பில்தாத் பேசுதல்
அதற்கு சூகியனான பில்தாத் மறுமொழியாக சொன்னதாவது: யோபு 2:11
“நீ எதுவரைக்கும் இவைகளைப் பேசிக்கொண்டிருப்பாய்? யோபு 15:2யோபு 6:261 இராஜா 19:11யாத் 10:3யாத் 10:7யோபு 11:2-3யோபு 16:3யோபு 18:2
உன் வார்த்தைகள் சீற்றமாய் வீசும் காற்றைப்போல் இருக்கின்றன.
இறைவன் நீதியைப் புரட்டுவாரோ? 2 நாளாக 19:7உபா 32:4ஆதி 18:25தானி 9:14எசேக் 33:20யோபு 34:10-12ரோம 3:4-6எசேக் 18:25
எல்லாம் வல்லவர் நியாயத்தைப் புரட்டுவாரோ?
உன் பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவம் செய்தபோது, யோபு 1:5யோபு 1:18-19யோபு 5:4ஆதி 19:13-25யோபு 18:16-19ஆதி 13:13
அவர்களின் பாவத்தின் தண்டனைக்கு அவர்களை ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
நீ இறைவனை நோக்கிப்பார்த்து, யாக் 4:7-10எபி 3:7-8ஏசா 55:6-7யோபு 11:13மத் 7:7-82 நாளாக 33:12-13யோபு 5:8யோபு 22:21-30
எல்லாம் வல்லவரிடம் மன்றாடுவாயானால்,
நீ தூய்மையும் நேர்மையும் உள்ளவனாயிருந்தால், ஏசா 51:9ஏசா 3:10யோபு 5:24நீதி 15:8சங் 7:6யோபு 16:17யோபு 4:6-7சங் 59:4-5
இப்பொழுதும் அவர் உன் சார்பாக எழுந்து,
உன்னை உனக்குரிய இடத்தில் திரும்பவும் வைப்பார்.
உன் ஆரம்பம் அற்பமானதாயிருந்தாலும், யோபு 42:12-13மத் 13:31-32நீதி 19:20நீதி 4:18சகரி 4:10சகரி 14:7மத் 13:12உபா 8:16
உன் எதிர்காலம் மிகவும் செழிப்பானதாக இருக்கும்.
“முந்திய தலைமுறையினரிடம் விசாரித்து, உபா 32:7உபா 4:32யோபு 15:18ரோம 15:41 கொரி 10:11ஏசா 38:19யோபு 12:12யோபு 15:10
அவர்கள் முற்பிதாக்கள் கற்றுக்கொண்டதைக் கேட்டுப்பார்.
நாமோ நேற்றுப் பிறந்தவர்கள், ஒன்றும் அறியாதவர்கள்; 1 நாளாக 29:15சங் 144:4யோபு 14:2சங் 102:11ஆதி 47:9யோபு 7:6சங் 39:5சங் 90:4
பூமியில் நமது நாட்கள் நிழலாய்த்தான் இருக்கின்றன.
அவர்கள் உனக்கு அறிவுறுத்திச் சொல்லமாட்டார்களா? நீதி 18:15மத் 12:35உபா 11:19உபா 6:7எபி 11:4எபி 12:1யோபு 12:7-8யோபு 32:7
அவர்கள் தாங்கள் விளங்கிக்கொண்டதிலிருந்து உனக்கு விளக்கமளிக்கமாட்டார்களா?
சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? யாத் 2:3ஏசா 19:5-7
தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ?
அவை வளர்ந்து அறுக்கப்படாமலிருந்தும், எரே 17:61 பேது 1:24யாக் 1:10-11மத் 13:20சங் 129:6-7
மற்றப் புற்களைவிட மிக விரைவாக வாடிப்போகின்றன.
இறைவனை மறக்கிற அனைவரின் வழிகளும் இவ்வாறே இருக்கும்; சங் 9:17யோபு 11:20யோபு 13:16யோபு 15:34நீதி 10:28உபா 8:11உபா 8:19யோபு 20:5
இறைவனை மறுதலிப்போரின் நம்பிக்கையும் அப்படியே அழிந்துபோகும்.
அப்படிப்பட்டவன் நம்பியிருப்பவை வலுவற்றவை; ஏசா 59:5-6
அவன் சிலந்தி வலைகளிலேயே நம்பிக்கை வைத்திருக்கிறான்.
அவன் அறுந்துபோகும் வலையில் சாய்கிறான்; யோபு 27:18லூக் 6:47-49மத் 7:24-27யோபு 18:14நீதி 10:28சங் 112:10சங் 49:11சங் 52:5-7
அவன் அதைப் பிடித்துத் தொங்கினாலும் அது அவனைத் தாங்காது.
அவன் வெயிலில் நீர் ஊற்றப்பட்ட செடியைப்போல் இருக்கிறான்; சங் 80:11எரே 11:16யோபு 21:7-15யோபு 5:3சங் 37:35-36சங் 73:3-12
அது தன் தளிர்களைத் தோட்டம் முழுவதும் படரச்செய்து,
தன் வேர்களினால் ஏசா 40:24ஏசா 5:24எரே 12:1-2யோபு 18:16யோபு 29:19யூதா 1:12மாற் 11:20
கற்களுக்குள்ளே தனக்கு இடத்தைத் தேடுகிறது.
அது அதின் இடத்திலே இருந்து பிடுங்கப்படும்போது யோபு 7:10யோபு 7:8சங் 37:36யோபு 20:9சங் 37:10சங் 73:18-19சங் 92:7
அது இருந்த இடம், ‘நான் ஒருபோதும் உன்னைக் கண்டதில்லை’ என மறுதலிக்கும்.
அதின் உயிர் வாடிப்போகிறது, யோபு 20:51 சாமு 2:8சங் 113:7எசேக் 17:24மத் 13:20-21மத் 3:9சங் 75:7
அந்த நிலத்திலிருந்து வேறு செடிகள் வளர்கின்றன.
“இறைவன் குற்றமில்லாதவனைத் தள்ளிவிடமாட்டார்; யோபு 4:7சங் 37:37சங் 37:24ஏசா 45:1சங் 94:14யோபு 21:30யோபு 9:22
தீமை செய்பவர்களின் கைகளைப் பலப்படுத்தவும் மாட்டார்.
அவர் இன்னும் உன் வாயைச் சிரிப்பினாலும், சங் 126:2ஆதி 21:6சங் 126:6சங் 32:11லூக் 6:21எஸ்றா 3:11-13ஏசா 65:13-14யோபு 5:22
உன் உதடுகளை மகிழ்ச்சியின் சத்தத்தினாலும் நிரப்புவார்.
உன் பகைவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள், சங் 132:18சங் 109:29சங் 35:26யோபு 18:14யோபு 8:18யோபு 7:211 பேது 5:5
கொடியவர்களின் கூடாரங்கள் இல்லாதொழிந்து போகும்.”