அதிக செல்வத்தைவிட நற்பெயரே விரும்பத்தக்கது; பிரச 7:1லூக் 10:201 இராஜா 1:47அப் 7:10பிலி 4:3எபி 11:39
வெள்ளியையும் தங்கத்தையும்விட நன்மதிப்பைப் பெறுவதே சிறந்தது.
பணக்காரனையும் ஏழையையும் யெகோவாவே படைத்தார்; யோபு 31:151 சாமு 2:7நீதி 14:31யோபு 34:19நீதி 29:13யாக் 2:2-51 கொரி 12:21சங் 49:1-2
இதுவே அவர்களுக்கிடையில் உள்ள பொதுத்தன்மை.
விவேகிகள் ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்கிறார்கள்; நீதி 27:12நீதி 14:16நீதி 29:11 தெச 5:2-6எபி 11:7நீதி 7:7நீதி 7:22-23யாத் 9:20-21
ஆனால் அறிவற்றவர்களோ பார்க்காமல் நேராகப்போய் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.
யெகோவாவுக்குப் பயந்து நடப்பதே தாழ்மை, மத் 6:33யாக் 4:10சங் 34:9-10நீதி 21:21சங் 112:1-3ஏசா 57:15ஏசா 33:6யாக் 4:6
செல்வத்துக்கும் கனத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் தாழ்மை வழிநடத்துகிறது.
கொடியவர்களின் பாதைகளில் முட்களும் கண்ணிகளும் இருக்கும்; நீதி 16:171 யோவா 5:18யூதா 1:20-21நீதி 15:19யோபு 18:8நீதி 13:15நீதி 19:16சங் 18:26-27
ஆனால் தன் ஆத்துமாவைக் காத்துக்கொள்கிறவர்கள் அவற்றிலிருந்து தூரமாய் விலகுகிறார்கள்.
பிள்ளைகளை அவர்கள் நடக்கவேண்டிய சரியான வழியில் பயிற்றுவி; உபா 6:7எபே 6:42 தீமோ 3:15ஆதி 18:19உபா 4:9சங் 78:3-61 சாமு 1:281 சாமு 2:26
அவர்கள் பெரியவர்களாகும்போது, அதைவிட்டு விலகமாட்டார்கள்.
பணக்காரர்கள் ஏழைகளை ஆளுகிறார்கள், 2இராஜா 4:1மத் 18:25நீதி 22:16நீதி 14:31நீதி 18:23யாக் 2:6நீதி 22:22யாக் 5:1
கடன்வாங்கினவர்கள் கடன் கொடுத்தவருக்கு அடிமை.
அநீதியை விதைக்கிறவர்கள் தொல்லையை அறுவடை செய்வார்கள், கலா 6:7-8யோபு 4:8ஏசா 30:31ஓசி 10:13சங் 125:3நீதி 14:3ஓசி 8:7ஏசா 10:5
அவர்களுடைய கடுங்கோபமே அவர்களை அழிக்கும்.
தாராள மனமுள்ளவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்; நீதி 19:17எபி 6:101 தீமோ 6:18-19அப் 20:351 பேது 4:9எபி 13:16லூக் 14:13சங் 112:9
ஏனெனில் தங்கள் உணவை ஏழைகளுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.
ஏளனம் செய்பவர்களைத் துரத்திவிடு, அப்பொழுது சண்டை நின்றுவிடும்; 1 கொரி 5:131 கொரி 5:5-6நீதி 26:20-21ஆதி 21:9-10மத் 18:17நெகே 13:28நீதி 18:6நீதி 21:24
வாக்குவாதங்களும் நிந்தனைகளும் முடிவடையும்.
தூய்மையான இருதயத்தை விரும்புகிறவர்களும் தயவான வார்த்தையைப் பேசுகிறவர்களும் மத் 5:8நீதி 16:13நீதி 14:35சங் 101:6சங் 45:2தானி 6:20-23எஸ்றா 7:6-11தானி 2:46-49
அரசனைத் தங்கள் நண்பனாக்கிக் கொள்வார்கள்.
யெகோவாவின் கண்கள் அறிவுள்ளவர்களைக் காக்கிறது, 2 தீமோ 3:8-92 நாளாக 16:9அப் 13:8-122 தெச 2:8அப் 12:23-24யோபு 5:12-13அப் 5:39அப் 8:9-12
ஆனால் துரோகிகளின் திட்டங்களை அவர் அழிப்பார்.
“வீதியிலே சிங்கம் நிற்கிறது! நான் வெளியே போனால் தெருவிலே கொல்லப்பட்டு விடுவேன்!” நீதி 26:13-16எண் 13:32-33நீதி 15:19
என்று சோம்பேறி சொல்லிக்கொள்கிறான்.
விபசாரியின் வாய் ஒரு ஆழமான குழி; பிரச 7:26நீதி 23:27நீதி 6:24-29நெகே 13:26நீதி 7:5-27நியாயாதி 16:20-21நீதி 2:16-19உபா 32:19
யெகோவாவின் கோபத்திற்கு உள்ளானவர்கள் அதில் போய் விழுவார்கள்.
