புல்லாங்குழல்களுடன் பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், 1 யோவா 5:14-15சங் 54:2சங் 19:141 பேது 3:12சங் 55:1-2சங் 64:1சங் 17:1சங் 86:1
என் பெருமூச்சைக் கவனியும்.
உதவிக்காய் கதறும் என் சத்தத்தைக் கேளும், சங் 65:2சங் 3:4ஏசா 33:22சங் 145:1சங் 84:3சங் 24:7-8சங் 74:12சங் 99:1-4
என் அரசனே, என் இறைவனே,
உம்மிடமே நான் வேண்டுகிறேன்.
யெகோவாவே, காலையிலே என் குரலைக் கேளும்; சங் 119:147சங் 88:13சங் 130:6மாற் 1:35சங் 55:17ஏசா 26:9சங் 69:16சங் 22:2
நான் என் வேண்டுதல்களைக் காலையில் உம்முன் வைத்து,
எதிர்பார்ப்புடன் காத்திருப்பேன்.
நீர் கொடுமையானதில் மகிழ்ச்சியடையும் இறைவன் அல்ல; சங் 11:5எபி 12:14மல்கி 2:17சங் 50:21வெளி 21:27சங் 101:7சங் 140:13சங் 92:15
தீயவர் உம்முடன் குடியிருக்க முடியாது.
திமிர் பிடித்தவர்கள் சங் 11:5சங் 1:5ஓசி 9:15நீதி 6:16-19லேவி 20:23மத் 25:41நீதி 1:7நீதி 8:5
உமது சமுகத்தில் நிற்கமுடியாது;
அநியாயம் செய்யும் எல்லோரையும் நீர் வெறுக்கிறீர்.
பொய் சொல்கிறவர்களை நீர் அழிக்கிறீர்; சங் 55:23வெளி 21:8ஏசா 26:21வெளி 22:15ஆதி 34:25-26சங் 4:22 சாமு 16:82 சாமு 20:1
இரத்த வெறியரையும் வஞ்சகமுள்ள மனிதரையும்
யெகோவா அருவருக்கிறார்.
ஆனால் நானோ, உமது மிகுந்த உடன்படிக்கையின் அன்பினாலே சங் 132:7சங் 138:2எபி 4:16எபி 12:28-29சங் 69:13ஏசா 55:7தானி 6:10ரோம 5:20-21
உமது வீட்டிற்கு வந்து,
உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்கி
பயபக்தியுடன் வணங்குவேன்.
யெகோவாவே, என் எதிராளிகளின் நிமித்தம் சங் 27:11சங் 25:4-5நீதி 3:5-6சங் 119:10சங் 86:11சங் 143:8-10நீதி 4:25சங் 119:64
உம்முடைய நீதியில் என்னை வழிநடத்தும்;
உமது வழியை எனக்கு முன்பாக நேராக்கும்.
அவர்களுடைய வாயின் வார்த்தை ஒன்றைகூட நம்பமுடியாது; எரே 9:3-6ரோம 3:13சங் 62:4மீகா 6:12நீதி 29:5லூக் 11:44சங் 51:6சங் 52:2
அவர்களுடைய இருதயம் அழிவினால் நிரம்பியிருக்கிறது;
அவர்களின் தொண்டையோ திறந்திருக்கும் சவக்குழி;
அவர்கள் தங்கள் நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள்.
இறைவனே, அவர்களைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பளியும்; ஏசா 63:102 சாமு 17:14சங் 140:9-101 கொரி 3:192 சாமு 15:312 சாமு 17:23சங் 31:18சங் 71:13
அவர்களுடைய சதித்திட்டங்களினாலேயே அவர்கள் விழுந்துபோகட்டும்.
அவர்களுடைய அநேக பாவங்களின் நிமித்தம், அவர்களைத் துரத்திவிடும்;
ஏனெனில், அவர்கள் உமக்கு விரோதமாகக் கலகம் செய்திருக்கிறார்கள்.
ஆனால் உம்மிடத்தில் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்ச்சியடையட்டும்; ரோம 8:28வெளி 19:1-7சங் 68:3சங் 40:161 கொரி 2:9யாக் 1:12வெளி 18:20யாக் 2:5
அவர்கள் சந்தோஷத்தினால் என்றென்றும் பாடட்டும்;
உமது பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் களிப்படையும்படி,
அவர்களை உமது பாதுகாப்பினால் மூடிக்கொள்ளும்.
யெகோவாவே, நீர் நிச்சயமாகவே நீதிமான்களை ஆசீர்வதிக்கிறவர்; சங் 84:11சங் 32:10சங் 115:13சங் 1:1-3சங் 112:1சங் 32:7சங் 29:11சங் 3:3
ஒரு கேடயத்தைப் போல, உமது தயவினால் நீர் அவர்களைச் சூழ்ந்துகொள்ளுவீர்.