மண்பாண்டங்களில் செல்வம்
ஆகவே நாங்கள் இறைவனுடைய இரக்கத்தினால் இந்த ஊழியத்தைப் பெற்றிருக்கிறபடியால், நாங்கள் மனந்தளர்ந்து போவதில்லை. 2 தெச 3:13கலா 6:9எபே 3:13வெளி 2:32 கொரி 4:16எபே 3:7-8பிலி 4:131 கொரி 7:25 வெட்கத்துக்குரிய இரகசியமான செயல்களை நாங்கள் கைக்கொள்வதில்லை. நாங்கள் ஏமாற்றுகிறவர்களாய் இருக்கவில்லை. இறைவனுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறவதில்லை. மாறாக, சத்தியத்தை வெளிப்படையாய் எடுத்துக்கூறுகிறோம். இப்படி, இறைவனுக்கு முன்பாக ஒவ்வொரு மனிதனின் மனசாட்சிக்கும் எங்களைப்பற்றி நற்சான்று அளிக்கிறோம். 2 கொரி 2:171 தெச 2:3-52 கொரி 5:112 கொரி 11:13-151 கொரி 4:52 கொரி 6:4-72 கொரி 11:3எபே 5:12 எங்களுடைய நற்செய்தி மறைக்கப்பட்டிருந்தால், அது அழிந்து போகிறவர்களுக்கே மறைக்கப்பட்டிருக்கிறது. 1 கொரி 1:182 கொரி 3:142 தெச 2:9-112 கொரி 2:15-16மத் 11:252 கொரி 4:41 தெச 1:5ரோம 2:16 இவ்வுலகின் தேவன் அவிசுவாசிகளாகிய அவர்களின் மனங்களைக் குருடாக்கியிருக்கிறான். அதனாலேயே இறைவனின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின் மகிமை பொருந்திய நற்செய்தியின் ஒளியை, அவர்களால் காண முடியாதிருக்கிறது. யோவா 12:402 கொரி 3:14அப் 26:18ஏசா 6:101 யோவா 5:192 கொரி 4:6எபே 2:2எபே 6:12 ஏனெனில் நாங்கள் எங்களைக் குறித்து பிரசங்கிப்பதில்லை. இயேசுகிறிஸ்துவைக் கர்த்தர் என்றும், எங்களையோ இயேசுவுக்காக உங்கள் ஊழியர்கள் என்றும் பிரசங்கிக்கிறோம். 1 கொரி 1:231 தெச 2:5-62 கொரி 1:24கலா 5:132 கொரி 5:14-15பிலி 1:15பிலி 2:111 கொரி 1:13-15 “இருளின்மேல் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்” 1 எனக்கூறிய இறைவன், தமது ஒளியை எங்கள் இருதயங்களில் பிரகாசிக்கச் செய்திருக்கிறார். கிறிஸ்துவின் முகத்திலே உள்ள இறைவனது மகிமையின் அறிவின் ஒளியை எங்களுக்குக் கொடுப்பதற்கே அவர் இதைச் செய்தார். ஏசா 60:2ஆதி 1:31 பேது 2:92 பேது 1:19எபே 5:82 கொரி 4:4ஏசா 40:5எபி 1:3
ஆனால் இந்தச் செல்வத்தை மண்பாண்டங்களில் நாங்கள் பெற்றிருக்கிறோம். இதனால், எல்லாவற்றிற்கும் மேலான இந்த வல்லமை எங்களிடமிருந்து அல்ல, இறைவனிடமிருந்தே கிடைக்கின்றது என்பதை எல்லோரும் அறிவார்கள். 2 கொரி 3:5-62 கொரி 5:1எபே 2:8-91 கொரி 1:28கொலோ 2:31 கொரி 2:3-5புலம் 4:2எபே 1:19-20 ஒவ்வொரு பக்கத்திலும் எங்களுக்கு நெருக்கடியே ஏற்படுகிறது, ஆனாலும் நாங்கள் நசுங்குண்டு போவதில்லை; குழப்பமடைந்திருக்கிறோம், ஆனாலும் மனந்தளர்ந்து போவதில்லை; யாக் 1:2-4ரோம 8:35-371 பேது 4:12-142 கொரி 12:10சங் 56:2-32 கொரி 7:51 பேது 1:6-7ரோம 5:3-5 துன்புறுத்தப்பட்டோம், ஆனாலும் கைவிடப்படுவதில்லை; அடித்து வீழ்த்தப்பட்டோம், ஆனாலும் அழிந்து