யோபு 20

Job 20

சோப்பார் பேசுதல்

அதற்கு நாகமாத்தியனான சோப்பார் மறுமொழியாக சொன்னது: யோபு 2:11யோபு 11:1யோபு 42:9

“நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறபடியால், நீதி 14:29சங் 31:22பிரச 7:9யாக் 1:19எரே 20:9யோபு 13:19யோபு 20:3யோபு 32:13-20

என் சிந்தனை மறுமொழிக்கூற என்னைத் தூண்டுகிறது.

என்னை அவமதிக்கும் கண்டனத்தை நான் கேட்கிறேன்; யோபு 33:3யோபு 19:29யோபு 19:3யோபு 20:2யோபு 27:11சங் 49:3சங் 78:2-5

என் உள்ளுணர்வு என்னைப் பதிலளிக்கும்படி ஏவுகின்றது.

“மனிதன் பூமியில் தோன்றிய பூர்வகாலத்திலிருந்து, ஆதி 1:28ஆதி 9:1-3யோபு 15:10யோபு 32:7யோபு 8:8-9சங் 115:16

எவ்வாறு இருந்தது என்பது உனக்கு நிச்சயமாய்த் தெரியும்:

கொடியவர்களின் சந்தோஷம் குறுகியகாலம், சங் 37:35-36யோபு 18:5-6அப் 12:22-23யோபு 27:8யோபு 5:3யோபு 8:12-13மத் 13:20-21சங் 73:18-20

இறைவனை மறுதலிக்கிறவனின் மகிழ்ச்சி நொடிப்பொழுது.

இறைவனற்றவனின் பெருமை வானங்களை எட்டினாலும், ஏசா 14:13-14ஒபதி 1:3-4ஆதி 11:4ஆமோ 9:2தானி 4:11தானி 4:22மத் 11:23

அவனுடைய தலை மேகங்களைத் தொட்டாலும்,

அவன் உரம் போல அழிந்தே போவான்; 1 இராஜா 14:102இராஜா 9:37யோபு 14:10யோபு 4:20யோபு 7:10யோபு 8:18சங் 83:10எரே 8:2

அவனை முன்பு கண்டவர்கள், ‘அவன் எங்கே?’ என்று கேட்பார்கள்.

ஒரு கனவைப்போல் அவன் பறந்துபோய், இனி ஒருபோதும் காணப்படமாட்டான்; சங் 90:5சங் 73:20ஏசா 29:7-8யோபு 18:18யோபு 27:21-23சங் 18:10

இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் மறைந்துபோகிறான்.

அவனைப் பார்த்த கண் மீண்டும் அவனைப் பார்க்காது; யோபு 7:8யோபு 7:10யோபு 8:18யோபு 20:7சங் 37:10சங் 37:36யோபு 27:3சங் 103:15-16

அவனுடைய இருப்பிடமும் இனி அவனைக் காணாது.

அவனுடைய பிள்ளைகள் ஏழைகளின் தயவை நாடுவார்கள்; யோபு 20:18யோபு 27:16-17லூக் 19:82 சாமு 12:6யாத் 12:36யாத் 22:1யாத் 22:3யாத் 9:2

அவனுடைய 1 கைகள் அவனுடைய செல்வத்தைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்.

அவனுடைய எலும்புகளில் நிரம்பியிருக்கிற இளமையின் வலிமை, யோபு 13:26யோபு 21:26சங் 25:7எசேக் 24:13எசேக் 32:27யோவா 8:24அப் 1:25யோபு 19:20

அவனுடன் தூசியில் கிடக்கும்.

“தீமை இறைவனற்றவனின் வாயில் இனிமையாயிருந்தாலும், யோபு 15:16சங் 10:7பிரச 11:9ஆதி 3:6நீதி 20:17நீதி 9:17-18சங் 109:17-18

அவன் அதைத் தன் நாவின்கீழ் மறைத்து வைக்கிறான்.

அதை விட்டுவிட மனமில்லாமல் மத் 5:29-30மாற் 9:43-49எண் 11:18-20ரோம 8:13

தன் வாயில் வைத்திருக்கிறான்.

ஆனாலும் அவனுடைய உணவு அவன் வயிற்றுக்குள் புளிப்பாக மாறி, ரோம 3:132 சாமு 11:2-52 சாமு 12:10-11உபா 32:24எரே 2:19யோபு 20:16மல்கி 2:2நீதி 1:31

அவனுக்குள் பாம்பின் விஷம் போலாகிவிடும்.

அவன் தான் விழுங்கிய செல்வத்தை வெளியே துப்பிவிடுவான்; நீதி 23:8மத் 27:3-4

இறைவன் அவனுடைய வயிற்றிலிருந்து அதை வெளியேறும்படி செய்வார்.

