இஸ்ரயேல் ஒரு படரும் திராட்சைக்கொடி, ஓசி 8:11ஓசி 12:11ஏசா 5:1-7லேவி 26:1பிலி 2:211 இராஜா 14:23எரே 2:28ரோம 14:7-8
அவன் தனக்கென கனிகொடுக்கிறது.
அவனுடைய கனிகள் பெருகியபோது,
அதற்கேற்ற மிகுதியான பலிபீடங்களைக் கட்டினான்.
அவனுடைய நாடு செழித்தபோது,
தனது புனிதக் கற்களை நன்றாக அலங்கரித்தான்.
அவர்கள் இருதயம் வஞ்சனையுள்ளது. 1 இராஜா 18:21மீகா 5:13யாக் 4:4யாக் 1:8லூக் 16:13வெளி 3:15-16செப்ப 1:51 சாமு 5:4
இப்பொழுது அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும்.
யெகோவா அவர்களுடைய மேடைகளை இடித்து,
புனிதக் கற்களை அழித்துப்போடுவார்.
அப்பொழுது அவர்கள், “நாங்கள் யெகோவாவிடம் பயபக்தியாயிருக்காதபடியால், ஓசி 10:15ஓசி 10:7ஓசி 13:11ஆதி 49:10ஓசி 3:4யோவா 19:15மீகா 4:9ஓசி 11:5
எங்களுக்கு அரசன் இல்லை;
அரசன் இருந்தாலுங்கூட,
அவனால் எங்களுக்காக என்ன செய்யமுடியும்?” எனச் சொல்வார்கள்.
அவர்கள் அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார்கள், ஆமோ 5:7ஆமோ 6:12ஓசி 4:22இராஜா 17:3-4உபா 29:18எசேக் 17:13-192 தீமோ 3:3அப் 8:23
பொய் சத்தியங்களையும்
ஒப்பந்தங்களையும் செய்கிறார்கள்;
எனவே உழுத வயலில் உள்ள நச்சுப் பயிரைப்போல்
வழக்குகள் தோன்றுகின்றன.
சமாரியாவில் வாழ்கிற மக்கள் ஓசி 9:112இராஜா 23:5ஓசி 5:8ஓசி 4:15ஓசி 8:5-61 சாமு 4:21-22ஓசி 13:22 நாளாக 11:15
பெத்தாவேனில் இருக்கிற கன்றுக்குட்டி விக்கிரகத்திற்குப் பயப்படுகிறார்கள்.
அது அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு,
நாடுகடத்தப்படும்.
அதன் மக்கள் அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்;
அதன் மகிமையில் மகிழ்ச்சிகொண்ட விக்கிரக பூசாரிகளும் துக்கங்கொண்டாடுவார்கள்.
அது அசீரியாவின் பேரரசனுக்குக் கப்பமாக ஓசி 5:13ஏசா 30:3எரே 7:24தானி 11:82இராஜா 17:3எசேக் 36:31ஓசி 11:5-6ஓசி 4:19
அங்கு கொண்டுபோகப்படும்.
அதைக்குறித்து எப்பிராயீம் அவமானமடையும்.
இஸ்ரயேல் தன் சொந்த ஆலோசனையினால் வெட்கமடையும்.
சமாரியாவும் அதன் அரசனும் ஓசி 10:32இராஜா 1:3யூதா 1:131 இராஜா 21:12இராஜா 15:302இராஜா 17:4ஓசி 10:15ஓசி 13:11
தண்ணீரில் மிதக்கும் குச்சியைப்போல் அள்ளுண்டு போவார்கள்.
இஸ்ரயேலின் வேறு தெய்வங்களுக்குப் பலியிட்ட மேடைகள் அழிக்கப்படும்; வெளி 6:16லூக் 23:30ஏசா 2:191 இராஜா 12:28-30ஆமோ 8:14ஓசி 9:6ஏசா 32:131 இராஜா 13:2
இதுவே இஸ்ரயேலின் பாவம்.
முட்செடிகளும் நெருஞ்சில்களும் வளர்ந்து
அதன் மேடைகளை மூடும்.
அப்பொழுது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” என்றும்,
குன்றுகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும் சொல்வார்கள்.
