சங்கீதங்கள் 58

Psalms 58
சங்கீதம் 58

“அழிக்காதே” என்ற இசையில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட மிக்தாம் என்னும் தாவீதின் சங்கீதம்.

ஆளுநர்களே, உண்மையிலேயே நீங்கள் நீதியைத்தான் பேசுகிறீர்களோ? ஏசா 11:3-5சங் 57:1உபா 16:18-19சங் 72:1-42 நாளாக 19:6-72 சாமு 23:3உபா 1:15-16எரே 23:5-6

மனிதர் மத்தியில் நியாயமாய்த் தீர்ப்பு செய்கிறீர்களோ?

இல்லை, நீங்கள் உங்கள் இருதயத்தில் அநீதியையே திட்டமிடுகிறீர்கள்; ஏசா 10:1சங் 94:20பிரச 3:16எசேக் 22:27மீகா 3:1-3எசேக் 22:12ஏசா 26:7ஏசா 59:4-6

உங்கள் கைகள் பூமியின்மேல் வன்முறையைப் பரப்புகிறது.

கொடியவர்கள் பிறப்பிலிருந்தே வழிதப்பிப் போகிறார்கள்; சங் 51:5ஏசா 48:8நீதி 22:15எபே 2:3யோபு 15:14சங் 22:10ஏசா 46:3

அவர்கள் கர்ப்பத்திலிருந்தே பொய்களைப் பேசுகிறார்கள்.

அவர்களுடைய நச்சுத்தன்மை ஒரு பாம்பின் நஞ்சைப்போல் இருக்கிறது; யாக் 3:8சங் 140:3பிரச 10:11எரே 8:17ரோம 3:13உபா 32:33ஏசா 11:8யோபு 20:14

அவர்கள் காதை அடைத்துக்கொள்கிற செவிட்டு நாகம்போல இருக்கிறார்கள்.

இந்த நாகபாம்போ, பாம்பாட்டி எவ்வளவு திறமையாய் ஊதினாலும் எரே 8:17உபா 18:11ஏசா 19:3

அவனுடைய இசைக்குக் கவனம் செலுத்தாது.

இறைவனே, அவர்களுடைய வாயிலுள்ள பற்களை உடைத்துப்போடும்; சங் 3:7ஓசி 5:14யோபு 29:17யோபு 4:10-11மீகா 5:8சங் 10:15சங் 17:12எசேக் 30:21-26

யெகோவாவே, அந்த சிங்கங்களின் கடைவாய்ப் பற்களைப் பிடுங்கிப்போடும்.

ஓடிப்போகும் தண்ணீரைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்; யோசு 7:5சங் 112:10யாத் 15:15ஏசா 13:7யோசு 2:9-11சங் 64:32 சாமு 17:10சங் 22:14

அவர்கள் தங்கள் வில்லை இழுக்கும்போது, அவர்களுடைய அம்புகள் முறிந்து போகட்டும்.

நகரும்போதே கரைந்து போகும் நத்தையைப்போல, அவர்கள் மறைந்துபோகட்டும்; யோபு 3:16பிரச 6:3யாக் 1:10சங் 37:35-36மத் 24:35

ஒரு பெண்ணின் வயிற்றில் சிதைந்த கருவைப்போல,

சூரியனை அவர்கள் பார்க்காமல் போகட்டும்.

முட்செடிகள் எரிந்து பானை அதின் சூட்டை உணருவதற்கு முன்பதாகவே, நீதி 10:25பிரச 7:6சங் 118:12ஏசா 17:13எரே 23:19ஏசா 40:24யோபு 18:18யோபு 20:5-29

பச்சையானதையும் எரிந்துபோனதையும் சுழற்காற்று வாரியதைப்போல

கொடியவர்களை வாரிக்கொள்ளும்.

அவர்கள் பழிவாங்கப்படும்போது நீதிமான்கள் மகிழ்வார்கள்; சங் 68:23சங் 91:8நீதி 11:10வெளி 11:17-18உபா 32:43சங் 64:10சங் 107:42நியாயாதி 5:31

கொடியவர்களின் உயிர் நீதிமான்களின் பாதபடியில் இருக்கும்.

அப்பொழுது மனிதர், ஏசா 3:10சங் 67:4சங் 33:18சங் 64:9மல்கி 2:17மல்கி 3:14ரோம 2:5சங் 98:9

“நிச்சயமாகவே நீதிமான்களுக்கு வெற்றி உண்டென்றும்

பூமியை நியாயந்தீர்க்கும் இறைவன் உண்டு” என்றும் சொல்வார்கள்.