ஆகவே நீங்கள் இறைவனுடைய அன்பான பிள்ளைகளாய் இருப்பதனால், இறைவனைப்போல் நடவுங்கள். 1 யோவா 4:111 பேது 1:15-16எபே 4:32மத் 5:48லூக் 6:35-36கொலோ 3:12லேவி 11:451 யோவா 3:1-2 கிறிஸ்து நம்மில் அன்பாயிருந்ததினால், இறைவனுக்கு நறுமணமுள்ள காணிக்கையாயும், பலியாயும் நமக்காகத் தம்மைக் கொடுத்தார். அதுபோலவே நீங்களும் அன்புள்ள வாழ்க்கையை வாழுங்கள். யோவா 13:34கலா 2:20கொலோ 3:142 கொரி 2:151 கொரி 16:14மத் 20:28தீத் 2:141 பேது 4:8
உங்கள் மத்தியில் விபசாரம், பாலியல் ஒழுக்கக்கேடு, பேராசை ஆகிய எந்தவொரு அசுத்தமும் இருக்கக்கூடாது. இறைவனுடைய பரிசுத்த மக்களுக்கு இவை தகுதியற்றதானபடியால், இவற்றைப்பற்றினப் பேச்சே உங்களுக்குள் அடிபடக்கூடாது. கொலோ 3:5எபே 5:5கலா 5:19-211 கொரி 6:181 தெச 4:31 தெச 4:71 கொரி 6:13எபே 5:12 அவ்வாறே வெட்கமான செயலும், மூடத்தனமான பேச்சுகளும், கீழ்த்தரமான பரியாசங்களும் உங்களுக்கு ஏற்றதல்ல. இறைவனுக்கு நன்றி செலுத்துவதே உங்களுக்குத் தகுதியானது. கொலோ 3:8எபே 4:291 தெச 5:18நீதி 15:2யாக் 3:4-8மத் 12:34-37பிரச 10:13கொலோ 3:15-17 ஒழுக்கக்கேடாய் நடக்கிறவனோ, தூய்மையற்றவனோ, இறைவன் அல்லாதவைகளை வணங்குகிறவனுக்கு ஒப்பான பேராசைக்காரனோ, கிறிஸ்துவுக்கும் இறைவனுக்கும் உரிய அரசில் எவ்வித உரிமைப்பங்கும் பெறுவதில்லை. இதை நிச்சயமாய் அறிந்துகொள்ளுங்கள். கலா 5:211 கொரி 6:9-10கொலோ 3:5எபே 5:3வெளி 22:15வெளி 21:8கலா 5:19எபி 13:4 வீணான வார்த்தைகளினால் ஒருவரும் உங்களை ஏமாற்ற இடமளிக்காதீர்கள். இப்படிப்பட்டவற்றின் நிமித்தமே இறைவனுடைய கோபம், அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள்மேல் வருகிறது, ரோம 1:18மத் 24:4கொலோ 2:81 யோவா 4:12 தெச 2:10-12கொலோ 3:6கலா 6:7-8மத் 24:24 எனவே இப்படிப்பட்டவர்களோடு பங்காளர்களாய் இருக்கவேண்டாம். வெளி 18:41 தீமோ 5:22எபே 5:11எண் 16:26நீதி 1:10-17சங் 50:18நீதி 13:20நீதி 9:6
ஏனெனில் ஒருகாலத்தில் நீங்கள் இருளாய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ, கர்த்தரில் வெளிச்சமாய் இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழுங்கள். யோவா 8:121 யோவா 1:7யோவா 12:46அப் 26:18கொலோ 1:131 பேது 2:9-11ஏசா 42:6-7எபே 4:18 வெளிச்சத்தின் கனியோ, எல்லா நன்மைகளையும், நீதியையும், உண்மையையும் கொண்டிருக்கிறது. கலா 5:22-233 யோவா 1:111 யோவா 3:9-10எபே 6:14ரோம 15:141 தீமோ 6:11பிலி 1:111 பேது 2:24-25 எனவே கர்த்தருக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடியது எது என்று அறிந்துகொள்ளுங்கள். ரோம 12:1-2எபி 12:28சங் 19:141 பேது 2:51 பேது 2:201 தெச 5:21நீதி 21:31 தீமோ 2:3 இருளுக்குரிய பயனற்ற செயல்களில் பங்காளர்களாய் இருக்கவேண்டாம். அவைகளை