யோபு 34

Job 34

தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:

“ஞானமுள்ள மனிதர்களே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; 1 கொரி 14:20நீதி 1:51 கொரி 10:15

கல்விமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்.

நாவு உணவைச் சுவைப்பதுபோல், யோபு 12:111 கொரி 2:15எபி 5:14யோபு 33:2யோபு 31:30யோபு 6:30

காது வார்த்தைகளை நிதானிக்கிறது.

வாருங்கள், சரியானது எது என்பதை நாம் நிதானிப்போம்; 1 தெச 5:211 கொரி 6:2-5கலா 2:11-14ஏசா 11:2-5நியாயாதி 19:30நியாயாதி 20:7யோவா 7:24யோபு 34:36

எது நல்லது என்பதை நாம் ஒன்றாய்க் கற்றுக்கொள்வோம்.

“யோபுவோ, ‘நான் குற்றமற்றவன், யோபு 27:2யோபு 33:9யோபு 16:17யோபு 32:1யோபு 10:7யோபு 11:4யோபு 29:14யோபு 9:17

இறைவன் எனக்கு நீதிவழங்க மறுக்கிறார்.

நான் சரியானவனாய் இருந்தபோதிலும், யோபு 6:4யோபு 16:13யோபு 27:4-6

பொய்யனாகவே எண்ணப்படுகிறேன்.

குற்றமற்றவனாய் இருந்தபோதிலும்,

அவருடைய அம்பு ஆறாதப் புண்ணை உண்டுபண்ணுகிறது’ என்கிறார்.

தண்ணீர் பருகுவதைப்போல் யோபு 15:16உபா 29:19நீதி 1:22நீதி 4:17

கேலிசெய்யும் யோபுவைப் போன்றவர் உண்டோ?

அவர் தீமை செய்கிறவர்களின் கூட்டத்தில் சேர்ந்து, சங் 1:11 கொரி 15:33நீதி 13:20சங் 26:4சங் 50:18நீதி 1:15நீதி 2:12சங் 73:12-15

கொடிய மனிதர்களுடன் வாசம்பண்ணுகிறார்.

ஏனெனில் அவர், ‘இறைவனுக்குப் பிரியமாக நடக்க முயற்சிப்பதினால் யோபு 21:14-16யோபு 35:3மல்கி 3:14யோபு 9:22-23யோபு 27:10யோபு 9:30-31சங் 37:4யோபு 21:30

ஒரு பயனும் இல்லை’ என்கிறாரே.

“புத்திமான்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். ரோம 9:14உபா 32:42 நாளாக 19:7யோபு 8:3யாக் 1:13ஆதி 18:25யோபு 36:23சங் 92:15

தீமை இறைனுக்கும்,

அநீதி எல்லாம் வல்லவருக்கும் தூரமாயிருக்கிறது.

மனிதருடைய செய்கைக்குத் தக்கதாக அவர் பலனளிக்கிறார். 2 கொரி 5:10ரோம 2:6வெளி 22:12மத் 16:27சங் 62:12எரே 32:19கலா 6:7-81 பேது 1:17

அவர்களுடைய நடக்கைக்குத் தகுந்ததை அவர் அவர்களுக்கு வரப்பண்ணுகிறார்.

இறைவன் அநியாயம் செய்யாமலும், யோபு 8:3சங் 11:7சங் 145:17ஆப 1:12-13

எல்லாம் வல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது உண்மையே.

பூமியின் மேலாக மனிதரை நியமித்தவர் யார்? 1 நாளாக 29:11ஏசா 40:13-14ரோம 11:34-36தானி 4:35யோபு 36:23யோபு 38:4-41யோபு 40:8-11நீதி 8:23-30

முழு உலகத்தையும் அவர்களுடைய பொறுப்பில் கொடுத்தவர் யார்?

அவர் தமது ஆவியையும் தமது சுவாசத்தையும் சங் 104:29யோபு 7:17யோபு 9:4ஏசா 24:22

திரும்ப எடுத்துக்கொள்ள நோக்கங்கொண்டால்,

எல்லா மனுக்குலமும் ஒன்றாய் அழிந்துபோகும்; ஆதி 3:19பிரச 12:7ஏசா 57:16ஏசா 27:4யோபு 10:9யோபு 30:23யோபு 9:22சங் 90:3-10

மனிதர்களும் மண்ணுக்குத் திரும்புவார்கள்.