பிள்ளையின் இருதயத்தில் மூடத்தனம் இருக்கிறது, நீதி 13:24நீதி 29:15நீதி 19:18நீதி 23:13-14எபி 12:10-11நீதி 29:17எபே 2:3சங் 51:5
ஆனால் கண்டித்துத் திருத்துவதால் அதை அகற்றலாம்.
தன் செல்வத்தைப் பெருக்குவதற்கு ஏழைகளை ஒடுக்குகிறவர்களும், நீதி 22:22-23யாக் 2:13சங் 12:5யாக் 5:1-5லூக் 14:12-14லூக் 6:33-35நீதி 14:31நீதி 28:3
செல்வந்தர்களுக்கு அன்பளிப்பு கொடுக்கிறவர்களும் ஏழையாகிறார்கள்.
ஞானிகளின் முப்பது பழமொழிகள்
பழமொழி 1
ஞானிகளின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றைக் கவனத்தில்கொள், நீதி 23:12சங் 90:12பிரச 7:25நீதி 2:2-5நீதி 3:1மத் 17:5நீதி 1:3பிரச 8:16
நான் போதிக்கும் அறிவை உன் இருதயத்தில் பதித்து வை.
ஏனெனில் அவைகளை உன் இருதயத்தில் வைத்து, எரே 15:16நீதி 2:10நீதி 8:6யோவா 7:38நீதி 10:21நீதி 15:7சங் 119:103எபி 13:15
அவற்றை உன் உதடுகளில் ஆயத்தமாய் வைத்துக்கொள்.
உன் நம்பிக்கை யெகோவாவின்மேல் இருக்கவேண்டும் என்பதற்காகவே சங் 62:8ஏசா 12:2நீதி 3:51 பேது 1:21ஏசா 26:4எரே 17:7
இன்று இவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன்.
அறிவையும் ஆலோசனையையும் கொடுக்கும் மேன்மையான 2 பேது 1:19-21நீதி 8:62 தீமோ 3:15-17சங் 12:6ஓசி 8:12
முப்பது முதுமொழிகளை நான் உனக்கு எழுதவில்லையா?
அது உனக்கு உண்மையும் நம்பகமுமான வார்த்தைகளைப் போதித்திருக்கிறது; 1 பேது 3:15லூக் 1:3-41 யோவா 5:13யோவா 20:31
எனவே நீ உன்னை அனுப்பியவனுக்கு
தகுந்த பதிலைக் கொடுக்கலாம்.
பழமொழி 2
ஏழைகளாய் இருக்கிறார்கள் என்பதற்காக நீ ஏழைகளைச் சுரண்டாதே; சகரி 7:10மல்கி 3:5யாத் 23:6நீதி 22:16யோபு 29:12-16யோபு 31:16யோபு 31:21எசேக் 22:29
அவர்களை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே.
ஏனெனில் யெகோவா அவர்களுக்காக வழக்காடி, சங் 12:5சங் 140:12எரே 51:36நீதி 23:111 சாமு 25:39சங் 35:10சங் 43:1எரே 50:34
அவர்களின் உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார்.
பழமொழி 3
கோபக்காரனுடன் நட்புகொள்ளாதே, நீதி 29:222 கொரி 6:14-17நீதி 21:24
கடுங்கோபியோடு கூட்டாளியாய் இராதே.
ஏனெனில் ஒருவேளை நீயும் அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, 1 கொரி 15:33நீதி 13:20சங் 106:35
உன்னை கண்ணியில் சிக்க வைத்துக்கொள்ளலாம்.
பழமொழி 4
பிறரின் கடனுக்காக ஒருபோதும் பொறுப்பேற்றுக் கொள்ளாதே; நீதி 11:15நீதி 17:18நீதி 6:1-5நீதி 27:13
மற்றவருடைய கடனுக்காக அடைமானம் கொடுப்பவராயும் இராதே.
ஒருவேளை உனக்கு அதைச் செலுத்த வழியில்லாமற்போனால், நீதி 20:162இராஜா 4:1யாத் 22:26-27
உன் படுக்கையும்கூட உன்னிடமிருந்து பறித்துக்கொள்ளப்படும்.
பழமொழி 5
உன் முற்பிதாக்கள் நாட்டிய உபா 19:14உபா 27:17நீதி 23:10யோபு 24:2
பூர்வகாலத்து எல்லைக் கல்லை நகர்த்தாதே.
பழமொழி 6
தன்னுடைய வேலையில் திறமையுள்ளவர்களை நீ காண்கிறாயா? 1 இராஜா 11:28மத் 25:21நீதி 12:24பிரச 9:10மத் 25:23நீதி 10:4ஆதி 41:46ரோம 12:11
அவர்கள் அரசர்களுக்குமுன் பணிசெய்வார்கள்;
அவர்கள் பிரபலமற்றவர்களுக்கு முன்பாக பணிசெய்வதில்லை.