பரிசுத்த ஆவியானவர் தெளிவாகச் சொல்வது இதுவே: கடைசிக் காலங்களில் சிலர் விசுவாசத்தைக் கைவிட்டு, வஞ்சிக்கும் ஆவிகளையும், பிசாசுகளின் போதனைகளையும் பின்பற்றுவார்கள். 2 தீமோ 3:1-92 பேது 2:12 கொரி 11:13-15யூதா 1:182 தெச 2:3-122 பேது 3:3யூதா 1:42 கொரி 11:3 இப்படியான போதனைகள், வேஷதாரிகளான பொய்யர்களின் வழியாகவே வருகின்றன. அவர்களுடைய மனசாட்சிகளோ சூடுபட்டும், சுரணையற்றுப் போவார்கள். எபே 4:19ரோம 16:18அப் 20:302 பேது 2:1-32 தீமோ 3:5மத் 24:24மத் 7:15வெளி 16:14 அவர்களோ திருமணம் செய்யவேண்டாம் எனவும், குறிப்பிட்ட சில உணவு வகைகளைச் சாப்பிடவேண்டாம் எனவும் கட்டளையிடுகிறார்கள்; ஆனால் விசுவாசிக்கிறவர்களும், சத்தியத்தை அறிந்திருக்கிறவர்களும் நன்றி செலுத்துதலோடு அனுபவிக்கும்படியே, இறைவன் அவற்றை உண்டாக்கியிருக்கிறார். 1 தீமோ 4:4எபி 13:4ரோம 14:61 கொரி 10:30-311 கொரி 8:8கொலோ 2:16ஆதி 9:31 கொரி 7:28 ஏனெனில் இறைவன் படைத்ததெல்லாம் நல்லதே, அவற்றை நன்றி செலுத்துதலோடு நாம் ஏற்றுக்கொண்டால், ஒன்றும் புறக்கணிக்கப்பட வேண்டியவையல்ல. ரோம 14:201 கொரி 10:25ரோம 14:141 கொரி 10:23அப் 21:25அப் 11:7-91 தீமோ 4:3அப் 15:20-21 ஏனெனில், இவை இறைவனுடைய வார்த்தையினாலும், நமது மன்றாட்டினாலும் பரிசுத்தமாக்கப்படுகின்றன. 1 தீமோ 4:3லூக் 4:41 கொரி 7:14தீத் 1:15லூக் 11:41ஆதி 1:25ஆதி 1:31
இக்காரியங்களைச் சகோதரருக்கு எடுத்துக் கூறினால், நீ கைக்கொண்ட விசுவாசத்தின் வார்த்தைகளிலும், நல்ல போதனைகளிலும் வளர்ச்சிப்பெற்ற கிறிஸ்து இயேசுவின் ஒரு நல்ல ஊழியனாயிருப்பாய். தீத் 2:7-10கொலோ 3:162 பேது 3:1-22 தீமோ 3:14-17கொலோ 4:7மத் 13:52தீத் 2:11 கொரி 4:1-2 பக்தியில்லாதவர்களின் கற்பனைக் கதைகளிலும், கிழவிகளின் கட்டுக்கதைகளிலும் நீ சம்பந்தப்படாமல்; இறை பக்தியுள்ளவனாய் இருக்க உன்னைப் பயிற்சி செய். 2 தீமோ 2:16தீத் 2:121 தீமோ 1:42 பேது 1:5-8தீத் 3:9எபி 5:141 தீமோ 6:112 தீமோ 2:23 உடற்பயிற்சி ஓரளவு பயனுள்ளதே. ஆனால் இறை பக்தியாயிருப்பது எல்லாவற்றிற்கும் மிகப் பயனுள்ளது. அந்த பக்தி தற்போதைய வாழ்வுக்கும், வருங்கால வாழ்வுக்கும் உதவும் வாக்குறுதியைக் கொண்டிருக்கிறது. மத் 6:331 தீமோ 6:6சங் 37:3-4நீதி 19:23நீதி 22:4கொலோ 2:21-23சங் 37:11யோபு 5:19-26 இந்த வார்த்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நம்பத் தகுந்ததாயிருக்கிறது. 1 தீமோ 1:15 எல்லா மனிதர்களுக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கு இரட்சகரான ஜீவனுள்ள இறைவனில் நாம் நமது எதிர்பார்ப்பை வைத்திருக்கிறோம். இதற்காகத்தான் நாம் கடுமையாக பாடுபட்டு முயற்சிக்கிறோம். 1 தீமோ 2:41 யோவா 2:2யோவா 1:291 யோவா 4:141 தீமோ 2:6யோவா 3:15-17யோவா 4:42ரோம 15:12-13
இந்தக் காரியங்களை நீ போதித்துக் கட்டளையிடு. 1 தீமோ 6:22 தீமோ 4:21 தீமோ 5:7தீத் 2:15தீத் 3:8 நீ வாலிபனாய் இருப்பதால், உன்னை யாரும் தாழ்வாக எண்ண இடங்கொடாதே. அதனால் உன் பேச்சிலும், நடத்தையிலும், அன்பிலும், விசுவாசத்திலும், தூய வாழ்விலும், விசுவாசிகளுக்கு முன்மாதிரியாக இரு. தீத் 2:72 தீமோ 2:222 தீமோ 2:151 பேது 5:32 பேது 1:5-81 கொரி 11:11 தெச 1:62 தீமோ 2:7 நான் வரும்வரைக்கும் நீ திருச்சபையில் வேதவசனங்கள் வாசிப்பதிலும், பிரசங்கம் செய்வதிலும், போதிப்பதிலும் உன் கவனத்தை ஈடுபடுத்து. அப் 6:42 தீமோ 4:2தீத் 2:151 தீமோ 4:16அப் 17:112 தீமோ 2:15-171 தீமோ 4:6யோவா 5:39 சபைத்தலைவர்களின் குழு உன்மேல் தங்கள் கைகளை வைத்தபோது, இறைவாக்கின் மூலமாக உனக்குக் கொடுக்கப்பட்ட வரத்தை அலட்சியம் செய்யாதே. 2 தீமோ 1:61 பேது 4:9-111 தீமோ 1:18அப் 6:61 தீமோ 5:221 தெச 5:19அப் 13:3அப் 8:17
இந்தக் காரியங்களில் கவனத்தைச் செலுத்து; அவைகளுக்கு உன்னை முழுமையாக ஒப்புக்கொடு. அப்போது எல்லோரும் உன் முன்னேற்றத்தைத் தெளிவாய் காண்பார்கள். மத் 5:16சங் 143:5பிலி 2:15-16சங் 104:34அப் 6:4சங் 119:481 தீமோ 4:6யோசு 1:8 உன் வாழ்க்கை முறையைப் பற்றியும், உபதேசத்தைப் பற்றியும் மிகக் கவனமாயிரு. நீ அவைகளில் நிலைத்திரு, நீ அப்படியிருந்தால் உன்னையும் உனக்குச் செவிகொடுப்பவர்களையும் நீ இரட்சித்துக்கொள்வாய். தீத் 1:9தீத் 2:72 யோவா 1:8-91 கொரி 3:10-11எசேக் 33:7-9அப் 20:26-28ஏசா 55:111 நாளாக 28:10