ஏசாயா 40

Isaiah 40

இறைவனின் மக்களுக்கு ஆறுதல்

என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள், 2 கொரி 1:4ஏசா 51:12ஏசா 51:3செப்ப 3:14-171 தெச 4:18எரே 31:10-14சகரி 1:13ஏசா 49:13-16

என உங்கள் இறைவன் சொல்கிறார்.

எருசலேமுடன் தயவாகப் பேசுங்கள், சகரி 9:12ஏசா 61:7ஓசி 2:14எரே 33:8-9வெளி 18:6ஏசா 43:25ஏசா 44:22எரே 16:18

அவளிடம், “அவளது கடும் உழைப்பு முடிவடைந்தது;

அவளுடைய பாவத்திற்கு நிவாரணம் கொடுத்து முடிந்துவிட்டது;

அவள் தனது எல்லா பாவங்களுக்காகவும்

இரட்டிப்பான தண்டனையை யெகோவாவின் கரங்களிலிருந்து

அனுபவித்து விட்டாள்” என்று அவளுக்குப் பிரசித்தப்படுத்துங்கள்.

ஒருவரின் குரல் கூப்பிடுகிறது: மல்கி 3:1மாற் 1:2-5யோவா 1:23மத் 3:1-3லூக் 1:16-17லூக் 1:76-77மல்கி 4:5-6ஏசா 57:14

“பாலைவனத்தில் யெகோவாவுக்கு

வழியை ஆயத்தப்படுத்துங்கள்;

வனாந்திரத்திலே நமது இறைவனுக்கு

பிரதான வீதியொன்றை நேராய் அமையுங்கள்.

ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும், லூக் 3:5எசேக் 21:26லூக் 18:14ஏசா 42:15-16ஏசா 45:2எசேக் 17:24யோபு 40:11-13ஏசா 2:12-15

ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும்,

மேடுபள்ளம் நிறைந்த நிலம் சமமாக்கப்படும்,

கரடுமுரடான இடங்கள் சீராக்கப்படும்.

யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்படும்; ஆப 2:14ஏசா 52:10யோவே 2:282 கொரி 4:6லூக் 3:6ஏசா 60:1அப் 2:17ஏசா 11:9

மனுக்குலம் யாவும் ஒன்றாய் அதைக் காணும்.

யெகோவாவின் வாயே இதைப் பேசியிருக்கிறது.”

“உரத்துச் சொல்” என்கிறது ஒரு குரல். 1 பேது 1:24-25சங் 103:15-16யாக் 1:10-11சங் 102:11யோபு 14:2ஏசா 58:1சங் 90:5-6சங் 92:7

அதற்கு, “நான் எதைச் சொல்லுவேன்?” என்றேன்.

“எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள்,

அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன.

யெகோவாவின் சுவாசம் அவைகளின்மேல் வீசுகிறபோது புல் வாடுகிறது, யோபு 41:21

பூக்களும் உதிர்கின்றன;

நிச்சயமாக மக்களும் புல்லாகவே இருக்கிறார்கள்.

புல் வாடுகிறது, பூக்கள் உதிர்கின்றன, மாற் 13:31மத் 24:351 பேது 1:25சங் 119:89-91மத் 5:18ஏசா 55:10-11ஏசா 46:10-11யோவா 10:35

ஆனால், நமது இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்து நிற்கிறது.”

சீயோனுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே, ஏசா 52:7-8எபே 6:19ஏசா 12:2ஏசா 25:9ஏசா 61:1அப் 2:141 யோவா 5:20-211 பேது 3:14

நீ உயர்ந்த மலையொன்றில் ஏறு.

எருசலேமுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே,

நீ குரலை எழுப்பிக் கூக்குரலிடு.

பயப்படாதே, குரலை எழுப்பு;

“இதோ உங்கள் இறைவன்!”

என்று யூதாவின் பட்டணங்களுக்குச் சொல்.

இதோ, ஆண்டவராகிய யெகோவா வல்லமையோடு வருகிறார்; வெளி 22:12ஏசா 62:11வெளி 17:14மத் 28:18ஏசா 49:4ஏசா 9:6-7பிலி 2:10-11யோவா 12:15

அவருடைய புயமே அவருக்காக ஆளுகை செய்யும்.

அவர் அளிக்கும் வெகுமதியும் அவருடன் இருக்கிறது,

அவர் தரும் பிரதிபலனும் அவருடனே வருகிறது.

