ஏசாயா 51

Isaiah 51

சீயோனுக்கு நித்திய இரட்சிப்பு

“நீதியைப் பின்பற்றுகிறவர்களே, யெகோவாவைத் தேடுகிறவர்களே, ஏசா 51:7சங் 94:15எபி 12:14சங் 105:3-4ரோம 14:19ரோம 9:30-322 தீமோ 2:22ஆமோ 5:6

நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்.

நீங்கள் எந்தக் கற்பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டீர்களோ,

எந்தக் கற்குழியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டீர்களோ,

அந்தக் கற்பாறையானவரை நோக்கிப்பாருங்கள்.

உங்கள் முற்பிதாவாகிய ஆபிரகாமையும் எசேக் 33:24கலா 3:9-14ரோம 4:1-5எபி 11:8-12ஆதி 18:11-13ஆதி 24:1ஏசா 29:22ஆதி 12:1-3

உங்களைப் பெற்றெடுத்த சாராளையும் நோக்கிப்பாருங்கள்.

நான் அவனை அழைத்தபோது, அவன் ஒருவனாய் மாத்திரமே இருந்தான்;

நான் அவனை ஆசீர்வதித்து அவனை அநேகராகப் பெருகச் செய்தேன்.

மெய்யாகவே யெகோவா சீயோனைத் தேற்றுவார், ஏசா 49:13ஏசா 52:9யோவே 2:31 பேது 1:8ஆதி 13:10எரே 31:12-14எரே 31:25எரே 33:11-13

அவளுடைய பாழான இடங்களையெல்லாம் ஆறுதல் செய்வார்;

அவர் அவளுடைய பாலைவனங்களை ஏதேனைப் போலவும்,

அவளுடைய பாழிடங்களை யெகோவாவின் தோட்டத்தைப் போலவும் ஆக்குவார்.

சந்தோஷமும் மகிழ்ச்சியும் அங்கு காணப்படும்,

நன்றி செலுத்துதலும் பாடலின் சத்தமும் அங்கு இருக்கும்.

“என் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்; 1 பேது 2:91 கொரி 9:21ஏசா 2:3ஏசா 42:6ஏசா 49:6மீகா 4:2சங் 78:1யாத் 19:6

என் நாடே, கேளுங்கள்:

சட்டம் என்னிலிருந்து வெளிப்படும்:

என் நீதி நாடுகளுக்கு ஒரு வெளிச்சமாக இருக்கும்.

என் நீதி சமீபமாயிருக்கிறது; ரோம 10:17-18ஏசா 46:13ஏசா 42:4ஏசா 60:9ரோம 10:6-102 கொரி 5:10யோவே 3:12லூக் 24:47

என் இரட்சிப்பு வெளிப்படுகிறது,

என் புயம் நாடுகளுக்கு நீதியைக் கொண்டுவரும்.

தீவுகள் என்னை நோக்கி,

என் கரத்திற்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும்.

உங்கள் கண்களை வானங்களை நோக்கி உயர்த்துங்கள், மத் 24:35சங் 102:25-26எபி 1:10-12ஏசா 34:4வெளி 6:12-14யோவா 3:15-162 பேது 3:10-12யோவா 10:27-29

கீழிருக்கும் பூமியையும் பாருங்கள்;

வானங்கள் புகையைப்போல் மறையும்,

பூமியும் பழைய உடையைப்போல் கந்தையாகும்;

அங்கு குடியிருப்போரும் ஈக்களைப்போல் சாவார்கள்.

ஆனால் எனது இரட்சிப்போ என்றென்றைக்கும் நிலைநிற்கும்,

எனது நீதி ஒருபோதும் தவறுவதில்லை.

“நியாயத்தை அறிந்தவர்களே, மத் 5:11எசேக் 2:6சங் 37:311 பேது 4:14அப் 5:41ஏசா 51:11 பேது 4:42 கொரி 3:3

எனது சட்டத்தை மனதில் வைத்திருக்கும் மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்.

மனிதரின் நிந்தனைக்குப் பயப்படாதீர்கள்;

அவர்களின் ஏளனப் பேச்சுக்களால் திகிலடையாதீர்கள்.

