லூக்கா 19

Luke 19

வரி வசூலிக்கும் சகேயு

இயேசு எரிகோ பட்டணத்திற்கு வந்து, அதன் வழியாகப்போய்க் கொண்டிருந்தார். யோசு 6:1-27லூக் 18:351 இராஜா 16:342இராஜா 2:18-22யோசு 2:1 அங்கே சகேயு என்னும் பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் வரி வசூலிப்பவர்களின் தலைவனாகவும், செல்வந்தனாகவும் இருந்தான். லூக் 18:24-272 நாளாக 17:5-6 அவன் இயேசு யார் என்று பார்க்க விரும்பினான். ஆனால், அவன் குள்ளனானபடியால், மக்கள் கூட்டத்தில் அவரைப் பார்க்க முடியவில்லை. லூக் 23:8யோவா 12:21லூக் 9:7-9லூக் 12:25 எனவே, சகேயு அவரைப் பார்க்கும்படி முன்னே ஓடிப்போய், ஒரு காட்டத்தி மரத்தில் ஏறிக்கொண்டான். ஏனெனில், இயேசு அந்த வழியாகவே வந்துகொண்டிருந்தார். ஏசா 9:10லூக் 5:191 நாளாக 27:281 இராஜா 10:27ஆமோ 7:14சங் 78:47

இயேசு அவ்விடத்திற்கு வந்தபொழுது, அவர் மேலே அண்ணார்ந்து பார்த்து, “சகேயுவே, உடனடியாய் கீழே இறங்கி வா. நான் இன்றைக்கு உன்னுடைய வீட்டில் தங்கவேண்டும்” என்று, அவனுக்குச் சொன்னார். வெளி 3:20யோவா 14:23எசேக் 16:6எபி 13:2எபே 3:17லூக் 19:10ஆதி 18:3-5யோவா 1:48 அவன் உடனே இறங்கிவந்து, அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றான். அப் 16:34லூக் 5:29அப் 16:15அப் 2:41கலா 1:15-16ஆதி 18:6-7ஏசா 64:5லூக் 2:16

இதைக் கண்ட யாவரும், “ஒரு ‘பாவியினுடைய’ வீட்டிற்கு இவர் விருந்தாளியாய் வந்திருக்கிறாரே” என்று, முறுமுறுக்கத் தொடங்கினார்கள். லூக் 15:2லூக் 7:34லூக் 7:39மத் 9:11லூக் 18:9-14லூக் 5:30மத் 21:28-31

ஆனால் சகேயுவோ, எழுந்து நின்று கர்த்தரிடம், “ஆண்டவரே, இதோ நான் என்னுடைய சொத்துக்களில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன். யாருக்காவது எதிலாவது மோசடி செய்திருந்தால் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுப்பேன்” என்றான். 2 சாமு 12:6எண் 5:7லூக் 18:22-23லேவி 6:1-6நீதி 6:31யாத் 22:1-4லூக் 12:33லூக் 16:9

அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து, “இன்றைக்கு இந்த வீட்டிற்கு இரட்சிப்பு வந்தது. ஏனெனில், இவனும் ஆபிரகாமிற்கு மகனாயிருக்கிறானே. கலா 3:7லூக் 13:16ரோம 4:16அப் 16:30-321 பேது 2:10கலா 3:29யோவா 4:38-42லூக் 3:8 வழிதவறிப் போனவர்களைத் தேடி இரட்சிப்பதற்காகவே மானிடமகனாகிய நான் வந்திருக்கிறேன்” என்றார். எசேக் 34:16மத் 1:211 தீமோ 1:13-16லூக் 5:31-32லூக் 15:4-7மத் 9:12-13ரோம 5:6மத் 15:24

பத்து நாணயங்களின் உவமை

அவர் எருசலேமுக்கு அருகில் இருந்ததாலும், இறைவனுடைய அரசு சீக்கிரமாகவே வரப்போகிறது என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்ததாலும், இதைக் கேட்டுக்கொண்டிருந்த மக்களுக்கு இயேசு ஒரு உவமையைச் சொன்னார்: லூக் 17:20அப் 1:62 தெச 2:1-3 “எஜமானனாகிய ஒருவன், தான் ஒரு அரசை பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி, தூரத்திலுள்ள நாட்டிற்குப் புறப்பட்டான். மத் 25:14-30எபி 9:28லூக் 19:12-271 பேது 3:22லூக் 20:9மத் 21:38மாற் 12:11 கொரி 15:25 புறப்படும்போது, அவன் தன் வேலையாட்களில் பத்துப்பேரைக் கூப்பிட்டு, அவர்களிடம் பத்து பொற்காசுகளைக் 1 கொடுத்து, ‘நான் வரும்வரை இந்தப் பணத்தைக்கொண்டு வியாபாரம் செய்யுங்கள்’ என்றான். மத் 25:14-15யோவா 12:261 கொரி 12:7-111 பேது 4:9-11ரோம 12:6-81 கொரி 12:28-292 பேது 1:1யாக் 1:1