“உமக்கு விளங்கும் ஆற்றல் இருந்தால் இதைக் கேளும், யோபு 12:3யோபு 13:2-6

நான் சொல்வதற்குச் செவிகொடும்.

நீதியை வெறுப்பவன் ஆள முடியுமோ? 2 சாமு 23:3ஆதி 18:25யோபு 40:8ரோம 9:14ரோம 3:5-7யோபு 1:222 சாமு 19:21

நீர் நீதியும் வல்லமையுமுள்ளவரை குற்றப்படுத்துவீரோ?

அரசர்களைப் பார்த்து, ‘ஒன்றுக்கும் உதவாதவர்கள்,’ என்றும், யாத் 22:28நீதி 17:26ரோம 13:7அப் 23:3அப் 23:5யூதா 1:82 பேது 2:101 பேது 2:17

உயர்குடி மக்களைப் பார்த்து, ‘நீங்கள் கொடியவர்கள்’ என்றும் சொல்வார்.

அவர் இளவரசர்களுக்குப் பாரபட்சம் காட்டுவதில்லை, உபா 10:17அப் 10:34யாக் 2:5ரோம 2:11கொலோ 3:251 பேது 1:172 நாளாக 19:7எபே 6:9

ஏழையைவிட செல்வந்தனுக்குத் தயவு காட்டுவதுமில்லை;

ஏனெனில், அவர்கள் எல்லோருமே அவருடைய கரங்களின் படைப்பல்லவா?

அவர்கள் நள்ளிரவில் ஒரு நொடியில் சாகிறார்கள்; சங் 73:191 சாமு 25:37-391 சாமு 26:101 தெச 5:22 பேது 2:3அப் 12:23தானி 2:34தானி 5:30

அசைக்கப்பட்டு இல்லாமல் போகிறார்கள்;

பலவான்களும் மனித கரமல்லாத ஒரு கரத்தினால் அகற்றப்படுகிறார்கள்.

“இறைவனுடைய கண்கள் மனிதருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; நீதி 15:3யோபு 31:4எரே 16:17நீதி 5:21எரே 32:19சங் 139:23ஆதி 16:13எரே 17:10

அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.

தீமை செய்கிறவர்கள் தங்களை ஒளித்துக்கொள்வதற்கு எபி 4:13ஆமோ 9:2-3நீதி 10:29சங் 139:11-12எரே 23:24யோபு 3:51 கொரி 4:5ஏசா 29:15

இருளான இடமோ, காரிருளோ இல்லை.

இறைவன் மனிதரை மேலும் சோதிக்கமாட்டார்; தானி 9:7-9எஸ்றா 9:13சங் 119:137ரோம 9:20ஏசா 42:3எரே 2:5யோபு 11:11யோபு 11:6

அவர்கள் அவர்முன் வழக்காடவேண்டிய அவசியமும் இல்லை.

இறைவன் விசாரணையின்றியே வல்லமையுள்ளவர்களைச் சிதறடித்து, தானி 2:21சங் 113:7-8சங் 2:9சங் 72:4சங் 94:51 இராஜா 14:141 இராஜா 14:7-81 சாமு 2:30-36

அவர்களுக்குரிய இடத்தில் வேறு மனிதரை அமர்த்துகிறார்.

ஏனெனில், அவர் அவர்களுடைய செயல்களைக் குறித்துக்கொள்கிறார்; ஓசி 7:2யோபு 34:201 தெச 5:2ஆமோ 8:7ஏசா 15:1ஏசா 66:18சங் 33:15வெளி 20:12

இரவில் அவர்களைக் கவிழ்க்கிறார், அவர்கள் நசுங்கிப் போகிறார்கள்.

அவர் அவர்களின் கொடுமையின் நிமித்தம், சங் 58:10-111 தீமோ 5:201 தீமோ 5:242 சாமு 12:11-12உபா 13:9-11உபா 21:21யாத் 14:30ஏசா 66:24

எல்லோரும் காணும்படியாக அவர்களைத் தண்டிக்கிறார்.

