1 தீமோத்தேயு 5

1 Timothy 5

புத்திமதிகள்

முதியவர்களை கடுமையாகக் கண்டிக்காதே, அவரை உன் தந்தையைப்போல் மதித்து, அறிவுரை கூறு. இளைஞரை உனது சகோதரர்களைப் போலவும், லேவி 19:321 பேது 5:5-6கலா 6:1தீத் 2:21 பேது 5:11 தீமோ 5:19-20மத் 23:8தீத் 2:6 பெண்களில் முதியவர்களைத் தாய்களைப் போலவும், இளம்பெண்களைச் சகோதரிகளைப்போலவும் எண்ணி, முழுமையான தூய்மையோடு அவர்களிடம் நடந்துகொள். 1 தீமோ 4:12மத் 12:50பிலி 4:81 தீமோ 5:32 தீமோ 2:22யோவா 19:26-271 தெச 5:22

உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு ஏற்ற ஆதரவைக்கொடு. உபா 27:19அப் 6:1உபா 10:18உபா 14:291 பேது 2:171 தெச 2:61 தீமோ 5:16-171 தீமோ 5:4-5 ஆனால் ஒரு விதவைக்குப் பிள்ளைகளோ, பேரப்பிள்ளைகளோ இருந்தால், முதலாவது அவர்கள் தங்களுடைய சொந்தக் குடும்பத்தைப் பராமரிப்பதின் மூலம், இறை பக்தியை நடைமுறைப்படுத்தக் கற்றுக்கொள்ளட்டும்; இப்படித் தங்கள் பெற்றோருக்கும், பெற்றோரின் பெற்றோருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யட்டும். ஏனெனில், இதுவே இறைவனுக்குப் பிரியமாயிருக்கிறது. எபே 6:1-3யோவா 19:26-27மத் 15:4-6ஆதி 47:121 தீமோ 2:3ஆதி 45:10-11மாற் 7:11-131 சாமு 22:3-4 ஒரு விதவை உண்மையாகவே தேவையுடையவளாக இருந்து, கைவிடப்பட்டுத் தனிமையாக இருந்தால், அவள் தனது எதிர்பார்ப்பை இறைவனிலேயே வைத்திருக்கிறாள். அவள் இரவும் பகலும் இறைவனிடம் மன்றாடுவதிலும், உதவி கேட்பதிலும் நிலைத்திருப்பாள். 1 தீமோ 5:3லூக் 2:371 கொரி 7:321 பேது 3:51 தீமோ 5:16லூக் 18:1சங் 91:4எபே 6:18 ஆனால் ஒரு விதவை உலக இன்பத்தில் வாழ்வதை விரும்பினால், அவள் வாழ்ந்தாலும் நடைபிணமே. யாக் 5:5லூக் 15:24வெளி 18:7வெளி 3:1லூக் 15:32எபே 2:1எபே 5:14லூக் 15:13 ஒருவர் மேலும் குற்றஞ்சாட்டப்படாதபடி, இந்த அறிவுறுத்தலையும் எல்லா மக்களுக்கும் கொடு. 1 தீமோ 4:11தீத் 2:152 தீமோ 4:1தீத் 1:131 தீமோ 1:31 தீமோ 6:17 யாராவது தனது உறவினர்களுக்கு, குறிப்பாக தன் சொந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவிசெய்யாவிட்டால், அவன் தனது விசுவாசத்தையே மறுதலிக்கிறான். அவன் விசுவாசம் இல்லாதவனைவிடக் கேவலமானவன். கலா 6:102 கொரி 12:14லூக் 11:11-13ஏசா 58:7தீத் 1:16மத் 7:112 தீமோ 3:5ஆதி 30:30