“ஆனால், அவனுடைய குடிமக்களோ அவனை வெறுத்து, ‘இவன் எங்கள்மேல் அரசனாவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று சொல்லும்படி, அவனுக்குப் பின்னாலே பிரதிநிதிகளை அனுப்பினார்கள். 1 சாமு 8:7அப் 7:51-52அப் 3:14-15யோவா 1:11யோவா 15:18யோவா 15:23-24லூக் 19:27சங் 2:1-3

“ஆனால், அவன் அரசனாக அதிகாரம் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தான். பின்பு அவன், தான் சம்பளத்தைக் கொடுத்த வேலையாட்கள் இன்னும் எவ்வளவு சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறியும்படி, அவர்களை அழைத்தான். 1 கொரி 4:1-5ரோம 14:10-12லூக் 12:48லூக் 16:2-13மத் 18:23-35மத் 25:19சங் 2:4-6

“முதலாவது வேலையாள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு பொற்காசு இன்னும் பத்து பொற்காசுகளைச் சம்பாதித்திருக்கிறது’ என்றான். 1 கொரி 15:102 தீமோ 4:7-8யாக் 2:18-26கொலோ 1:28-291 நாளாக 29:14-16

“அதற்கு அவனுடைய எஜமான், ‘நன்றாய் செய்தாய், நல்ல வேலைக்காரனே, நீ மிகவும் சிறிய காரியத்தில் உண்மை உள்ளவனாய் இருந்தபடியால், பத்துப் பட்டணங்களுக்கு நீ பொறுப்பாயிரு’ என்றான். லூக் 16:10மத் 25:21வெளி 2:26-291 சாமு 2:301 பேது 1:71 கொரி 4:5ஆதி 39:41 பேது 5:4

“இரண்டாவது வேலையாள் வந்து, ‘ஐயா, உம்முடைய ஒரு பொற்காசு இன்னும் ஐந்து பொற்காசுகளைச் சம்பாதித்திருக்கிறது’ என்றான். மத் 13:23மாற் 4:202 கொரி 8:12

“அதற்கு அவனுடைய எஜமான், ‘நீ ஐந்து பட்டணங்களுக்குப் பொறுப்பாயிரு’ என்றான். 1 கொரி 15:58ஏசா 3:101 கொரி 15:41-422 கொரி 9:62 யோவா 1:81 கொரி 3:8

“பின்பு இன்னொரு வேலையாள் வந்து, ‘ஐயா, இதோ, உம்முடைய ஒரு பொற்காசு. இதை ஒரு கைக்குட்டையில் வைத்திருந்தேன். மத் 25:24நீதி 26:13-16யாக் 4:17லூக் 19:13லூக் 3:9லூக் 6:46 நீர் கடினமான மனிதர். ஆனபடியால், நான் பயந்திருந்தேன். நீர் வைக்காததை எடுக்கிறவர் என்றும், விதைக்காததை அறுவடைச் செய்கிறவர் என்றும் எனக்குத் தெரியும்’ என்றான். மத் 25:24-251 யோவா 4:181 சாமு 12:201 சாமு 6:19-212 சாமு 6:9-112 தீமோ 1:7யாத் 20:19-20எசேக் 18:25-29

“அதற்கு அவனுடைய எஜமான் அவனிடம், ‘பொல்லாத வேலைக்காரனே, உன்னுடைய சொந்த வார்த்தைகளின்படியே, நான் உனக்குத் தீர்ப்புக் கொடுக்கிறேன்; நான் ஒரு கடினமான மனிதன், வைக்காததை எடுக்கிறவர் என்றும், விதைக்காததை அறுவடைச் செய்கிறவன் என்றும் உனக்குத் தெரியும் அல்லவா? 2 சாமு 1:16யோபு 15:5-6மத் 12:37மத் 22:12மத் 25:26-27ரோம 3:19 அப்படியானால், நீ ஏன் எனது பணத்தை வட்டிக்கடையில் போடவில்லை? நான் திரும்பி வரும்போது அந்தப் பணத்தை வட்டியோடு வாங்கிக்கொள்ளக் கூடியதாய் இருந்திருக்குமே’ என்றான். உபா 23:19-20யாத் 22:25-27ரோம 2:4-5