அவர் மேய்ப்பனைப்போல் தன் மந்தையை மேய்க்கிறார்: வெளி 7:17சங் 23:1-6மீகா 5:4எசேக் 34:23யோவா 10:11-161 பேது 2:25எசேக் 34:12-14ஏசா 49:9-10

அவர் செம்மறியாட்டுக் குட்டிகளை ஒன்றுசேர்த்து கைகளில் ஏந்தி,

மார்போடு அணைத்துக்கொண்டு செல்கிறார்;

அவர் குட்டிகளுடன் இருக்கும் செம்மறியாடுகளைக் கனிவாக நடத்துகிறார்.

கடல் நீரைத் தமது உள்ளங்கையால் அளந்து, நீதி 30:4எபி 1:10-12யோபு 38:4-11சங் 102:25-26ஏசா 48:13நீதி 8:26-28யோபு 11:7-9யோபு 28:25

வானங்களை சாண் அளவாய்க் கணித்தவர் யார்?

பூமியின் புழுதியை மரக்காலால் அளந்தவன் யார்?

அல்லது மலைகளை நிறைகோலாலும்,

குன்றுகளையும் தராசாலும் நிறுத்தவர் யார்?

யெகோவாவின் மனதை புரிந்துகொண்டு, 1 கொரி 2:16ரோம 11:34யோபு 21:22யோபு 36:22-23லூக் 10:22எபே 1:11யோவா 1:13

அவரது ஆலோசகனாக இருந்து அவருக்கு அறிவுறுத்தியவன் யார்?

யெகோவா தமது அறிவு தெளிவுபெற யாரிடம் ஆலோசனை கேட்டார்? யோபு 21:22கொலோ 2:31 கொரி 12:4-6யாக் 1:17

சரியான வழியை அவருக்குக் போதித்தவன் யார்?

அவருக்கு அறிவைக் போதித்து,

விளக்கத்தின் பாதையைக் காட்டியவன் யார்?

உண்மையாகவே நாடுகள் வாளியிலிருந்து விழும் ஏசா 40:22எரே 10:10ஏசா 29:5யோபு 34:14-15ஏசா 11:11ஆதி 10:5ஏசா 41:5தானி 11:18

தண்ணீர்த் துளியைப் போலிருக்கின்றன;

அவர்கள் தராசில் படிந்துள்ள தூசியைப்போல் கருதப்படுகிறார்கள்;

அவர் தீவுகளை தூசியைப்போல நிறுக்கிறார்.

லெபனோன் பலிபீட நெருப்புக்குப் போதாது. மீகா 6:6-7சங் 40:6சங் 50:9-12எபி 10:5-10

அங்குள்ள மிருகங்கள் தகன பலிக்கும் போதாது.

எல்லா நாடுகளும் அவர் முன்னிலையில் ஒன்றுமில்லாதவர்கள்போல் இருக்கின்றனர். சங் 62:9தானி 4:34-35ஏசா 29:72 கொரி 12:11யோபு 25:6

அவர்கள் அவரால் வெறுமையிலும் வெறுமையானவர்களாகவும்,

பெருமதியற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

இப்படியிருக்க, நீங்கள் இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? ஏசா 46:51 சாமு 2:2ஏசா 40:25யாத் 15:11அப் 17:29எரே 10:6சங் 89:6யாத் 8:10

எந்த சாயலுக்கு அவரை ஒப்பிடுவீர்கள்?

விக்கிரகத்தை ஒரு கைவினைஞன் வார்க்கிறான், எரே 10:9யாத் 32:2-4ஆப 2:18-19ஏசா 46:6-7நியாயாதி 17:4சங் 115:4-8ஓசி 8:6ஏசா 2:20

கொல்லன் அதைத் தங்கத்தால் மூடி,

அதற்காக வெள்ளி மாலைகளைச் செய்கிறான்.

அத்தகைய காணிக்கையைச் செலுத்தமுடியாத ஏழையோ, ஏசா 41:7ஏசா 46:7எரே 10:3-4ஏசா 2:8-9தானி 5:231 சாமு 5:3-4ஏசா 44:13-19

உழுத்துப்போகாத மரத்தைத் தெரிவு செய்கிறான்.

அதைச் செதுக்கி, சரிந்து வீழ்ந்து போகாத விக்கிரகத்தைச் செய்யும்படி

திறமைவாய்ந்த ஒரு சிற்பியைத் தேடுகிறான்.

நீங்கள் அறியவில்லையோ? அப் 14:17ஏசா 46:8ஏசா 48:13சங் 50:6ரோம 1:19-21சங் 115:8ரோம 1:28ஏசா 27:11

நீங்கள் கேள்விப்படவில்லையோ?

ஆதியில் இருந்து உங்களுக்குச் சொல்லப்படவில்லையோ?

பூமி படைக்கப்பட்ட காலத்திலிருந்தே நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையோ?