ஒரு விதவை அறுபது வயதிற்கு மேற்பட்டவளாயும், ஒரே கணவனுக்கு உண்மையுள்ள மனைவியாகவும் இருந்திருந்தால் மட்டுமே, அவளை விதவைகளின் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். 1 தீமோ 3:21 தீமோ 5:11லூக் 2:36-371 கொரி 7:10-111 கொரி 7:39-401 தீமோ 3:121 தீமோ 5:141 தீமோ 5:3-4 அத்துடன் அவள் தனது நல்ல செயல்களினால், அதாவது தன் பிள்ளைகளை வளர்த்தெடுத்தல், உபசரிக்கும் பண்பு, பரிசுத்தவான்களின் பாதங்களைக் கழுவுதல், கஷ்டத்தில் இருக்கிறவர்களுக்கு உதவி செய்தல் போன்ற எல்லா விதமான நல்ல செயல்களிலும் தன்னை ஈடுபடுத்தியவளாக, மற்றவர்களால் நற்சாட்சி பெற்றிருக்கவேண்டும். 1 தீமோ 6:18தீத் 3:8அப் 9:36தீத் 2:7தீத் 3:12 தீமோ 3:17லூக் 7:44மத் 5:16

இந்தப் பட்டியலில் இளம் விதவைகளைச் சேர்த்துக்கொள்ளாதே. ஏனெனில் அவர்களுடைய உடல் இச்சைகள், அவர்களை கிறிஸ்துவின் அர்ப்பணிப்பிலிருந்து பிரிக்கும்போது, அவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள். 1 தீமோ 5:14ஓசி 13:6யாக் 5:51 கொரி 7:39-40ஏசா 3:161 தீமோ 4:31 தீமோ 5:92 பேது 2:18 இப்படி அவர்கள் முதலில் செய்த வாக்குறுதியை மீறுவதனால், அவர்கள் தங்களுக்கே நியாயத்தீர்ப்பைக் கொண்டுவருவார்கள். கலா 1:6யாக் 3:11 கொரி 11:341 பேது 4:17வெளி 2:4-5 அதுத்தவிர அவர்கள் சோம்பல்தனமுள்ளவர்களாகி, வீட்டுக்கு வீடு போகப் பழகிக்கொள்வார்கள். அவர்கள் சோம்பேறிகளாக மட்டுமல்ல, பிறர் காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும், தேவையற்ற காரியங்களில் தலையிடுகிறவர்களாகவும் இருந்து, வீணான காரியங்களைப் பேசித்திரிவார்கள். நீதி 20:192 தெச 3:6-11நீதி 31:271 பேது 4:15அப் 20:20அப் 20:30யாக் 3:10லேவி 19:16 எனவே இளம் விதவைகள் திருமணம் செய்து, பிள்ளைகளைப் பெற்று, தங்களுடைய குடும்பத்தை நடத்தவேண்டும் என்பதே நான் அவர்களுக்குக் கொடுக்கும் ஆலோசனை. அப்பொழுது இதன் நிமித்தம் பகைவன் அவதூறு பேசுவதற்கு இடமில்லாமல் போகும். தீத் 2:51 தீமோ 6:11 கொரி 7:8-9நீதி 31:27-29தீத் 2:81 தீமோ 4:3தானி 6:4எபி 13:4 ஏனெனில் சிலர் ஏற்கெனவே வழிதவறி சாத்தானின் பின்னே போய்விட்டார்கள். 2 பேது 2:2யூதா 1:4-52 பேது 2:20-221 யோவா 2:191 தீமோ 1:202 தீமோ 4:10பிலி 3:18-192 பேது 3:16

ஒரு விசுவாச பெண்ணின் குடும்பத்தில் விதவைகள் இருந்தால், அந்த விசுவாசியே அவர்களைப் பராமரிக்க வேண்டும். திருச்சபையின்மேல் இந்தப் பாரத்தைச் சுமத்தக் கூடாது. அப்பொழுதுதான், உண்மையாகவே தேவையுள்ள விதவைகளுக்கு திருச்சபை உதவிசெய்ய முடியும். 1 தீமோ 5:3-51 தீமோ 5:8

