லூக்கா 8

Luke 8

விதைக்கிறவனின் உவமை

அதற்குப் பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும், கிராமங்கள்தோறும் பிரயாணம் செய்து, இறைவனுடைய அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார். அந்தப் பன்னிரண்டு பேர்களும் அவருடனே சென்றார்கள். மத் 4:23ரோம 10:15அப் 10:38அப் 13:32மத் 9:35ஏசா 61:1-3லூக் 2:10-11லூக் 4:18 தீய ஆவிகளின் பிடிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் குணமாக்கப்பட்ட சில பெண்களுங்கூட அவருடனே சென்றார்கள். மகதலேனா என அழைக்கப்பட்ட மரியாளும் அவர்களுடன் இருந்தாள். அவளிலிருந்து ஏழு பிசாசுகள் துரத்தப்பட்டிருந்தன. மாற் 16:9மத் 27:55-56மாற் 15:40-41யோவா 19:25அப் 1:14லூக் 23:27லூக் 23:49லூக் 23:55 ஏரோதுவின் வீட்டு நிர்வாகியான கூசாவின் மனைவி யோவன்னாளும் அவர்களுடன் இருந்தாள். அத்துடன் சூசன்னாளும் வேறு பலரும் இருந்தார்கள். இந்தப் பெண்கள் தங்களுடைய வருமானத்திலிருந்து இயேசுவுக்கு ஆதரவளித்து உதவி செய்தார்கள். 2 கொரி 8:9அப் 9:36-39பிலி 4:221 தீமோ 5:10யோவா 4:46-531 நாளாக 29:14ஏசா 23:18மத் 2:11

பல்வேறு பட்டணங்களிலிருந்து, மக்கள் பெருங்கூட்டமாய் இயேசுவிடம் வந்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: மாற் 4:1-9மத் 13:2-9 “ஒரு விவசாயி விதைகளை விதைக்கும்படி புறப்பட்டான். அவன் விதைகளைத் தூவி விதைக்கையில், சில விதைகள் பாதையருகே விழுந்தன; அவை மிதிபட்டன; ஆகாயத்துப் பறவைகள் வந்து அவற்றைக் கொத்தித் தின்றுவிட்டன. எபி 2:1யாக் 1:23-24மாற் 4:15லூக் 8:11-12ஆதி 15:11மாற் 4:26-29மத் 13:18-19மத் 13:24-26 சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தன, அவை முளைத்தபோது ஈரம் இல்லாததினால், அப்பயிர்கள் வாடிப்போயின. எபி 3:7-8லூக் 8:13மாற் 4:5-6ரோம 2:4-5ஆமோ 6:12எசேக் 36:26எபி 3:15எரே 5:3 வேறுசில விதைகளோ முட்செடிகளின் இடையே விழுந்தன, அவை முளைத்து வளர்ந்தபோது, முட்களும்கூட வளர்ந்து பயிர்களை மூடி நெருக்கிப்போட்டன. எரே 4:3லூக் 8:14ஆதி 3:18எபி 6:7-8லூக் 21:34மத் 13:22மத் 13:7மாற் 4:18-19 இன்னும் சில விதைகளோ நல்ல மண்ணில் விழுந்தன. அவை முளைத்து நூறுமடங்கு விளைச்சலைக் கொடுத்தன.” மத் 11:15வெளி 2:11வெளி 2:7மத் 13:23மத் 13:8-9மாற் 4:20மாற் 4:8நீதி 20:12

இயேசு இதைச் சொல்லி முடித்தபின்பு, சத்தமாய்க் கூப்பிட்டு, “கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்” என்றார்.

