இதை நன்றாய் அறிந்துகொள்: கடைசி நாட்களில் மிகப் பயங்கரமான காலங்கள் உண்டாகும். 2 பேது 3:32 தீமோ 4:31 தீமோ 4:1-31 யோவா 2:182 தெச 2:3-12யூதா 1:17மீகா 4:1ஏசா 2:2 மக்கள் தங்களில் மாத்திரம் அன்பு செலுத்துகிறவர்களாகவும், பண ஆசையுள்ளவர்களாகவும், கர்வம் உடையவர்களாகவும், பெருமையுள்ளவர்களாகவும், தூற்றித்திரிகிறவர்களாகவும், தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி கெட்டவர்களாகவும், பரிசுத்தம் இல்லாதவர்களாகவும் இருப்பார்கள். பிலி 2:21ரோம 1:29-31யூதா 1:16சங் 10:32 தீமோ 3:42 பேது 2:14-151 தீமோ 6:102 பேது 2:18 அவர்கள் அன்பில்லாதவர்களாகவும், மன்னிக்கும் தன்மையற்றவர்களாகவும், அவதூறு பேசுகிறவர்களாகவும், சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாகவும், மிருகத்தனமுள்ளவர்களாகவும், நன்மையை விரும்பாதவர்களாகவும் இருப்பார்கள். யூதா 1:18ரோம 1:31மத் 10:212 பேது 2:141 தீமோ 3:11தானி 8:23மத் 4:1லூக் 10:16 மேலும், துரோகம் செய்கிறவர்களாகவும், முன்யோசனை அற்றவர்களாகவும், இறுமாப்புடையவர்களாகவும், இறைவனை நேசிக்காமல், சிற்றின்பங்களை விரும்புகிறவர்களாகவும் இருப்பார்கள். 1 தீமோ 3:6யூதா 1:4பிலி 3:18-192 பேது 2:10-22யூதா 1:8-9யூதா 1:19ரோம 16:181 தீமோ 5:6 வெளித்தோற்றத்தில் இறை பக்தி உள்ளவர்களாகக் காணப்படுவார்கள். ஆனால் இறை பக்தியின் வல்லமை இல்லாதவர்களாயிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களோடு எவ்விதத் தொடர்பும் வைக்காதே. ஏசா 29:13தீத் 1:16மத் 23:27-281 தீமோ 5:8ரோம 2:20-24மத் 7:15தீத் 3:10எசேக் 33:30-32
இப்படிப்பட்டவர்கள்தான் வீடுகளுக்குள் நுழைந்து, மனவுறுதியற்ற பெண்களைத் தம்வசப்படுத்துகிறார்கள். இந்தப் பெண்களோ பாவங்கள் நிறைந்தவர்களாகவும், பலவித தகாத ஆசைகளினால் இழுபடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். யூதா 1:42 பேது 3:17தீத் 3:3யூதா 1:18தீத் 1:11மாற் 4:191 கொரி 12:22 பேது 2:18 இவர்கள் எப்போதும் கற்றுக்கொள்கிறார்கள், ஆனால் ஒருபோதும் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களாய் இருக்கிறார்கள். 2 தீமோ 4:3-4எபே 4:141 தீமோ 2:42 தீமோ 2:25எபி 5:11யோவா 5:44நீதி 14:61 கொரி 3:1-4 யந்நேயும் யம்பிரேயும் மோசேயை எதிர்த்து நின்றதுபோல, இந்த மனிதரும் சத்தியத்திற்கு எதிர்த்து நிற்கிறார்கள். இவர்கள் சீர்கெட்ட மனமுடையவர்கள். விசுவாசத்தைப் பொறுத்தமட்டிலோ, இவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்களே! அப் 13:8-11யாத் 7:11வெளி 2:201 தீமோ 6:51 யோவா 4:12 பேது 2:142 தீமோ 4:15எபே 4:14 ஆனாலும் இவர்கள் இப்படியே அதிக தூரம் போகமாட்டார்கள். ஏனெனில் யந்நேயுவிற்கும் யம்பிரேயுவிற்கும் நடந்ததுபோல, இவர்களுடைய மூடத்தனமும் எல்லோருக்கும் வெளிப்படும். 2 தீமோ 3:8யாத் 7:12எரே 28:15-17யாத் 9:111 இராஜா 22:25அப் 13:11அப் 19:15-17யாத் 8:18-19