ஏனெனில் அவர்கள் இறைவனைப் பின்பற்றுவதிலிருந்து விலகி, 1 சாமு 15:11சங் 28:5ஏசா 5:12எபி 10:392 தீமோ 4:10அப் 15:38ஆகா 2:15-19ஏசா 1:3

அவருடைய வழிகளை மதியாமல் போகிறார்கள்.

அவர்கள் ஏழைகளின் அழுகுரலை இறைவனுக்கு சேரவைத்தனர்; யாக் 5:4யாத் 3:7யோபு 35:9யாத் 3:9சங் 12:5யாத் 22:23-27யோபு 29:12-13யாத் 2:23-24

அவர் அவர்களின் அழுகையைக் கேட்டார்.

மவுனமாய் இருக்கிறவரைக் குற்றப்படுத்தாதே; யோபு 23:13ஏசா 26:3யோவா 14:27சங் 27:9ரோம 8:31-34ஏசா 32:17பிலி 4:7சங் 30:7

நாட்டிற்கும், மனிதனுக்கும்,

அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைப் பார்ப்பவன் யார்?

அதினால் இறைவனற்றவர்கள் ஆட்சிசெய்யாமலும், நீதி 29:2-121 இராஜா 12:28-302இராஜா 21:92 தெச 2:4-11ஓசி 13:11ஓசி 5:11யோபு 34:21மீகா 6:16

மக்கள் கண்ணியில் சிக்காமலும் தடுக்கிறார்.

“யாராவது இறைவனிடம் இப்படிக் கேட்பதுண்டா: யோபு 33:27மீகா 7:9தானி 9:7-14எஸ்றா 9:13-14எரே 31:18-19யோபு 40:3-5யோபு 42:6லேவி 26:41

‘நான் குற்றவாளி, இனிப் பாவம் செய்யமாட்டேன்.

நான் காணாதவற்றை எனக்குப் போதியும், சங் 32:8சங் 139:23-24சங் 19:12சங் 25:4-5சங் 143:8-10யோபு 10:2யோபு 35:11நீதி 28:13

நான் அக்கிரமம் செய்திருந்தால் இனிமேல் அதைச் செய்யமாட்டேன்.’

நீர் மனந்திரும்ப மறுக்கும்போது யோபு 33:32ஏசா 45:9யோபு 34:11நீதி 11:31சங் 135:62 தெச 1:6-7எபி 11:26எபி 2:2

உமது மன எண்ணப்படி இறைவன் வெகுமதி கொடுக்கவேண்டுமோ?

நானல்ல, நீரே தீர்மானித்துக்கொள்ளும்;

நீர் அறிந்ததை எனக்குச் சொல்லும்.

“நான் சொல்வதைக் கேட்ட விளங்கும் ஆற்றலுள்ளவர்களும் 1 கொரி 10:15யோபு 34:10யோபு 34:16யோபு 34:2யோபு 34:4

ஞானமுள்ளவர்களும் என்னிடம்,

‘யோபு அறிவில்லாமல் பேசுகிறார்; யோபு 35:16யோபு 38:2யோபு 13:2யோபு 15:2யோபு 42:3

அவருடைய வார்த்தைகள் ஞானமில்லாதவை என்றும்,

யோபு கொடியவரைப்போல் பேசியதற்காக யாக் 5:11யோபு 12:6யோபு 21:7யோபு 22:15யோபு 23:16யோபு 24:1யோபு 34:8-9சங் 17:3

முற்றிலும் சோதிக்கப்பட வேண்டும்.

தம்முடைய பாவத்துடன் மீறுதலையும் சேர்த்துக் கொள்கிறார்; யோபு 27:231 சாமு 15:23ஏசா 1:19-20யோபு 11:2-3யோபு 23:2யோபு 35:16யோபு 35:2-3யோபு 42:7

அவர் எங்கள் மத்தியில் ஏளனமாய்க் கைகொட்டி,

இறைவனுக்கு விரோதமான வார்த்தைகளைப் பேசினார்’ என்று என்னிடம் சொல்கிறார்கள்.”