போவதில்லை. ஏசா 43:2மீகா 7:8சங் 37:24-25நீதி 24:16ஏசா 62:4சங் 42:112 கொரி 7:6எபி 13:5 எங்கள் உடலில் இயேசுவின் வாழ்வு வெளிப்படுபடி, நாங்கள் எப்பொழுதும் இயேசுவின் மரண வேதனையை எங்கள் உடலில் அனுபவிக்கிறோம். ரோம 6:52 தீமோ 2:111 பேது 4:13ரோம 6:8பிலி 3:10-112 கொரி 13:4ரோம 8:17-18கொலோ 1:24 இதனால் உயிரோடிருக்கும் நாங்கள் இயேசுவினிமித்தம் எப்பொழுதும் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். இதனால் அவருடைய வாழ்வு சாகும் தன்மையுள்ள எங்கள் உடலில் வெளிப்படுகிறது. 1 கொரி 15:491 கொரி 15:53-54சங் 44:22ரோம 8:361 கொரி 15:312 கொரி 5:4ரோம 8:11சங் 141:7 இப்படியாகவே, மரணம் எங்களில் செயலாற்றுகிறது. அதனால் வாழ்வு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. 2 கொரி 13:91 கொரி 4:101 யோவா 3:16அப் 20:24பிலி 2:172 கொரி 12:15பிலி 2:30
“நான் விசுவாசித்தேன்; ஆகையால்தான் நான் பேசினேன்” 2 என்று வேதவசனத்தில் எழுதப்பட்டிருக்கிறபடி. அந்த விசுவாசத்தின் ஆவியினாலேயே, நாங்களும் விசுவாசிக்கிறோம். ஆதலால் பேசுகிறோம். சங் 116:10எபி 11:1-402 கொரி 3:121 கொரி 12:9நீதி 21:282 பேது 1:1அப் 15:11ரோம 1:12 ஏனெனில், கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து உயிருடன் எழுப்பிய இறைவன், இயேசுவுடன்கூட எங்களையும் உயிரோடு எழுப்புவார். இவ்விதம் அவர் எங்களையும் உங்களோடுகூட தமது சமுகத்தில் நிறுத்துவார். இதை நாங்கள் அறிந்திருக்கிறோம். 1 தெச 4:14ரோம 8:111 கொரி 6:14யூதா 1:242 கொரி 5:1-4எபே 5:27யோவா 11:25-261 கொரி 15:20-22 இவையெல்லாம் உங்கள் நன்மைக்காகவே உண்டாகியிருக்கிறது. இதனால், மென்மேலும் அதிகதிகமான மக்களிடம் அவரின் கிருபை சென்றடையும்போது, நன்றி செலுத்துதல் நிரம்பிவழியும். அப்போது இறைவனின் மகிமை அதிகதிகமாய்ப் போற்றிப் புகழப்படும். ரோம 8:28எபே 3:20-212 கொரி 9:11-122 கொரி 1:112 கொரி 8:19சங் 50:23கொலோ 3:16-171 பேது 2:9
ஆதலால் நாங்கள் மனந்தளர்ந்து போவதில்லை. வெளிப்படையாக வலுவிழந்து போனாலும், நாங்கள் உள்ளாக நாளுக்குநாள் புதுப்பிக்கப்படுகிறோம். ஏசா 40:31கொலோ 3:10ஏசா 40:29ரோம 12:2சங் 73:262 கொரி 4:1எபே 3:16ரோம 7:22 ஏனெனில் கணப்பொழுது எங்களுக்கு ஏற்படும் சிறுசிறு துன்பங்கள், அவற்றிலும் மிகப்பெரிதான நித்திய மகிமையை விளைவிக்கின்றன. ரோம 8:181 பேது 5:10ரோம 5:3-5யாக் 1:12எபி 12:10-11யாக் 1:3-41 பேது 1:6-82 கொரி 3:18 எனவே நாங்கள் காணப்படுபவைகளிலல்ல, காணப்படாதவைகளிலேயே கண்நோக்கமாயிருக்கிறோம். ஏனெனில் காணப்படுபவை தற்காலிகமானவை, காணப்படாதவைகளோ நித்தியமானவை. 2 கொரி 5:7ரோம 8:24-25எபி 11:11 யோவா 2:16-171 யோவா 2:25எபி 11:13எபி 12:2-3எபி 11:25-27