திருச்சபையை நன்றாய் நடத்தும் தலைவர்கள் இரட்டிப்பான மதிப்பிற்குரியவர்களாகக் கருதப்பட வேண்டும். விசேஷமாக பிரசங்கம் பண்ணுவதிலும், போதிப்பதிலும் ஈடுபடும் தலைவர்களை பாத்திரராக எண்ணவேண்டும். எபி 13:171 தெச 5:12-13கலா 6:6லூக் 10:7எபி 13:72 தீமோ 2:6பிலி 2:29ரோம 12:8 ஏனெனில், “தானியக்கதிரை போரடிக்கும் எருதின் வாயைக் கட்டவேண்டாம்” 1 என்றும் “வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரவானாயிருக்கிறான்” 2 என்றும், வேதவசனம் சொல்லுகிறதே. உபா 25:41 கொரி 9:141 கொரி 9:7-10லூக் 10:7மத் 10:10உபா 24:14-15லேவி 19:13யாக் 4:5 ஒரு சபைத்தலைவனுக்கு எதிரான குற்றச்சாட்டு, இரண்டு அல்லது மூன்று பேருடைய சாட்சியங்களுடன் கொண்டுவரப்பட்டாலன்றி, அதை ஏற்றுக்கொள்ளாதே. மத் 18:16உபா 19:152 கொரி 13:1உபா 17:6தீத் 1:6எபி 10:28அப் 25:16உபா 19:18-19 பாவம் செய்கிற சபைத்தலைவர்களை எல்லோர் முன்னிலையிலும் கடிந்துகொள். அப்பொழுது மற்றவர்களுக்கு அது ஒரு எச்சரிக்கையாயிருக்கும். 2 தீமோ 4:21 தீமோ 1:20உபா 13:11தீத் 1:13அப் 5:11கலா 2:11-14அப் 5:5உபா 19:20 இறைவனின் முன்னிலையிலும், கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும், தெரிந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் முன்னிலையிலும் நான் உனக்குக் கட்டளையிடுவதாவது: பட்சபாதமாக எதையும் செய்யாமல், நடுநிலையினின்று, இந்த அறிவுறுத்தல்களைக் கைக்கொள். 1 தீமோ 6:132 தீமோ 4:12 பேது 2:41 தெச 5:272 கொரி 5:162 தீமோ 2:14யூதா 1:6யாக் 2:1-4

ஊழியத்தில் அமர்த்துவதற்கு அவசரப்பட்டு ஒருவன்மேலும் கைகளை வைக்காதே. மற்றவர்களுடைய பாவங்களில் பங்குகொள்ளாதே. உன்னைத் தூய்மையுள்ளவனாய் காத்துக்கொள். எபே 5:111 தீமோ 3:101 தீமோ 3:61 தீமோ 4:14அப் 6:62 யோவா 1:112 தீமோ 1:62 தீமோ 2:2

நீ தொடர்ந்து தண்ணீர் மட்டும் குடிப்பதைவிட்டு, உனது வயிற்றின் நலனுக்காகவும், அடிக்கடி உனக்கு வருகிற வருத்தத்திற்காகவும், திராட்சைரசத்தையும் கொஞ்சம் குடி. சங் 104:15நீதி 31:4-71 தீமோ 4:41 தீமோ 3:31 தீமோ 3:8எபே 5:18எசேக் 44:21லேவி 10:9-11

சிலரின் பாவங்கள் வெளிப்படையானதாய் இருப்பதால், நியாயத்தீர்ப்பிற்கு, அவர்கள் போகுமுன்பே அவை போய் சேருகின்றன; மற்றவர்களுடைய பாவங்களோ அவர்களுக்குப் பின்னால் வந்து சேருகின்றன. 2 தீமோ 4:10அப் 8:182 பேது 2:20-21அப் 1:16-20அப் 5:1-11கலா 5:19-21எரே 2:34 அதுபோலவே, நல்ல செயல்களும் வெளிப்படையாய் இருக்கின்றன. அப்படி வெளிப்படாதவையும் தொடர்ந்து மறைந்திருப்பதில்லை. நீதி 10:9லூக் 11:33மத் 6:3-6சங் 37:5-61 தீமோ 3:7அப் 10:22அப் 16:1-3அப் 22:12