பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
யெகோவாவே, எவ்வளவு காலத்திற்கு என்னை மறந்துவிடுவீர்? யோபு 13:24புலம் 5:20சங் 89:46சங் 94:3-4சங் 22:1-2சங் 80:4சங் 44:24சங் 35:17
எப்பொழுதுமே மறந்துவிடுவீரோ?
நீர் எவ்வளவு காலத்திற்கு என்னிடமிருந்து உமது முகத்தை மறைத்துக்கொள்வீர்?
எவ்வளவு காலத்திற்கு நான் என் எண்ணங்களுடன் போராட வேண்டும்? மீகா 7:8-10எரே 8:18எரே 15:18புலம் 1:5நீதி 15:13சங் 143:3-4பிரச 5:17யோபு 10:15
எவ்வளவு காலத்திற்கு அனுதினமும் என் இருதயத்தில் துக்கத்தோடு இருக்கவேண்டும்?
என் பகைவன் எவ்வளவு காலத்திற்கு என்னை வெற்றிகொள்வான்?
என் இறைவனாகிய யெகோவாவே, என்னை நோக்கிப்பாரும்; எனக்குப் பதில் கொடும். எஸ்றா 9:8சங் 18:28எரே 51:391 சாமு 14:29சங் 5:11 சாமு 14:27எபே 5:14எரே 51:57
என் கண்களுக்கு ஒளியைத் தாரும்; அல்லது நான் மரணத்தில் உறங்கி விடுவேன்.
அப்பொழுது என் பகைவன், “நான் அவனை மேற்கொண்டேன்” என்பான்; சங் 25:2எரே 1:19நீதி 12:3சங் 62:6யோசு 7:9புலம் 1:16சங் 38:16எசேக் 35:12-15
நான் விழும்போது என் எதிரிகளும் மகிழ்வார்கள்.
ஆனால் நானோ, உமது உடன்படிக்கையின் அன்பில் நம்பிக்கையாய் இருக்கிறேன்; ஏசா 12:2யூதா 1:21ஆப 3:18சங் 52:8சங் 119:81சங் 36:7சங் 33:18சங் 33:21-22
என் இருதயம் உமது இரட்சிப்பில் மகிழ்கிறது.
யெகோவா எனக்கு நன்மை செய்திருக்கிறார், சங் 116:7சங் 21:13சங் 119:7
அதினால் நான் அவருக்குத் துதி பாடுவேன்.