பின்பு அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து, “இந்த உவமையின் அர்த்தம் என்ன?” என்று கேட்டார்கள். மத் 13:10மத் 13:18மாற் 4:10ஓசி 6:3யோவா 15:15மத் 13:36மத் 15:15மாற் 4:34 அதற்கு அவர், “இறைவனுடைய அரசின் இரகசியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கோ, நான் உவமைகள் மூலமாகவே பேசுகிறேன். இதனால் அவர்கள், ஏசா 6:9மாற் 4:11மத் 11:25எரே 5:21ஏசா 44:18மத் 13:11-17அப் 28:26-27கொலோ 2:2

“ ‘கண்டும் காணாதவர்களாகவும்;

கேட்டும் விளங்கிக்கொள்ளதவர்களாகவும் இருப்பார்கள்.’ 1

“இந்த உவமையின் பொருள் இதுவே: விதை இறைவனுடைய வார்த்தை. 1 பேது 1:23-25மத் 13:19மாற் 4:14-20யாக் 1:211 கொரி 3:6-71 கொரி 3:9-12ஏசா 8:20 பாதை ஓரத்தில் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்கும் சிலரைக் குறிக்கிறது. அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடி சாத்தான் வந்து, அவ்வார்த்தையை அவர்களுடைய இருதயத்திலிருந்து எடுத்துப் போடுகிறான். 2 தெச 2:9-14மத் 13:19வெளி 12:9மாற் 4:15நீதி 1:24-26யாக் 1:23-24நீதி 4:5ஏசா 65:11 கற்பாறையின்மேல் விழுந்த விதைகள் வார்த்தையைக் கேட்ட வேறுசிலரைக் குறிக்கிறது. அவர்கள் அதைக் கேட்கும்போது, சந்தோஷத்துடன் ஏற்றுக்கொண்டாலும், வேரில்லாதவர்களாய் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் கொஞ்சக்காலம் மட்டுமே விசுவாசிக்கிறார்கள்; சோதிக்கப்படும் காலத்திலே, விழுந்து போகிறார்கள். ஓசி 6:4யோவா 5:35நீதி 12:122 பேது 2:22எசேக் 33:32யூதா 1:121 கொரி 15:22 பேது 2:20 ஆனால் முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள் வார்த்தையைக் கேட்ட வேறுசிலரைக் குறிக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையைக் குறித்த கவலைகளினாலும், செல்வங்களினாலும், சிற்றின்பங்களினாலும், மூழ்கி நெருக்கப்பட்டு, முதிர்ச்சி அடையாதிருக்கிறார்கள். 1 யோவா 2:15-171 தீமோ 6:9-101 தீமோ 6:17லூக் 21:34மத் 13:22மத் 6:24-25மாற் 4:19லூக் 8:7 நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ உண்மையும் நன்மையுமுள்ள இருதயம் கொண்டவர்களைக் குறிக்கிறது. அவர்கள் வார்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொண்டு விடாமுயற்சியுடன் செயல்பட்டு, பலன் கொடுக்கிறார்கள். எபி 10:36கலா 5:22-26கொலோ 1:10லூக் 6:451 யோவா 2:3கொலோ 1:6யாக் 1:22-25யோவா 14:15

தண்டின்மேல் வைக்கப்பட்ட விளக்கு

“யாரும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பானைக்குள்ளோ அல்லது கட்டிலின் கீழோ மறைத்து வைப்பதில்லை. அதை உள்ளே வருகிறவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி ஒரு விளக்குத்தண்டின் மேலேயே வைப்பார்கள். லூக் 11:33மத் 5:15-16மாற் 4:21-22அப் 26:18பிலி 2:15-16வெளி 1:20வெளி 11:4 எனவே, மறைக்கப்பட்டிருப்பது எதுவும் வெளியாக்கப்படாமல் போவதில்லை. ஒளித்து வைக்கப்பட்டது எதுவும் வெளியே தெரியவராமல் போவதுமில்லை. லூக் 12:2-3மத் 10:26மாற் 4:22பிரச 12:141 கொரி 4:5 ஆகையால், நீங்கள் கேட்கிற விதத்தைக் குறித்து கவனமாய் இருங்கள். இருக்கிறவனுக்கு மேலும் கொடுக்கப்படும்; இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.” மத் 13:12லூக் 19:26மாற் 4:23-25மத் 25:29நீதி 2:2-5எபி 2:1யோவா 15:21 கொரி 14:37