அவர் பூமியின் வட்டத்தின்மேல் தன் அரியணையில் வீற்றிருக்கிறார், நீதி 8:27ஏசா 42:5ஏசா 66:1சங் 104:2எரே 10:12யோபு 22:14எபி 1:10-12ஏசா 40:15

அதன் மக்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள்.

அவர் வானங்களை மூடுதிரையைப்போல் விரித்து,

அவைகளை ஒரு குடியிருக்கும் கூடாரத்தைப்போல் அமைத்திருக்கிறார்.

அவர் இளவரசர்களைத் தாழ்வு நிலைக்குத் தள்ளுகிறார்; யோபு 12:21சங் 107:40ஏசா 34:12எரே 25:18-27ஏசா 19:13-14ஏசா 23:9ஏசா 24:21-22யோபு 34:19-20

உலக ஆளுநர்களையும் பெறுமதியற்றவர்களாக்குகிறார்.

அவர்கள் நாட்டப்பட்ட உடனேயே, ஏசா 41:16ஆகா 1:9ஏசா 17:13எரே 23:191 இராஜா 21:21-222இராஜா 10:112 சாமு 22:16ஓசி 13:15

அவர்கள் விதைக்கப்பட்ட உடனேயே,

அவர்கள் நிலத்தில் வேரூன்றிய உடனேயே இறைவன் அவர்கள்மேல் ஊத,

அவர்கள் வாடிப்போகிறார்கள்.

சுழல் காற்றும் பதர்களைப்போல் அவர்களை வாரிக்கொண்டுபோகிறது.

“நீங்கள் என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? ஏசா 40:18உபா 4:15-18உபா 4:33உபா 5:8

அல்லது எனக்கு நிகரானவர் யார்?” என்று பரிசுத்தர் கேட்கிறார்.

கண்களை உயர்த்தி மேலே நோக்குங்கள்: கொலோ 1:16-17எரே 32:17-19ஏசா 48:13ஏசா 51:6ஏசா 44:24சங் 147:4-5சங் 89:11-13உபா 4:19

இவைகளையெல்லாம் படைத்தவர் யார்?

நட்சத்திர சேனையை ஒவ்வொன்றாக வெளிக்கொணர்ந்து,

அவை ஒவ்வொன்றையும் பேரிட்டு அழைக்கும் அவரே.

அவருடைய மிக வல்லமையாலும்,

மகா பலத்தினாலும் அவைகளில் ஒன்றுகூட தவறுவதில்லை.

“என் நிலைமை யெகோவாவுக்கு மறைவாயிருக்கிறது; ஏசா 49:4லூக் 18:7-8ஏசா 49:14யோபு 27:2

இறைவன் எனக்குரிய நீதியைக் கண்டும் காணாதிருக்கிறார்”

என்று யாக்கோபே நீ ஏன் சொல்கிறாய்?

இஸ்ரயேலே, ஏன் முறையிடுகிறாய்?

நீங்கள் அறியவில்லையோ? ரோம 11:33-34சங் 147:51 தீமோ 1:17ஏசா 55:8-9பிலி 1:6ஏசா 40:211 கொரி 2:16ஆதி 21:33

நீங்கள் கேள்விப்படவில்லையோ?

யெகோவாவே நித்திய இறைவன்,

பூமியின் எல்லைகளைப் படைத்தவரும் அவரே.

அவர் களைத்துப் போவதுமில்லை, சோர்ந்துபோவதுமில்லை.

அவரின் ஞானத்தை யாராலும் அளவிடமுடியாது.

அவர் களைப்புற்றோருக்கு பெலன் கொடுக்கிறார்; ஏசா 41:10பிலி 4:132 கொரி 12:9-10கொலோ 1:11சகரி 10:12எரே 31:25சங் 29:11ஏசா 50:4

பெலவீனருக்கு வலிமையைக் கூட்டுகிறார்.

இளைஞர் களைத்து சோர்ந்துபோவார்கள், ஆமோ 2:14சங் 34:10சங் 33:16பிரச 9:11ஏசா 13:18ஏசா 9:17எரே 6:11சங் 39:5

வாலிபர் இடறி விழுவார்கள்.

ஆனால், யெகோவாவிடம் நம்பிக்கையோடேக் காத்திருப்போர் புலம் 3:25-262 கொரி 4:16சங் 27:13-14சங் 103:52 கொரி 12:9-10எபி 12:1கலா 6:9ரோம 8:25

தங்கள் பெலனைப் புதுப்பித்துக்கொள்வார்கள்.

அவர்கள் கழுகுகளைப்போல் சிறகுகளை விரித்து உயரே பறப்பார்கள்;

அவர்கள் ஓடுவார்கள், சோர்வடையமாட்டார்கள்;

அவர்கள் நடப்பார்கள், களைப்படையமாட்டார்கள்.