பொட்டுப்பூச்சி உடையை அரித்து, ஏசா 51:6ஏசா 50:9ஏசா 66:24ஓசி 5:12யோபு 4:19லூக் 1:50ஏசா 45:17ஏசா 46:13

ஆட்டு மயிரைத் தின்பதுபோல் அவர்களைத் தின்னும்.

ஆனால் என் நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும்,

எனது இரட்சிப்பும் எல்லா தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கும்.”

யெகோவாவின் புயமே, விழித்தெழு, விழித்தெழு, சங் 74:13-14ஏசா 52:1சங் 89:10ஏசா 27:1ஏசா 30:7எசேக் 29:3ஏசா 51:17யோபு 26:12

பெலத்தால் உன்னை உடுத்திக்கொள்!

கடந்த நாட்களிலும் பழைய தலைமுறைகளிலும்

எழுந்ததுபோல் விழித்தெழு.

ராகாப் 1 என்னும் வலுசர்ப்பத்தைத் துண்டுதுண்டாக வெட்டியது நீரல்லவா?

அந்த மிருகத்தை ஊடுருவக் குத்தியதும் நீரல்லவா?

கடலையும் ஆழங்களின் தண்ணீரையும் ஏசா 43:16யாத் 14:21-22யாத் 15:13ஏசா 50:2ஏசா 63:11-12ஏசா 42:15சங் 74:13

வற்றவைத்தது நீரல்லவா?

மீட்கப்பட்டவர்கள் கடந்துசெல்லும்படி கடலின்

பெரிய ஆழங்களில் பாதை அமைத்ததும் நீரல்லவா?

யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள். ஏசா 25:8வெளி 21:4வெளி 7:17ஏசா 35:102 தெச 2:16ஏசா 61:7எரே 33:11ஏசா 60:19-20

அவர்கள் பாடலுடன் சீயோனுக்குள் செல்வார்கள்;

நித்திய மகிழ்ச்சி அவர்களுடைய தலையின்மேலிருக்கும்.

மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைவார்கள்,

துக்கமும் பெருமூச்சும் பறந்தோடிவிடும்.

“நான், நானே உன்னைத் தேற்றுகிறவர். சங் 118:61 பேது 1:24ஏசா 2:22யோவா 14:26-272 கொரி 1:3-5யோவா 14:18யாக் 1:10-11ஏசா 66:13

இறக்கும் மனிதனுக்கும்,

புல்லாயிருக்கும் மானிடருக்கும் பயப்படுவதற்கு நீ யார்?

வானங்களை விரித்து, ஏசா 17:10ஏசா 40:22ஏசா 45:12சங் 104:21 கொரி 1:20தானி 3:19ஏசா 44:24ஏசா 48:13

பூமியின் அஸ்திபாரங்களை அமைத்த,

உன் படைப்பாளரான யெகோவாவை நீ மறந்திருக்கிறாயே!

அதனால் அழிக்கக் காத்திருக்கும்

ஒடுக்குகிறவனுடைய கோபத்திற்கு தினமும்

இடைவிடாமல் நீ அஞ்சுகிறாயே!

ஒடுக்குபவனின் கடுங்கோபம் எங்கே?

பயந்து அடங்கியிருக்கும் கைதிகள் விரைவில் விடுதலையாக்கப்படுவார்கள்; ஏசா 48:20சகரி 9:11ஏசா 52:2அப் 12:7-8ஏசா 49:10எஸ்றா 1:5எரே 38:6-13எரே 37:16

தங்கள் இருட்டறையில் அவர்கள் சாகமாட்டார்கள்,

அவர்களின் உணவும் குறைவுபடாது.

ஏனெனில் உன் இறைவனாகிய யெகோவா நானே, எரே 31:35ஏசா 54:5ஆமோ 9:5-6ஏசா 47:4ஏசா 51:10எரே 10:16சங் 114:3-5சங் 136:13

நான் கடலைக் கலக்க அதன் அலைகள் இரைகின்றன,

சேனைகளின் யெகோவா என்பது என் பெயர்.

வானங்களை அதினதின் இடத்தில் நிலைப்படுத்தி, ஏசா 59:21ஏசா 49:2யோவா 17:8உபா 18:18எரே 31:33ஏசா 66:22ஏசா 48:13ஏசா 50:4

பூமியின் அஸ்திபாரங்களையும் அமைத்தேன்.