இயேசுவின் தாயும் சகோதரர்களும்

ஒருமுறை இயேசுவின் தாயும், சகோதரர்களும் அவரைப் பார்க்கும்படி வந்தார்கள். ஆனால் மக்கள் திரளாய்க் கூடியிருந்தபடியால், அவர்களால் அவருக்கு அருகே செல்ல முடியவில்லை. மத் 12:46-50மாற் 3:21மாற் 3:31-35 அப்பொழுது ஒருவன் இயேசுவிடம் வந்து, “உமது தாயும், உமது சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்றான். 1 கொரி 9:5அப் 1:14கலா 1:19யோவா 7:3-6மத் 13:55-56மாற் 6:3

அதற்கு இயேசு, “இறைவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கிறவர்களே என் தாயும், என் சகோதரர்களுமாய் இருக்கிறார்கள்” என்றார். லூக் 11:27-28யாக் 1:22யோவா 13:171 யோவா 2:293 யோவா 1:11எபி 2:11-132 கொரி 6:18யோவா 15:14-15

இயேசு புயலை அடக்குதல்

ஒரு நாள் இயேசு தம்முடைய சீடர்களிடம், “ஏரியின் மறுகரைக்குப் போவோம் வாருங்கள்” என்றார். அப்படியே அவர்கள், ஒரு படகில் ஏறிப் புறப்பட்டார்கள். மத் 8:23-27மாற் 4:35-41மாற் 6:45லூக் 5:1லூக் 8:23மத் 14:22மாற் 8:13யோவா 6:1 அவர்கள் போய்க்கொண்டிருக்கையில், இயேசு தூங்கிக்கொண்டிருந்தார். அப்பொழுது புயல்காற்று ஏரியின்மேல் வீசியது. படகில் தண்ணீர் நிரம்பத் தொடங்கியதால், அவர்கள் பெரிய ஆபத்துக்கு உள்ளானார்கள். ஏசா 54:11சங் 93:3-4அப் 27:14-20ஏசா 51:9-10லூக் 8:22சங் 107:23-30சங் 124:2-4சங் 148:8

அப்போது சீடர்கள் இயேசுவிடம் வந்து, அவரை எழுப்பி, “ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் தண்ணீரில் மூழ்கப்போகிறோம்!” என்றார்கள். லூக் 4:39சங் 107:25-292 கொரி 1:9-10லூக் 5:5சங் 104:6-9எரே 5:22யோவா 2:2-6நாகூ 1:4

அவர் எழுந்து காற்றையும், கொந்தளிக்கும் தண்ணீரையும் கடிந்துகொண்டார்; புயல் தணிந்து, எல்லாம் அமைதியாயிற்று. அப்பொழுது அவர் தமது சீடர்களிடம், “உங்கள் விசுவாசம் எங்கே?” என்று கேட்டார். மத் 8:26மாற் 4:40-41நீதி 30:4யோவா 11:40மத் 14:31ஆதி 1:9-10லூக் 12:28மத் 17:20

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “இவர் யாரோ? காற்றுக்கும், கடலுக்கும் கட்டளையிடுகிறார். அவையும் அவருக்குக் கீழ்ப்படிகின்றன” என்று பயத்துடனும், வியப்புடனும் பேசிக்கொண்டார்கள்.

பிசாசு பிடித்தவன் சுகமடைதல்

அவர்கள் கலிலேயா கடலின் மறுகரையிலுள்ள கதரேனருடைய 2 நாட்டிற்குப் படகில் சென்றார்கள். மாற் 5:1-20மத் 8:28-34 இயேசு கரையில் இறங்கியபோது, அந்தப் பட்டணத்திலிருந்து பிசாசு பிடித்த ஒருவன் அவருக்கு எதிர்ப்பட்டான். அவன் நீண்டகாலமாக உடைகள் உடுத்தாதவனும், வீட்டில் வாழாதவனுமாய், கல்லறைகளிலேயே தங்கியிருந்தான். மாற் 5:2-51 சாமு 19:24எண் 19:16ஏசா 65:4 அவன் இயேசுவைக் கண்டபோது, கூச்சலிட்டு, அவருடைய பாதத்தில் விழுந்தான். அவன் அவரிடம், “இயேசுவே, மகா உன்னதமான இறைவனின் மகனே, என்னிடம் உமக்கு என்ன வேண்டும்? நான் உம்மைக் கெஞ்சிக்கேட்கிறேன், என்னைத் துன்புறுத்தவேண்டாம்” என்று உரத்த குரலில் சத்தமிட்டுச் சொன்னான். மத் 8:292 பேது 2:41 யோவா 3:8அப் 16:16-18ஏசா 27:1யாக் 2:19லூக் 4:33-36லூக் 8:37-38 ஏனெனில், அவனைவிட்டு வெளியே வரும்படி, இயேசு அந்தத் தீய ஆவிக்குக் கட்டளையிட்டிருந்தார். பலமுறை அது அவனைப் பிடித்திருந்தது. அதனால் அவனுடைய கையையும், காலையும் சங்கிலியால் கட்டி, காவலில் வைத்திருந்த போதுங்கூட, அவன் சங்கிலிகளை உடைத்து எறிந்து விடுவான். அந்த தீய ஆவியினால் அவன் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். 2 தீமோ 2:25-26அப் 19:12-16லூக் 9:39லூக் 9:42மாற் 5:3-5மாற் 5:8மாற் 9:20-26

இயேசு பிசாசு பிடித்தருந்தவனை, “உனது பெயர் என்ன?” என்று கேட்டார். மத் 26:53லூக் 8:2மத் 8:29மாற் 16:9மாற் 5:9

அவன் அதற்குப் பதிலாக, “லேகியோன்” என்றான். ஏனெனில், பல தீய ஆவிகள் அவனுக்குள் புகுந்திருந்தன. தீய ஆவிகள் இயேசுவிடம், தங்களை பாதாளத்திற்குப் போகக் கட்டளையிடாதபடி கெஞ்சிக்கேட்டன. மத் 25:41யோபு 1:11யோபு 2:5லூக் 8:28பிலி 2:10-11வெளி 11:7வெளி 17:8வெளி 19:20

அங்கிருந்த மலைப்பகுதியில், பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன. பிசாசுகள் தாங்கள் அந்தப் பன்றிகளுக்குள்ளே போவதற்கு, இயேசு அனுமதிக்கவேண்டும் என்று, அவரைக் கெஞ்சிக்கேட்டன. அப்படியே அவர் அவைகளுக்கு அனுமதி கொடுத்தார். ஏசா 65:4ஏசா 66:31 யோவா 4:41 இராஜா 22:22யோவா 19:11யோபு 1:10யோபு 1:12யோபு 2:6 பிசாசுகள், அவனைவிட்டுப் புறப்பட்டுப் பன்றிகளுக்குள்ளே புகுந்தன. அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கீழே பாய்ந்து, ஏரியில் விழுந்து மூழ்கியது. 1 பேது 5:8யோவா 8:44லூக் 8:22-23வெளி 9:11

பன்றிகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் பன்றிகளுக்கு நடந்ததைக் கண்டபோது, ஓடிப்போய் பட்டணத்தில் உள்ளவர்களுக்கும், நாட்டுப்புறத்தில் உள்ளவர்களுக்கும் அதை அறிவித்தார்கள். மாற் 5:14அப் 19:16-17மத் 28:11மத் 8:33 என்ன நடந்தது என அறியும்படி, மக்கள் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, பிசாசுகளிலிருந்து விடுதலை பெற்றவன், உடை உடுத்தி மனத்தெளிவடைந்தவனாய், இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்திருப்பதைக் கண்டு பயந்தார்கள். லூக் 10:391 யோவா 3:8அப் 22:3சங் 51:10எபி 2:14-15ஏசா 53:12லூக் 8:27ஏசா 49:24-25 சம்பவித்ததைக் கண்டவர்கள், பிசாசு பிடித்திருந்தவன் எவ்விதமாய் குணமடைந்தான் என்று அங்கு வந்த மக்களுக்குச் சொன்னார்கள். மத் 4:24 அப்பொழுது கதரேனர் நாட்டிலுள்ள மக்கள் எல்லோரும் பயமடைந்ததினால், தங்களைவிட்டுப் போய்விடும்படி இயேசுவை வேண்டிக்கொண்டார்கள். எனவே, அவர் படகில் ஏறி புறப்பட்டுப் போனார். அப் 16:39லூக் 5:81 இராஜா 17:181 சாமு 6:20உபா 5:25யோபு 21:14-15லூக் 10:10-11லூக் 10:16

