சங்கீதங்கள் 68

Psalms 68
சங்கீதம் 68

பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதமாகிய பாட்டு.

இறைவன் எழுந்திருப்பாராக, அவருடைய பகைவர் சிதறடிக்கப்படுவார்களாக; எண் 10:35ஏசா 51:9-10ஏசா 42:13-14சங் 44:26சங் 89:10எசேக் 12:14-15சங் 132:8-9ஏசா 33:3

அவருடைய எதிரிகள் அவருக்கு முன்பாகப் பயந்து ஓடுவார்களாக.

காற்றினால் புகை அடித்துச் செல்லப்படுகிறது போல, நீர் அவர்களை ஊதிவிடும்; மீகா 1:4ஓசி 13:3சங் 37:20ஏசா 9:18சங் 97:5வெளி 6:16-17சங் 80:162 தெச 1:8-9

நெருப்பின் முன்னே மெழுகு உருகுவது போல,

இறைவனுக்கு முன்பாகக் கொடியவர்கள் அழிவார்களாக.

ஆனால் நீதிமான்கள் மகிழ்ந்து சங் 64:101 தெச 5:16சங் 100:1-2வெளி 18:201 பேது 1:8சங் 95:1-2உபா 12:12சங் 43:4

இறைவனுக்கு முன்பாகக் களிகூருவார்களாக;

அவர்கள் சந்தோஷப்பட்டு மகிழ்வார்களாக.

இறைவனைப் பாடுங்கள், அவருடைய பெயருக்குத் துதி பாடுங்கள்; உபா 33:26ஏசா 12:4-6சங் 66:4சங் 104:3சங் 66:2சங் 68:33யாத் 6:3ஏசா 40:3

மேகங்களில் ஏறிப் போகிறவரை புகழ்ந்து உயர்த்துங்கள்;

யெகோவா என்பது அவருடைய பெயர்; அவருக்கு முன்பாகக் களிகூருங்கள்.

இறைவன் தமது பரிசுத்த வாழ்விடத்தில் எரே 49:11சங் 10:14உபா 10:18சங் 82:3-4சங் 146:9எரே 5:28லூக் 18:2-7சங் 72:4

தகப்பன் இல்லாதவர்களுக்குத் தகப்பனாகவும்

விதவைகளுக்கு பாதுகாவலராகவும் இருக்கிறார்.

இறைவன் தனிமையானவர்களுக்கு குடும்பத்தை ஏற்படுத்துகிறார்; சங் 113:9சங் 69:33சங் 107:10ஏசா 61:1சங் 107:14சங் 146:7சங் 107:40-41கலா 4:27

சிறைக் கைதிகளை விடுவித்து, செழிப்பான வாழ்வுக்குள் நடத்திச் செல்கிறார்;

கலகக்காரரோ வெயிலால் வறண்ட நாட்டில் வாழ்கிறார்கள்.

இறைவனே, நீர் உமது மக்களுக்கு முன்பாகச் சென்று, யாத் 13:21நியாயாதி 5:4நியாயாதி 4:14ஆப 3:12-13உபா 4:34மீகா 2:13சங் 114:1-8

அவர்களைப் பாலைவனத்தின் வழியே அணிவகுத்து வருகையில்,

சீனாய் மலையின் இறைவனுக்குமுன், யாத் 19:18யாத் 19:16உபா 5:23-25நியாயாதி 5:4-5எபி 12:26ஏசா 45:3சங் 41:13சங் 68:35

இஸ்ரயேலின் இறைவனுக்குமுன்

பூமி அதிர்ந்து, வானங்கள் மழையைப் பொழிந்தன.

இறைவனே, நீர் நிறைவான மழையைக் கொடுத்தீர்; உபா 11:14எசேக் 34:26சங் 65:9-13சங் 78:24-27உபா 11:10-12சங் 77:16-17

இளைத்துப்போன உமது உரிமைச்சொத்திற்கு நீர் புத்துயிர் அளித்தீர்.

உமது மக்கள் அதில் குடியமர்ந்தார்கள்; உபா 26:9-10சங் 74:191 சாமு 2:8லூக் 1:53மத் 11:51 பேது 5:3உபா 26:5உபா 32:8-14

இறைவனே, உமது நிறைவான நன்மையிலிருந்து ஏழைகளுக்கு வழங்கினீர்.

யெகோவா வார்த்தையை அறிவித்தார்; யாத் 15:20சங் 40:3சங் 68:25யாத் 17:9-16யாத் 14:15நியாயாதி 4:6வெளி 19:13எபே 4:11

அதைப் பிரசித்தப்படுத்தியதோ பெரிய கூட்டம்:

“இராணுவத்தையுடைய அரசர்கள் ஓடினார்கள்; யோசு 10:16நியாயாதி 5:191 சாமு 30:24யோசு 12:7-24வெளி 19:17-20யாத் 14:25நியாயாதி 5:30யோசு 10:42

வீட்டிலிருந்த பெண்கள் கொள்ளைப்பொருட்களைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள்.