வெளியரங்கமாக்குங்கள். ரோம 13:121 தீமோ 5:202 தெச 3:62 யோவா 1:10-11ரோம 16:172 தெச 3:14சங் 1:1-2வெளி 18:4 ஏனெனில், கீழ்ப்படியாதவர்கள் இரகசியமாக செய்கின்ற காரியங்களைக் குறித்துப் பேசுவதுகூட வெட்கத்துக்குரியதாய் இருக்கிறது. எபே 5:3ரோம 2:16பிரச 12:14எரே 23:242 சாமு 12:121 பேது 4:3நீதி 9:17வெளி 20:12 எல்லாக் காரியங்களும் வெளிச்சத்தினால் வெளிப்படுத்தப்படும்போது, மறைந்திருந்தவைகள் தெரியவருகின்றன. ஏனெனில், வெளிச்சமே எல்லாவற்றையும் தெளிவாய் வெளிப்படுத்துகிறது. யோவா 3:20-211 கொரி 4:5ஓசி 2:10ஓசி 7:1மீகா 7:9புலம் 2:14எபி 1:13 அதனால்தான் இப்படி சொல்லப்பட்டுள்ளது: ஏசா 60:1ரோம 13:11-12ஏசா 26:191 தெச 5:6ஏசா 52:12 கொரி 4:6யோவா 5:25-29கொலோ 3:1
“நித்திரை செய்பவனே விழித்தெழு,
இறந்தவர்களை விட்டு உயிர்த்தெழு,
கிறிஸ்து உன்மேல் பிரகாசிப்பார்.”
எனவே நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதைக்குறித்து கவனமாயிருங்கள். ஞானமற்றவர்களைப்போல் வாழவேண்டாம், ஞானமுள்ளவர்களாய் வாழுங்கள். கொலோ 4:5யாக் 3:13பிலி 1:271 கொரி 14:20நீதி 14:81 தீமோ 6:91 பேது 1:22மத் 10:16 நாட்கள் தீயதாய் இருப்பதனால், கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். கொலோ 4:5ஆமோ 5:13யோவா 12:35பிரச 12:1எபே 6:13கலா 6:10ரோம 13:11பிரச 9:10 மூடத்தனம் உள்ளவர்களாய் இருக்கவேண்டாம். கர்த்தரின் சித்தம் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள். ரோம 12:21 தெச 5:18கொலோ 1:9எபே 5:151 பேது 4:2எரே 4:221 தெச 4:1-3கொலோ 4:5 மதுபானம் குடித்து வெறிகொள்ளவேண்டாம். அது சீர்கேட்டிற்கே வழிநடத்தும். மாறாக பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, லூக் 1:15நீதி 20:1ரோம 13:13கலா 5:21-25அப் 11:24ஏசா 5:221 கொரி 5:11லூக் 11:13 சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவரோடொருவர் பேசி, உங்கள் உள்ளத்திலே இசைபாடி கர்த்தரைப் போற்றுங்கள். கொலோ 3:161 கொரி 14:26சங் 95:2அப் 16:25சங் 147:7யாக் 5:13சங் 105:2-3யோவா 4:23-24 எப்பொழுதும், எல்லாவற்றிற்காகவும் நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில், பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். கொலோ 3:171 தெச 5:18எபி 13:15பிலி 4:6எபே 5:42 தெச 1:3சங் 34:1ஏசா 63:7
கிறிஸ்தவ குடும்பத்திற்கான அறிவுரைகள்
கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் பயபக்தியின் நிமித்தம், ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள். பிலி 2:3எபே 5:24எபே 5:22எபி 13:171 பேது 5:51 பேது 2:171 தீமோ 3:4கலா 5:13
