமயிரோ சுருள் சுருளாகவும்
காகத்தைப்போல் கருமையாகவும் இருக்கிறது.
அவருடைய கண்களோ உன்னத 1:15உன்னத 4:1எபி 4:13
பாலில் குளித்து,
நீரூற்றருகே தங்கும் புறாக்களைப்போலவும்,
பதிக்கப்பட்டக் கற்களைப்போலவும் இருக்கின்றன.
அவர் கன்னங்கள் நறுமணச்செடிகள் முளைக்கும் உன்னத 1:10உன்னத 2:1உன்னத 6:2ஏசா 50:6லூக் 4:22சங் 27:4சங் 4:6-7சங் 45:2
பாத்திகள்போல் இருக்கின்றன.
அவருடைய உதடுகள் வெள்ளைப்போளம்
வடிகின்ற லில்லிப் பூக்களைப்போல் இருக்கின்றன.
அவருடைய புயங்களோ கோமேதகம் யாத் 24:10ஏசா 54:11யாத் 15:6யாத் 28:20யாத் 39:13எசேக் 1:16எசேக் 1:26-28ஏசா 52:13
பதித்த தங்க வளையல்களைப்போல் இருக்கின்றன.
அவருடைய வயிறு நீலக்கற்களினால் அலங்கரிக்கப்பட்ட,
துலக்கிய தந்தம்போல் இருக்கின்றது.
அவருடைய கால்களோ சுத்தத்தங்கத்தால் 1 இராஜா 4:33வெளி 1:15-161 தீமோ 3:16அப் 2:28யாத் 26:19ஓசி 14:7நியாயாதி 13:6மத் 17:2
அடித்தளமிடப்பட்ட பளிங்குத் தூண்களாய் இருக்கின்றன.
அவருடைய தோற்றமோ லெபனோனைப்போலவும்
அது சிறந்த கேதுரு மரங்களைப் போலவும் இருக்கிறது.
அவருடைய வாய் இனிமையானது; சங் 45:2உன்னத 7:91 பேது 2:6-7கலா 2:20ஓசி 3:1ஏசா 9:6-7யாக் 2:23யாக் 4:4
அவர் முற்றிலும் அழகானவர்.
எருசலேமின் மங்கையரே,
இவரே என் காதலர், இவரே என் நண்பர்.