எலிப்பாஸ் பேசுதல்
பின்பு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது: யோபு 2:11யோபு 42:7யோபு 22:1யோபு 4:1யோபு 42:9
“ஞானவான் அர்த்தமற்ற நியாயங்களைச் சொல்லி, யோபு 6:26யோபு 8:2ஓசி 12:1யாக் 3:13யோபு 11:2-3யோபு 13:2
கொண்டல் காற்றினால் தன் வயிற்றை நிரப்புவானோ?
பயனற்ற வார்த்தைகளினாலும், கொலோ 4:6மத் 12:36-371 தீமோ 6:4-5யோபு 13:4-5யோபு 16:2-3யோபு 26:1-3மல்கி 3:13-15
மதிப்பற்றப் பேச்சுக்களினாலும் அவன் வாதாடுவானோ?
ஆனால் நீயோ பயபக்தியை வேரறுக்கிறாய்; ரோம 3:311 நாளாக 10:13-14ஆமோ 6:10கலா 2:21ஓசி 7:14யோபு 27:10யோபு 4:5-6யோபு 5:8
இறைவனுக்கு முன்பாக தியானத்தையும் தடைசெய்கிறாய்.
உன் பாவமே உன் வாயைப் பேசப்பண்ணுகிறது; யாக் 1:26எரே 9:3-5யாக் 3:5-8எரே 9:8லூக் 6:45சங் 50:19-20சங் 52:2-4யோபு 5:13
தந்திரக்காரரின் நாவை நீ பயன்படுத்துகிறாய்.
என் வாயல்ல, உன் வாயே உன்னைக் குற்றவாளியாக்குகிறது; லூக் 19:22யோபு 9:20மத் 12:37யோபு 33:8-12யோபு 34:5-9யோபு 35:2-3யோபு 40:8யோபு 42:3
உன் உதடுகளே உனக்கு விரோதமாய்ச் சாட்சி கூறுகிறது.
“மனிதருக்குள் முதன்முதல் பிறந்தவன் நீயோ? சங் 90:2யோபு 12:12யோபு 38:4-41நீதி 8:22-25ஆதி 4:1யோபு 15:10
மலைகளுக்கு முன்பே நீ உருவாக்கப்பட்டாயோ?
நீ இறைவனுடைய ஆலோசனையைக் கேட்கிறாயோ? ரோம 11:34எரே 23:181 கொரி 2:161 கொரி 2:9-11ஆமோ 3:7உபா 29:29யோவா 15:15யோபு 11:6
ஞானத்தை உனக்கு மட்டுமே உரிமையானதாக்கிக் கொள்கிறாயோ?
நாங்கள் அறியாத எதை நீ அறிந்திருக்கிறாய்? யோபு 13:22 கொரி 11:52 கொரி 10:72 கொரி 11:21-30யோபு 12:3யோபு 26:3-4
நாங்கள் பெற்றிராத எந்த நுண்ணறிவை நீ பெற்றிருக்கிறாய்?
தலைமுடி நரைத்தோரும், முதியோரும் எங்கள் சார்பில் இருக்கிறார்கள்; யோபு 32:6-7யோபு 12:12யோபு 8:8-10உபா 32:7யோபு 12:20நீதி 16:31
அவர்கள் உன் தகப்பனைவிட வயதானவர்கள்.
இறைவனது ஆறுதல்களும், 2 கொரி 1:3-5யோபு 13:21 இராஜா 22:242 கொரி 7:6யோபு 11:13-19யோபு 15:8யோபு 36:16யோபு 5:8-26
அவர் தயவாக உன்னிடம் பேசிய வார்த்தைகளும் உனக்குப் போதாதோ?
நீ உன் உள்ளத்து உணர்வுகளால் இழுபட்டுப் போனது ஏன்? மாற் 7:21-22சங் 35:19அப் 5:3-4அப் 8:22யாக் 1:14-15யோபு 11:13யோபு 17:2நீதி 6:13
உன் கண்களில் ஏன் அனல் தெறிக்கிறது?
