போதிக்கப்பட வேண்டியவை
ஆனாலும் நீயோ, ஆரோக்கியமான போதனைகளுக்கு ஏற்றவைகளையே போதிக்கவேண்டும். 2 தீமோ 1:131 தீமோ 6:3தீத் 1:91 தீமோ 1:10தீத் 3:8தீத் 2:11-14 வயதில் முதிர்ந்த ஆண்கள் தன்னடக்கம் உள்ளவர்களும், மதிப்புக்குரியவர்களும், சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களுமாய், ஆழ்ந்த விசுவாசத்திலும், அன்பிலும் நிலைத்திருந்து, சகிப்புத்தன்மை உடையவர்களாய் இருக்கவேண்டும் என்று, அவர்களுக்குக் கற்றுக்கொடு. கலா 5:231 பேது 4:71 தீமோ 3:111 பேது 5:81 தெச 5:81 தீமோ 3:2யோபு 12:12நீதி 16:31
அவ்வாறே முதியவர்களான பெண்களும், தாங்கள் வாழும் முறையில் பயபக்தியுடையவர்களாய் இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடு. அவர்கள் அவதூறு பேசுகிறவர்களாகவோ, மதுபானத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவோ இருக்கக்கூடாது. அவர்கள் நலமானதை போதிக்கிறவர்களாய் இருக்கவேண்டும். தீத் 2:41 தீமோ 3:111 பேது 3:3-51 தீமோ 2:9-10தீத் 1:71 தீமோ 3:81 தீமோ 5:5-10ரோம 16:2 அப்பொழுதே அவர்கள் இளம்பெண்களை தங்களுடைய கணவர்களிலும் பிள்ளைகளிலும் அன்பு செலுத்தப் பயிற்றுவிக்கலாம்; 1 தீமோ 5:141 தீமோ 5:21 தீமோ 5:11 அவர்களை சுயக்கட்டுப்பாடுள்ளவர்களாகவும், தூய்மையுள்ளவர்களாகவும், வீட்டுவேலையில் சுறுசுறுப்புள்ளவர்களாகவும், தயவுள்ளவர்களாகவும், தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களாகவும் இருக்க பயிற்றுவிக்கலாம். இப்படி நடந்தால், அவர்கள் இறைவனுடைய வார்த்தைக்கு அவமதிப்பைக் கொண்டுவரமாட்டார்கள். நீதி 31:10-31கொலோ 3:181 பேது 3:1-51 தீமோ 5:101 தீமோ 5:13-14ஆதி 3:16எபே 5:22-24நீதி 7:11
அப்படியே இளைஞர்களையும் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாக இருக்க உற்சாகப்படுத்து. பிரச 12:11 பேது 5:51 யோவா 2:13பிரச 11:9யோவே 2:281 தீமோ 5:1சங் 148:12யோபு 29:8 நீ அவர்களுக்கு நல்ல செயல்களைச் செய்வதன்மூலம் எல்லாக் காரியங்களிலும் உன்னையே முன்மாதிரியாக ஏற்படுத்திக்கொள். நீ போதிக்கும்போது, கண்ணியத்துடனும், பொறுப்புணர்ச்சியுடனும் போதிக்கவேண்டும். 1 பேது 5:31 தீமோ 4:122 கொரி 4:2பிலி 1:102 கொரி 1:122 தெச 3:9எபே 6:242 கொரி 2:17 மற்றவர்கள் குற்றம்காண இயலாதபடி, நலமான பேச்சுக்களையே பேசவேண்டும். அப்பொழுது உன்னை எதிர்க்கிறவர்கள் வெட்கமடைவார்கள். ஏனெனில் நம்மைப்பற்றி தீமையாய்ப் பேசுவதற்கு அவர்களுக்கு எதுவும் இருக்காது. 1 பேது 2:121 பேது 2:151 பேது 3:161 தீமோ 6:3பிலி 2:14-162 தெச 3:14நெகே 5:9ஏசா 66:5
அடிமைகள் தங்கள் எஜமான்களுக்கு எல்லாக் காரியங்களிலும் அடங்கியிருக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடு. எஜமான்களைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே இவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அடிமைகள் எஜமான்களுடன் எதிர்த்துப் பேசவோ, 1 பேது 2:18-251 தீமோ 6:1-2கொலோ 3:22-25எபே 6:5-8எபே 5:24 அவர்களிடமிருந்து எதையும் களவாடவோ கூடாது. அவர்களுடைய முழுமையான நம்பிக்கைக்குத் தாங்கள் தகுந்தவர்கள் என்று காட்டத்தக்கதாக அடிமைகள் நடந்துகொள்ள வேண்டும். அப்பொழுது அவர்கள் நம்முடைய இரட்சகராகிய இறைவனைப்பற்றிய போதனை சிறப்பானது என்று எல்லாவிதத்திலும் காண்பிப்பார்கள். மத் 5:161 பேது 2:122 யோவா 1:91 கொரி 4:21 பேது 3:161 சாமு 26:231 தீமோ 6:11 தீமோ 6:3
ஏனெனில், இரட்சிப்பைக் கொண்டுவரும் இறைவனுடைய கிருபை எல்லா மனிதருக்கும் வெளிப்பட்டிருக்கிறது. எபே 2:81 தீமோ 2:4ஏசா 45:22எபி 2:9எபே 2:52 தெச 2:16யோவா 1:16-17ரோம 5:15 அந்த கிருபை இறைவனை மறுதலிக்கிற வாழ்வையும், உலகத்துக்குரிய ஆசைகளையும் “வேண்டாம்” என்று சொல்லும்படி, நமக்கு போதிக்கிறது. தற்போதுள்ள இந்தக் காலத்தில் நாம் சுயக்கட்டுப்பாடும், நீதியும் உள்ளவர்களாய், இறை பக்தியுள்ள வாழ்வை வாழும்படி, அது நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. எசேக் 36:27மத் 16:24ரோம 6:19சங் 4:32 பேது 2:9எபே 4:22-251 யோவா 2:62 பேது 1:4-8 நம்முடைய மகத்துவமான இறைவனும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து, மகிமையுடன் வெளிப்படும் ஆசீர்வாதமுள்ள எதிர்பார்ப்புக்கு நாம் காத்திருக்கும்படி வாழ அந்த கிருபை கற்றுத்தருகிறது. 2 தீமோ 4:81 கொரி 1:7மத் 16:27தீத் 1:22 பேது 3:12-14மாற் 14:621 யோவா 3:2-3எபி 9:28 எல்லாவித தீமைகளிலிருந்தும் நம்மை மீட்டு, நற்செயல்களைச் செய்ய ஆர்வமுள்ள தம்முடைய மக்களாகும்படி, நம்மைத் தமக்கென்று தூய்மைப்படுத்தி, தமக்குச் சொந்தமானவர்களாய் ஆக்கும்படியுமே, கிறிஸ்து தம்மையே நமக்காகக் கொடுத்தார். எபி 9:14எபே 2:101 பேது 2:91 பேது 1:18வெளி 5:9தீத் 3:8கலா 3:13எசேக் 36:25
இவையே நீ போதிக்கவேண்டிய காரியங்கள்; எல்லா அதிகாரத்துடனும் கண்டித்து, உற்சாகப்படுத்து. யாரும் உன்னை அவமதிக்க இடங்கொடாதே. 2 தீமோ 4:21 தீமோ 4:12-13தீத் 1:131 தீமோ 5:20மத் 7:29மாற் 1:22லூக் 4:36மாற் 1:27