அவன் பாம்புகளிலிருந்து நஞ்சை உறிஞ்சுவான்; அப் 28:3-6ரோம 3:13உபா 32:24ஏசா 30:6மத் 3:7

விரியன் பாம்பின் நச்சு அவனைக் கொன்றுவிடும்.

தேனும் வெண்ணெயும் ஓடும் ஆறுகளிலும், உபா 32:13-14யோபு 29:6லூக் 16:242இராஜா 7:22 சாமு 17:29ஏசா 41:17ஏசா 7:15ஏசா 7:22

நீரோடைகளிலும் அவன் இன்பம் காணமாட்டான்.

அவன் தான் கஷ்டப்பட்டு உழைத்ததை உண்ணாமலே திருப்பிக் கொடுக்கவேண்டும்; யோபு 20:10எரே 22:13எரே 51:44யோபு 20:15நீதி 1:12ஓசி 8:7-8ஏசா 24:7-11எரே 11:15-16

அவன் தன் வியாபாரத்தின் இலாபத்தையும் அனுபவிப்பதில்லை.

அவன் ஏழைகளை ஒடுக்கி, அநாதைகளாக்கினான்; யோபு 35:9நீதி 14:31எசேக் 22:29யாக் 2:13யாக் 2:6யாக் 5:4நீதி 22:22-231 இராஜா 21:19

தான் கட்டாத வீடுகளைக் கைப்பற்றிக்கொண்டான்.

“நிச்சயமாகவே இறைவனற்றவனுடைய ஆசைக்கு அளவேயில்லை; பிரச 5:13-14ஏசா 57:20-21

ஆதலால், தான் இச்சித்த பொக்கிஷங்களில் எதுவும் மீந்துவதில்லை.

அவன் விழுங்குவதற்கும் ஒன்றும் மீதமில்லை; எரே 17:11யோபு 15:29யோபு 18:19லூக் 16:24-25

அவனுடைய செழிப்பும் நிலைக்காது.

அவனுடைய நிறைவின் மத்தியில் துயரம் அவனை மேற்கொள்ளும்; யோபு 15:29வெளி 18:72இராஜா 24:2பிரச 2:18-20ஏசா 10:6யோபு 1:15யோபு 1:17யோபு 16:11

அவலத்தின் கொடுமை முழுமையாய் அவன்மேல் வரும்.

அவன் வயிறு நிரம்பும்போது, சங் 78:30-31எண் 11:33யாத் 9:23ஆதி 19:24ஏசா 21:4லூக் 12:17-20மல்கி 2:2சங் 11:6

இறைவன் தமது கடுங்கோபத்தை அவன்மேல் வரப்பண்ணி,

அடிமேல் அடியாக அவனை வாதிப்பார்.

அவன் இரும்பு ஆயுதத்திற்குத் தப்பி ஓடினாலும், ஆமோ 5:19ஏசா 24:182 சாமு 22:351 இராஜா 20:30ஆமோ 9:1-3எரே 48:43-44நீதி 7:23

வெண்கல முனையுள்ள அம்பு அவனைக் குத்துகிறது.

அவன் அதைத் தன் முதுகிலிருந்தும், யோபு 16:13யோபு 18:11உபா 32:41யோபு 15:21யோபு 27:20சங் 7:122 கொரி 5:112 சாமு 18:14

அதின் மினுங்கும் நுனியைத் தன் ஈரலிலிருந்தும் இழுத்தெடுக்கிறான்.

பயங்கரங்கள் அவனை ஆட்கொள்கின்றன;

அவனுடைய பொக்கிஷங்கள் காரிருளில் கிடக்கும். சங் 21:9சங் 120:4ஏசா 14:20-22ஏசா 30:33ஏசா 8:22யோபு 18:18-19யோபு 18:5-6யூதா 1:13

அணையாத நெருப்பு அவனைச் சுட்டெரித்து,

அவனுடைய கூடாரத்தில் மீதியாயிருப்பதையும் விழுங்கிப்போடும்.

வானங்கள் அவன் குற்றங்களை வெளிப்படுத்தும்; ஏசா 26:21யோபு 16:18லூக் 12:2-31 கொரி 4:5உபா 31:28எரே 29:23யோபு 18:18மல்கி 3:5

பூமி அவனுக்கெதிராக எழும்பும்.

அவனுடைய வீட்டின் செல்வம் போய்விடும்; யோபு 27:14-19யாக் 5:1-3வெளி 18:17செப்ப 1:182இராஜா 20:17உபா 28:31யோபு 20:10யோபு 20:18-22

இறைவனுடைய கோபத்தின் நாளிலே, அதை வெள்ளம் அள்ளிக்கொண்டுபோகும்.

கொடியவர்களுக்கு இறைவன் நியமித்த பலன் இதுவே; யோபு 27:13யோபு 31:2-3யோபு 18:21சங் 11:5-6புலம் 3:38மத் 24:51உபா 29:20-28

இறைவனால் அவர்களுக்கு நியமிக்கப்பட்ட பங்கும் இதுவே.”