1 தீமோத்தேயு 2

1 Timothy 2

வழிபாடுபற்றிய அறிவுரை

எல்லாவற்றையும்விட முதலாவதாக, ஒவ்வொருவருக்காகவும் விண்ணப்பம் செய்யுங்கள்; மன்றாடுங்கள்; பரிந்துபேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். இதையே நான் உங்களிடம் வற்புறுத்திக் கேட்கிறேன். 2 தெச 1:3மத் 6:9-10யாக் 5:16எபே 5:20சங் 67:1-41 தீமோ 2:4தீத் 3:22 தீமோ 2:24 அரசர்களுக்காகவும், அதிகாரத்தில் உள்ள எல்லோருக்காகவும் மன்றாடுங்கள். அப்பொழுதே நாம் இறை பக்தியும், பரிசுத்தமும் உள்ளவர்களாய் சமாதானமும் அமைதியும் உள்ள வாழ்வை வாழலாம். 1 பேது 2:9-13எரே 29:7எஸ்றா 6:10ரோம 13:1-7நீதி 24:211 தெச 4:11எபி 12:14நெகே 1:11 இது நன்மையானதாகவும், நமது இரட்சகராகிய இறைவனுக்குப் பிரியமுமாயிருக்கிறது. எபி 13:161 பேது 2:201 தீமோ 1:1ரோம 14:181 பேது 2:51 தெச 4:1கொலோ 1:10லூக் 1:47 அவர் எல்லா மனிதரும் இரட்சிக்கப்படவேண்டும் என்றும், சத்தியத்தைப் பற்றிய அறிவை அடையவேண்டும் என்றும் இறைவன் விரும்புகிறார். எசேக் 18:322 பேது 3:9எசேக் 18:23தீத் 2:11எசேக் 33:11யோவா 3:15-172 தீமோ 2:25ரோம 10:12-15 ஏனெனில் இறைவன் ஒருவரே. இறைவனுக்கும் மனிதருக்கும் இடையில் இருக்கும் நடுவரும் ஒருவரே. மனிதனாக வந்த கிறிஸ்து இயேசுவே அந்த நடுவர். 1 கொரி 8:6கலா 3:20எபி 9:15எபி 7:25உபா 6:4எபி 12:24யோவா 1:14ஏசா 44:6 இயேசு எல்லா மனிதர்களையும் மீட்கும் பொருளாகத் தன்னையே ஒப்படைத்தார். இதுவே ஏற்றகாலத்தில் கொடுக்கப்பட்ட சாட்சியம். மத் 20:281 பேது 3:181 யோவா 2:1-21 யோவா 4:10கலா 4:4வெளி 1:51 கொரி 1:6எபே 5:2 இந்த சாட்சியத்திற்காகவே நான் அறிவிப்பவனாகவும், அப்போஸ்தலனாகவும், அத்துடன் யூதரல்லாதவருக்கு விசுவாசத்தைக் போதிக்கும் உண்மையான ஒரு ஆசிரியனாகவும் நியமிக்கப்பட்டேன்; நான் பொய்யையல்ல, உண்மையைச் சொல்லுகிறேன். அப் 9:152 தீமோ 1:11ரோம 9:1எபே 3:7-8ரோம 15:16பிரச 12:8-10கலா 1:16கலா 1:20

எனவே எல்லா இடங்களிலும் உள்ள ஆண்கள் கோபம் கொள்ளாதவர்களாயும், வாக்குவாதம் செய்யாதவர்களாயும், பரிசுத்த கைகளை உயர்த்தி மன்றாட வேண்டும் என்று, நான் விரும்புகிறேன். சங் 134:2சங் 63:4எபி 10:22தீத் 3:8யாக் 4:8லூக் 24:501 பேது 3:7ஏசா 1:15 அவ்வாறு, பெண்கள் அடக்கமாய் உடை உடுத்தவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒழுக்கமான, தகுதியுடைய உடைகளையே உடுத்தவேண்டும். தலைமுடி அலங்காரத்தினாலோ, தங்கத்தினாலோ, முத்துக்களினாலோ, விலை உயர்ந்த உடைகளினாலோ தங்களை அலங்கரித்து அழகுபடுத்தாமல், 1 பேது 3:3-5தீத் 2:3-5எரே 4:30சங் 149:4ஏசா 3:162இராஜா 9:30ஏசா 3:18-24எரே 2:32 இறைவனை ஆராதிக்கின்ற பெண்களுக்கேற்றபடி நல்ல செயல்களினால் தங்களை அலங்கரிக்கவேண்டும். 1 பேது 2:121 பேது 3:3-5அப் 9:36நீதி 31:31வெளி 2:192 பேது 1:6-82 பேது 3:11எபே 2:10

ஒரு பெண் அமைதலுடனும் முழுமையான பணிவுடனும் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். 1 கொரி 14:34-35எபே 5:22-241 கொரி 11:3கொலோ 3:181 பேது 3:5-61 பேது 3:1ஆதி 3:16தீத் 2:5 ஒரு பெண் போதிப்பதையோ, ஆணுக்கு மேலாக அதிகாரம் செலுத்துவதையோ, நான் அனுமதிப்பதில்லை. அவள் அமைதியாயிருக்க வேண்டும். 1 கொரி 14:34 ஏனெனில் முதலாவது ஆதாமே உருவாக்கப்பட்டான். அதற்குப் பின்பே, ஏவாள் உருவாக்கப்பட்டாள். 1 கொரி 11:8-9ஆதி 2:18ஆதி 1:27ஆதி 2:22ஆதி 2:7 ஏமாற்றப்பட்டவன் ஆதாம் அல்ல; பெண்ணே ஏமாற்றப்பட்டு, பாவத்திற்கு இடம் கொடுத்தாள். 2 கொரி 11:3ஆதி 3:6ஆதி 3:12-13 ஆனால் பெண்கள் விசுவாசத்திலும், அன்பிலும், பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், பிள்ளைப்பெறுவதினாலே அவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். தீத் 2:121 பேது 4:7ஆதி 3:15-161 தீமோ 1:51 தீமோ 2:9ஏசா 9:6லூக் 2:10-11ஏசா 7:14