இறைவனுக்கு விரோதமாகச் சீற்றங்கொண்டு யாக் 3:2-6யோபு 15:25-27யாக் 1:26யோபு 10:3யோபு 12:6யோபு 9:4மல்கி 3:13சங் 34:13
இவ்வாறான வார்த்தைகளை நீ பேசுவானேன்?
“தூய்மையானவனாய் இருப்பதற்கு மனிதன் யார்? பிரச 7:20யோபு 14:4நீதி 20:9ரோம 7:18யோபு 25:4-61 யோவா 1:8-101 இராஜா 8:46சங் 14:3
பெண்ணிடத்தில் பிறந்தவன் நேர்மையுள்ளவனாயிருப்பது எப்படி?
இறைவன் தமது பரிசுத்தவான்களையும் நம்புகிறதில்லை; யோபு 25:5யோபு 4:18ஏசா 6:2-5யோபு 5:1
வானங்களே அவருடைய பார்வைக்குத் தூய்மையற்றதாய் இருக்கிறதென்றால்,
தீமையைத் தண்ணீரைப்போல் குடிக்கும், யோபு 34:7நீதி 19:28சங் 53:3ரோம 3:9-19தீத் 3:3யோபு 20:12யோபு 4:19யோபு 42:6
இழிவானவனும் சீர்கெட்டவனுமாகிய மனிதனில் இறைவன் குற்றம் காணாதிருப்பாரா?
“நான் சொல்வதைக் கேள்; நான் உனக்கு விவரித்துச் சொல்வேன்; யோபு 13:5-6யோபு 33:1யோபு 34:2யோபு 36:2யோபு 5:27
நான் கண்டதைச் சொல்லவிடு.
ஞானிகள் தங்கள் முற்பிதாக்களிடமிருந்து பெற்று, யோபு 8:8ஏசா 38:19யோபு 15:10சங் 71:18சங் 78:3-6
ஒன்றையும் மறைக்காமல் அறிவித்ததைச் சொல்வேன்.
அந்த முற்பிதாக்கள் மத்தியில் வேறுநாட்டினர் நடமாடாதபோது, யோவே 3:17உபா 32:8ஆதி 10:25ஆதி 10:32
அவர்களுக்கு நாடு கொடுக்கப்பட்டது:
கொடியவர் தன் வாழ்நாள் முழுவதும் வேதனையை அனுபவிப்பார்கள்; யாக் 5:1-6யோபு 27:13யோபு 24:1லூக் 12:19-21பிரச 9:3சங் 90:12சங் 90:3-4ரோம 8:22
துன்பத்தின் வருடங்கள் இரக்கமற்றோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.
திகிலூட்டும் சத்தங்கள் அவன் காதுகளை நிரப்புகின்றன; யோபு 18:111 தெச 5:3லேவி 26:361 கொரி 10:10யோபு 1:13-19யோபு 20:22-25யோபு 20:5-7யோபு 27:20
எல்லாம் நலமாய்க் காணப்படும்போது கொள்ளைக்காரர் அவனைத் தாக்குகிறார்கள்.
அவன் இருளிலிருந்து தப்ப நம்பிக்கையில்லாமல் மனமுறிவடைகிறான்; யோபு 20:24-252இராஜா 6:33ஏசா 8:21-22யோபு 19:29யோபு 27:14யோபு 6:11யோபு 9:16மத் 27:5
வாளுக்கு இரையாவதற்கென்றே அவன் குறிக்கப்பட்டிருக்கிறான்.
அவன் கழுகைப்போல உணவு தேடி அலைகிறான்; யோபு 18:12சங் 109:10சங் 59:15ஆமோ 5:20பிரச 11:8ஆதி 4:12எபி 10:27எபி 11:37-38
இருளின் நாள் தனக்குச் சமீபித்திருக்கிறது என்பதையும் அவன் அறிவான்.
வேதனையும் கடுந்துயரமும் அவனைக் கலங்கச்செய்து, நீதி 24:34நீதி 6:11ஏசா 13:3யோபு 6:2-4மத் 26:37-38நீதி 1:27சங் 119:143ரோம 2:9
யுத்தத்திற்கு ஆயத்தமான அரசனைப்போல் அவனை மேற்கொள்கின்றன.
