தீத்து 3

Titus 3

நன்மைசெய்ய ஆலோசனைகள்

ஆளுகை செய்கிறவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் பணிந்திருக்கும்படி மக்களுக்கு ஞாபகப்படுத்து. அவர்களுக்கு கீழ்ப்படியவும், எல்லா நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாயும், ரோம 13:1-71 பேது 2:13-17பிரச 10:4கலா 6:9-10நீதி 24:21மத் 22:211 தீமோ 5:102 தீமோ 1:6 ஒருவரையும் அவதூறாய் பேசாதவர்களாயும், எல்லோருடனும் சமாதானமாய் வாழ்கிறவர்களாயும், கரிசனை உடையவர்களாயும், எல்லா மனிதருக்கு முன்பாகவும் எப்பொழுதும் தாழ்மையுள்ளவர்களாயும் இருக்கவேண்டுமென்று ஞாபகப்படுத்து. எபே 4:312 தீமோ 2:24-25கொலோ 3:12-13எபே 4:21 தீமோ 3:31 பேது 3:101 பேது 3:81 பேது 2:17-18

ஒருகாலத்தில் நாமும்கூட மூடர்களாயும் கீழ்ப்படியாதவர்களாயும் இருந்தோம். இதனால் ஏமாந்து, பலவித தீய ஆசைகளுக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமைப்பட்டிருந்தோம். தீங்குசெய்யும் எண்ணமுடையவர்களாயும், பொறாமையுடையவர்களாயும், ஒருவரிலொருவர் வெறுக்கப்படுகிறவர்களாயும், ஒருவரையொருவர் வெறுக்கிறவர்களாயும் வாழ்ந்தோம். எபே 2:1-3கொலோ 1:21ரோம 6:17கொலோ 3:71 கொரி 6:9-11ரோம 1:29-311 பேது 1:14ரோம 6:22 ஆனாலும் நமது இரட்சகராகிய இறைவனுடைய தயவும் அன்பும் வெளிப்பட்டபோது, எபே 2:4-10தீத் 2:10-111 தீமோ 4:10ரோம 5:20-21ரோம 2:42 தீமோ 1:10எபி 9:261 தீமோ 2:3 அவர் நம்மை இரட்சித்தது, நாம் செய்த நீதியான செயல்களின் காரணமாக அல்ல, அவருடைய இரக்கத்தின் காரணமாகவே அவர் இரட்சித்தார். மறுபிறப்பின் கழுவப்படுதலின் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரின் புதுவாழ்வின் மூலமாகவுமே அவர் நம்மை இரட்சித்தார். எபே 2:8-92 தீமோ 1:91 கொரி 6:111 பேது 1:31 பேது 3:21ரோம 12:2எபே 5:26எபே 2:4 இறைவன் அந்தப் பரிசுத்த ஆவியானவரை நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நம்மேல் அளவில்லாமல் ஊற்றினார். யோவே 2:28ரோம 5:5அப் 10:45எசேக் 36:25ஏசா 44:3யோவா 1:16யோவா 16:7நீதி 1:23 இதனால் நாம் அவருடைய கிருபையின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட்டு, அவருடைய வாரிசுகளாகிறோம். நித்திய வாழ்வைப் பெறும் எதிர்பார்ப்பையும் அடைவோம். ரோம 8:17ரோம 3:24தீத் 2:111 கொரி 6:11தீத் 1:2யாக் 2:5ரோம 11:6ரோம 5:1-2 இது நம்பத்தகுந்த வாக்கு. ஆகவே, நீ இவற்றை வலியுறுத்திச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுதே இறைவனை சார்ந்திருக்கிறவர்கள், நன்மை செய்வதற்குத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும்படி கவனமுடையவர்களாய் இருப்பார்கள். இந்தக் காரியங்கள் ஒவ்வொருவருக்கும் நலமானதாயும் பயனுள்ளதாயும் இருக்கின்றன. தீத் 3:14சங் 16:2-3தீத் 1:9தீத் 2:14தீத் 3:1ரோம 4:51 பேது 1:211 தீமோ 1:15

ஆனால், மோசேயின் சட்டத்தைப்பற்றிய மூடத்தனமான கருத்து வேறுபாடுகளையும், வம்ச வரலாறுகளையும், வாக்குவாதங்களையும், தர்க்கங்களையும் தவிர்த்துக்கொள்; ஏனெனில் இவை பயனற்றதும், வீணானதுமே. 2 தீமோ 2:141 தீமோ 4:72 தீமோ 2:23தீத் 1:142 தீமோ 2:161 தீமோ 1:3-7யோபு 15:31 கொரி 8:1 பிரிவினையை உண்டு பண்ணுகிறவர்களை ஒருமுறை எச்சரிக்கை செய். பின்பு இரண்டாவது முறையும் எச்சரிக்கை செய். அதற்குப் பின்பு, அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம். ரோம 16:172 யோவா 1:10மத் 18:15-172 தெச 3:142 தெச 3:62 தீமோ 3:5கலா 5:201 கொரி 11:19 அப்படிப்பட்டர்கள் சீர்கெட்டவர்களும், பாவத்தில் வாழ்கிறவர்களும், தன்னைத்தானே தண்டனைக்குள் ஆக்குகிறவர்களுமாய் இருக்கிறார்கள் என்று நீ நிச்சயமாக அறிந்துகொள். எபி 10:26யோவா 3:18லூக் 19:22மத் 25:26-28அப் 13:46அப் 15:241 தீமோ 1:19-202 தீமோ 2:14

கடைசி வாழ்த்து

அர்த்தொமாவையோ அல்லது தீகிக்குவையோ நான் உன்னிடம் அனுப்பியவுடனே, நீ புறப்பட்டு நிக்கொப்போலிக்கு என்னிடம் வர உன்னால் இயன்ற முயற்சியைச் செய். ஏனெனில் குளிர்க்காலத்தை அங்கே கழிக்கவே நான் தீர்மானித்திருக்கிறேன். 2 தீமோ 4:91 கொரி 16:8-92 தீமோ 4:122 தீமோ 4:21அப் 20:41 கொரி 16:6 சட்ட அறிஞரான சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் அவர்களுடைய தேவைகளை ஒரு குறைவுமில்லாமல் பார்த்து அவர்களை அனுப்பிவை. அப் 18:24மத் 22:353 யோவா 1:6-8அப் 28:101 கொரி 16:11அப் 21:5லூக் 10:25லூக் 11:45

நமது மக்களும், அன்றாட அவசிய தேவைகளை பிறருக்குக் கொடுத்து உதவத்தக்கதாக நற்செயல்களைச் செய்யக் கற்றுக்கொள்ளவார்களாக. அவர்கள் ஒரு பயனற்ற வாழ்க்கையை வாழக்கூடாது. கொலோ 1:10தீத் 3:8மத் 7:19பிலி 1:112 பேது 1:8லூக் 13:6-9எபே 4:28யோவா 15:16

என்னுடன் இருக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள். 1 தீமோ 1:52 யோவா 1:1-2கொலோ 4:18எபே 6:23-24கலா 5:6எபி 13:251 கொரி 16:231 தீமோ 1:2

விசுவாசத்திற்குள்ளாக நம்மில் அன்பாய் இருக்கிறவர்களுக்கும் வாழ்த்துதலைச் சொல்.

கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக.