1 கொரிந்தியர் 6

1 Corinthians 6

விசுவாசிகளுக்குள்ளே வழக்குகள்

உங்களில் யாருக்காவது வேறொருவருடன் ஒரு தகராறு ஏற்படுமாயின், அவன் தீர்ப்புக்காக பரிசுத்தவான்களிடம் போகாமல் அநீதியுள்ளவர்களிடம் போகத் துணிகிறதென்ன? மத் 18:15-17அப் 19:381 கொரி 14:331 கொரி 16:11 கொரி 6:6-7அப் 18:14-151 கொரி 1:21 கொரி 16:15 பரிசுத்தவான்கள்தான் உலகத்தை ஒரு நாள் நியாயந்தீர்ப்பவர்கள் என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகத்தையே நீங்கள் நியாயந்தீர்க்கப் போகிறவர்களாயின், சிறிய வழக்குகளை நியாயந்தீர்க்க உங்களுக்குத் தகுதியில்லையோ? மத் 19:28தானி 7:22வெளி 20:4லூக் 22:30வெளி 3:21வெளி 2:26-27தானி 7:181 கொரி 6:4 இறைவனுடைய தூதர்களையும் நாம்தான் நியாயந்தீர்ப்போம் என்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியானால், இவ்வுலக வாழ்க்கைக்குரிய வழக்குகளை நியாயந்தீர்ப்பதில் நீங்கள் இன்னும் அதிக தகுதியுடையவர்களாய் இருக்கிறீர்களே. யூதா 1:6மத் 25:411 கொரி 6:4லூக் 8:142 பேது 2:42 தீமோ 2:42 தீமோ 4:10லூக் 21:34 ஆதலால், அத்தகைய காரியங்களைக்குறித்து உங்களுக்குத் தகராறு ஏற்படுமாயின், திருச்சபையில் புறக்கணிக்கப்பட்டவர்களையே நியாயத்தீர்ப்பு செய்யும் நடுவர்களாக நியமித்துக்கொள்ளுங்கள். 1 கொரி 5:12அப் 6:2-4 உங்களை வெட்கப்படுத்துவதற்காகவே நான் இதைச் சொல்கிறேன். சகோதரர்களிடையே உள்ள தகராறைத் தீர்க்கக்கூடிய ஞானமுள்ள ஒருவனாவது உங்கள் மத்தியில் இல்லையோ? 1 கொரி 15:341 கொரி 4:14யாக் 3:13-181 கொரி 11:141 கொரி 3:181 கொரி 4:10யாக் 1:5நீதி 14:8 மாறாக, ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு விரோதமாக நீதிமன்றத்துக்குப் போகிறானே. அதுவும் அவிசுவாசிகளுக்கு முன்பாகவே இப்படிச் செய்கிறானே. பிலி 2:14-151 யோவா 2:9-111 யோவா 3:11-152 கொரி 6:141 கொரி 6:11 கொரி 6:7அப் 7:26ஆதி 13:7-9

உங்களிடையே நீதிமன்ற வழக்குகள் இருப்பது ஏற்கெனவே நீங்கள் முழுவதுமாக தோற்கடிக்கப்படுவீர்கள் என்பதையே காட்டுகிறது. மாறாக உங்களுக்குச் செய்யப்படும் தீமையை நீங்கள் ஏன் சகித்துக்கொள்ளக்கூடாது? மற்றவர்கள் உங்களை ஏமாற்றினாலும் ஏன் அதைப் பொறுத்துக்கொள்ளக்கூடாது? ரோம 12:17-19நீதி 20:221 பேது 2:19-231 பேது 3:9மத் 5:39-41யாக் 4:1-31 தெச 5:15லூக் 6:29 அப்படியிராமல் நீங்கள் ஏமாற்றி, அநியாயம் செய்கிறீர்கள், அதுவும் உங்கள் உடன் சகோதரர்களுக்கல்லவா செய்கிறீர்கள். 1 தெச 4:6கொலோ 3:25யாக் 5:4லேவி 19:13மல்கி 3:5மீகா 2:2மாற் 10:19

அநியாயக்காரர்களுக்கு இறைவனுடைய அரசில் உரிமைப் பங்கு இல்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? ஏமாந்து போகாதிருங்கள்: முறைகேடான பாலுறவில் ஈடுபடுகிறவர்களோ, சிலை வணக்கக்காரர்களோ, விபசாரம் செய்கிறவர்களோ, ஆண் வேசியர்களோ, ஓரினச் சேர்க்கையாளர்களோ, 1 தீமோ 1:9-10கலா 5:19-21எபே 5:4-5லேவி 20:13லேவி 18:22வெளி 21:8வெளி 22:151 கொரி 6:10 அல்லது திருடரோ, பேராசைக்காரர்களோ, குடிவெறியரோ, பழிசொல்லித் தூற்றுவோரோ, ஏமாற்றுக்காரரோ இவர்களில் ஒருவரும் இறைவனுடைய அரசைச் சுதந்தரிப்பதில்லை. 1 கொரி 5:11கலா 5:21எபே 4:28எசேக் 22:291 பேது 4:15எசேக் 22:27மத் 23:331 தெச 4:6 உங்களில் சிலரும் அவ்வாறே இருந்தீர்கள். ஆனாலும், நீங்கள் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரினாலும், நமது இறைவனின் ஆவியானவரினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். 1 கொரி 1:30கொலோ 3:5-71 கொரி 1:2ரோம 6:17-19அப் 22:161 பேது 1:2ரோம 8:30தீத் 3:3-7

முறைகேடான பாலுறவு

“எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு” என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் எல்லாமே பயனுள்ளதல்ல. “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு உரிமையுண்டு.” ஆனால் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். 1 கொரி 10:23-331 கொரி 9:27எபி 12:15-16ரோம 14:14-231 கொரி 8:7-132 தெச 3:91 கொரி 8:41 கொரி 9:12 “வயிற்றுக்கு உணவும், உணவிற்கு வயிறும்” என்கிறீர்கள். ஆனாலும் இறைவன் ஒரு நாள் அவை இரண்டையும் அழித்துப்போடுவார். உடல், முறைகேடான பாலுறவுக்குரியதல்ல; அது கர்த்தருக்கே உரியது. கர்த்தரும் உடலுக்குரியவர். 1 கொரி 6:191 கொரி 3:16ரோம 6:121 கொரி 6:151 தெச 4:3-7எபே 5:23மத் 15:17ரோம 12:1 இறைவன் தமது வல்லமையினால் கர்த்தராகிய இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினாரே. அவர் நம்மையும் எழுப்புவார். 2 கொரி 4:14ரோம 8:11எபே 1:19-20பிலி 3:21அப் 2:24யோவா 6:39-40ரோம 6:4-81 தெச 4:14 உங்கள் உடல்கள் கிறிஸ்துவின் உறுப்புகள் என்பதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அவ்வாறிருக்க, கிறிஸ்துவின் உறுப்புகளை நாம் வேசியுடன் இணைக்கலாமா? அப்படி ஒருபோதும் செய்யக்கூடாதே. எபே 5:30ரோம 12:5எபே 4:15-16கொலோ 2:191 கொரி 12:27எபே 4:121 கொரி 11:31 கொரி 6:19 தன்னை ஒரு வேசியுடன் இணைக்கிறவன், அவளுடன் ஒரே உடலாய் இணைகிறான் என்பதை அறியாதிருக்கிறீர்களா? ஏனெனில், வேதவசனம் சொல்கிறபடி, “இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்.” 1 ஆதி 2:24எபே 5:31மாற் 10:8மத் 19:5-6மத் 21:31-32ஆதி 34:31ஆதி 38:24எபி 11:31 ஆனால் தன்னைக் கர்த்தருடன் இணைத்துக்கொள்கிறவன், ஆவியில் அவருடன் ஒன்றிணைந்திருக்கிறான். யோவா 17:21-23கலா 2:201 கொரி 12:13எபே 4:3-4யோவா 3:6எபே 5:30பிலி 2:5

முறைகேடான பாலுறவிலிருந்து விலகியோடுங்கள். மனிதன் செய்யும் மற்ற எல்லாப் பாவங்களும் அவனுடைய உடலுக்கு வெளியே இருக்கும்; ஆனால் பாலுறவுப் பாவங்களைச் செய்கிறவன், தன் சொந்த உடலுக்கு விரோதமாகவே பாவம் செய்கிறான். 1 பேது 2:111 தெச 4:3கொலோ 3:5ரோம 6:12-132 தீமோ 2:22எபி 13:41 கொரி 6:9எபே 5:3 உங்கள் உடல் பரிசுத்த ஆவியானவரின் ஆலயமாக இருக்கிறதென்றும், நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? இறைவனிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட ஆவியானவர் உங்களில் குடியிருக்கிறாரே. நீங்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல. 1 கொரி 3:162 கொரி 6:161 பேது 2:5எபே 2:21-221 கொரி 6:15-16சங் 100:3தீத் 2:14ரோம 14:7-9 நீங்கள் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறீர்கள். ஆகையால் உங்கள் உடலினால் இறைவனை மகிமைப்படுத்துங்கள். 1 கொரி 7:23ரோம 12:11 பேது 2:91 பேது 1:18எபி 9:12பிலி 1:20அப் 20:28கலா 3:13