இஸ்ரயேலே, கிபியாவின் நாட்கள் தொடங்கி நீ பாவம் செய்தாய்; ஓசி 9:9நியாயாதி 20:5நியாயாதி 19:22-30ஆதி 6:5ஆதி 8:21நியாயாதி 20:13-14நியாயாதி 20:17-48மத் 23:31-32
அதிலேயே நீ இன்னும் நிலைகொண்டிருக்கிறாய்.
கிபியாவிலே தீமை செய்தவர்கள்மேல்
யுத்தம் வரவில்லையோ?
ஆகவே நான் விரும்புகின்றபோது உன்னைத் தண்டிப்பேன்; எசேக் 5:13ஓசி 4:9எரே 16:16உபா 28:63எசேக் 16:37எசேக் 16:42எசேக் 23:46எசேக் 23:9
உங்கள் இரட்டிப்பான பாவங்களுக்காக உங்களை விலங்கிடுவதற்கென,
பிறநாடுகள் உங்களுக்கு விரோதமாய் ஒன்றுகூடும்.
எப்பிராயீம் சூடு அடிக்க விரும்புகின்ற ஓசி 4:16உபா 25:4எரே 50:112 நாளாக 28:5-8ஓசி 11:4ஓசி 2:5ஓசி 3:1ஓசி 9:1
பயிற்றுவிக்கப்பட்ட கன்னிப்பசு.
நான் அதன் கழுத்தின்மேல் பாரத்தை வைக்கவில்லை.
ஆனால் இப்பொழுது நான் அதன் அழகான கழுத்தின்மேல் ஒரு நுகத்தை வைப்பேன்.
நான் எப்பிராயீமை கடுமையான வேலைக்கு நடத்துவேன்;
யூதாவும் நிலத்தை உழவேண்டும்,
யாக்கோபின் எல்லா மக்களும் நிலத்தின் மண் கட்டிகளை உடைக்கவேண்டும்.
உங்கள் இருதயங்கள் உழப்படாத வயல்போல் கடினமாயிருக்கிறதே; எரே 4:3-4யாக் 3:18ஏசா 45:8நீதி 11:18ஏசா 55:6ஓசி 6:3எரே 29:12-14ஏசா 44:3
ஆகவே உங்களுக்கென நீதியை விதையுங்கள்,
அன்பின் பலனை அறுவடை செய்யுங்கள்.
உழப்படாத உங்கள் நிலங்களைக் கொத்துங்கள்,
ஏனெனில் யெகோவா வந்து உங்கள்மேல் நியாயத்தை பொழியும் வரைக்கும்
இது யெகோவாவைத் தேடும் காலமாயிருக்கிறது.
ஆனால் நீங்கள் கொடுமையை உழுதீர்கள், யோபு 4:8கலா 6:7-8நீதி 1:31நீதி 22:8ஓசி 8:7நீதி 18:20-21சங் 62:10பிரச 9:11
தீமையை அறுவடை செய்தீர்கள்,
வஞ்சனையின் பலனை சாப்பிட்டீர்கள்.
ஏனெனில், நீங்கள் உங்கள் சொந்த பெலத்திலும்,
உங்கள் அநேக போர் வீரர்களிலும் நம்பிக்கையாயிருந்தீர்கள்.
அதனால் உங்கள் மக்களுக்கு எதிராக யுத்தம் எழும்பும், ஓசி 13:162இராஜா 18:9-10ஆப 1:102இராஜா 17:162இராஜா 18:332இராஜா 19:11-13ஆமோ 3:8ஆமோ 9:5
உங்கள் கோட்டைகளெல்லாம் அழிக்கப்படும்.
யுத்தநாளில் பெத்தார்பேலை சல்மான் அழித்தபோது,
தாய்மார் தங்கள் பிள்ளைகளுடன் தரையில் மோதி அடிக்கப்பட்டதுபோல இதுவும் இருக்கும்.
பெத்தேலே, உனது கொடுமை பெரிதாயிருப்பதனால் ஓசி 10:5ஆமோ 7:9-17ஓசி 10:7ரோம 7:13ஓசி 10:3ஏசா 16:14
உனக்கு இப்படி நடக்கும்.
அந்த நாள் வருகிறபோது,
இஸ்ரயேலின் அரசன் முற்றிலும் அழிக்கப்படுவான்.