யோபு 14

Job 14

“பெண்ணினால் பெற்றெடுக்கப்பட்ட மனிதன் சில நாட்களே வாழ்கிறான், யோபு 5:7பிரச 2:23யோபு 25:4யோபு 7:1மத் 11:11யோபு 15:14யோபு 7:6யோபு 9:25

அவையும் கஷ்டம் நிறைந்தவையே.

அவன் ஒரு பூவைப்போல் பூத்து வாடிப்போகிறான்; ஏசா 40:6-81 பேது 1:24யோபு 8:9சங் 103:15-161 நாளாக 29:15யாக் 4:14யாக் 1:10-11சங் 144:4

அவன் நிழலைப்போல் நிலையற்று மறைந்துபோகிறான்.

அப்படிப்பட்டவனை நீர் கூர்ந்து கவனிப்பீரோ? சங் 144:3சங் 143:2சங் 8:4யோபு 13:25யோபு 13:27யோபு 7:17-18யோபு 9:19-20யோபு 9:32

அவனை நியாயந்தீர்ப்பதற்காக உமக்கு முன்பாகக் கொண்டுவருவீரோ?

அசுத்தத்தில் இருந்து சுத்தத்தை உருவாக்க யாரால் முடியும்? யோவா 3:6யோபு 15:14எபே 2:3ரோம 8:8-9யோபு 25:4-6லூக் 1:35சங் 51:5ரோம 5:12

யாராலுமே முடியாது!

மனிதனுடைய நாட்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன; சங் 39:4அப் 17:26யோபு 12:10எபி 9:27சங் 104:29தானி 5:26யோபு 21:21லூக் 12:20

அவனுடைய மாதங்களையும் நீரே நிர்ணயித்திருக்கிறீர்,

அவன் கடக்கமுடியாத எல்லைகளைக் குறித்திருக்கிறீர்.

ஒரு கூலியாள் தன் அன்றாட வேலை முடிந்தது என்று நிம்மதியாய் இருக்கிறானே. யோபு 7:19சங் 39:13யோபு 7:1-2யோபு 10:20யோபு 7:16மத் 20:1-8

அதுபோல் நீரும் மனிதன் ஓய்ந்திருக்க உமது பார்வையை அவனைவிட்டு விலக்கும்.

“மரத்திற்குக்கூட ஒரு எதிர்பார்ப்பு உண்டு: ஏசா 27:6ஏசா 11:1யோபு 14:14தானி 4:23-25யோபு 19:10தானி 4:15

அது வெட்டிப்போடப்பட்டாலும் மீண்டும் தழைக்கும்;

அதின் புதிய தளிர்கள் தவறாது முளைக்கும்.

அதின் வேர் நிலத்தினடியில் பழையதாகி, 1 கொரி 15:36ஏசா 26:19யோவா 12:24

அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும்,

தண்ணீர் பட்டவுடனே அது துளிர்விட்டு ரோம 11:17-24எசேக் 17:22-24எசேக் 17:3-10எசேக் 19:10

ஒரு செடியைப்போல் கிளைவிட்டு வளரும்.

மனிதனோ இறந்தபின், யோபு 19:26ஆதி 49:33யோபு 7:7-10நீதி 14:32அப் 5:10யோபு 11:20யோபு 14:12யோபு 17:13-16

தன் இறுதி மூச்சைவிட்டு இல்லாதொழிந்து போகிறான்.

கடல் தண்ணீர் வற்றி, ஏசா 19:5எரே 15:18யோபு 6:15-18

வெள்ளம் வறண்டு கிடப்பதுபோலவும்

மனிதன் படுத்துக்கிடக்கிறான், யோபு 10:21-22பிரச 3:19-21ஏசா 26:19யோபு 3:132 பேது 3:10-132 பேது 3:7யோபு 30:231 தெச 4:14-15

அவன் வானங்கள் ஒழிந்துபோகும்வரை எழுந்திருக்கிறதும் இல்லை;

தூக்கம் தெளிந்து விழிக்கிறதும் இல்லை.

“நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, ஏசா 26:20-21ஏசா 57:1-2மாற் 13:32அப் 1:7அப் 17:31ஆதி 8:1ஏசா 12:1யோபு 3:17-19

உமது கோபம் தீருமட்டும் மறைத்துவைத்து,

நீர் எனக்கு ஒரு காலத்தைக் குறித்து,

அதின்பின் என்னை நினைவுகூர்ந்திருந்தாலோ எனக்கு நன்றாயிருந்திருக்குமே!

ஒரு மனிதன் இறந்துபோனால் திரும்பவும் அவன் வாழ்வானோ? 1 கொரி 15:51-52அப் 26:8யோபு 7:1சங் 27:14யோவா 5:28-29யோபு 13:15யோபு 14:5பிலி 3:21

ஆனாலும் என் கடின உழைப்பின் நாட்களிலெல்லாம்

நான் எனது விடுதலைக்காகக் காத்திருப்பேன்.

அப்பொழுது நீர் கூப்பிடுவீர், நான் பதில் கொடுப்பேன், யோபு 13:22சங் 138:81 பேது 4:19யோபு 10:3யோபு 10:8யோபு 7:211 யோவா 2:281 தெச 4:17

நீர் உமது கரங்களின் படைப்பாகிய என்மேல் வாஞ்சையாயிருப்பீர்.

நிச்சயமாக நீர் என் காலடிகளைக் கணக்கிடுவீர்; யோபு 10:6யோபு 31:4யோபு 34:21நீதி 5:21சங் 139:1-4எரே 32:19யோபு 33:11யோபு 13:27

என் பாவத்தையோ கவனத்தில் கொள்ளமாட்டீர்.

எனது குற்றங்கள் பையில் இடப்பட்டு முத்திரையிடப்படும்; உபா 32:34ஓசி 13:12யோபு 21:19

நீர் எனது பாவங்களை மூடி மறைப்பீர்.

“ஆனால் மலை இடிந்து விழுந்து கரைவதுபோலவும், வெளி 6:14யோபு 18:4எரே 4:24ஏசா 40:12ஏசா 41:15-16ஏசா 54:10ஏசா 64:1மத் 27:51

பாறை தன் இடத்தைவிட்டு நகருவதுபோலவும்,

தண்ணீர் கற்களை அரிப்பதுபோலவும், யோபு 19:10யோபு 27:8யோபு 7:6எசேக் 37:11ஆதி 6:17ஆதி 7:21-23லூக் 12:19-20சங் 30:6-7

வெள்ளம் மணலை அடித்துச்செல்வது போலவும்

மனிதனின் எதிர்பார்ப்பை நீர் அழித்துப் போடுகிறீர்.

நீர் அவனை ஒரேயடியாக மேற்கொள்கிறீர், அவன் இல்லாமல் போகிறான்; பிரச 8:8யோபு 14:14யோபு 2:12புலம் 4:8

நீர் அவன் முகத்தோற்றத்தை வேறுபடுத்தி, அவனை விரட்டிவிடுகிறீர்.

அவனுடைய மகன்கள் மேன்மையடைந்தாலும், அவன் அதை அறியான்; பிரச 9:5பிரச 2:18-19ஏசா 63:161 சாமு 4:20ஏசா 39:7-8சங் 39:6

அவர்கள் தாழ்த்தப்பட்டாலும், அதையும் அவன் காணமாட்டான்.

ஆனால் தன் சொந்த உடலின் நோவை மட்டுமே அறிவான், யோபு 19:26யோபு 19:20யோபு 19:22யோபு 33:19-21லூக் 16:23-24நீதி 14:32

அவன் தனக்காக மாத்திரமே துக்கப்படுகிறான்.”