ஏனெனில், அவன் தனது கையை இறைவனுக்கு விரோதமாக நீட்டி, தானி 5:23யோபு 9:4சங் 52:7சங் 73:91 சாமு 6:6யோபு 36:9மல்கி 3:13சங் 73:11
எல்லாம் வல்லவருக்கு எதிராக இறுமாப்புடன் நடக்கிறான்.
அவன் தடித்த வலிமையான கேடயத்துடன், 2 நாளாக 32:13-172 நாளாக 28:22ஆதி 49:8யோபு 16:12சங் 18:40
பணிவின்றி அவரை எதிர்த்துத் தாக்குகிறான்.
“அவனுடைய முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது, சங் 17:10ஏசா 6:10எரே 5:28சங் 73:7உபா 32:15யோபு 17:10சங் 78:31
அடிவயிறு தொந்திவிட்டிருக்கிறது.
அவன் பாழடைந்த பட்டணங்களிலும், யோபு 3:14எரே 51:37ஏசா 5:8-10எரே 26:18எரே 9:11யோபு 18:15மீகா 3:12மீகா 7:18
கற்குவியலாக நொறுங்கி
ஒருவரும் குடியிராத வீடுகளிலும் வாழ்வான்.
அவன் இனி ஒருபோதும் செல்வந்தனாவதுமில்லை; அவனுடைய செல்வமும் நிலைத்திராது, யோபு 27:16-17யாக் 1:11யாக் 5:1-3யோபு 20:22-28யோபு 22:15-20லூக் 12:19-21லூக் 16:19-22லூக் 16:2
அவனுடைய உடைமைகளும் பூமியில் பெருகாது.
அவன் இருளுக்குத் தப்புவதில்லை; யோபு 4:9யோபு 15:22யோபு 18:5-6யோபு 20:26மத் 25:412 பேது 2:172 தெச 1:8-9எசேக் 15:4-7
அக்கினி ஜூவாலை அவன் தளிர்களை வாட்டும்,
இறைவனுடைய வாயின் சுவாசம் அவனை இல்லாதொழியப் பண்ணும்.
வீணானதை நம்பி, அவன் தன்னையே ஏமாற்றாதிருக்கட்டும்; ஏசா 59:4கலா 6:3கலா 6:7-8ஓசி 8:7சங் 62:10எபே 5:6ஏசா 44:20யோபு 12:16
அவன் பிரதிபலனைப் பெறமாட்டான்.
அவனுடைய வாழ்நாள் முடிவதற்கு முன்பே அவனுக்கேற்ற பலன் கொடுக்கப்படும்; பிரச 7:17சங் 55:23ஓசி 9:16யோபு 22:16எசேக் 17:8-10ஓசி 14:5-7ஏசா 27:11யோபு 14:7-9
அவனுடைய கிளைகளும் பசுமையாக இருக்காது.
அவன் பழுக்கும் முன்னமே பழம் உதிர்ந்துபோன திராட்சைக் கொடியைப்போலவும், உபா 28:39-40ஏசா 33:9வெளி 6:13
பூக்கள் உதிர்கின்ற ஒலிவமரத்தைப் போலவும் இருப்பான்.
இறைவனை மறுதலிக்கிற கூட்டத்தவர்கள் மலடாய்ப் போவார்கள்; யோபு 8:13யோபு 27:8யோபு 8:22மீகா 7:21 சாமு 12:31 சாமு 8:3ஆமோ 5:11-12ஏசா 33:14-15
இலஞ்சத்தை நாடுவோரின் கூடாரங்களை நெருப்பு பட்சிக்கும்.
அவர்கள் கஷ்டத்தைக் கர்ப்பந்தரித்து, தீமையைப் பெற்றெடுக்கிறார்கள், சங் 7:14ஓசி 10:13ஏசா 59:4-5யாக் 1:15கலா 6:7-8
அவர்களுடைய கருப்பை வஞ்சனையை உருவாக்குகிறது.”