சீயோனிடம், ‘நீங்களே எனது மக்கள்’ என்று சொன்னேன்”

நான் என் வார்த்தைகளை உன் வாயில் அருளி,

என் கரத்தின் நிழலால் உன்னை மூடிக்கொண்டேன்.

யெகோவாவின் கோபம்

விழித்தெழு, விழித்தெழு! ஏசா 52:1வெளி 14:101 கொரி 15:34எபே 5:14ஏசா 51:9யோபு 21:20சங் 60:3சங் 11:6

எருசலேமே, விழித்தெழு,

யெகோவாவின் கரத்திலிருக்கும்

அவரது கோபத்தின் பாத்திரத்தில் குடித்தவளே!

மனிதரைத் தள்ளாடவைக்கும் பாத்திரத்தை

மண்டிவரை குடித்தவளே! நீ எழுந்திரு.

அவள் பெற்றெடுத்த எல்லா மக்களிலும் ஏசா 49:21சங் 88:18ஏசா 41:13ஏசா 45:1மத் 15:14மத் 9:36மாற் 8:23சங் 142:4

அவளுக்கு வழிகாட்ட பிள்ளைகள் ஒருவரும் இருக்கவில்லை;

அவள் வளர்த்த எல்லா பிள்ளைகளிலும்

அவளைக் கையில் பிடித்துச் செல்லக்கூட ஒருவரும் இல்லை.

இந்த இரண்டு பெரும் துன்பங்களும் உன்மேல் வந்திருக்கின்றன; ஆமோ 7:2ஏசா 47:92 கொரி 7:132 கொரி 7:6-7பிரச 4:1எசேக் 14:21ஏசா 14:30ஏசா 22:4

உன்னைத் தேற்றுபவர் யார்?

அழிவும், பாழும், பஞ்சமும், வாளும் உன்மேல் வந்திருக்கின்றன.

உன்னை ஆறுதல்படுத்துபவர் யார்?

உனது பிள்ளைகள் சோர்ந்துவிட்டார்கள்; புலம் 2:11-12வெளி 16:9-11உபா 14:5எசேக் 12:13எசேக் 17:20எசேக் 39:19ஏசா 29:9ஏசா 49:26

ஒவ்வொரு தெருவின் முகப்பிலும்,

வலையில் அகப்பட்ட கலைமானைப்போல் கிடக்கிறார்கள்.

அவர்கள் யெகோவாவின் கோபத்தாலும்,

உங்கள் இறைவனின் கண்டனத்தாலும் நிரப்பப்பட்டிருக்கிறார்கள்.

ஆகவே, துன்புறுத்தப்பட்டவளே, ஏசா 29:9ஏசா 51:17ஏசா 54:11

மதுபானம் குடிக்காமலே வெறிகொண்டிருக்கிறவளே, இதைக் கேள்.

உன் ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே, நீதி 22:23ஏசா 51:17ஏசா 62:8எரே 50:34ஏசா 49:25சங் 35:11 சாமு 25:39யோவே 3:2

தமது மக்களுக்காக வாதாடும் உன் இறைவன் கூறுகிறார்:

“உன்னை மதிமயக்கும் பாத்திரத்தை

உன் கைகளிலிருந்து எடுத்துக்கொண்டேன்;

எனது கோபத்தின் பாத்திரத்தில்

நீ இனி ஒருபோதும் குடிக்கமாட்டாய்.

உன்னை வேதனைப்படுத்தியவர்களின் கைகளில் அப்பாத்திரத்தை நான் வைப்பேன். யோசு 10:24சகரி 12:2ஏசா 49:25-26எரே 25:15-29நீதி 11:8நீதி 21:18சங் 65:11-12வெளி 11:2

அவர்கள் உன்னிடம், ‘நாங்கள் உன்மீது நடக்கும்படி நிலத்தில் வீழ்ந்துகிட’

என்று சொல்லியிருந்தார்கள்.

நீயும் உன் முதுகை நிலத்தைப் போலாக்கினாய்,

மிதித்து நடக்கும்படி அதை ஒரு வீதியைப்போலவும் ஆக்கினாயே.”