பிசாசுகளிலிருந்து விடுதலை பெற்றவன், தானும் இயேசுவுடனேகூடப் போகும்படி அவரைக் கெஞ்சிக்கேட்டான். ஆனால் இயேசு அப் 9:13-16மாற் 5:18-20சங் 145:3-121 தீமோ 1:13-16உபா 10:20-21யாத் 12:25-27யாத் 13:14-16யாத் 13:8-9 அவனிடம், “நீ உன் வீட்டிற்குத் திரும்பிப்போய், இறைவன் உனக்கு செய்ததையெல்லாம் அறிவி” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார். அப்படியே அவன் புறப்பட்டுப், பட்டணத்திலுள்ள எல்லோருக்கும் இயேசு தனக்கு எவ்வளவு பெரிய காரியத்தைச் செய்தார் என்பதைக் குறித்துச் சொன்னான். 1 தீமோ 5:8யோவா 4:29லூக் 17:15-18உபா 10:21தானி 4:1-3தானி 4:34-37மாற் 1:45சங் 126:2-3

இறந்த சிறுமியும் நோயுற்ற பெண்ணும்

இயேசு திரும்பிவந்தபோது, அவருக்காக காத்துக்கொண்டிருந்த மக்கள் அவரை வரவேற்றனர். மத் 9:1மாற் 5:21மாற் 6:20அப் 10:33யோவா 5:35லூக் 19:37-38லூக் 19:48லூக் 19:6 அப்பொழுது ஜெப ஆலயத் தலைவனான யவீரு என்னும் பெயருடைய ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, அவரைத் தன்னுடைய வீட்டிற்கு வரும்படி கெஞ்சினான். மாற் 5:22-43அப் 13:15அப் 18:8லூக் 13:14லூக் 8:49அப் 18:17அப் 9:38யோவா 4:46-49 ஏனெனில், அவனுடைய ஒரே மகளான பன்னிரண்டு வயதுடைய சிறுமி மரணத் தருவாயில் இருந்தாள். லூக் 7:12லூக் 8:45மாற் 5:24பிரச 6:12எசேக் 24:16எசேக் 24:25ஆதி 44:20-22யோபு 1:18-19

இயேசு வழியே அவனுடன் போய்க்கொண்டிருக்கையில், மக்கள் கூட்டம் அவரைச் சுற்றி நெருக்கிக் கொண்டிருந்தது. அக்கூட்டத்தில், பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினால் வருந்திக்கொண்டிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் தன் சொத்து முழுவதையும் மருத்துவரிடம் செலவழித்தும் அவளை எவராலும் குணமாக்க முடியவில்லை. மாற் 5:25-26மத் 9:20-22லேவி 15:25-33லூக் 13:162 நாளாக 16:12மாற் 9:21-22ஏசா 2:22ஏசா 55:1-3 அவள் இயேசுவுக்குப் பின்னால் வந்து, அவருடைய மேலுடையின் ஓரத்தைத் தொட்டாள். உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றது. மாற் 5:27-28உபா 22:12அப் 19:12மல்கி 4:2யாத் 15:26யோவா 5:13லூக் 13:13லூக் 7:38

அப்பொழுது இயேசு, “என்னைத் தொட்டது யார்?” என்று கேட்டார். லூக் 9:13லூக் 5:5மாற் 5:30-32

அனைவரும் மறுத்தனர். அப்போது, பேதுரு அவரிடம், “ஐயா, மக்கள் கூட்டமாய்க் கூடி உம்மை நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே” என்றான்.

