சங்கீதங்கள் 33

Psalms 33
சங்கீதம் 33

நீதிமான்களே, நீங்கள் மகிழ்ச்சியுடன் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்; சங் 32:11பிலி 4:4சங் 147:1சங் 118:15சங் 97:121 கொரி 1:30-31நீதி 15:8சங் 78:36-37

அவரைத் துதிப்பது நேர்மையுள்ளவர்களுக்குத் தகுதியானது.

யாழ் இசைத்து யெகோவாவைத் துதியுங்கள்; சங் 150:3-6சங் 98:4-5சங் 144:9யாத் 15:201 நாளாக 15:161 நாளாக 15:281 நாளாக 25:31 நாளாக 25:6

பத்து நரம்பு வீணையினால் அவருக்கு இசை பாடுங்கள்.

அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; எபே 5:191 நாளாக 25:7ஏசா 42:10சங் 96:11 நாளாக 13:8கொலோ 3:16சங் 144:9சங் 98:1

திறமையாக இசைத்து மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரியுங்கள்.

யெகோவாவினுடைய வார்த்தை சத்தியமும், சங் 12:6உபா 32:4தீத் 1:2நீதி 30:5சங் 19:8தானி 4:37சங் 119:75சங் 36:5-6

அவருடைய செயல்களெல்லாம் உண்மையானதுமாய் இருக்கிறது.

யெகோவா நீதியையும் நியாயத்தையும் விரும்புகிறார்; சங் 11:7சங் 119:64மத் 5:45சங் 104:24சங் 45:7அப் 14:17எபி 1:9சங் 145:15-16

பூமி முழுவதுமே அவருடைய உடன்படிக்கையின் அன்பினால் நிறைந்திருக்கிறது.

யெகோவாவினுடைய வார்த்தையினாலே வானங்கள் படைக்கப்பட்டன, எபி 11:32 பேது 3:5யோபு 33:4யோவா 1:1-3ஆதி 2:1சங் 33:9ஆதி 2:7ஆதி 1:1

அவருடைய வாயின் சுவாசத்தினால் வான்கோள்கள் யாவும் படைக்கப்பட்டன.

அவர் கடல்நீரைச் ஜாடிகளில் சேர்த்துவைக்கிறார்; யாத் 15:8யோசு 3:16யோசு 3:13ஆதி 1:9-10ஆப 3:15சங் 104:6-9எரே 5:22யோபு 26:10

ஆழத்தை களஞ்சியங்களில் வைக்கிறார்.

பூமி அனைத்தும் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; வெளி 14:6-7சங் 96:9-10வெளி 15:4சங் 22:27எரே 10:7-12சங் 67:7சங் 76:7தானி 6:25-26

உலகின் மக்கள் அனைவரும் அவரிடம் பயபக்தியாய் இருப்பார்களாக.

ஏனெனில் அவர் சொல்ல, உலகம் உண்டாயிற்று; ஆதி 1:3சங் 33:6சங் 148:5-6வெளி 4:11கொலோ 1:16-17எபி 11:3எபி 1:3சங் 119:90-91

அவர் கட்டளையிட்டார், அது உறுதியாய் நின்றது.

யெகோவா நாடுகளின் திட்டங்களை முறியடிக்கிறார்; சங் 21:11யோபு 5:12-13ஏசா 44:25நீதி 21:302 சாமு 15:31ஏசா 8:9-10சங் 140:8சங் 2:1-4

அவர் மக்களின் நோக்கங்களைத் தடுக்கிறார்.

ஆனால் யெகோவாவின் ஆலோசனை என்றென்றும் உறுதியாகவும், நீதி 19:21ஏசா 46:10யோபு 23:13ஏசா 14:24ஏசா 55:8-9எரே 29:11புலம் 3:37எபே 1:11

அவருடைய இருதயத்தின் நோக்கங்கள் தலைமுறை தலைமுறையாகவும் நிலைநிற்கும்.

எந்த மக்கள் யெகோவாவைத் தங்கள் இறைவனாகக் கொண்டிருக்கிறார்களோ, சங் 144:151 பேது 2:9யோவா 15:16உபா 7:6-8உபா 33:29எபே 1:4சங் 65:4தீத் 2:14

எந்த மக்களை அவர் தமது உரிமைச்சொத்தாகத் தெரிந்துகொண்டாரோ

அவர்கள் பாக்கியவான்கள்.

யெகோவா பரலோகத்திலிருந்து கீழே நோக்கிப்பார்த்து, யோபு 28:24சங் 11:4சங் 53:2எபி 4:132 நாளாக 16:9எரே 23:23-24நீதி 15:3சங் 14:2

எல்லா மனிதர்களையும் காண்கிறார்;

தமது சிங்காசனத்திலிருந்து பூமியில் வாழும் 1 இராஜா 8:391 இராஜா 8:271 இராஜா 8:301 இராஜா 8:431 தீமோ 6:16ஏசா 57:15ஏசா 66:1லூக் 11:2

அனைவரையும் கவனிக்கிறார்.

அனைவருடைய இருதயங்களையும் உருவாக்கும் யெகோவா, எரே 32:19ஓசி 7:2சங் 44:211 கொரி 4:5அப் 17:26பிரச 7:29ஏசா 64:8யோபு 10:8

அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் கவனிக்கிறார்.

எந்த ஒரு அரசனும் தனது படைபலத்தால் காப்பாற்றப்படுவதில்லை; சங் 44:3எரே 9:23சங் 44:6-7நியாயாதி 7:21 சாமு 14:8-161 சாமு 17:45-492 நாளாக 32:8-92 சாமு 21:16-22

எந்த ஒரு போர்வீரனும் தனது மிகுந்த வலிமையினால் தப்புவதுமில்லை.

விடுதலை பெறுவதற்கு குதிரையை நம்புவது வீண்; நீதி 21:31சங் 20:7சங் 147:10யோபு 39:19-25ஓசி 14:3ஏசா 30:162இராஜா 7:6-7பிரச 9:11

அதற்கு மிகுந்த வலிமை இருந்தபோதிலும், அதினால் காப்பாற்ற முடியாது.

யெகோவாவுக்குப் பயந்து, 1 பேது 3:12சங் 147:11யோபு 36:7சங் 34:15-20எபி 6:18சங் 13:5சங் 52:8ரோம 4:4-8

அவருடைய உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறவர்கள்மேல்

அவருடைய கண்கள் நோக்கமாயிருந்து,

மரணத்திலிருந்து அவர்களை விடுவிக்கிறார், சங் 37:19நீதி 10:3யோபு 5:19-22ஏசா 33:16யோவா 10:28மத் 6:31-33சங் 37:3சங் 91:10

பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கிறார்.

நாங்கள் யெகோவாவுக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்; ஏசா 40:31சங் 27:14சங் 130:5-6சங் 115:9-121 நாளாக 5:20சங் 62:5-6ஏசா 8:17சங் 144:1-2

அவரே எங்களுக்கு உதவியும் எங்கள் கேடயமுமாய் இருக்கிறார்.

நாங்கள் அவருடைய பரிசுத்த பெயரில் நம்பிக்கையாய் இருப்பதால் சங் 13:5யோவா 16:22சகரி 10:7ஏசா 25:9சங் 30:10-12வெளி 4:81 நாளாக 16:10சங் 28:7

எங்கள் இருதயங்கள் அவரில் மகிழ்கின்றன.

யெகோவாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே, சங் 13:5சங் 119:76மத் 9:29சங் 5:11-12சங் 119:49சங் 32:10

உமது உடன்படிக்கையின் அன்பு எங்கள்மேல் இருப்பதாக.