மத்தேயு 5

Matthew 5

மலைப்பிரசங்கம்

இயேசு திரளான ஜனங்களைக் கண்டபோது, ஒரு மலைச்சரிவில் ஏறி அங்கே உட்கார்ந்தார். அப்பொழுது அவரது சீடர்கள் அவரருகே வந்தார்கள், மாற் 3:13மத் 15:29யோவா 6:2-3மாற் 4:1மாற் 3:20மத் 4:25லூக் 6:13-16மத் 10:2-4 இயேசு அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அப் 8:35லூக் 6:20-26அப் 10:34மத் 13:35அப் 18:14எபே 6:19நீதி 31:8-9நீதி 8:6

ஆசீர்வதிக்கப்பட்டோர்

அவர் சொன்னதாவது:

“ஆவியில் எளிமையுள்ளோர் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், ஏசா 66:2நீதி 29:23சங் 34:18நீதி 16:19லூக் 18:142 நாளாக 7:14சங் 51:17ஏசா 57:15

பரலோக அரசு அவர்களுக்கு உரியது.

துயரப்படுகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், வெளி 21:42 கொரி 7:9-10ஏசா 61:2-3யோவா 16:20-22சங் 126:5-6ஏசா 57:18லூக் 6:21வெளி 7:14-17

அவர்கள் ஆறுதல் அடைவார்கள்.

சாந்தமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், சங் 37:11ஏசா 29:19யாக் 3:13சங் 149:4கலா 5:23கொலோ 3:12மத் 11:29எண் 12:3

அவர்கள் பூமியை உரிமையாக்கிக்கொள்வார்கள்.

நீதியை நிலைநாட்ட பசி தாகம் உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், யோவா 4:14சங் 107:9யோவா 6:27யோவா 6:48-58சங் 145:19ஏசா 55:1-3யோவா 7:37லூக் 6:21

அவர்கள் நிறைவு பெறுவார்கள்.

இரக்கம் நிறைந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், எபே 4:32மத் 6:14-152 சாமு 22:26மத் 18:33-35சங் 18:25யாக் 2:13யாக் 3:17கொலோ 3:12

அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.

இருதயத்தில் தூய்மை உள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், சங் 24:4சங் 51:10எபி 10:22எபி 12:14எசேக் 36:25-27நீதி 22:11யாக் 4:81 பேது 1:22

அவர்கள் இறைவனைக் காண்பார்கள்.

சமாதானம் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், எபி 12:14யாக் 3:16-18ரோம 12:18கலா 5:22சங் 120:6ரோம 8:14லூக் 6:35ரோம 14:17-19

அவர்கள் இறைவனின் பிள்ளைகள் என அழைக்கப்படுவார்கள்.

நீதியின் நிமித்தம் துன்புறுத்தப்படுகிறவர்கள் யாக் 1:121 பேது 3:13-142 கொரி 4:17மத் 5:3யாக் 1:2-5லூக் 6:222 தீமோ 2:122 கொரி 4:8-12

ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், பரலோக அரசு அவர்களுக்குரியதே.

“என் நிமித்தம் மனிதர் உங்களை இகழும்போதும், துன்புறுத்தும்போதும், உங்களுக்கு எதிராகப் பலவிதமான பொய்களைச் சொல்லி தீமைகளை விளைவிக்கும்போதும், நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருப்பீர்கள். 1 பேது 4:14லூக் 21:17மாற் 13:13மத் 24:9லூக் 6:221 பேது 2:23யோவா 15:21ஏசா 66:5 மகிழ்ந்து களிகூருங்கள், பரலோகத்தில் உங்கள் வெகுமதி மிகப்பெரிதாய் இருக்கும். ஏனெனில், இதைப்போலவே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினரையும் அவர்கள் துன்புறுத்தினார்கள். லூக் 6:23யாக் 1:2கொலோ 3:241 பேது 4:13கொலோ 1:24ரோம 5:3ரூத் 2:12சங் 58:11

உப்பும் ஒளியும்

“நீங்கள் பூமியிலுள்ளோருக்கு உப்பாக இருக்கிறீர்கள். ஆனால் உப்பு அதன் உவர்ப்புத் தன்மையை இழந்துபோனால், மீண்டும் அதை எப்படி உவர்ப்பு உடையதாக்க முடியும்? அது வேறொன்றுக்கும் பயன்படாது, வெளியே வீசப்பட்டு மனிதரால் மிதிக்கப்படும். கொலோ 4:6லூக் 14:34-35மாற் 9:49-50லேவி 2:13எபி 6:4-62 பேது 2:20-21