நீங்கள் ஆட்டு மந்தைகளின் மத்தியில் படுத்திருந்தபோதிலும், ஆதி 49:14சங் 105:371 கொரி 6:9-11எபே 2:1-3நியாயாதி 5:16வெளி 1:5-6தீத் 3:31 இராஜா 4:20-21

வெள்ளியினால் மூடப்பட்ட புறாச்சிறகுகளையும்

பசும்பொன்னினால் அலங்கரிக்கப்பட்ட இறகுகளையும் கண்டுபிடிப்பீர்கள்.”

எல்லாம் வல்லவர் நாட்டின் அரசர்களைச் சிதறடித்தது ஏசா 1:18நியாயாதி 2:7நியாயாதி 9:48யோசு 10:10-43சங் 51:7வெளி 19:14-21எரே 2:3யோசு 12:1-24

சல்மோன் மலையில் பனிமழை பெய்ததுபோல இருந்தது.

பாசான் மலை இறைவனுடைய மலை; சங் 87:1-2உபா 3:10ஏசா 2:2-3மீகா 7:14சங் 2:6சங் 78:68-69

பாசான் மலை சிகரங்களையுடைய மலை.

சிகரங்களையுடைய மலையே, ஏன் சீயோன் மலையின்மேல் பொறாமைப்படுகிறீர்கள்? உபா 12:5சங் 132:13-14வெளி 21:2-3எபி 12:22-231 இராஜா 9:3உபா 12:11ஏசா 2:2சங் 114:4

அங்குதான் இறைவன் தாம் ஆளும்படி விரும்பினார்;

அங்குதான் என்றென்றும் யெகோவா குடியிருப்பார்.

இறைவனின் தேர்கள் பத்தாயிரங்களும், உபா 33:2தானி 7:10வெளி 5:11வெளி 9:16ஆப 3:8மத் 26:532இராஜா 6:16-17யாத் 19:22-23

ஆயிரம் ஆயிரங்களுமாய் இருக்கின்றன;

யெகோவா சீனாய் மலையிலிருந்து அவருடைய பரிசுத்த இடத்திற்கு வந்தார்.

நீர் மேலே ஏறிச்சென்றபோது, எபே 4:8-102 கொரி 6:16வெளி 21:31 பேது 3:22கொலோ 1:18-19சங் 110:1அப் 1:2-9அப் 2:4

சிறைப்பட்ட அநேகரை உம்மோடு எடுத்துச்சென்றீர்;

மனிதரிடமிருந்தும் கலகக்காரரிடமிருந்தும் நீர் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டீர்;

இறைவனாகிய யெகோவாவின் வாழ்விடம் அதுவே.

தினந்தோறும் நம் பாரங்களைச் சுமக்கிற நமது இரட்சகரும் ஏசா 46:4புலம் 3:23எபே 1:3சங் 55:22சங் 103:1-22சங் 32:7சங் 65:5சங் 139:17

இறைவனுமான யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.

நம்முடைய இறைவன் காப்பாற்றுகிற இறைவன்; உபா 32:39வெளி 1:18ஏசா 12:2யோவா 5:211 சாமு 2:6சங் 118:17-18சங் 56:13யோவா 11:25-26

வல்லமையுள்ள யெகோவா மரணத்திலிருந்து நம்மை தப்புவிக்கிறார்.

இறைவன் நிச்சயமாகவே தமது பகைவர்களின் தலைகளை உடைப்பார்; ஆப 3:13லூக் 13:5சங் 110:6சங் 7:12எசேக் 18:27-30எபி 12:25வெளி 2:14-16எபி 2:1-3

தங்கள் பாவங்களில் தொடர்கிறவர்களின் முடியுள்ள

உச்சந்தலைகளை அவர் நொறுக்கிப்போடுவார்.

யெகோவா கூறுவதாவது, “நான் அவர்களைப் பாசானிலிருந்து கொண்டுவருவேன்; எண் 21:33எசேக் 36:24ஆமோ 9:2-3யாத் 14:22யாத் 14:29ஏசா 11:11-16ஏசா 51:10-11ஓசி 1:10-11

நான் அவர்களைக் கடலின் ஆழங்களிலிருந்தும் கொண்டுவருவேன்,

அப்பொழுது உங்கள் எதிரிகளின் இரத்தம் உங்கள் பாதங்களில் பதியும்; 1 இராஜா 21:19சங் 58:101 இராஜா 22:38வெளி 19:17-212இராஜா 9:33-37ஏசா 63:1-6

உங்கள் நாய்களும் தங்கள் பங்கிற்கு நாவினால் நக்கும்.”