ஆனால் இயேசுவோ, “யாரோ ஒருவர் என்னைத் தொட்டிருக்கிறார்; என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை நான் அறிவேன்” என்றார். லூக் 6:19லூக் 5:171 பேது 2:9

அப்பொழுது அந்தப் பெண், தான் மறைந்திருக்க முடியாதென்று கண்டு, நடுங்கிக்கொண்டுவந்து, அவருடைய பாதத்தில் விழுந்தாள். அவள் எல்லா மக்களுக்கு முன்பாகவும், தான் அவரைத் தொட்ட காரணத்தையும், தான் உடனே குணமடைந்ததையும் அறிவித்தாள். மாற் 5:331 கொரி 2:3லூக் 17:15-161 சாமு 16:42 கொரி 7:15அப் 16:29எபி 12:28ஆப 3:16 அப்பொழுது இயேசு அவளிடம், “மகளே, உன் விசுவாசம் உன்னை குணப்படுத்தியது. சமாதானத்தோடே போ” என்றார். லூக் 7:50மத் 9:22எபி 4:2அப் 14:9லூக் 17:19மாற் 5:341 சாமு 1:172 கொரி 6:18

இயேசு இன்னும் பேசிக்கொண்டிருக்கையில், ஜெப ஆலயத் தலைவன் யவீருவின் வீட்டில் இருந்து ஒருவன் வந்தான். அவன் யவீருவிடம், “உமது மகள் இறந்துவிட்டாள். இனிமேலும் போதகரைத் தொந்தரவு செய்யவேண்டாம்” என்றான். மாற் 5:35-43ஏசா 7:12லூக் 7:6லூக் 11:7லூக் 8:41-43மத் 9:23-26

இயேசு இதைக் கேட்டதும் யவீருவிடம், “பயப்படாதே; விசுவாசமுள்ளவனாய் மட்டும் இரு. அவள் பிழைப்பாள்” என்றார். யோவா 11:40யோவா 11:25மாற் 5:36மாற் 11:22-24லூக் 8:48ரோம 4:17ஏசா 50:10மாற் 9:23

அவர் யவீருவினுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது, பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோருடன், அந்தப் பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தவிர, வேறு ஒருவரையும் தன்னுடன் உள்ளே போக அவர் அனுமதிக்கவில்லை. 1 இராஜா 17:19-232இராஜா 4:4-6ஏசா 42:2லூக் 9:28மத் 6:5-6மாற் 14:33அப் 9:40லூக் 6:14 இதற்கிடையில், அங்கிருந்த மக்களெல்லாரும் இறந்த சிறுமிக்காக அழுது புலம்பிக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “அழாதீர்கள். இவள் இறந்து போகவில்லை, தூங்குகிறாள்” என்றார். யோவா 11:4லூக் 23:272 சாமு 18:33யாத் 24:17ஆதி 23:2ஆதி 27:34-35எரே 9:17-21யோவா 11:11-13

அவள் இறந்துபோனதை அறிந்திருந்த மக்கள், அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஏசா 53:3லூக் 16:14யோவா 11:39யோவா 19:33-35யோபு 12:4யோபு 17:2மாற் 15:44-45சங் 22:7 ஆனால் இயேசு அவளுடைய கையைப் பிடித்து, “பிள்ளையே, எழுந்திரு!” என்றார். எரே 31:32அப் 9:40யோவா 11:43யோவா 5:21யோவா 5:28-29லூக் 7:14-15லூக் 8:51மத் 9:25 அப்பொழுது, அவளுடைய உயிர் திரும்பவும் வந்தது. உடனே அவள் எழுந்து உட்கார்ந்தாள். இயேசு அவர்களிடம், அவளுக்குச் சாப்பிட ஏதாவது கொடுக்கும்படி சொன்னார். யோவா 11:441 இராஜா 17:21-23லூக் 24:41-43மாற் 5:43 அவளுடைய பெற்றோர்கள் வியப்படைந்தார்கள். இயேசு அவர்களிடம், “நடந்த சம்பவத்தை யாருக்கும் சொல்லவேண்டாம்” என்று கட்டளையிட்டார். மத் 8:4மத் 9:30லூக் 5:14மாற் 5:42-43