“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள். ஒரு குன்றின்மேல் உள்ள பட்டணம் மறைவாயிருக்காது. பிலி 2:15யோவா 8:12எபே 5:8-141 தெச 5:5நீதி 4:18யோவா 12:36ரோம 2:19-202 கொரி 6:14 மக்கள் விளக்கைக் கொளுத்தி அதை ஒரு பாத்திரத்தினால் மூடி வைக்கமாட்டார்களே. அவர்கள் அதை விளக்குத்தண்டின் மேல் உயர்த்தி வைப்பார்கள், அப்பொழுது அது வீட்டிலுள்ள எல்லோருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும். லூக் 11:33மாற் 4:21லூக் 8:16எண் 8:2யாத் 25:37 அதைப் போலவே, உங்கள் வெளிச்சம் மனிதர் முன் பிரகாசிக்கட்டும், அப்பொழுது அவர்கள் உங்கள் நல்ல செயல்களைக் கண்டு, பரலோகத்திலுள்ள உங்கள் பிதாவை மகிமைப்படுத்துவார்கள். 1 பேது 2:12தீத் 2:7யோவா 15:81 யோவா 1:5-7பிலி 2:15-16எபே 5:8ஏசா 60:1-31 பேது 3:16

மோசேயின் சட்டம் நிறைவேறுதல்

“நான் மோசேயின் சட்டத்தையும், இறைவாக்குகளையும் அழிக்க வந்தேன் என நினைக்கவேண்டாம்; நான் அவற்றை அழிக்க அல்ல நிறைவேற்றவே வந்தேன். ரோம 10:4லூக் 16:17கலா 4:4-5ரோம 3:31ரோம 8:4ஏசா 42:21கலா 3:17-24மத் 7:12 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், வானமும் பூமியும் அழிந்துபோனாலும், மோசேயின் சட்டத்தில் உள்ள ஒவ்வொன்றும் நிறைவேறும் வரைக்கும், அதில் உள்ள மிகச்சிறிய எழுத்தோ, எழுத்தின் சிறிய புள்ளியோ அழிந்துபோகாது. லூக் 16:17ஏசா 40:81 பேது 1:25சங் 119:89-90மத் 24:34-35ஏசா 51:6மாற் 13:30வெளி 20:11 இந்தக் கட்டளைகளில் சிறிதான ஒன்றையாகிலும் மீறி, அப்படிச் செய்யும்படி மற்றவர்களுக்கு போதிக்கிறவன், பரலோக அரசில் சிறியவன் எனக் கருதப்படுவான்; ஆனால் இந்தக் கட்டளைகளை தானும் கடைப்பிடித்து, மற்றவர்களுக்கும் போதிக்கிறவன் பரலோக அரசில் பெரியவன் எனக் கருதப்படுவான். உபா 12:32யாக் 2:10-11மத் 28:20ரோம 13:8-10மத் 11:111 தீமோ 6:3-4தானி 12:31 தெச 4:1-7 நான் உங்களுக்குச் சொல்கிறேன் உங்களுடைய நீதியானது, பரிசேயர் மற்றும் மோசேயின் சட்ட ஆசிரியர்களின் நீதியைவிட மேலானதாய் இருக்கவேண்டும், இல்லையென்றால் நீங்கள் பரலோக அரசிற்குள் செல்லமாட்டீர்கள். ரோம 10:2-3பிலி 3:9ரோம 9:30-32லூக் 16:14-15மத் 23:2-5யோவா 3:3-5மத் 23:23-282 கொரி 5:17

கொலை செய்யாதே

“கொலை செய்யாதே, கொலை செய்கிறவன் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவான் 1 என்று வெகுகாலத்திற்கு முன்னரே சொல்லப்பட்டிருப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். உபா 5:17யாத் 20:13எண் 35:30-34யாத் 21:12-14உபா 21:7-9எண் 35:16-21ஆதி 9:5-6எண் 35:12 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது தனது சகோதரன் அல்லது சகோதரியுடன் கோபப்பட்டால், அவர்கள் தண்டனைத் தீர்ப்புக்கு உட்படுவார்கள். மேலும், தனது சகோதரனை அல்லது சகோதரியை ‘பயித்தியம்!’ என்று சொல்கிறவர்கள் ஆலோசனைச் சங்கத்திற்குப் பதிற்சொல்ல வேண்டியதாயிருக்கும். ஆனால் யாரையாவது, ‘முட்டாள்!’ என்று சொல்லுகிறவர்கள், நரகத்தின் நெருப்புக்குள்ளாகும் அபாயத்திலிருக்கிறார்கள். 1 யோவா 3:14-151 யோவா 4:20-211 யோவா 2:9எபே 4:26-27எபே 4:31-32யாக் 3:6தீத் 3:2மத் 10:28

