பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.
இறைவனே, சீயோனிலே துதி உமக்காகக் காத்திருக்கிறது; சங் 62:1சங் 76:11சங் 116:17-18சங் 21:131 நாளாக 25:1-31சங் 56:121 நாளாக 11:71 நாளாக 15:29
எங்கள் நேர்த்திக்கடன்கள் உமக்கென்றே நிறைவேற்றப்படும்.
மன்றாட்டைக் கேட்கிறவர் நீரே, எரே 29:12-13ஏசா 65:241 யோவா 5:14-15ஏசா 66:23சங் 66:19சங் 86:9அப் 10:31சங் 145:18-19
மனிதர் அனைவரும் உம்மிடம் வருவார்கள்.
நாங்கள் பாவங்களில் மூழ்கியிருக்கையில், சங் 38:4ஏசா 6:7சங் 79:91 யோவா 1:7-9எபி 9:14கலா 5:17யோவா 1:29சங் 40:12
எங்கள் மீறுதல்களை நீர் மன்னித்தீர்.
உமது ஆலய முற்றங்களில் வாழும்படியாக, எபே 1:4சங் 106:4-5சங் 23:6சங் 84:4சங் 33:12சங் 36:8வெளி 3:12சங் 4:3
நீர் தெரிந்தெடுத்து சேர்த்துக்கொண்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
நாங்கள் உமது பரிசுத்த ஆலயமாகிய
உம்முடைய வீட்டின் நன்மைகளால் நிரப்பப்பட்டிருக்கிறோம்.
எங்கள் இரட்சகராகிய இறைவனே, உபா 10:21ஏசா 45:22சங் 66:3வெளி 15:3-4சங் 45:4ஏசா 51:5சங் 22:27சங் 68:19-20
உம்முடைய அற்புதமான மற்றும் நேர்மையான செயல்களால்
நீர் எங்களுக்குப் பதில் தருகிறீர்;
பூமியின் கடைசிகளில் உள்ளவர்களுக்கும்
தூரத்திலுள்ள கடல்களில் உள்ளவர்களுக்கும் நீரே நம்பிக்கையாயிருக்கிறீர்.
நீரே பெலனைத் தரித்துக்கொண்டு, சங் 93:1ஆப 3:6மீகா 6:2சங் 119:901 சாமு 2:4ஏசா 51:9சங் 24:2
உமது வல்லமையால் மலைகளை உருவாக்கினீர்.
கடல்களின் இரைச்சலையும் சங் 89:9ஏசா 17:12-13சங் 93:3-4யோவா 18:6சங் 107:29யோபு 38:8-11மத் 8:26-27சங் 2:1-4
அலைகளின் இரைச்சலையும் அமைதிப்படுத்தி,
மக்கள் கூட்டத்தின் கலகத்தையும் அடக்கினீர்.
பூமியின் கடைசிகளில் வாழ்பவர்களும் சங் 148:3சங் 104:20-23சங் 136:8சங் 74:16உபா 4:19ஆப 3:3-19சங் 126:2சங் 48:5-6
உம்முடைய அதிசயங்களைக் குறித்துப் பயப்படுகிறார்கள்.
விடியும் திசையிலிருந்தும் மாலைமங்கும் திசையிலிருந்தும்
நீர் மகிழ்ச்சியின் பாடல்களைத் தொனிக்கப் பண்ணுகிறீர்.
நிலத்தைக் கவனித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; சங் 46:4வெளி 22:1எரே 5:24சங் 104:13-15யோவே 2:23-26சங் 68:9-10உபா 11:11-12யோபு 5:10-11
நீர் அதைச் செழிப்பாக்குகிறீர்;
மக்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி,
இறைவனின் நீரோடைகள் தண்ணீரால் நிறைந்திருக்கின்றன;
இவ்விதமாகவே நீர் அதை ஏற்படுத்தியிருக்கிறீர்.
நீர் அதின் வரப்புகளை நனைத்து, அதின் வயல்களுக்குத் தண்ணீர் இறைத்து, 1 கொரி 3:6-7சங் 147:8உபா 32:2
மழையினால் அதை மென்மையாக்கி, அதின் பயிர்களை ஆசீர்வதிக்கிறீர்.
வருடத்தை உமது நன்மையின் நிறைவினால் முடிசூட்டுகிறீர்; யோவே 2:21-26சங் 103:4சங் 5:12சங் 36:8ஆகா 2:19மல்கி 3:10நீதி 14:18எபி 2:7-9
நீர் செல்லும் இடமெல்லாம் வளம் நிரம்பி வழிகின்றது.
பாலைவனத்திலும்கூட புல்வெளிகள் நிறைந்து இருக்கின்றன; யோபு 38:26-27யோவே 2:22சங் 104:10-13ஏசா 61:10-11சங் 65:6ஏசா 55:9-13
குன்றுகள் மகிழ்ச்சியினால் மூடப்பட்டுள்ளன.
புற்தரைகள் மந்தைகளினால் நிரம்பியுள்ளன; ஏசா 55:12ஏசா 35:1-2அப் 14:17ஏசா 30:23ஏசா 44:23சங் 96:11-13சங் 98:7-9ஏசா 35:10
பள்ளத்தாக்குகள் தானியத்தைப் போர்வைபோல் கொண்டிருக்கின்றன;
அவை சந்தோஷத்தால் ஆர்ப்பரித்துப் பாடுகின்றன.