ஏசாயா 17

Isaiah 17

தமஸ்குவுக்கு எதிரான இறைவாக்கு

தமஸ்கு பட்டணத்தைப் பற்றிய இறைவாக்கு: ஆமோ 1:3-5ஏசா 25:2சகரி 9:1அப் 9:2ஆதி 14:15ஏசா 7:8எரே 49:2எரே 49:23-27

“பாருங்கள், தமஸ்கு இனிமேல் ஒரு பட்டணமாய் இராது;

அது ஒரு இடிபாடுகளின் குவியலாகும்.

அரோவேரிலுள்ள பட்டணங்கள் கைவிடப்பட்டு, எசேக் 25:5உபா 2:36எரே 7:33செப்ப 2:6மீகா 4:4எண் 32:34உபா 3:12எரே 48:19

மந்தைகளுக்கு இளைப்பாறும் இடங்களாய் இருக்கும்;

அவைகளைப் பயமுறுத்துவதற்கு ஒருவரும் இருக்கமாட்டார்கள்.

எப்பிராயீமிலுள்ள அரண்செய்யப்பட்ட பட்டணம் இல்லாது ஒழிந்துபோகும்; ஓசி 9:11ஏசா 7:16ஏசா 8:4ஏசா 7:8மீகா 1:4-92இராஜா 16:92இராஜா 17:6ஆமோ 2:6-9

தமஸ்குவின் அரசாட்சியும் ஒழிந்துபோகும்.

இஸ்ரயேலின் மேன்மைக்கு நடந்ததுபோலவே,

சீரியாவில் மீதியாய் இருப்பவர்களுக்கும் நடக்கும்”

என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.

“அந்த நாளில் யாக்கோபின் மகிமை குறைந்துபோகும்; ஏசா 10:16உபா 32:15-27எசேக் 34:20ஏசா 10:4ஏசா 24:13ஏசா 24:16ஏசா 9:21ஏசா 9:8

அவளது உடலின் கொழுப்பு உருகிப்போகும்.

அறுவடை செய்பவன் ஓங்கி வளர்ந்த கதிர்களைச் சேர்த்து, மத் 13:30எரே 51:33யோவே 3:132 சாமு 5:18வெளி 14:15-202 சாமு 5:22மத் 13:39-42ஓசி 6:11

தன் கையால் அறுவடை செய்வதுபோலவும்,

ஒரு மனிதன் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில்

சிந்திய கதிர்களைப் பொறுக்குவது போலவும் அது இருக்கும்.”

ஆயினும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது: ஏசா 24:13உபா 4:27நியாயாதி 8:2ஒபதி 1:5ரோம 11:4-6ரோம 9:271 இராஜா 19:18எசேக் 36:8-15

“ஒலிவ மரத்தை உலுக்கி பழம் பறித்தபின்,

அதன் உச்சிக் கொப்புகளில் இரண்டு மூன்று பழங்கள் விழாமல் மீதமிருப்பதுபோலவும்,

பழம் நிறைந்த கொப்புகளில் நாலைந்து பழங்கள்

விழாமல் மீந்திருப்பது போலவும் ஒரு சிலர் மீதமிருப்பார்கள்.”

அந்த நாளில் மக்கள் தங்களைப் படைத்தவரை நோக்கிப் பார்ப்பார்கள்; மீகா 7:7ஓசி 6:1ஓசி 3:52 நாளாக 30:10-112 நாளாக 30:18-202 நாளாக 31:12 நாளாக 35:17-18ஓசி 14:1-3

அவர்கள் தங்கள் கண்களை இஸ்ரயேலின் பரிசுத்தரின் பக்கமாய்த் திருப்புவார்கள்.

தமது கைகளால் செய்த பலிபீடங்களை நோக்கமாட்டார்கள்; ஏசா 30:22ஏசா 27:9ஏசா 2:8மீகா 5:13-142 நாளாக 14:52 நாளாக 34:42 நாளாக 34:6-7யாத் 34:13

அசேரா தேவதைகளின் தூண்களுக்கும்,

தங்கள் விரல்களினால் செய்யப்பட்ட தூப பீடங்களுக்கும்

மதிப்புக் கொடுக்கவுமாட்டார்கள்.

இஸ்ரயேலர் நிமித்தம் அவர்கள் கைவிட்டுப்போன வலிமையுள்ள பட்டணங்கள் இந்த நாளில் புதர்களுக்கும், புற்தரைகளுக்கும் கைவிடப்பட்ட இடங்களைப் போலாகி, எல்லாம் பாழாய்க்கிடக்கும். ஆமோ 3:11-15ஏசா 27:10ஆமோ 7:9ஓசி 10:14ஓசி 13:15-16ஏசா 17:4-5ஏசா 24:1-12ஏசா 28:1-4

நீங்கள் உங்கள் இரட்சகராகிய இறைவனை மறந்து, உபா 32:18ஏசா 26:4எரே 2:32சங் 106:21உபா 32:4ஓசி 13:6-7உபா 32:31ஓசி 8:14

உங்கள் கோட்டையான கற்பாறையை நினையாமல் போனீர்கள்.

ஆதலால் சிறந்த தாவரங்களையும்,

வேறு நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட திராட்சைக் கொடிகளையும்

ஒழுங்காய் நாட்டினாலும்,

நட்ட நாளிலேயே நீ அவைகளை வளரப் பண்ணினாலும், ஓசி 8:7யோபு 4:8கலா 6:7-8ஓசி 10:12-15ஓசி 9:1-4ஓசி 9:16ஏசா 18:5-6ஏசா 65:13-14

விடியற்காலையிலேயே நீ அவைகளை மொட்டு வரப்பண்ணினாலும்

அறுவடையில் ஒன்றும் இராது;

வியாதியும் தீராத வேதனைகளுமே அந்த நாளில் இருக்கும்.

அநேக நாடுகள் கொதித்தெழுகிறார்கள்; எரே 6:23லூக் 21:25சங் 18:4எசேக் 43:2வெளி 17:1வெளி 17:15ஏசா 28:17ஏசா 5:26-30

அவர்கள் கொந்தளிக்கும் கடல்போல் எழுகிறார்கள்.

மக்கள் கூட்டங்கள் கிளர்ந்தெழுகிறார்கள்;

பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல் கர்ஜிக்கிறார்கள்.

பெருவெள்ளம் இரைவதுபோல் மக்கள் கூட்டங்கள் இரைந்தாலும், சங் 9:5ஏசா 41:15-16யோபு 21:18சங் 1:4ஏசா 29:5தானி 2:35ஓசி 13:3ஏசா 10:15-16

அவர் அவர்களைக் கடிந்துகொள்ளும்போது, அவர்கள் தூரமாய் ஓடிப்போகிறார்கள்.

அவர்கள் குன்றுகளின்மேல் காற்றினால் பறக்கடிக்கிறப் பதரைப்போலவும்,

புயல்காற்றில் சிக்குண்ட சருகு போலவும் அவர்கள் அடித்துச்செல்லப் படுகிறார்கள்.

மாலைவேளையில் திடீர்ப் பயங்கரம்; 2இராஜா 19:35நீதி 22:232இராஜா 19:3எசேக் 39:10ஆப 2:16-17ஏசா 10:28-32ஏசா 33:1நியாயாதி 5:31

விடியுமுன் அழிவு;

நம்மைக் கொள்ளையடிப்பவர்களின் நிலைமை இதுவே;

நம்மைச் சூறையாடுவோரின் கதியும் இதுவே.