“பின்பு அந்த எஜமான், அருகே நின்றவர்களைப் பார்த்து, ‘அந்த ஒரு பொற்காசை அவனிடமிருந்து எடுத்து, பத்து பொற்காசுகளை வைத்திருப்பவனுக்குக் கொடுங்கள்’ என்றான். லூக் 12:20லூக் 16:2

“அதற்கு அவர்கள், ‘ஐயா, அவனிடம் பத்து பொற்காசுகள் இருக்கிறதே’ என்றார்கள். 2 சாமு 7:19ஏசா 55:8-9லூக் 16:2

“அவன் அதற்குப் பதிலாக, ‘நான் உங்களுக்குச் சொல்கிறேன், இருக்கிற ஒவ்வொருவனுக்கும் இன்னும் அதிகம் கொடுக்கப்படும். இல்லாதவனிடத்திலிருந்தோ, உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 2 யோவா 1:8லூக் 8:18மத் 13:12மத் 21:43மத் 25:28-29மாற் 4:251 சாமு 15:281 சாமு 2:30 நான் தங்கள்மேல் அரசனாயிருப்பதை விரும்பாத என்னுடைய பகைவர்களான அவர்களை, இங்கே கொண்டுவாருங்கள். அவர்களை என் கண் முன்பாகவே கொன்றுபோடுங்கள்’ என்றான்.” லூக் 19:14சங் 21:8-9லூக் 21:22மத் 22:7எண் 16:30-35எபி 10:13நாகூ 1:8சங் 2:9

எருசலேமில் இயேசு

இவைகளை இயேசு சொன்னபின்பு, அவர் தொடர்ந்து எருசலேமை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். லூக் 9:511 பேது 4:1எபி 12:2லூக் 12:50மாற் 10:32-34சங் 40:6-8லூக் 18:31யோவா 18:11 அவர் ஒலிவமலை என்று அழைக்கப்பட்ட குன்றுக்கு அருகேயிருந்த பெத்பகே, பெத்தானியா ஆகிய இடங்களுக்கு வந்தபோது அவர், தம்முடைய சீடர்களில் இருவரைக் கூப்பிட்டு, அப் 1:12மத் 21:1-11மத் 21:17மாற் 11:1-11சகரி 14:4யோவா 12:12-16லூக் 19:37லூக் 21:37 “உங்களுக்கு முன்னேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள். நீங்கள் அதற்குள் போகும்போது, அங்கே ஒரு கழுதைக்குட்டி கட்டியிருப்பதைக் காண்பீர்கள். அதில் ஒருவருமே இதுவரை ஏறிச்சென்றதில்லை. அதை அவிழ்த்து, இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள். லூக் 22:8-13யோவா 14:29லூக் 19:321 சாமு 10:2-9 யாராவது உங்களிடம், ‘அதை ஏன் அவிழ்க்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது கர்த்தருக்குத் தேவைப்படுகிறது’ என்று சொல்லுங்கள்” என்றார். மாற் 11:3-6சங் 24:1சங் 50:10-12அப் 10:36மத் 21:2-3

இப்படியாக, அனுப்பப்பட்டவர்கள் போய் இயேசு தங்களுக்குச் சொல்லியிருந்தபடியே இருக்கக் கண்டார்கள். லூக் 22:13 அவர்கள் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறபொழுது, அதன் உரிமையாளர்கள் அவர்களைப் பார்த்து, “நீங்கள் ஏன் அந்தக் கழுதைக்குட்டியை அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், “கர்த்தருக்கு இது தேவைப்படுகிறது” என்றார்கள். சகரி 9:9யோவா 10:352 கொரி 8:9யோவா 12:16

சீடர்கள் அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் மேலுடைகளை அந்தக் கழுதைக் குட்டியின்மேல் போட்டு, அதன்மேல் இயேசுவை உட்கார வைத்தார்கள். யோவா 12:14மத் 21:7மாற் 11:7-82இராஜா 9:13கலா 4:15-16 அவர் போய்க்கொண்டிருக்கையில், மக்கள் தங்களுடைய மேலுடைகளை வீதியிலே விரித்தார்கள். 2இராஜா 9:13மத் 21:8

ஒலிவமலையிலிருந்து கீழ்நோக்கிப் போகிற பாதை இருக்கிற இடத்துக்கு இயேசு வந்தபொழுது, திரளாய்க் கூடியிருந்த சீடர்கள் எல்லோரும் தாங்கள் கண்ட எல்லா அற்புதங்களுக்காகவும் மகிழ்ச்சியுடன், உரத்த குரலில் இறைவனைத் துதிக்கத் தொடங்கினார்கள்: எஸ்றா 3:10-13யோவா 12:12-13மத் 21:11 நாளாக 15:281 நாளாக 16:4-71 இராஜா 8:55-562 நாளாக 29:28-302 நாளாக 29:36

“கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசர் ஆசீர்வதிக்கப்பட்டவர்!” சகரி 9:9லூக் 13:35சங் 118:22-26மத் 21:9மாற் 11:9-10சங் 72:17-191 பேது 1:121 தீமோ 1:17

“பரலோகத்தில் சமாதானமும், உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக!” 2

மக்கள் கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, உமது சீடரைக் கண்டியும்” என்றார்கள். அப் 4:1-2மத் 23:13அப் 4:16-18யாக் 4:5யோவா 12:19யோவா 12:10மத் 21:15-16ஏசா 26:11

அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் பேசாமல் மவுனமாய் இருந்தால், இந்தக் கல்லுகளே சத்தமிடும்” என்றார். ஆப 2:11ஏசா 55:12மத் 3:9சங் 96:11சங் 98:7-9சங் 114:1-8மத் 27:51-54மத் 21:15-16

அவர் எருசலேமுக்கு அருகில் வந்தபோது, அந்தப் பட்டணத்தைப் பார்த்து, அதற்காக அழுது, லூக் 13:34-35யோவா 11:35சங் 119:136எரே 13:17எரே 17:16எரே 9:1சங் 119:158சங் 119:53 “உங்களுக்குச் சமாதானத்தைத் தரக்கூடியதை, இன்றைக்காவது நீங்கள் அறிந்திருக்கக் கூடாதபடி அது இப்பொழுதும், உங்கள் பார்வைக்கு மறைக்கப்பட்டதாகவே இருக்கிறது. உபா 32:29எபி 10:26-29ஏசா 48:18லூக் 1:77-792 கொரி 6:1-22 கொரி 3:14-162 கொரி 4:3-4எபி 3:15 உங்கள் பகைவர் பட்டணத்தைச்சுற்றி அரண்களை அமைத்து, உங்களை முற்றுகையிட்டு, எல்லாப் பக்கங்களிலும் இருந்து உங்களை நெருக்கும் நாட்கள் உங்கள்மேல் வரும். லூக் 21:20-24ஏசா 29:1-4எசேக் 26:8எசேக் 4:2தானி 9:26-27உபா 28:49-58ஏசா 37:33எரே 6:3-6 அவர்கள் உங்களையும், மதிலுக்குள்ளே உங்களோடிருக்கிற உங்கள் பிள்ளைகளையும், தரையில் மோதியடிப்பார்கள். அவர்களோ, ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடி கட்டடங்களை இடித்துப் போடுவார்கள். ஏனெனில், இறைவன் உங்களிடம் வரும் காலத்தை நீங்கள் அறிந்துகொள்ளவில்லை” என்றார். லூக் 13:34-35லூக் 21:61 பேது 2:12யோவா 3:18-21புலம் 1:8லூக் 19:42மத் 23:37-38தானி 9:24

ஆலயத்தில் இயேசு

பின்பு இயேசு ஆலய முற்றத்திற்குச் சென்று, அங்கே பொருட்கள் விற்றுக் கொண்டிருந்தவர்களைத் துரத்தத் தொடங்கினார். மத் 21:12-13மாற் 11:15-17யோவா 2:13-17உபா 14:25-26 இயேசு அவர்களிடம், “எனது வீடு ஒரு ஜெபவீடாயிருக்கும் என்று எழுதியிருக்கிறதே; 3 ஆனால், நீங்கள் அதைக் கள்வரின் குகையாக்கியிருக்கிறீர்கள்” 4 என்றார். ஏசா 56:7எரே 7:11எசேக் 43:12சங் 93:5மத் 23:13ஓசி 12:7

அவர் ஒவ்வொரு நாளும் ஆலயத்திலே போதித்துக் கொண்டிருந்தார். தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியரும், மக்கள் தலைவர்களும், அவரைக் கொலைசெய்வதற்கு முயற்சிசெய்தார்கள். மாற் 11:18மத் 26:55மாற் 11:27-33லூக் 21:37-38யோவா 10:39யோவா 11:53-57யோவா 18:20யோவா 7:19 இருந்தும், எல்லா மக்களும் அவருடைய வார்த்தையை கவனமாய் கேட்டுக் கொண்டிருந்தபடியால், அவர்களால் எதுவுமே செய்ய முடியவில்லை. நெகே 8:3அப் 16:14யோவா 7:46-49லூக் 20:19-20லூக் 22:2-4மத் 22:15-16