என் இறைவனும் என் அரசனுமானவர், சங் 47:5-71 நாளாக 13:81 நாளாக 15:16-242 சாமு 6:12-17சங் 24:7-10சங் 63:2

பரிசுத்த இடத்திற்குள் உமது ஊர்வலம் போவதை, இறைவனே அனைவரும் கண்டனர்.

முன்னால் பாடகரும், அவர்களுக்குப் பின்னால் இசைக் கலைஞர்களும் போகிறார்கள்; 1 நாளாக 13:8நியாயாதி 11:34யாத் 15:201 சாமு 18:6வெளி 14:2-3வெளி 15:2-3எரே 31:13எரே 31:4

அவர்களுடன் இளம்பெண்கள் தம்புராவை வாசித்துக்கொண்டு போகிறார்கள்.

மகா சபையில் இறைவனைத் துதியுங்கள். ஏசா 48:1உபா 33:28நீதி 5:16சங் 111:1சங் 26:121 நாளாக 16:7-36சங் 135:19-21சங் 107:32

இஸ்ரயேலின் சபையிலே யெகோவாவைத் துதியுங்கள்;

சிறிய கோத்திரமாகிய பென்யமீன் அவர்களை வழிநடத்துகிறான்; 1 சாமு 9:211 நாளாக 12:16ஏசா 11:13சங் 60:71 நாளாக 12:291 நாளாக 15:31 நாளாக 27:12எசேக் 37:19-27

பின்பு யூதா கோத்திரப் பிரபுக்களின் பெருங்கூட்டமும்,

செபுலோன், நப்தலி கோத்திரப் பிரபுக்களும் அங்கே இருக்கிறார்கள்.

இறைவனே, உமது வல்லமையை கட்டளையிடும்; பிலி 1:6சங் 138:8சங் 71:3ஏசா 40:312 கொரி 12:9-10சங் 42:8எபே 3:17-202 தெச 1:11

எங்கள் இறைவனே, முன்பு நீர் செயலாற்றியதுபோல

உமது பலத்தை எங்களுக்குக் காண்பியும்.

எருசலேமில் இருக்கும் உமது ஆலயத்திற்காக 1 இராஜா 10:101 நாளாக 29:3சங் 76:11ஏசா 18:7ஏசா 60:16-17ஏசா 60:6-11சங் 45:121 இராஜா 10:24-25

அரசர்கள் உமக்கு நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள்.

நாணல்களின் நடுவிலுள்ள விலங்கினங்களைக் கடிந்துகொள்ளும்; சங் 22:12-13சங் 89:10ரோம 7:222 நாளாக 14:1-152 நாளாக 20:1-372 சாமு 10:1-192 சாமு 8:1-18எசேக் 29:3

கன்றுகளோடுள்ள காளைகள் கூட்டத்தைப் போன்ற மக்களைக் கடிந்துகொள்ளும்;

அவர்கள் வெள்ளி அன்பளிப்புகளுடன் உமக்கு முன்பாகப் பணிந்துகொள்ளட்டும்;

யுத்தத்தில் மகிழ்கிற மக்களைச் சிதறடியும்.

எகிப்திலிருந்து அரச தூதுவர்கள் வருவார்கள்; ஏசா 45:14செப்ப 3:10அப் 8:27-40ஏசா 19:18-25சங் 44:20ஏசா 60:6-7சங் 143:6சங் 72:8-11

எத்தியோப்பியர் இறைவனிடத்தில் தங்களை சமர்ப்பிப்பார்கள்.

பூமியின் அரசுகளே, இறைவனைப் பாடுங்கள்; உபா 32:43சங் 117:1-2சங் 67:2-5ரோம 15:10-11சங் 100:1வெளி 15:4சங் 102:22

யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்.

வானங்களில் பூர்வீக வானங்களில் ஏறிச் செல்கிறவரை, சங் 104:3சங் 18:10சங் 68:41 இராஜா 8:27வெளி 11:19உபா 33:26யோவா 12:28-29சங் 93:2

வல்லமையுள்ள சத்தத்துடன் முழங்குகிறவரைப் பாடுங்கள்.

இறைவனுடைய வல்லமையை அறிவியுங்கள்; 1 நாளாக 16:28-292 பேது 1:17வெளி 19:6சங் 150:1உபா 33:26சங் 29:1-2சங் 96:6-8

அவருடைய மகத்துவம் இஸ்ரயேலின் மேலாக இருக்கிறது;

அவருடைய வல்லமை ஆகாயங்களில் இருக்கிறது.

இறைவனே, நீர் உமது பரிசுத்த இடத்தில் பிரமிக்கத்தக்கவராய் இருக்கிறீர்; சங் 29:11கொலோ 1:11பிலி 4:13ஏசா 40:29சங் 65:5சகரி 10:12நெகே 1:5வெளி 6:16-17

இஸ்ரயேலின் இறைவன் தமது மக்களுக்கு பெலனையும் வல்லமையையும், கொடுக்கிறார்.

இறைவனுக்குத் துதி உண்டாவதாக!