சங்கீதங்கள் 62

Psalms 62
சங்கீதம் 62

எதுத்தூன் என்னும் பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.

என் ஆத்துமா இறைவனில் இளைப்பாறுகிறது; புலம் 3:25சங் 62:2ஏசா 40:31சங் 33:20சங் 37:7ஏசா 12:2யாக் 5:7சங் 40:1

என் இரட்சிப்பு அவரால் வருகிறது.

அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் என் கோட்டையுமாய் இருக்கிறார்; சங் 18:22 கொரி 4:8-9சங் 62:6ஏசா 26:4ஏசா 32:2சங் 73:25-26சங் 89:26சங் 27:1

நான் ஒருபோதும் அசைக்கப்படமாட்டேன்.

எவ்வளவு காலத்திற்கு நீங்கள் என்னைத் தாக்குவீர்கள்? எரே 4:14சங் 140:2சங் 82:2யாத் 16:28ஏசா 30:13-14நீதி 1:22சங் 21:11சங் 38:12

நீங்கள் எல்லோரும் என்னைத் தூக்கி எறிந்துவிடுவீர்களா?

நான் சாய்ந்த சுவரைப் போலவும் தள்ளப்பட்ட வேலியைப் போலவும் இருக்கிறேன்.

என்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து என்னைத் தள்ளி வீழ்த்துவதற்கு சங் 55:21சங் 28:3சங் 5:9ரோம 7:22ரோம 1:32வெளி 22:15அப் 4:16-17அப் 4:25-28

அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள்,

அவர்கள் பொய்களில் மகிழ்ச்சி கொள்கிறார்கள்;

அவர்கள் தங்கள் வாய்களினால் ஆசீர்வதிக்கிறார்கள்,

ஆனால் தங்களுடைய இருதயங்களிலோ சபிக்கிறார்கள்.

ஆம், என் ஆத்துமாவே, நீ இறைவனில் மட்டுமே இளைப்பாறு; மீகா 7:7சங் 27:13-14புலம் 3:24-26சங் 42:11சங் 71:5சங் 103:1-2சங் 104:1சங் 104:35

என் நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது.

அவரே என் கன்மலையும் என் இரட்சிப்பும் சங் 112:6சங் 62:2சங் 16:8நீதி 10:30ஏசா 45:17சங் 18:31-32ஓசி 1:7நீதி 12:7

என் கோட்டையுமாயிருக்கிறார்; நான் அசைக்கப்படமாட்டேன்.

என் இரட்சிப்பும் என் கனமும் இறைவனிடத்தில் இருக்கிறது; சங் 3:3ஏசா 26:4சங் 94:22சங் 18:2எரே 3:23சங் 95:1எரே 9:23-24சங் 46:1

இறைவன் என் பலமான கன்மலையும் என் புகலிடமுமாய் இருக்கிறார்.

மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; பிலி 4:6ஏசா 26:4புலம் 2:19சங் 142:21 சாமு 1:15சங் 18:2சங் 42:4சங் 22:4-5

உங்கள் இருதயங்களின் பாரங்களை அவரிடத்தில் இறக்கி வையுங்கள்;

இறைவனே நமது புகலிடம்.

கீழ்க்குடி மனிதர் வெறும் சுவாசமே, சங் 39:5ஏசா 40:15ஏசா 40:17சங் 118:9சங் 39:111 சாமு 18:21-261 சாமு 18:51 சாமு 23:12

உயர்குடி மனிதர் வெறும் பொய்யே;

தராசில் நிறுக்கப்பட்டால் அவர்கள் ஒன்றுமில்லை;

அவர்கள் சுவாசத்திலும் லேசானவர்கள்.

பயமுறுத்தி பறித்தெடுப்பதில் நம்பிக்கை வைக்காதே; 1 தீமோ 6:17சங் 52:7எரே 17:111 தீமோ 6:10உபா 6:10-12ஏசா 61:8யோபு 31:24-25உபா 8:12-14

களவாடிய பொருட்களைக் குறித்துப் பெருமைகொள்ளாதே;

உனது செல்வங்கள் அதிகரித்தாலும்,

உன் இருதயத்தை அவைகளின்மேல் வைக்காதே.

இறைவன் ஒருமுறை பேசினார், வெளி 19:1யோபு 33:14ஏசா 26:4யோபு 40:5சங் 68:34-35யோவா 19:11மத் 28:18மத் 6:13

நான் இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்:

“இறைவனே, வல்லமை உமக்கே உரியது,

ஆண்டவரே, உடன்படிக்கையின் அன்பும் உம்முடையது”; மத் 16:27யோபு 34:112 கொரி 5:10சங் 103:8ரோம 2:6யாத் 34:6-7நீதி 24:12சங் 86:15

நிச்சயமாகவே, “நீர் ஒவ்வொருவருக்கும்

அவனவன் செய்ததற்குத் தக்கதாக பலனளிப்பீர்.”