“அதனால், நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்தும்போது, உங்கள் சகோதரனுக்கோ அல்லது சகோதரிக்கோ உங்கள்மேல் ஏதாவது மனத்தாங்கல் இருப்பது நினைவுக்கு வந்தால், மாற் 11:25லேவி 6:2-6மத் 5:24மத் 23:19மத் 8:4லூக் 19:81 சாமு 15:22ஓசி 6:6 பலிபீடத்தின் முன்னே உங்கள் காணிக்கையை வைத்துவிட்டு, முதலில் போய் உங்கள் சகோதரனுடன் அல்லது சகோதரியுடன் ஒப்புரவாகுங்கள்; அதற்குப் பின்பு வந்து உங்களது காணிக்கையைச் செலுத்துங்கள். யாக் 5:16ரோம 12:17-18மத் 18:15-171 பேது 3:7-8யோபு 42:8நீதி 25:91 கொரி 6:7-81 தீமோ 2:8

“உங்களது பகைவர் உங்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோகும்போது. வழியிலேயே அவர்களோடு விரைவாகப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள், இல்லையெனில், அவர்கள் உங்களை நீதிபதியிடம் ஒப்படைக்கக்கூடும், நீதிபதி உங்களை அதிகாரியிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் தள்ளப்படலாம். லூக் 12:58-59நீதி 25:8எபி 3:13ஏசா 55:6-7லூக் 14:31-32எபி 3:7லூக் 13:24-251 இராஜா 22:26-27 உங்களிடத்திலிருக்கும், கடைசி காசையும் செலுத்தித் தீர்க்கும்வரை நீங்கள் வெளியே வரமாட்டீர்கள் என்று நான் உங்களுக்கு உண்மையாய்ச் சொல்லுகிறேன். மத் 18:34லூக் 12:592 தெச 1:9யாக் 2:13லூக் 16:26மத் 25:41மத் 25:46

விபசாரம் செய்யாதே

“ ‘விபசாரம் செய்யாதே’ 2 எனச் சொல்லப்பட்டிருப்பதை, நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். உபா 5:18நீதி 6:32யாத் 20:14லேவி 20:10உபா 22:22-24மத் 5:21 ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், யாராவது ஒருவன் ஒரு பெண்ணைக் காம இச்சையுடன் பார்த்தாலே, அவன் அவளுடன் அப்போதே தன் இருதயத்தில் விபசாரம் செய்தவனாகிறான். 1 யோவா 2:16யாக் 1:14-15நீதி 6:25யாத் 20:172 சாமு 11:2யோபு 31:12 பேது 2:14ஆதி 34:2 உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலில் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது. ரோம 8:13மாற் 9:43-48கொலோ 3:5ரோம 6:61 பேது 4:1-31 கொரி 9:27கலா 5:24லூக் 9:24-25 உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது. மாற் 9:43மத் 5:291 பேது 2:8ரோம 14:20-211 கொரி 8:13லூக் 17:2மத் 18:6-7மத் 13:21

விவாகரத்து

“தனது மனைவியை விவாகரத்து செய்கிறவன், ‘அவளுக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுக்கவேண்டும் 3 என்று சொல்லப்பட்டிருக்கிறது.’ எரே 3:1உபா 24:1-4மத் 19:7மத் 19:3மாற் 10:2-9 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் யாராவது ஒருவன், தன் மனைவி விபசாரம் செய்ததினாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் அவளை விவாகரத்து செய்தால், அவன் அவளை விபசாரத்துக்குள்ளாக்குகிறான். விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்பவனும் விபசாரம் செய்கிறான். ரோம 7:3லூக் 16:181 கொரி 7:10-111 கொரி 7:4மத் 19:8-9மாற் 10:5-12மல்கி 2:14-16மத் 5:28