மனைவிகளே, நீங்கள் கர்த்தருக்குப் பணிந்து நடப்பதுபோல, உங்கள் கணவருக்கு பணிந்து நடவுங்கள். கொலோ 3:181 பேது 3:1-6தீத் 2:5ஆதி 3:16எபே 5:22எஸ்த 1:201 தீமோ 2:11-12எஸ்த 1:16-18 ஏனெனில் கிறிஸ்து தமது உடலாகிய திருச்சபையின் தலைவராய் இருப்பதுபோல, கணவன் தனது மனைவியின் தலைவனாய் இருக்கிறான். கிறிஸ்துவே தமது திருச்சபையின் இரட்சகராக இருக்கிறார். 1 கொரி 11:3-10கொலோ 1:18எபே 1:22-23எபே 5:25-26எபே 4:151 தெச 1:10வெளி 5:91 கொரி 6:13 அப்படியே திருச்சபையானது கிறிஸ்துவுக்குப் பணிந்து நடப்பதுபோல, மனைவிகளும் தங்கள் கணவர்களுக்கு எல்லாவற்றிலும் பணிந்திருக்கவேண்டும். எபே 5:33கொலோ 3:20தீத் 2:7தீத் 2:9கொலோ 3:22யாத் 23:13யாத் 29:35
கணவர்களே, கிறிஸ்து திருச்சபையில் அன்புகூர்ந்து, அதற்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தது போலவே, நீங்களும் மனைவியிடம் அன்பாய் இருங்கள். 1 பேது 3:7கொலோ 3:19எபே 5:28ஆதி 2:24எபே 5:33எபே 5:2கலா 1:4வெளி 5:9 கிறிஸ்து வார்த்தையின் மூலம் தண்ணீரினால் திருச்சபையைச் சுத்திகரித்து பரிசுத்தமாக்கும்படியும், எபி 10:22யோவா 15:3எசேக் 36:25யோவா 3:5யோவா 17:17-191 கொரி 6:11தீத் 3:5-71 பேது 1:22-23 மகிமையுள்ள திருச்சபை எவ்வித மாசும், மறுவும், வேறு எவ்வித குறைபாடும் அற்றதாகவும், பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் தம்முன் நிறுத்திக்கொள்ளும்படியே கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்தார். கொலோ 1:22எபி 9:141 பேது 1:192 கொரி 11:2எபே 1:42 கொரி 4:14உன்னத 4:7யூதா 1:24 இவ்விதமாகவே கணவர்களும் தங்கள் மனைவிகளில், தங்கள் சொந்த உடல்களைப்போல் அன்பு செலுத்தவேண்டும். தன் மனைவியில் அன்பாயிருக்கிறவன் தன்னிலேயே அன்பாயிருக்கிறான். எபே 5:25மத் 19:5ஆதி 2:21-24எபே 5:33எபே 5:31 ஒருவனும் தன் சொந்த உடலை ஒருபோதும் வெறுத்ததில்லை. மாறாக, தனது உடலுக்கு வேண்டியதைக் கொடுத்து அதைப் பராமரிக்கிறான். இதுபோலவே, கிறிஸ்துவும் தமது திருச்சபையைப் பராமரிக்கிறார். எபே 5:31எசேக் 34:14-15பிரச 4:5யோவா 6:50-58நீதி 11:17ஏசா 40:11மத் 23:37எசேக் 34:27 நாமும் கிறிஸ்துவிடைய உடலின் அங்கங்களாய் இருக்கிறோமே. 1 கொரி 6:151 கொரி 12:12-27ரோம 12:5ஆதி 2:23எபே 1:23கொலோ 2:19 இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள் 1 ஆதி 2:24மத் 19:5மாற் 10:7-81 கொரி 6:16 இது ஒரு மிக ஆழ்ந்த இரகசியம். ஆனால் நானோ கிறிஸ்துவையும், திருச்சபையையும் பற்றிப் பேசுகிறேன். 2 கொரி 11:2வெளி 21:2ஏசா 54:5வெளி 19:7-8கொலோ 2:2ஏசா 62:4-51 தீமோ 3:16யோவா 3:29 ஆனால் நீங்கள் ஒவ்வொருவனும், தன்னில் தான் அன்பாயிருப்பது போலவே, தன் மனைவியிலும் அன்பாயிருக்கவேண்டும். ஒவ்வொரு மனைவியும் தன் கணவனை மதித்து நடக்கவேண்டும். 1 பேது 3:2-7எஸ்த 1:20எபே 5:22எபே 5:25கொலோ 3:19எபே 5:28-29எபி 12:91 இராஜா 1:31