தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
“ ‘என் நீதி இறைவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியது,’ என்று மத் 12:36-37யோபு 10:7யோபு 16:17யோபு 19:6-7யோபு 27:2-6யோபு 34:5யோபு 40:8யோபு 9:17
நீர் சொல்வது நியாயம் என்று நினைக்கிறீரோ?
நீர், ‘நான் பாவம் செய்யாதிருப்பதால் எனக்கு என்ன பலன்? யோபு 34:9மல்கி 3:14யோபு 10:15யோபு 21:15யோபு 31:2யோபு 9:21-22யோபு 9:30-31சங் 73:13
என்ன இலாபம்?’ என்று இறைவனிடம் கேட்கிறீர்.
“இப்பொழுது நான் உமக்கும் உம்மோடிருக்கும் உமது சிநேகிதருக்கும் யோபு 34:8நீதி 13:20
பதில்சொல்ல விரும்புகிறேன்.
வானங்களை மேலே நோக்கிப்பாரும்; யோபு 22:12ஏசா 55:9ஏசா 40:22-23நாகூ 1:31 இராஜா 8:27ஆதி 15:5யோபு 25:5-6யோபு 36:26
உமக்கு மேலாக மிக உயரத்தில் இருக்கும் மேகங்களையும் உற்றுப் பாரும்.
நீர் பாவம்செய்தால் அது அவரை எப்படிப் பாதிக்கும்? எரே 7:19நீதி 8:36நீதி 9:12
உன் பாவங்கள் அதிகமானாலும் அவை அவரை என்ன செய்யும்?
நீ நேர்மையானவனாக இருந்தால் நீர் அவருக்கு எதைக் கொடுக்கிறீர்? யோபு 22:2-3சங் 16:2லூக் 17:10நீதி 9:12ரோம 11:351 நாளாக 29:14
அல்லது அவர் உம் கையில் இருந்து எதைப் பெற்றுக்கொள்கிறார்?
உம்முடைய கொடுமைகள் உம்மைப்போன்ற மனிதருக்குப் பாதிப்பையும், அப் 27:24பிரச 9:18எசேக் 22:30ஆதி 12:2ஆதி 18:24-33ஆதி 19:29எபி 11:7யோபு 42:8
உம்முடைய நீதி மனுமக்களுக்கு நன்மையையும் அளிக்கும்.
“ஒடுக்குதலின் மிகுதியால் மனிதர் கதறுகிறார்கள்; யாத் 2:23யோபு 34:28யாத் 3:7யாத் 3:9யோபு 12:19யோபு 24:12யோபு 40:9லூக் 18:3-7
பலவானின் கரத்திலிருந்து விடுதலைக்காக கதறுகிறார்கள்.
ஆனால், ‘என்னைப் படைத்த இறைவன் எங்கே? சங் 42:8அப் 16:25சங் 149:5சங் 77:6ஏசா 51:131 பேது 4:19பிரச 12:1ஏசா 54:5
இரவிலே பாடல்களைத் தருபவர் எங்கே?
பூமியின் மிருகங்களைவிட நமக்கு அதிகமாகப் போதிப்பவர் எங்கே? சங் 94:12யோபு 32:8யோபு 36:22ஆதி 1:26ஆதி 2:7
ஆகாயத்துப் பறவைகளைவிட நம்மை ஞானிகள் ஆக்குகிறவர் எங்கே?’
என்று கேட்பவர் ஒருவருமில்லை.
கொடியவர்களின் அகந்தையின் நிமித்தம், யோவா 9:31நீதி 1:28சங் 123:3-4ஏசா 14:14-17சங் 18:41சங் 73:6-8
மனிதர் அழும்போது இறைவன் அவர்களுக்குப் பதில் கொடுப்பதில்லை.
இறைவன் வீண்வார்த்தைகளைக் கேட்கமாட்டார்; நீதி 15:29ஏசா 1:15யாக் 4:3எரே 11:11நீதி 15:8ஆமோ 5:22பிரச 5:1-3ஓசி 7:14
எல்லாம் வல்லவர் அதைக் கவனிக்கமாட்டார்.
அப்படியிருக்கையில், நீர் அவரைக் காணவில்லை என்றும், யோபு 9:11ஏசா 30:18ஏசா 50:10ஏசா 54:17யோபு 19:7யோபு 23:3யோபு 23:8-10யோபு 9:19
உமது வழக்கு அவர் முன்னால் இருக்கிறது என்றும்,
நீர் அவருக்காகக் காத்திருக்கவேண்டும் என்றும் சொல்கிறபோது,
அவர் உமக்குச் செவிகொடுப்பாரோ?
மேலும், அவருடைய கோபம் மனிதரைத் தண்டிப்பது இல்லை; சங் 89:32எபி 12:11-12ஓசி 11:8-9யோபு 13:15யோபு 30:15-31யோபு 4:5யோபு 9:14லூக் 1:20
என்றும் மனிதரின் கொடுமையை அவர் கொஞ்சமும் கவனிப்பதில்லை என்று எண்ணி,
யோபு தன் வாயைத் திறந்து வீணாய்ப் பேசி, யோபு 38:2யோபு 33:8-12யோபு 34:35-37யோபு 3:1யோபு 33:2
அறிவில்லாமல் தன் வார்த்தைகளை வசனிக்கிறார்.”