ஆணையிடுவது

“மேலும், ‘நீங்கள் ஆணையிட்டதை மீற வேண்டாம், கர்த்தருடன் செய்துகொண்ட ஆணைகளை நிறைவேற்றுங்கள் 4 என்று, வெகுகாலத்திற்கு முன்னே முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.’ உபா 23:21லேவி 19:12பிரச 5:4-6உபா 23:23எண் 30:2-16சங் 76:11உபா 5:11யாத் 20:7 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் ஒருபோதும் ஆணையிட வேண்டாம்: பரலோகத்தின்மேல் ஆணையிட வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் அரியணை; யாக் 5:12ஏசா 66:1உபா 23:21-23மத் 23:16-22பிரச 9:2ஏசா 57:15 பூமியின்மேலும் ஆணையிட வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் பாதபீடம்; எருசலேமைக்கொண்டும் ஆணையிட வேண்டாம், ஏனெனில், அது பேரரசரின் பட்டணம். சங் 48:22 நாளாக 6:6மல்கி 1:14வெளி 21:10சங் 99:5வெளி 21:2சங் 87:2 உங்கள் தலையில் கை வைத்தும் ஆணையிட வேண்டாம், ஏனெனில் உங்களால் ஒரு தலைமுடியையாகிலும் வெண்மையாக்கவோ, கருமையாக்கவோ முடியாதே. லூக் 12:25மத் 6:27மத் 23:16-21 ஆகவே உங்களிடமிருந்து வரும் பதில், ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ என்றும், ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ என்றும் இருக்கட்டும்; இதற்கு மேலாக வருவதெல்லாம் தீயவனிடமிருந்தே வருகிறது. யாக் 5:12கொலோ 4:6கொலோ 3:92 கொரி 1:17-20யோவா 8:44எபே 4:252 தெச 3:3மத் 13:19

பழிவாங்குதல்

“கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் 5 என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். லேவி 24:19-20உபா 19:21யாத் 21:22-27உபா 19:19மத் 5:27 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் உங்களை எதிர்க்கும் தீய நபருடன் போராட வேண்டாம். யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். 1 தெச 5:151 பேது 3:9ரோம 12:17-19நீதி 20:22லூக் 6:29-301 பேது 2:20-23லேவி 19:18புலம் 3:30 யாராவது உங்களுடன் வழக்காடி, உங்கள் ஆடையை எடுத்துக்கொள்ளுகிறவர்களுக்கு, உங்கள் மேலுடையையும் கொடுத்துவிடுங்கள். லூக் 6:291 கொரி 6:7 யாராவது உங்களை ஒரு கிலோமீட்டர் தூரம் வரும்படி வற்புறுத்தினால், அந்த நபரோடு இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்லுங்கள். லூக் 23:26மத் 27:32மாற் 15:21 உங்களிடத்தில் கேட்கிறவருக்குக் கொடுங்கள், உங்களிடம் கடன்வாங்க விரும்புகிறவரிடமிருந்து விலகிச்செல்ல வேண்டாம். நீதி 19:17எபி 13:16லூக் 6:30-361 தீமோ 6:17-19சங் 112:5-9சங் 37:211 யோவா 3:16-18உபா 15:7-14

பகைவரிடத்தில் அன்பு காட்டுதல்

“உங்கள் அயலானிடம் அன்பாயிருங்கள், உங்கள் பகைவனுக்குப் பகையைக் காட்டுங்கள் 6 என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். லேவி 19:18சங் 139:21-22கலா 5:13-14மத் 19:19ரோம 13:8-10உபா 23:6யாக் 2:8மாற் 12:31-34 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள். உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக மன்றாடுங்கள். 7 ரோம 12:141 பேது 3:9லூக் 6:27-28ரோம 12:20-21நீதி 25:21-22லூக் 23:341 பேது 2:23அப் 7:60 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கும் உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகளாய் இருப்பீர்கள். அவர் தீயவர்மேலும், நல்லவர்மேலும் தமது சூரியனை உதிக்கச் செய்கிறார். நீதியுள்ளவர்மேலும், அநீதியுள்ளவர்மேலும் மழையை அனுப்புகிறார். சங் 145:9லூக் 6:35அப் 14:17யோபு 25:3எபே 5:1மத் 5:9யோவா 13:351 யோவா 3:9 உங்களிடம் அன்பாய் இருக்கிறவர்களிடத்தில் நீங்களும் அன்பாய் இருந்தால், நீங்கள் பெறும் வெகுமதி என்ன? வரி வசூலிப்பவரும்கூட அப்படிச் செய்வதில்லையா? லூக் 6:32-351 பேது 2:20-23மத் 11:19மத் 9:10-11லூக் 15:1லூக் 18:13மத் 18:17மத் 6:1 நீங்கள் உங்கள் சொந்தக்காரர்களை மட்டும் வாழ்த்துவீர்களானால் நீங்கள் மற்றவர்களைப் பார்க்கிலும் மேலாகச் செய்வது என்ன? இறைவனை அறியாதவர்கூட அப்படிச் செய்வதில்லையா? லூக் 6:32மத் 5:201 பேது 2:20லூக் 10:4-5மத் 10:12 உங்கள் பரலோகப் பிதா நிறைவுடையவராய் இருக்கிறதுபோல, நீங்களும் நிறைவுடையவர்களாய் இருங்கள். 1 பேது 1:15-16யாக் 1:4லேவி 19:2உபா 18:13லூக் 6:36எபே 5:1-21 யோவா 3:3கொலோ 1:28