தீமோத்தேயுவுக்கு பொறுப்பு
ஆனால் நீயோ, எனது போதனைகள் எல்லாவற்றையும், எனது வாழ்க்கை முறையையும், எனது நோக்கத்தையும், விசுவாசத்தையும், பொறுமையையும், அன்பையும், சகிப்புத்தன்மையையும் அறிந்திருக்கிறாய். 1 தீமோ 6:11தீத் 2:72 பேது 1:5-71 தீமோ 4:6பிலி 2:22எபி 13:91 தீமோ 4:12-13அப் 11:23 அந்தியோகியாவிலும், இக்கோனியாவிலும், லீஸ்திராவிலும், எனக்கு ஏற்பட்ட பலவித துன்புறுத்தல்களையும், பாடுகளையும், நான் எப்படி சகித்தேன் என்றும் நீ அறிந்திருக்கிறாய். ஆனால் அவை எல்லாவற்றிலிருந்தும், கர்த்தர் என்னை விடுவித்தார். சங் 34:192 கொரி 11:23-28அப் 14:5-6அப் 13:452 பேது 2:9அப் 13:50-51அப் 14:1-2அப் 14:19-21 உண்மையாகவே, கிறிஸ்து இயேசுவில் இறை பக்தியுள்ள வாழ்க்கை வாழ விரும்புகிற ஒவ்வொருவனும் துன்புறுத்தப்படுவான். 1 பேது 3:141 பேது 4:12-161 பேது 2:20-21அப் 14:22மத் 16:24மத் 5:10-12யோவா 16:21 பேது 5:9-10 ஆனால் அதேவேளையில், தீயமனிதரும், வஞ்சகர்களும் செழிப்படைவார்கள். அவர்கள் மேன்மேலும் ஏமாற்றுகிறவர்களாகவும், ஏமாற்றப்படுகிறவர்களாகவும் இருப்பார்கள். 1 தீமோ 4:1தீத் 3:32 தீமோ 3:82 பேது 2:202 பேது 3:32 தெச 2:6-112 தீமோ 2:16-17எசேக் 14:9-10 நீ கற்று நிச்சயமென்றறிந்த காரியங்களை, தொடர்ந்து கைக்கொள். ஏனெனில் அவற்றை கற்றுக்கொடுத்தவர்களையும் நீ அறிவாய். 1 தெச 2:132 தீமோ 2:22 தீமோ 1:131 தெச 1:5எபி 10:22எபி 6:111 தீமோ 4:162 தீமோ 3:15 உனது குழந்தைப் பருவத்திலிருந்தே, பரிசுத்த வேதவசனங்களையும் நீ அறிந்திருக்கிறாய். அவைகள் ஒருவனை எப்படி கிறிஸ்து இயேசுவுக்குள்ளான விசுவாசத்தினாலே, இரட்சிப்பை பெற்றுக்கொள்வதற்கு ஞானமுள்ளவனாக்கும் என்று உனக்குத் தெரியும். சங் 119:98-99லூக் 24:45நீதி 22:62 பேது 1:20-21மத் 22:291 கொரி 15:3-4லூக் 24:272 தீமோ 1:5 எல்லா வேதவசனமும் இறைவனின் உயிர்மூச்சினால் கொடுக்கப்பட்டன. இவை மனிதருக்கு போதிப்பதற்கும், அவர்களைக் கண்டிப்பதற்கும், அவர்களைத் திருத்துவதற்கும், நீதியாய் வாழ பயிற்றுவிப்பதற்கும், பயனுள்ளவையாய் இருக்கின்றன. ரோம 15:4எபி 4:122 பேது 1:19-21மாற் 12:24சங் 19:7-11நீதி 6:23சங் 119:92 தீமோ 4:2 இதனால், இறைவனுடைய ஊழியக்காரன் எல்லா நல்ல செயல்களையும் செய்ய, முழுமையாக தேறினவனாகிறான். 2 தீமோ 2:212 கொரி 9:8எபே 2:101 தீமோ 6:11எபி 10:24தீத் 2:14அப் 9:36தீத் 3:1